கோத்தபாய ராஜபக்சவின் மனைவி இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்

Photobucketஇலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதிக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் மனைவி பெரும் நிதியுடன் ஆசிய நாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் எதிர்வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன.

இதனை தொடர்ந்து அரச தரப்பில் உள்ள பலரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். அரச ஊடகங்களின் தலைவர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நுழைவு அனுமதிகளை பெற்றுள்ள அதே சமயம் பாதுகாப்பு செயலாளரின் மனைவியும் நாட்டைவிட்டு தப்பி சென்றுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் மனைவி பெயர் குறிப்பிடாத ஆசிய நாடு ஒன்றிற்கு முதலில் சென்றுள்ளதாகவும், அதனை தொடர்ந்து அவர் வேறு ஒரு நாட்டுக்கு செல்ல உள்ளதாகவும் அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் தன்னனுடன் அதிகளவு பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தன்வசம் உள்ள ஏனைய நிதிகளையும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றுவதற்கு கோத்தபாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: