கோவின் வெற்றிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜீவாவின் படம். பாஸ் (எ) பாஸ்கரனுக்கு பிறகு வாசன் வீஷுவல்ஸின் அடுத்த படைப்பு என்ற் இரண்டு வெற்றியாளர்கள் ஒன்று சேர்ந்ததால் ரசிகர்களிடையேயும், விநியோகஸ்தர்களிடையேயும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.
சிறு வயதில் தன் சொந்த தம்பியை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு மும்பைக்கு ஓடி போகிறார் நந்தா. மும்பையில் பிரபல தாதாவாக உருவாகி நிற்கும் நந்தாவை பார்க்க ஜீவா முயற்சிக்கிறார். தொடர் முயற்சிக்கு பிறகு அவரை சந்திக்கவும் செய்கிறார். என்ன விஷயம் என்று கேட்டால் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் என்று காதல் கதையை சொல்கிறார். கடைசியில் அந்த காதலி என்னை விட்டு பிரிந்துவிட்டாள். அவளை அடைய வேண்டுமானால் ஒரு பிரச்சனை என்கிறார். அவளுடய அப்பாவை ஒரு தாதா கொன்று விட்டான். அவனை போலீஸில் சரணடைய செய்தால் தன்னை மணப்பதாக சொல்லியிருக்கிறாள் எனவே அந்த கொலையை செய்தவன் நீதான் மரியாதையாய் வந்து சரணடைந்துவிடு என்று கேட்கிறார். பிறகு நடந்தது என்ன என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்க..

கேட்பதற்கு அட நல்லாருக்கே அப்படின்னு தோணும். ஆனால் மொத்த படமாய் பார்க்கும் போது ரொம்பவும் சிரமாமாய் இருக்கிறது. அதற்கு காரணம் திரைக்கதை. படம் முழுக்க ஜீவா தான் நந்தாவின் தம்பி என்று அதிர்ச்சியாய் சொல்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே நமக்கு தெரியும் இவர் தான் நந்தாவின் தம்பி என்று. இப்படி இவர்கள் டிவிஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாமே இப்படித்தான் போகிறது. அதன் பிறகு ஜீவா சொல்லும் காதல் கதை ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், ஜீவாவை கல்யாணம் செய்ய அவர் சொல்லும் விஷயம் டெப்த்தேயில்லை. ஏன் டெப்த்தாக இல்லை என்பதை சொன்னால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற சுவாரஸ்யம் கூட இல்லாமல் போய்விடும் என்பதால் உங்கள் ரிஸ்கில் விட்டுவிடுகிறேன்.
ஜீவா வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். பாடுகிறார். ஆடுகிறார் சண்டை போடுகிறார். மற்றபடி ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை. சின்ன வயது நந்தாவின் கேரக்டருக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் இம்பாக்ட் கதை பூராவும் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் பட் வேஸ்ட் ஆப் பில்டப். அவ்வப் போது காரில் வந்து துப்பாக்கியால் சுடுவதும், முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு பார்ப்பதை தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. டாப்ஸி மிகவும் வத்திப் போயிருக்கிறார். ஆடுகளத்தில் மனதை கொள்ளைக் கொண்டவரா இவர். ம்ஹும் கன்னமெல்லாம் ஒட்டி சிரிக்கும் போது கொஞ்சம் லேசாய் நடு முதுகில் ஜில்லிடுகிறது. படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஸேஷன் சந்தானம் தான் ஆனால் அவரும் ஏதோ ஒட்ட வைத்த காமெடியாய் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே.
தமனின் இசையில் அஞ்சனா, அஞ்சனா பாடலும், காஞ்சன மாலா பாடலும் கேட்கும் படியாய் இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்போதும் அஃதே. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பாடகர்கள் குரலை டெக்னோ வாக்கி கீச்சிட வைக்கப் போகிறார்?. பல சமயம் எரிச்சலாக இருக்கிறது. பி.ஜி. முத்தையாவின் கேமரா பளிச். பாடல் காட்சிகளிலும், கேரளா நீர்வீழ்ச்சி பின்னணியில் வரும் அந்த காட்டேஜ் செட்.. அருமை.

எழுதி இயக்கியவர் ரா. கண்ணன். கதையின் கடைசி ட்விஸ்டை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார். ஆனால் அந்த ட்விஸ்ட் நமக்குள் எடுபடவேண்டுமானால் அவர் சொல்லும் கதை அள்ளிக் கொண்டு போகும் காதல் கதையாய் இருக்க வேண்டாமா? இரண்டு சீனுக்கு ஒரு முறை கொட்டாவி விட வைக்கும் திரைக்கதை இம்சை படுத்துகிறது. படத்தில் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர். பல இடங்களில் அட போட வைக்கிறார். சில இடங்களில் விக்ரமன் பட பாணியில் ஜீவா பேசிக் கொண்டேயிருப்பது மிகையாக இருந்தாலும், வசனங்களால் நிறைவாகிறது.
வந்தான் வென்றான் – வந்தான்.. சென்றான்.
தமிழேன்டா !!

நிச்சயமாக பார்க்கவேண்டிய படம் ….இது வெறும் கலைப்படமோ அவார்ட் படமோ அல்ல. முதல் 30 நிமிட மெதுவான திரைக்கதை தவிர மீதி விறுவிறுப்பு உள்ள படம் தான்.
அழகாக நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் திருப்பங்கள் நுழைகிறது. அப்போதுதான் அமலா பால் இன் அறிமுகம். கிருஷ்ணாவின் மகள் நிலா கற்கும் பள்ளியின் மேலாளராக வருகிறார். சேலையில் வந்து என் மனசையும் சேர்த்து உடுத்திட்டு போயிட்டா அமலாபால். நிலாவும் சுவேதா என்கிற அமலாபாலும் வருகிற காட்சிகள் ரசிக்கத்தக்கவை. நிலாவுடன் அதிகம் பிரியம் கொள்ளும் அமலாபாலுக்கு ஒரு நிலையில் நிலா தன் அக்காவின் மகள் என தெரிய வரவே தொழிலதிபரான தன தந்தையின் உதவியோடு நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரித்து செல்கிறார். இப்போது கதை சூடு பிடிக்க தொடங்குகிறது. இதற்கு பின்னர் தன மகளை விக்ரம் மீட்கிறாரா, இதற்கு எப்படி எப்படியெல்லாம் அனுஷ்கா உதவுகிறார் என்றே கதை நகர்கிறது.. அதை திரையில் பார்த்துக்கொண்டால் உங்கள் உணர்வுகளை நீங்களும் ரசித்துக்கொள்வீர்கள்.
எனக்கு அதிகம் பிடித்தது படத்தில் வரும் எல்லோரும் பாசத்துக்கு தலைவணங்குவது. படம் முடிகையில் எந்த பாத்திரமும் மனதில் வெறுப்பை ஏற்படுத்தவில்லை என்பது கூடுதல் சந்தோசம்.

