முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் !

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மிஷ்கினின் யுத்தம் செய் சிறுத்தையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யின் காவலன் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் வெளியான விஜய் படங்களில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் என்பது கவலைதரும் விஷயம்.

5. ஆடுகளம்
வெற்றிமாறனின் ஆடுகளம் சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 18.93 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 3.01 கோடிகள்.

4. காவலன்
நான்காவது இடத்தில் காவலன். இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 2.83 கோடிகள். ஆடுகளத்தைவிட குறைவு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 22.5 லட்சங்கள்.

3. தூங்காநகரம்
சென்ற வாரம் வெளியான தூங்காநகரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் மூன்று தின வசூல் 28.64 லட்சங்கள்.

2. சிறுத்தை
சிவா இயக்கியிருக்கும் சிறுத்தைக்கு இரண்டாவது இடம். இதன் சென்ற வார இறுதி வசூல் 32.44 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 3.73 கோடிகள். பொங்கலுக்கு வெளியான படங்களில் இந்தப் படமே சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் அதிக கலெ‌க்சனை‌ப் பெற்றுள்ளது.

1. யுத்தம் செய்
மிஷ்கினின் இந்தப் படம் முதல் வாரத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளியான முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 34.07 லட்சங்கள்.

Source : Webdunia

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 மறுமொழிகள் »

வெளிவராத உண்மை – கிருத்திகா கர்ப்பம்!!

Photobucketஉதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி கர்ப்பமாகவுள்ளார் என்ற விடயத்தை இதுவரை எந்த இணையமோ பத்திரிகையோ கண்டறியாத நிலையில்.இந்த தகவலை கண்டறிந்து முதன் முதலில் வாசகர்களுக்கு தருவதன் மூலம் தனது சாதனை பயணத்தை தொடர்கிறது Onelanka.tk .

அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு  பாதிப்பு ஏற்ப்படாமல் கீல்ஸ் உள்ள பாதணி அணியாமல் சாதாரண பாதணி ஒன்றுடன் அவர் நிகழ்வுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

kiruthika

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 மறுமொழிகள் »

Box office இல் பின்தங்கிய காவலன்….

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வார இறுதியில் ஆடுகளத்தை இரண்டாமிடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது, கார்த்தியின் சிறுத்தை. வெளியானது முதல் மூன்றாவது இடத்திலேயே உள்ளது விஜய்யின் காவலன்.

காவலன் சென்ற வார இறுதியில் 47.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த சென்னை வசூல், 1.51 கோடி.

இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆடுகளம் சென்ற வார இறுதியில் 49.07 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான ஆடுகளத்தின் சென்னை வசூல், 1.70 கோடி.

சிறுத்தை சென்ற வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 62.51 லட்சங்கள். காவலன், ஆடுகளம் இரண்டையும்விட மிக மிக அதிகம். இதுவரையான சிறுத்தையின் சென்னை வசூல், 1.98 கோடி.

சென்ற வார இறுதி வசூலில் மட்டுமில்லாது மொத்த வசூலிலும் விஜய்யின் படம் பின்தங்கியே உள்ளது. பாக்ஸ் ஆஃபிஸின் நான்காவது இடத்தை இளைஞனும், ஐந்தாவது இடத்தை மன்மதன் அம்பும் பிடித்துள்ளன.

Source :  webdunia.com

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

விஜயின் காவலன் பற்றி மனம் திறந்த கமல்…(video)

விஜய் பற்றி கமல் ரொம்ப அருமையாக சொல்லி இருக்கார் …!!

 

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

விஜயை கேவலமாக கிண்டல் செய்த TR (Video)

விஜய்  கலைஞர் குடும்பத்துக்கும் சன் பிக்சர்சுக்கும் ஊதுகுழலாக பல மேடைகளிலும் அவர்களை பாராட்டி பேசிவிட்டு இப்பொழுது அவர்களால் தன படத்துக்கு தடை என்றதும் அவர்களை தாக்கி பேசுவதாக விஜயை பற்றி கேவலமாக கிண்டல் செய்துள்ளார் TR. இறுதியில் காவலன் வெளியிட முடியாமல் திண்டாடிய வேளையில் தனது குறள் மற்றும் சிலம்பு திரையரங்குகளில் காவலன் படத்தை வெளியிட்டு உதவியதால் தான் இந்த படத்தை வெளியிட முடிந்ததாகவும் T.ராஜேந்தர் தனது நேர்காணலிலே குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 9 மறுமொழிகள் »
Follow

Get every new post delivered to your Inbox.

Join 92 other followers