செல்போன் சேவிஸ் செய்யும் போது நிறைய ரகசியங்கள் வெளி வருகின்றன. தற்போது நடிகையும் இயக்குநரும் இருக்கும் ரகசிய உறவு அம்பலமாகியுள்ளது.
கன்னட இயக்குனர் ரத்னஜா இயக்கத்தில் பிரபல கன்னட நடிகை அமுல்யா பிரேமிசம், நெனபிரலி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து முன்னணியில் இருப்பவர் அமுல்யா. இந்நிலையில் அமுல்யா, ரத்னஜாவு இருவரும் ரகசியமாக முத்தமிட்ட புகைப்படம் நேற்று பெங்களூரில் வெளியானது.
டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் இப்படம் வந்தன. இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்னஜாவும் அமுல்யாவும் அதிர்ச்சியானார்கள்.
ஒரு முத்தம் கொடுத்தால் அடுத்து நான் இயக்கும் இரு படங்களில் உன்னை கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று இயக்குனர் ஆசைகாட்டியதாகவும், அதனால் அமுல்யா இயக்குனருக்கு முத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும் அதை பழுதுபார்க்க கொடுத்த போது படம் வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை வெளியிட்டவர் ரத்னஜாவுக்கு டெலிபோன் செய்து 1 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுத்தால் படங்களை வெளியிட மாட்டேன் என்றும் கூயிருக்கிறார். மேலும், ரத்னஜாவும் அமுல்யாவும் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு நிமிட வீடியோ படமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.
கன்னட திரையுலகையே இந்த விசயம் பரபரப்பாக்கிக்கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட இயக்குநரும், நடிகையும் ‘’இது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருப்பது நாங்கள் அல்ல. எங்கள் புகழை கெடுக்க சதி செய்கிறார்கள்’’என்று வேதனைப்படுகின்றனர்.







திரைத் துறையினர் அனைவரும் என்னை சகோதரியாகவே நினைத்து வந்தனர். இதனால் தான் நான் கவர்ச்சிக்கு மாறி அந்த இமேஜை மாற்றியுள்ளேன் என்கிறார் பாலிவுட் நடிகை நீத்து சந்திரா. அக்ஷய் குமார் நடித்த கரம் மசாலா படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் நீத்து சந்திரா. தமிழில் யாவரும் நலம் படத்தில் நடித்துள்ளார். விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலும் நடித்துள்ளார். படு கவர்ச்சிகரமாக மாடல் கிரிஷ்தா குப்தாவுடன் ஒரு ஆடவர் இதழுக்காக அவர் கொடுத்த ஏடாகூடமான போஸ் சர்ச்சைகளைக் கிளப்பியது. அவரது கவர்ச்சிப் புயல் பாலிவுட்டில் பலமாகவே வீசி வருகிறது – கூடவே சர்ச்சைகளும். ஆனால் தனது கவர்ச்சிப் பாதைக்கு வினோதமான காரணம் சொல்கிறார் நீத்து. இதுகுறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் எல்லோருமே என்னை ஒரு சகோதரி போலவே பார்த்து வந்தனர். இது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பினேன். கிறிஸ்தாவுடனான போட்டோ ஷூட்டிங்குக்கு முன்பு வரை என்னை யாருமே கவனிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகுதான் எல்லோரும் என்னைப் பார்க்க ஆரம்பித்தனர். எப்போதுமே எனது மனதுக்குப் பிடித்ததை மட்டுமே நான் செய்வேன். ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியோடு இருப்பேன். கடந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் என்பதற்காக வருத்தப்பட்டதே கிடையாது. உங்களுக்கு அழகான உடல் இருந்தால் அதை நீங்கள் அழகாக காட்டித்தான் ஆக வேண்டும் என்றார் நீத்து. தனது முதல் படத்திலேயே கவர்ச்சிகரமான நீச்சல் உடையில் வந்து கதி கலக்கியவர் நீத்து என்பது நினைவிருக்கலாம்.
“முதல் சுயம்வரத்தில் சிக்கிய மாப்பிள்ளை சரியான சுயநலப் பேர்வழி… எனவே மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்தி நல்ல மாப்பிள்ளையைத் தேர்வு செய்ய விரும்புகிறேன்” என்று இந்தி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை சுயம்வரம் நடத்தி தேர்ந்தெடுக்கப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார். உடனே அவரை மணக்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவர்களில் மூவரைத் தேர்வு செய்த ராக்கி, இவர்கள் மூவரையுமே பிடித்திருக்கிறது என குண்டு போட, அதிர்ந்தனர் கலாச்சார காவலர்கள். ஒருவழியாக அரைகுறை மனசோடு, எலேஷ் என்பவரை தேர்வு செய்தார். நிச்சயதார்த்தம் நடந்தது. எலேஷைப் பார்க்க கனடாவுக்குக் கூட சென்றார் ராக்கி. போய் வந்தபிறகு எலேஷை உதறித் தள்ளிவிட்டார் ராக்கி.