இது தலைவனின் நாடாளுமன்றம்…புறப்படு தமிழா!

Photobucket

ஈழத் தமிழினம் புதியதொரு வரலாறு எழுதுவதற்குத் தயாராகிவருகின்றது. அண்ணன் உருத்திரகுமாரின் உன்னத பணியின் முதல் அத்தியாயமாக நாடு கடந்த தமிழீழ அரசு எனும் குழந்தை பிறப்பெடுக்கவுள்ளது.

அந்தக் குழந்தையின் சுகப் பிரசவம் முதல் அதன் வளர்ச்சி மற்றும் அந்தக் குழந்தையின் வெற்றிப் பயணம் என்பன புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது. வாக்குரிமையுள்ள சகலரும் தங்கள் வாக்குகளை செலுத்துவதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.

பிரிவுகளைப் புறந்தள்ளுவோம்…..

எங்களுக்குள் நாங்களே முட்டி மோதிக்கொள்வது இனியும் தொடருமானால் எங்களை அழிக்க நினைக்கும் எதிரிக்கு அது இலகுவான பாதையை அமைத்துகொடுத்துவிடும். கடந்த காலங்களில் நாங்கள் இழைத்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது பெரும் முட்டாள்தனம்.

அவன் சார்பான குழு , இவன் சார்பான குழு என எங்களுக்குள் இனியும் பிரிவுகள் வேண்டாம். தானைத் தலைவன் எங்களுக்கு ஒரு நேரிய வழியைத் திறந்து விட்டு மௌனித்து இருக்கின்றான். அவனது மௌனம் எத்தனை காலங்களுக்கு என்று யாருக்குமே தெரிந்துவிடப் போவதில்லை.

அது அவனுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் அந்த மௌனத்தை பயன்படுத்தி மீண்டும் ஈழத் தமிழினத்துக்குள் பிரிவுகளை ஏற்படுத்த ஒரு சில தனிநபர்கள் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த நபர்கள் விளையாடுவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசவை ஒன்றும் பொம்மலாட்டம் போடும் களம் அல்ல என்று தேர்தல் மூலம் நிரூபிப்போம்.

நாடு கடந்த அரசவையில் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக – உருத்திரகுமாரைப் புறந்தள்ளுவதற்காக- மேலே குறிப்பிட்ட நபர்கள் தங்களது வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வேட்பாளர்களை இனம்கண்டு அவர்களுக்கு வாக்குகள் மூலம் சாட்டையடி கொடுக்கவேண்டியது புலம்பெயர் தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். எனவே எங்கள் பெறுமதிமிக்க வாக்குகளைத் தகுதியுடையவர்களுக்கு வழங்குவதன் மூலம் எங்கள் தலைவனின் நாடாளுமன்றத்தை நாங்கள் சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவமுடியும்.

இது சிறிலங்கா நாடாளுமன்றம் அல்ல…

தலைவனின் தீர்க்கதரிசனச் சிந்தனைகளில் தமிழீழ அரசவையும் ஒன்று. தனது சொந்த நிலத்தில் நிகழும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த அரசவை இன்று நாடு கடந்து அமையப் போகின்றது. என்றோ ஒருநாள் அது தனது சொந்த மண் திரும்பப் போகின்றது.

எனவே தகுதியான வேட்பாளர்களை நாடு கடந்த தமிழீழ நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தமிழீழ நாட்டைச் சிறப்புறச் செய்வோம். கூத்தாடிகளும் அடிக்கடி கட்சி மாறுபவர்களும் பணத்திற்காக இனத்தை விற்கின்றவர்களுமாக நிரம்பி வழியும் சிறிலங்காவின் நாடாளுமன்றமாக எங்கள் இனத்தின் அரசவை அமையக்கூடாது என்பதில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கவேண்டும்.

அன்பான புலம்பெயர் மக்களே…

மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் மௌனிக்கப்பட்டதாகவே இருக்கட்டும். எங்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியவர்கள் இனி விழிபிதுங்கப் போகின்றார்கள். நாங்கள் இனி ஜனநாயக வழயில் வீறுநடை போடப்போகின்றோம். எனவே அந்த ஜனநாயகச் சமர்களத்;தில் தீரத்துடன் சமர் புரிவதற்கு தகுந்த தகுதி உடையவர்களை நீங்கள் உறுப்பினராகத் தெரிவுசெய்யுங்கள்.

நாங்கள் இன்னும் பயணிப்பதற்கு நீண்ட தூரம் உள்ளது. எனவே தலைவனின் நாடாளுமன்றம் சிறப்புற அமையப்பெற வீறுகொண்டு புறப்படு தமிழா……

நெதர்லாந்திலிருந்து

தர்சானா

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

கருணாநிதி பல்டி :ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன

Photobucketபிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

18-11-2009 அன்று “நம் மவுன வலி யாருக்கு தெரியப் போகிறது?” என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?

ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,

’’எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்! இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை! கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா! எங்கு சென்றாய்?”

மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு இரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அன்று தெரிவித்தவர்தான் அவர்.

பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:-

* இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.

* விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

* ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.”

இப்படியொரு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.

அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே;
தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!’’என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! – வைகோ கண்டனம்!

Photobucketதமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு. சீனா, பாகிஇதான், இஇரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.

ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கொடும் பழி துலீற்றி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (சுஹறு) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.

அது மட்டும் அல்ல, ‘பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார்.

இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார். ரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது. இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.’

‘தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார். அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்’ என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.

கருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றி நீட்டி முழக்கி இருக்கிறார். இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் துலீதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நுலீலில் எழுதி இருக்கிறாரே? டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு? அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான். கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.

காலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது. தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.

தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர் பெற்ற புகழை, இளங்கோ, கம்பன், கரிகாலன், இராஜராஜ

ன் பெற்ற புகழை, எங்கள் மாவீரன் பிரபாகரன் பெற்று இருக்கிறார். உலகமெலாம் வாழுகின்ற தமிழர்களின் இதயக்கோயிலிலே அவர் வீற்று இருக்கிறார். அவரை கருணாநிதி கொச்சைப் படுத்தி விட முடியாது. ஆனால், உண்மைகளைத் தமிழர்கள் அறிவார்கள். ஒரு அரசை நிறுவி, முப்படைகளை உருவாக்கி, அரசுத்துறைகளை அமைத்து இயக்கி, தமிழ் ஈழ அரசை உலகம் ஏற்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திய பிரபாகரன், போர்க்களத்திலும், ராஜதந்திரத்திலும் தன்னிகர் அற்ற தலைவராக விளங்குகிறார். ஒழுக்கத்தின் சிகரமாக, நேர்மைக்கும் சத்தியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்பவர். புரட்சிகளை நடத்திய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் உள்ளதை நான் படித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தவறுகளும் இல்லாத தலைவனான – மாவீரர் திலகமான பிரபாகரனைக் கொச்சைப்படுத்த முயல்கிறார் கலைஞர் கருணாநிதி.

2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்?

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது.

‘தாயகம்’ வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.

Join 92 other followers