தாய்லாந்தில் உள்ள மர்ம ஆயுத விமானம்: திடுக்கிடும் தகவல் அம்பலம்

கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச வான்பரப்பில் பறப்பில் ஈடுபட்டிருந்த காகோ விமானம், எரிபொருள் நிரப்புவதற்க்காக தாய்லாந்தில் இறங்க அனுமதி கோரி இருந்தது. அதற்கான அனுமதியைப் பெற்று அது தரையிறங்கிய வேளையில் அமெரிக்க உளவு நிறுவனமான CIA கொடுத்த இரகசியத் தகவலை அடுத்து அந்த விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதில் சுமார் 35 தொன் கனரக ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு , தற்போது விசாரணைக்காக 12 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க வடகொரிய ஆயுத முகவர் ஒருவர் ஊடாக விடுதலைப் புலிகள் ஏற்கனவே ஆயுதங்களுக்கான பணத்தைச் செலுத்தி இருந்த வேளை, தற்போது கே.பி யின் உதவியுடன் இந்த ஆயுதங்களை இலங்கைக்குக் கொண்டுவந்து அது புலிகள் வெளிநாட்டில் கொள்வனவு செய்த ஆயுதம், அவற்றை வெற்றிகரமாக நாம் கைப்பற்றி இலங்கைக்கு கொண்டு வந்துள்ளோம் என இலங்கை அரசு நடத்த இருந்த நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது. அதிர்வு இணையத்திற்கு கிடைத்த நம்பத் தகுந்த தகவலின் படி அரசாங்கமே இந்த ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் வெளி நாட்டுச் சொத்துகளை முடக்கப் போகிறோம் என்றும், அவர்களுக்குச் சொந்தமான 3 கப்பல்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவருவோம் எனவும் மார்தட்டிய இலங்கை அரசு, சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், புலிகளின் கப்பல் மற்றும் ஆயுதங்களையும், அவர்களின் வெளிநாட்டுச் சொத்துகளையும் இலங்கைக்குக் கொண்டு வருவதாகக் கூறி சிங்கள மக்களை ஏமாற்ற மகிந்தவும், கோத்தபாயவும் தீட்டிய ரகசியத் திட்டம் தற்போது, அமெரிக்கா தாய்லாந்திற்குக் கொடுத்த தகவலினால் அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிவரும் ரணில் அவர் தலைமையில் சரத் பொன்சேகாவை காப்பாற்றவே அமெரிக்க இவ்வாறு ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் வெற்றிகரமாக இலங்கை வந்து சேர்ந்திருந்தால், மகிந்த அரசு சிங்கள மக்களிடையே மேலும் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும். பல மில்லியன் மதிப்புள்ள இந்த ஆயுதங்களை பின்னர் கோத்தபாய விற்றுக் காசாக்கியும் இருப்பார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: