“சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கண்கலங்கினார்”.என்ற செய்தியை நேற்று ஊடகங்களில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்,பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பேசிய பேச்சை கேட்டு சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டாராம்.இது எவ்வளவு பெரிய கண்துடைப்பு வேலை என்று சிறுபிள்ளை கூட அறியும்.இவருக்கு கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு அந்த பேச்சில் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை.அப்படி இருக்க எப்படி இவருக்கு மட்டும் அழுகை வந்தது!
*என்ன ரஜனிக்கு அன்று தான் ஈழம் என்றால் என்ன என்று தெர்யுமா?
*ரஜனி ஈழப்பிரச்சனை பற்றி இது வரை ஒரு வரி கூட அறிந்திருக்கவில்லையா?
*இல்லை ரஜனி தொலைக்காட்சி,இணையம்,வானொலி,பத்திரிகை என்று எந்த ஊடகமும் பார்க்காத மனிதர்களுடன் கருத்துக்களை கூட பரிமாரிக்கொளாத ஒருவரா?
*இறுதியாக கொடூர போர் முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட இந்த நிலையில் தான் ரஜனிக்கு கண்ணீர் வருகிறதா?ஏன் இவ்வளவு நாளும் அவரது ரோபோவுடன் சேர்ந்து வேறு கிரகத்திற்கு போயிருந்தாரா?
அவரது எந்திரனை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது ஈழதமிழர்களும் தான் இந்த வேலையில் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் படத்தை பார்க்க செய்ய இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கிறார்.இவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் இருந்த மரியாதையை கூட தானாக குறைத்துக்கொண்டுள்ளார்.அதைவேறு இந்த தமிழ்நாட்டு ஊதுகுழல் பத்திரிகைகள் ஓவர் பில்டப்புடன் பிரசுரிக்கிறார்கள்.ஈழத்தமிழர்கள் அரசியல்வாதிகள்,நடிகர்கள்,கட்சிகளின் பின்னால் பல்லக்கு தூக்கும் கேனை தமிழர்களல்ல என்பதை ரஜனி தெரிந்துகொள்ளவேண்டும்.

சரத்குமார் நடித்த ஜக்குபாய் திரைப்படம் இன்டர்நெட்டில் முழுசாக வெளியாகிவிட்டது. விஷயம் அறிந்து ஆடிப் போயுள்ளார் சரத். இதைவிட அவரை அதிர வைத்திருப்பது, இலவசமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தை மிகக் குறைந்த அளவிலான ரசிகர்கள்தான் இன்டர்நெட்டிலேயே பார்த்துள்ளார்கள் என்ற உண்மை! சரத்குமார் – ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜக்குபாய் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தார் சரத் குமார். ஆனால் படத்தின் பிஸினஸ் முழுவதுமாக முடியாத நிலையில் படத்தை வெளியிடுவது குறித்து எந்த முடிவுக்கும் வராமல் உள்ளார் சரத் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சரத்குமாரின் இந்தப் படம் இணையதளங்களில் முழுமையாக வெளியாகி விட்டது. பின்னணி இசை சேர்ப்புக்கு முந்தைய நிலையில் படம் இருந்தபோது யாரோ இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். இதனால் வெறும் வசனங்கள் மற்றும் காட்சிகள் மட்டுமே இணையத்தில் பார்க்க முடிகிறது. அதாவது குறைப் பிரவசத்தில் பிறந்த குழந்தை போல ஜக்குபாய் நெட்டில் உலா வந்து கொண்டுள்ளது. சரத்குமாரைப் பொறுத்தவரை, இந்தப் படம் மட்டுமே அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை. இன்னும் வெளிவராத இந்தப் புதுப்படம் இணையத்தில் வெளியானது அவருக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இதைவிட கொடுமை, இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் மிக மிகக் குறைவாக இருந்ததுதானாம். இணையத்தில் இலவசமாக வெளியாகியும் பார்க்க ஆளில்லை என்றால் மனசு கஷ்டமாகத் தானே இருக்கும்! இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார் சரத். நெட்டிலேயே இந்த நிலை, தியேட்டரில் எப்படி இருக்கப் போகிறதோ ரெஸ்பான்ஸ் ….!
மிகப்பெரும் வேதனையுடன் உலகப்பந்தெங்கும் தமிழீழம் எனும் தணியாத தாகத்துடன் போரடிக்கொண்டிருக்கும் மக்களின் மனதில் விஜய் எனும் தமிழ்த்திரையுலக நடிகருக்கு ஓர் இடம் இருந்ததென்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் பால் குடிக்கும் பிள்ளைகூட விஜய்யை நினைப்பதற்கு முன் எமது தலைவருக்கு வணக்கம் சொல்லி மாவீரர்களை வணங்கித்தான் நடிகர் விஜய்யான உம்மை நேரம் கிடைத்தால் சிந்திக்குமென்பதை நீர் உணரவேண்டும், என ஐரோப்பிய இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
“வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல… வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.