“கோவிலாக” மாறியுள்ள “அலரி மாளிகை” வசீகர வித்துவான் மகிந்த

பிரதமர் மாளிகையாக இருந்த அலரி மாளிகையை வலுக்கட்டாயமாக தான் கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையாக்கிய மஹிந்த, இப்போது அதை ஒரு ‘கோவிலாக’ மாற்றியுள்ளார் என்றுதான் செல்லவேண்டும். எல்லாம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மஹிந்தவுக்கு இந்திய சாத்திரிமார் சொல்லிக்கொடுத்துள்ள தந்திரங்கள் தான் இவையாம். இதன்படி தனது மாளிகையை அன்னசத்திரமாக மாற்றி, இலவச உணவு, பானம் வழங்கிவருகிறார் மஹிந்த. இங்கு பூஜைகளுக்கு குறைவில்லை.

ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலில் ஒரு “மந்திரித்த கயிறு” கட்டப்பட்டுள்ளதாகவும், ஓசி சாப்பாட்டுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவரும் முதலில் அந்த கயிற்றின் மேலாக பாய்ந்து செல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கொடுக்கப்படும் உணவிலும் புனிதமான மஞ்சள் அதிகம் சேர்க்கப்படுகின்றமை இன்னொரு விடயம். தேர்தல் வெற்றிக்காக “வசியம்” செய்வதற்காக இந்தியாவிலிருந்து மஹிந்தவால் அழைக்கப்பட்டுள்ள “சாமிமார்கள்” இரவு பகலென்று பார்க்காமல் கடுமையாக உழைத்து வருகின்றனராம்.

வசியம் செய்வதற்காக பலவகையான பதார்த்தங்கள் உணவுக்குச் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இதற்கும் ஒருபடி மேலேபோய், இதற்காக உணவு தயாரிக்கப்படும் இடத்துக்கு சிறப்பு தூதுக்குழு அனுப்பப்பட்டு தாம் கூறும் பதார்த்தங்கள் யாவும் உணவில் சேர்க்கப்படுகின்றதா என்ற சோதனைவேறு நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது கிடைக்கப்பெறும் தகவலின்படி ஜனாதிபதி யாரையாவது ஓசியாக சாப்பாட்டிற்கு அழைத்தால் அவர்கள் தற்போது அங்குசெல்லப் பயப்படுவதாக கூறப்படுகிறது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: