அசின் படுக்கையறையில் சல்மான் கான்?!

Photobucket“சல்மான்கான் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என்று சொல்வது பொய் பொய் பொய்… இதை இன்னும் எத்தனை தடவை சொல்றது?” என சலித்துக் கொள்கிறார் அசின்.

அசின் மும்பையில் செட்டிலான பிறகு அவரைப் பற்றி பல்வேறு செய்திகளும் வதந்திகளும் வந்தவண்ணம் உள்ளன.

இதில் லேட்டஸ்ட் அவரையும் சல்மான்கானையும் இணைத்து வரும் கிசுகிசுக்கள்தான்.

மும்பையில் அசினுக்காக சல்மான்கான் ஒரு பெரிய வீடு வாங்கித் தந்திருப்பதாகவும், இந்த வீட்டில் அசின் மட்டுமே தனியாக வசிப்பதாகவும் முன்பு கூறப்பட்டது. மேலும் தொடர்ந்து அப்பாவுடன் செட்டுக்கு வருவதையும் சல்மான்கான்தான் தடுத்தார் என்றும் கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, அசின் படுக்கையறையில் சல்மான்கான் இருந்தார் என்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை கிசுகிசு எழுத ஆடிப்போனார் அசின்.

நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அசின், “இதற்கெல்லாம் என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்… நான் எத்தனை தடவைதான் மறுப்பு சொல்றது?

சென்னைல பத்திரிகைக்காரங்க எவ்ளோ நல்லவங்க தெரியுமா.. இங்குதான் ரொம்ப மோசம். என் பெட்ரூம்ல சல்மான் இருந்ததை இவங்க பார்த்தாங்களா?

எனக்கு சன்மான் கான் வீடு வாங்கித் தரவில்லை. இது பொய் செய்தின்னு நூறுவாட்டி சொல்லிட்டேன். ஆனா தொடர்ந்து இதையே எழுதறாங்க. அவருக்கும் எனக்கும் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்ல. மும்பையில் எனக்கு இன்னொரு வீடு இருப்பது உண்மைதான். ஆனா இரண்டுமே நான்தான் வாங்கினேன். என் வசதிக்காக வாங்கினேன். எப்பவும் எங்கப்பா அம்மா கூடதான் இருக்கேன்!” என்கிறார் கொதிப்புடன்.

இருந்தாலும் மீடியா அடங்கவில்லை… நெருப்பில்லாமல் புகையுமா? என் கேளிவிக்குறியோடுதான் அசின் மறுப்பையே வெளியிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

பான் கீ மூன் மகள் இந்தியரை திருமணம் முடித்திருக்கிறார்: மேலும் அதிர்சி

8 வது ஹிந்தி மாநாடு நியூயோர் நகரில் கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாடிய பான் கீ மூன் அவர்கள் தனது மகள் ஒரு இந்தியரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் தாம் புது டெல்லியில் தூதுவராகப் பணியாற்றியபோது விஜய் நம்பியார் தனக்கு மேலதிகாரியாகக் கடைமையாற்றியதாகவும், விஜய் நம்பியாரை தனக்கு 1972 ஆண்டு முதல் தெரியும் எனவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த மாநாடு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் பான் கீ மூன் உரையாற்றியதில் பல திடுக்கிடும் தகவல்கள் மறைந்திருப்பது தமிழர்களுக்குத் தெரியவில்லை.

இவர்கள் கென்யாவில் வாழும் பல இலங்கைத் தமிழர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. கொரிய தூதரகத்தில் முதல் முதலாக ஒரு ராஜதந்திரியாக பான் கீ மூன் பதவி ஏற்றபோது, அவரது ஆசானாக விஜய் நம்பியார் விளங்கியிருக்கிறார். ஐ.நாவில் ஒரு பொறுப்பதிகாரியாக விஜய் நம்பியார் கடமையாற்றி இருந்ததும் அவருக்கு கீழ் பான் கீ மூன் கடமையாற்றியதும் நடை பெற்ற மாநாட்டிலிருந்து வெளியாகியுள்ள செய்திகள்.

இறுதிச் சமரில் விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முயற்சிக்கும் போது அதன் ஏற்பாட்டாளர்களாக திகழ்ந்த முக்கிய நபர் விஜய் நம்பியார் என்பது யாவரும் அறிந்ததே. சரணடைய வரும் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று தெரிந்துமே நம்பியார், அவர்களை வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின் படி தாமே யுத்த களத்திற்குச் சென்று சரணடைவதைப் பார்வையிட இருப்பதாகவும் இவர் சிலரிடம் கூறியிருக்கிறார். இவர் தொடர்பாக பல முறைப்பாடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், விஜய் நம்பியாரும், பான் கீ மூனும் பாலிய சிநேகிதர்கள் என்ற விடயம் தற்போது அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிலை தெரியாமல் பல தமிழ் அமைப்புக்கள் விஜய் நம்பியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பான் கீ மூனை கோரிவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இதுவரை எந்த விசாரணையும் விஜய் நம்பியாருக்கு எதிராக நடத்தப்படவில்லை என்பதற்கு தற்போது தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பான் கீ மூனும் ஒரு இந்தியாவின் செல்லப் பிராணியே என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்துடன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் எவ்வளவு இதய சுத்தியுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகுவார் என்பது தற்போது மிகுந்த சந்தேகத்திற்கு இடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாநாட்டில் பான் கீ மூன் பல்லிளித்து பேசிய சில ஹிந்தி வார்த்தைகள் கீழே..

ஹிந்தி தோடா தோடா மாலும் ! அப்படி என்றால் எனக்கு ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் !

இதை விட நீண்ட வசனத்தையும் இவர் பேசிக்காட்டியிருக்கிறாராம் என்றால் பாருங்களேன் !

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

பெண்களுடன் உல்லாசம்.. -சிக்கலில் 87வயது ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி

Photobucketஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது போன்ற டிவி வீடியோ படத்தால் அங்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஏபிஎன் ஆந்திரஜோதி என்ற தனியார் தொலைக்காட்சி சானல் இந்த செய்தியை வீடியோவுடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இந்த வீடியோ செய்திக்கு உடனடியாக தடை விதித்து விட்டது. ஆந்திர மாநில ஆளுநராக இருப்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி எனப்படும் நாராயண் தத் திவாரி. இவர் உ.பி. முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராகவும் இருந்தவர். இவர் பெண் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்ற இளைஞர் திவாரி மீது வழக்கு தொடர்ந்தார். அதில், எனது தந்தை என்.டி.திவாரி. அவருக்கும், எனது தாய்க்கும் இடையில் ஏற்பட்ட உறவில்தான் நான் பிறந்தேன். எனவே என்னை திவாரியின் மகனாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார். இதுதொடர்பாக விளக்கம் அளித்த திவாரி, உஜ்வாலா சர்மா தவறானவர். அவருடைய தூண்டுதலின்பேரில்தான் ரோஹித் சர்மா என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியிருந்தார். இருப்பினும் இந்த வழக்கு கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தப்பித்தார் திவாரி. இந்த நிலையில், ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திவாரி. ஏற்கனவே தெலுங்கானா காரணமாக கொதிப்பில் இருக்கும் ஆந்திராவில் திவாரி பிரச்சினை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா பிரச்சினையால் முடங்கிப் போய்க் கிடந்த தெலுங்கு தேசம் கட்சி, திவாரிப் பிரச்சினையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளது. நேற்று காலை இந்த வீடியோ செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராஜ்பவன் நோக்கி பெண்கள் அமைப்பினர், தெலுங்கு தேசம் கட்சியினர் படையெடுத்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பெண்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். திவாரி குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த ராஜ்பவன் உடனடியாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அதில் ஆந்திர ஜோதி டிவியில் காட்டப்படுவது திரிக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான காட்சிகள். ஆளுநரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து படு வேகமாக செயல்பட்ட ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த செய்தியை ஒளிபரப்பவும், வீடியோவைக் காட்டவும் ஆந்திர ஜோதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆந்திர ஜோதி வீடியோ படத்தைக் காட்டுவதை நிறுத்தியது.

அந்தக் காட்சி…

ராஜ்பவன் மாளிகையின் படுக்கை அறையில் இந்தக் காட்சி விரிகிறது. இரவு நேரத்தில் இது படமாக்கப்பட்டுள்ளது. என்.டி.திவாரி படுக்கை அறையில் உட்கார்ந்துள்ளார். அவருக்கு அருகில் 3 பெண்கள் உள்ளனர்.

அவர்களில் ஒரு பெண்ணுக்கு 18 வயது என்று கூறப்படுகிறது. திவாரியின் வயது 87 ஆகும். இன்னொரு பெண் கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.

அம்பலப்படுத்திய ராதிகா…

திவாரியின் இந்த செக்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆவார்.

ராஜ் பவன் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் திவாரிக்காக தான் இந்தப் பெண்களை அனுப்பி வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திவாரிக்கு பெண் மோகம் அதிகம். அவருக்காக நான் பல பெண்களை அனுப்பி வைத்துள்ளேன். அனைவரும் ராஜ்பவன் வேலைக்காக என்று கூறி சேர்க்கப்படுவர். ஆனால் அவர்களை திவாரிதான் தனது இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.

எந்த நேரத்தில் அவர் பெண் வேண்டும் என்று கேட்பார் எனக் கணிக்கவே முடியாது. திடீரென நள்ளிரவில் கேட்பார், சில சமயம் மதிய உணவை முடித்ததும் கேட்பார்.

எனக்கு கடப்பாவில் சில கல்குவாரிகளை நடத்த விருப்பம் இருந்தது. இதற்காக லைசென்ஸ் வாங்கித் தருவதாக திவாரி உறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. இதையடுத்தே இந்த வீடியோ படத்தை அம்பலப்படுத்தி ஆந்திரஜோதிக்குக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் ராதிகா.

டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – நாயுடு

திவாரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரஜோதி டிவியில் காட்டிய காட்சிகள் மிகவும் அசிங்கமானவை, ராஜ்பவனுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் திவாரி. ஆந்திராவுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்து விட்டார்.

அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதேபோல திவாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. அதுவரை போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவை கூறியுள்ளன.

திவாரிக்கு எதிராக சித்தூர், நெல்லூர், கம்மம், அடிலாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தடை குறித்து ஆந்திர ஜோதி கருத்து..

இதற்கிடையே, வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆந்திரஜோதி டிவி எடிட்டர் ராதாகிருஷ்ணா கூறுகையில், உண்மையில் ஆந்திராவுக்கும், ராஜ்பவனுக்கும் களங்கத்தையும், அவதூறையும் ஏற்படுத்தியவர் திவாரிதான். நாங்கள் அல்ல. இதுபோன்ற செயலில் ஈடுபட்ட திவாரிதான் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

கதவை மூடிய சபீதா ரெட்டி…

இந்த சம்பவம் குறித்து ஆந்திர அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றபோது வேகமாக தனது காரின் கதவை மூடியபடி கிளம்பிச் சென்று விட்டார் ரெட்டி.

ஆராய்ந்த பிறகே கருத்து- காங்.

திவாரி விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் என்ன நடந்தது, அந்த வீடியோவின் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குப் போய் விட்டது. எனவே இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அப்படியே தெரிவித்தாலும் கூட ஆராய்ந்த பிறகுதான் தெரிவிக்க முடியும் என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 1 Comment »

வேட்டைக்காரன் விமர்சனம்

Photobucketகுருவி, வில்லு வ‌ரிசையில் விஜய் நடித்திருக்கும் இன்னொரு வித்தியாசமான படம், வேட்டைக்காரன். குருவியை இயக்கிய தரணியிடம் அசோஸியேட்டாக இருந்த பாபு சிவன் வேட்டைக்காரனின் இயக்குனர். நாக்கமுக்க புகழ் விஜய் ஆண்டனி இசை.

திருப்பாச்சியில் சிற்றூ‌ரிலிருந்து சென்னைக்கு வந்து ரவுடிகளை அழிக்கும் விஜ‌ய், வேட்டைக்காரனில் வித்தியாசமாக பெருநகரம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்து ரவுடிகளை அழிக்கிறார். அவரது தூத்துக்குடி டூ சென்னை பயண நோக்கமும் படு வித்தியாசம்.

ரயில்வே ஸ்டேஷன் போன்ற சந்தடி மிகுந்த இடங்களில் தனியாளாக ரவுடிகளை என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகா‌ரி தேவரா‌ஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீஹ‌ரி). இவரது ஆதர்ஷ ஃபேன் தூத்துக்குடியில் வசிக்கும் ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்). சென்னை வரும் போலீஸ் ரவி தேவரா‌ஜ் போலவே ஆட்டோ ஓட்டி, அவர் படித்த கல்லூரியிலேயே படிக்கிறார். தேவரா‌ஜ் போலவே என் கவுண்டர் போலீஸாக வேண்டும் என்பது ரவியின் கனவு, லட்சியம்.

இந்த‌க் கனவு, லட்சியத்துக்கு நடுவில் ரவுடி கும்பல் ஒன்று கிராஸாகிறது. (எப்படி கிராஸாகிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம்). ரவுடிகளை அழித்து சென்னையை ரவி எப்படி சுத்திக‌ரிக்கிறார் என்பது வேட்டைக்காரனின் மைய கதை.
விஜய்யின் அறிமுக காட்சிக்கே இயக்குனர் அதிகம் யோசித்திருக்கிறார். முதியவர் ஒருவரை இடித்துவிட்டு செல்லும் போலீஸ் வண்டியை விஜய் துரத்துகிறார். முடியவில்லை. திரும்பிப் பார்த்தால் குதிரைக்கு லாடம் அடிக்கும் இடம். அங்கே சில குதிரைகள். அடுத்தகணம் வெள்ளை குதிரையில் தலையில் கௌபாய் தொப்பியுடன் ஸ்லோமோஷனில் வண்டியை துரத்துகிறார் விஜய். கௌபாய் தொப்பியை குதிரைக்கார‌ரிடமிருந்து விஜய் வாங்கியிருக்கலாம். இயக்குனர் காட்டவில்லை. இப்படி பார்வையாளர்களே யூகித்து பு‌ரிந்து கொள்ள பல்வேறு காட்சிகளை புத்திசாலித்தனமாக வைத்திருக்கிறார்கள்.

போலீஸ்கார‌ரிடமிருந்து பணத்தை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் கொடுப்பதும், அவர்கள் உங்களைப் போல் யாருண்டு என்று வாழ்த்துவதும் மரபு மாறாமல் வரும் அடுத்த காட்சிகள். அறிமுக காட்சிக்குப் பின் அட்வைஸ் பண்ணுகிற பாடல் என்ற மரபையும் கறாராக பின்பற்றியிருக்கிறார்கள்.

கதாநாயகியின் அறிமுகத்தையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும். திருமணம் பற்றி பேச்சு வருகிறது. எனக்கான பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள்? அவ எப்போதோ பிறந்திருப்பாள் என்கிறார் விஜய். உடனே தலையை கோதியபடி அனுஷ்கா எ‌ண்ட்‌ரி. தியேட்ட‌ரில் விசில். வித்தியாசமான அற்புத காட்சி.

விஜய் அனுஷ்காவின் பாட்டியை கரெக்ட் செய்வதும், அவரது ஸ்கூட்டியை கண்டுபிடிப்பதுமான காமெடி காட்சிகளுக்கு குழந்தைகளும் பெ‌ரியவர்களும் சேர்ந்து சி‌ரிப்பதை குறிப்பிட்டாக வேண்டும். காமெடி சீன் என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி என்னங்கண்ணா என்று விஜய் பேச்சையும், பாடி லாங்வேஜையும் மாற்றுவது சூப்பர்.

இனி ரவுடி கிராஸிங்குக்கு வருவோம. செல்லா (ரவிசங்கர்) என்ற ரவுடிக்கு அழகான பெண்களைப் பார்த்தால் எப்படியும் அவர்களுடன் படுத்துவிட வேண்டும் என்ற வியாதி. சம்பந்தப்பட்ட பெண்களின் அப்பாவோ, புருஷனோ… யாருடைய வண்டியையாவது டியூ கட்டவில்லை என்று தூக்கி வந்துவிடுவான். பிறகு வண்டி வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெண்ணையோ, மனைவியையோ அவனுக்கு விருந்தாக அனுப்பி வைக்க வேண்டும். வண்டி இல்லாதவர்களின் வீட்டுப் பெண்களை செல்லா எப்படி மடக்குவான் என்ற ரகசியத்தை ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லாதபடி, விஜய்யின் கல்லூ‌ரி தோழிக்கு குறி வைக்கிறான் செல்லா. அந்த‌த் தோழியின் தந்தைதான் விஜய்க்கு ஆட்டோ வாடகைக்கு விட்டிருப்பவர்.

இதற்குப் பிறகு இயக்குனர் ஓய்வெடுக்க கனல் கண்ணன் களத்தில் குதித்திருக்கிறார். ரணகளம். செல்லா ஐசியூ-வில். போலீஸ் விஜய்யை அள்ளிக்கொண்டு போகிறது. காரணம், செல்லாவின் தந்தை வேதநாயகத்திடம் (சலீம் கவுஸ்) பஞ்சப்படி வாங்கி பிழைப்பவர் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் கட்டப்பொம்மன் (சாயா‌ஜி ஷிண்டே). போலீஸ் ஸ்டேஷனில் விஜய்யை போட்டு துவைக்கிறார்கள். அவரோ கதவை உடைத்து வந்து கட்டப்பொம்மனை மிதிக்கிறார். சென்னை சிட்டி போலீஸ் மொத்தமும் வந்த பிறகே அவரை அடக்க முடிகிறது.

இந்த களேபரத்துக்கு நடுவே அவ்வப்போது கண்ணீரும் கம்பலையுமாக விஜய்யை பார்த்துவிட்டு போகிறார் அனுஷ்கா. அவரை என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அறிந்து தேவரா‌ஜிடம் உதவி கேட்டு ஓடுகிறார். ஒளிந்து வாழும் தேவரா‌ஜ் (ஒளிந்து வாழ்வதற்கு தனியாக பிளாஷ்பேக் இருக்கிறது) உதவி செய்ய மறுக்கிறார்.
காட்டுக்குள் நடக்கும் என்கவுண்டர் முயற்சியிலிருந்து தப்பிக்க ரத்த காயங்களுடன் அருவியில் குதிக்கிறார் விஜய். ஆ… அருவியிலிருந்து எழுந்து வரும் விஜய் ரத்த காயமின்றி பளபளப்பாக இருக்கிறார். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று யோசித்து முடிப்பதற்குள் நியாயம் கேட்டு தேவரா‌ஜின் வீட்டிற்கு வருகிறார். ஆ… இப்போ என்ன? விஜய்யின் முகத்தில் மீண்டும் அதே ரத்த காயம்.

அடுத்து பிளாஷ்பேக். அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் தேவராஜை வேதநாயகமும் அவரது ஆட்களும் நடுவீதியில் அடித்துப் போட்டு பார்வையை பறிக்கிறார்கள். அவரது மனைவியையும், குழந்தையையும் வீட்டை‌ப் பூட்டி உயிரோடு எ‌ரிக்கிறார்கள். தேவரா‌ஜ் பற்றிய சின்னச் சின்ன செய்திகளையும் தேடிப் படிக்கும் விஜய் இது கேட்டு ஆடிப் போகிறார்.

என்கவுண்டரையும், தேவரா‌ஜ் பற்றிய செய்திகளையும் பிரசு‌ரிக்கும் பத்தி‌ரிகைகள், அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் அவரை ரவுடிகள் அடித்து பார்வையைப் பறித்ததையோ, குடும்பத்தை உயிரோடு பப்ளிக்காக எ‌ரித்ததையோ பிரசு‌ரிக்காமல் இருட்டடிப்பு செய்திருக்கின்றன. என்ன அநியாயம்? பத்தி‌ரிகைகளின் ஓரவஞ்சனையை இயக்குனர் கட்டுடைக்கும் அற்புதமான இடம் இது.

இதன் பிறகு நடப்பதை அப்படியே எழுதுவதில் சிரமம் இருக்கிறது. காரணம் அவ்வளவு பாஸ்ட். ஒரே நாளில்… நாள்கூட இல்லை 9 டூ 5 க்குள் சலீம் கவுஸின் ஜுவல்ல‌ரியை எ‌ரிக்கிறார், கட்டுமான கம்பெனியை தரைமட்டமாக்குகிறார் இன்னும் என்னென்னமோ செய்கிறார். அத்துடன் இது எதுவும் தெ‌ரியாமல் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கும் அவரது மகன் செல்லாவையும் கொலை செய்கிறார். ஒட்டுமொத்த சென்னை கார்ப்பரேஷன் நினைத்தாலும் செய்ய முடியாத ஒருநாள் சாதனைகள்.

சலீம் கவுஸ் மட்டும் சாதாரணமா? மகனுக்கு கொள்ளி வைத்த கையோடு அரசியல்வாதியிடம் பேரம் பேசி வேட்புமனு தாக்கல் செய்யாமல், இடைத்தேர்தலில் நிற்காமல் அடுத்த நாளே மந்தி‌ரியாவதற்கான ஏற்பாடை செய்து முடிக்கிறார். ஒருநாள் முதல்வர்கள் எல்லாம் பிச்சை எடுக்க வேண்டிய இடம்.

கிளைமாக்ஸ் அதிஅற்புதம். ஐநூறு பேர் அடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் சைரனைப் போடு, கார் கதவு திறந்தாச்சு என்ற விஜய்யின் டைர‌க்சனை கேட்டு கண் தெ‌ரியாத தேவரா‌ஜ் ச‌ரியாக வேதநாயகத்தை நெஞ்சில் சுட்டுக் கொல்கிறார். டைரக்டர் டச்.

அசிஸ்டெண்ட் கமிஷனரையே அசால்டாக போடும் சலீம் கவுஸ் அண்டு கோ-வின் ஒரே லட்சியம் தூத்துக்குடி ரவியை போடுவது. பலமுறை ரவியின் முகத்துக்கு நேராக துப்பாக்கியை பிடித்து ஆட்டுகிறார்களே தவிர ட்‌ரிக்கரை அழுத்தவில்லை. ஹீரோவை சுடக் கூடாது என்ற நியதியை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறார்கள் ரவுடிகள் (என்ன நேர்மை). அதிலும் அந்த மதுரை ரவுடி பக்கா. சண்டியோட ஆள் வந்தாலே சாவு வந்த மாதி‌ரி என்று துப்பாக்கியை வைத்து சாமியாடுகிறாரே தவிர ட்‌ரிக்கரை அழுத்தவில்லை. சாராயத்தை நிதானமாகக் குடித்து, லைட்டரை பற்ற வைத்து, அதை மதுரை பார்ட்டியின் முகத்தில் தீயாக விஜய் கொப்பளித்த பிறகே பிடிங்கடா வெட்டுங்கடா என்று பதறுகிறார். செம காமெடி.

பாடலுக்கான லீடையும் வித்தியாசமாகவே பிடித்திருக்கிறார் இயக்குனர். கட்டிப் போட்டிருக்கும் அனுஷ்காவை காப்பாற்றி துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில் பாய்ந்தும், தாவியும் தப்பித்து உயிரை‌க் கையில் பிடித்து பைக்கை கிளப்பினால், நான் உங்கூட தனியா இருக்கணும் என்று அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கேட்ட த்‌ரிஷா மாதி‌ரி பில்லினில் உட்கார்ந்து விஜய்யின் முதுகை பிறாண்டுகிறார் அனுஷ்கா. உடனே கலர் கலரான ட்ரெஸ்ஸில் டூயட். ஒரு பைட் ஒரு பாட்டு… அமர்க்கள திரைக்கதை.

பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அனுஷ்காவின் உடைக்கு. தாவணியை தாண்டி பார்க்காதே என்று அனுஷ்கா பாடும் போது அவர் தாவணி போட்டிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. ‌ஜிகினா வைத்த பிரா, சின்னதே சின்னதாக ஒரு கர்ச்சீஃப். விஜய்யின் அசைவுகளில் ரசிக்கக் கூடிய அதே துள்ளல்.

சண்டைக் காட்சிகளில் விஜய் ரவுடிகளை அடிக்கும் போது இரண்டுபேர் கேமராவையும் உதைப்பார்கள் போலிருக்கிறது. அவ்வளவு ஆட்டம். சலீம் கவுஸ் விஜய்யிடம் பேசும் போது கேமரா பின்னணி சத்தத்துடன் சர் சர்ரென்று தாவுகிறது. டெரர் எஃபெக்ட்?

சத்யன் இருந்தாலும் காமெடிக்கான ஸ்கோப் கட்டபொம்மன் சாயாஷிக்குதான். இவர் வரும் காட்சியில் ஒன்று தனது வப்பாட்டியுடன் போனில் பேசுகிறார், இல்லை இவரது வப்பாட்டியைப் பற்றி வேறு யாராவது பேசுகிறார்கள்.

தான் நேசித்த போலீஸ் வேலை கிடைத்தும், அதை மறுத்துவிட்டு, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான் என விஜய் டச்சிங்காக பேசுவதுடன் சுபம் போட்டு, புலி உறுமுது பாடலை ஒலிக்கவிடுகிறார்கள். உறுமலை கேட்ட மாதி‌ரியே வெளியே வருகிறார்கள் பார்வையாளர்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மீண்டும் சுயம்வரம் நடத்த ஆசை!-ராக்கி சாவந்த்

Photobucket“முதல் சுயம்வரத்தில் சிக்கிய மாப்பிள்ளை சரியான சுயநலப் பேர்வழி… எனவே மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்தி நல்ல மாப்பிள்ளையைத் தேர்வு செய்ய விரும்புகிறேன்” என்று இந்தி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை சுயம்வரம் நடத்தி தேர்ந்தெடுக்கப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார். உடனே அவரை மணக்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவர்களில் மூவரைத் தேர்வு செய்த ராக்கி, இவர்கள் மூவரையுமே பிடித்திருக்கிறது என குண்டு போட, அதிர்ந்தனர் கலாச்சார காவலர்கள். ஒருவழியாக அரைகுறை மனசோடு, எலேஷ் என்பவரை தேர்வு செய்தார். நிச்சயதார்த்தம் நடந்தது. எலேஷைப் பார்க்க கனடாவுக்குக் கூட சென்றார் ராக்கி. போய் வந்தபிறகு எலேஷை உதறித் தள்ளிவிட்டார் ராக்கி.
என்ன காரணம்?
எலேஷ் முதலில் தன்னை ஒரு பணக்காரர் என்று கூறினார். ஆனால் உண்மையில் அவர் ஒரு பெரும் கடன்காரர். இரவு விடுதிகளுக்குப்போய் பணத்தைத் தொலைக்கும் ஆசாமி. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் இவ்வளவும் எனக்குத் தெரிந்தது. வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதை வேறு பெருமையாக என்னிடம் கூறினார் எலேஷ். இன்னொரு பக்கம் அவரது குடும்பத்தினர் என்னை வேண்டா வெறுப்பாகவே பார்த்தனர். அவர்கள் யார் என்னை வெறுக்க… எனவே நானே வெறுத்து ஒதுக்கி விட்டேன் அவர்கள் அனைவரையும். என் கண்ணசைவுக்கு எத்தனையோ இளைஞர்கள் காத்திருக்க இந்த ஓட்டாண்டிக்காக நான் இத்தனை அவமானப்பட வேண்டுமா என்ற நினைப்பே எனக்கு தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்த ஆசையாக உள்ளது. முன்பு நான் சுயம்வரம் நடத்திய போது என்னை யாரும் உண்மையாக திருமணம் செய்ய விரும்பவில்லை. எல்லோரும் எனது பணம், பரிசுக்கு தான் ஆசைப்படுகிறார்கள். அப்படியில்லாமல் என்னை நேசிக்கும் இளைஞர் எனக்கு வேண்டும். இந்த முறை எனது பெற்றோர் உறவினர் துணையுடன் புதிய மாப்பிள்ளையைத் தேர்வு செய்வேன் என்றார். ஆக, பப்ளிசிட்டிக்கு ராக்கி ரெடி… காசு பார்க்க மீண்டும் தயாராகின்றன சேனல்கள்!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . Leave a Comment »

வவுனியா வதைமுகாம்களில் பாலியல் உறவிலும் ஈடுபடலாம்! கிரேக்க தத்துவமும் பேசலாம்!

Photobucketவவுனியா வதைமுகாம்களில் இளம் தமிழ் பெண்களுக்கு எதிராக ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க நியாயம் கற்பித்துள்ளார்.

சிறீலங்கா படைகளால் வவுனியா வதைமுகாம்களில் பாலியல் கொடூரங்களுக்கு தமிழ் பெண்கள் உட்படுத்தப்பட்டமை தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைக்கும் பொழுதே இவ்வாறு ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

“வவுனியா முகாம்களில் பல பாலியல் உறவுகள் இடம்பெற்றன. அங்கு எதுவும் நடக்கவில்லை என்று என்னால் கூறமுடியாது. ஏனென்றால் நான் அங்கு இருக்கவில்லை. தனித்தனியாக பாலியல் முறைகேடுகள் அங்கு நிகழ்ந்திருக்கலாம். இவற்றை எமக்குத் தெரியப்படுத்தினால் இவை தொடர்பான விசாரணைகளை நாம் முன்னெடுப்போம்.

வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம். என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது.” என்றார் சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மர்ம விமானம் பற்றி ஜெகத் கஸ்பர் அடிகளார் எழுதியுள்ள புது கப்ஸா

Photobucketசமீபத்தில் தாய்லாந்தில் தரையிறக்கப்பட்ட விமானம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதித் தள்ளியுள்ளார் திரு ஜெகத் கஸ்பர். அந்த விமானத்தில் ஆர்.பி.ஜி, விமான எதிர்ப்பு ஏவுகணை, மற்றும் துப்பாக்கிகள் இருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டனர், ஆனால் அதில் கடுமையான நச்சு வாயு அடங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும், அது இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் கஸ்பர் அவர்கள் ஒரு கப்ஸா விட்டிருக்கிறார், நக்கிப் பிழைக்கும் நக்கீரனில்.

இதற்காக ரூம் போட்டு யோசிப்பாரோ என்னமோ தெரியாது, கற்பனை வளம் இவரிடம் நிறையவே உண்டு. இந்த நச்சுவாயுக் குண்டுகளை இலங்கை அரசாங்கம் காடுகளில் எஞ்சியிருக்கும் புலிகளை அழிக்க பயன்படுத்த இருந்ததாக இவர் சொல்லியிருப்பது கோத்தபாய ராஜபக்ஷவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். என்னடா எனது திட்டத்தில் இது இல்லையே என கோத்தபாய மிரண்டிருப்பார். அவ்வளவு விசுவாசமாக இவர் வேலைசெய்கிறார். யாருக்கு என்று தமிழர்களுக்குப் புரியாதா என்ன?

இதில் தளபதி ராமுக்கு என்ன பங்கு என யோசிக்கவேண்டாம், அவர் தான் கதாநாயகன், இயக்கம் கஸ்பர் அடிகளார் தான். அதாவது வன்னிக் காடுகளில் பல தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக , வெளிப்படையாகச் சொல்கிறார் கஸ்பர். அத் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியாமல் இராணுவம் திணறுவதாகவும் எழுதியுள்ளார் கஸ்பரடிகளார், மற்றும் தளபதி ராம் உருவாக்கியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை (புது அமைப்பை) நிர்மூலமாக்கவே இந்த நச்சு வாயு ஆயுதங்களை இலங்கை தருவிக்க இருந்ததாக நக்கீரனில் எழுதித் தள்ளியுள்ளார்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் தளபதி ராம் காட்டில் யுத்தம் நடத்துகிறார், அவரை அழிக்க இலங்கை நச்சுவாயு ஆயுதங்களைக் தருவிக்கிறது என்று விளக்கம் சொல்கிறார் கஸ்பர் அடிகளார். தளபதி ராம் இலங்கை இராணுவத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் அதனை உடைத்து ராமிற்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்க முயல்கிறார் கஸ்பர் அடிகளார் என்பதே யதார்த்தம். உண்மையாகவே ராம் தனியாக காடுகளில் செயற்பட்டு வருகிறார் என்று ஒரு உதாரணத்திற்கு வைத்துக் கொண்டாலும், எப்படி இவரால் உறுதிப்படுத்த முடியும். இலங்கை சென்று நேரில் பார்த்தாரா கஸ்பர்?, தொலைபேசி மூலம் பேசிவிட்டு எதனை உண்மை என்று நம்புவது.

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் ஒவ்வொரு அடியையும் மிகவும் அவதானமாக எடுத்துவைக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். இலங்கை புலனாய்வுத் துறையின் சவால்களை முறியடிக்கும் கட்டாயத்தில் நிற்கின்றோம். இப்படியான சூழலில் இவரைப் போன்ற சிலரால் எமது போராட்டம், அதன் பாதை மற்றும் நம்பகத்தன்மை என்பன கேள்விக்குறியாக்கப்படக் கூடாது. இவரைப் போல மக்களை பிழையான பாதையில் தனது சுயநலம் காரணமாக வழிநடத்திச் செல்வோர் இனம் காணப்படவேண்டும். கதை எழுத ஆர்வம் இருந்தால் சினிமாவில் கதை எழுதலாம். தமிழர்களின் போராட்டத்தை, போராட்டப் பாதையை திசை திருப்ப கதைகளை எழுதவேண்டாம் கஸ்பர் அடிகளாரே!, நாளை வரலாறு உங்களை மன்னிக்காது பாதர் மன்னிக்காது…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »