கல்யாணத்திற்கு முன் செக்ஸ் -கிராமங்கள் முன்னிலை!

Photobucketகல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் நகர்ப்புறங்களை விட கிராமத்தினர்தான் முன்னணியில் உள்ளனராம். சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகம் என்ற அமைப்பு இதுதொடர்பாக நடத்திய சர்வேயில் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த சர்வே முடிவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும், நோபல் பரிசு வென்ற அமார்த்ய சென்னும் டெல்லியில் வெளியிட்டனர். ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 58,000 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2006ல் தொடங்கி 2008 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம். ஆய்வின் சில முக்கிய அம்சங்கள்…
கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆண்களில் 17 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். அதேசமயம், நகரங்களில் இது 10 சதவீதமாக உள்ளதாம்.
நகர்ப்புற பெண்களில் 2 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு கொள்கிறார்களாம். அதுவே கிராமப்புறங்களில் 4 சதவீதமாக உள்ளதாம்.
கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நகர்ப்புற ஆண் பெண்களும் சரி, கிராமப்புறத்தினரும் சரி பாதுகாப்பற்ற முறைகளிலேயே அதில் ஈடுபடுகின்றனர். பலருடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் அதிகமாகவே உள்ளதாம்.
19 வயதுக்குட்பட்டோரில் (நகரம்- கிராமம்) 8 சதவீதம் பேர் செய்துதான் பார்ப்போமே என்பதற்காக செக்ஸில் ஈடுபடுகின்றனராம்.
அதேபோல மனைவியை அடிப்பதில் தவறே இல்லை என்ற கருத்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களிடம் நிலவுகிறதாம். கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளனராம்.
தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர மனைவியை அடிப்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்று கூறினராம். ஆந்திராவில் இது மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் மனைவியை அடிப்பது எங்களது உரிமை என்று கூறியுள்ளனராம்.
இந்த ஆய்வில், இளம் பெண்களிடையே, கருத்தரிப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பலருக்கு எய்ட்ஸ், எச்ஐவி தடுப்பு முறைகள் குறித்து தெரியவே இல்லையாம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

தகாத உறவு-மலேசியாவில் 3 பெண்களுக்கு கசையடி

மலேசியாவில் திருமணமான பின்னர் தகாத உறவு கொண்ட மூன்று பெண்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி கசையடி வழங்கப்பட்டது. மலேசியாவில் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் கசையடி வாங்கிய முதல் சம்பவம் இதுவே. ஏற்கனவே ஹோட்டல் பாரில் பீர் குடித்த குற்றத்துக்காக கசையடி தண்டனை அறிவிக்கப்பட்ட 32 வயது கார்த்திகா என்ற பெண்ணுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தகாத செக்ஸ் உறவு கொண்ட குற்றத்துக்காக மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்களுக்கு கசையடி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கசையடி தண்டனை கடந்த 9ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது. இத்தனை நாள் நிதானித்து நேற்று இதனை அரசு அறிவித்துள்ளது. திருமணமான மூன்று பெண்கள் முறை தவறி மற்ற வேற்று ஆண்களுடன் செக்ஸ் உறவு கொண்டதால் அந்த பெண்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நான்கு ஆண்களுக்கும் இந்த தண்டனையை கோலாலம்பூரில் உள்ள ஷரியா கோர்ட் விதித்து தீர்ப்பளித்ததாக அமைச்சர் கூறினார். தண்டனை பெற்ற பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க அமைச்சர் மறுத்து விட்டார். ஆண்களும், பெண்களும் தனித்தனியாக சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டு கசையடி கொடுக்கப்பட்டதாகவும், அப்போது மருத்துவர் ஒருவர் உடன் இருந்தார் என்றும் அமைச்சர் கூறினார். பெண்களுக்கு நான்கு கசையடியும், ஆண்களுக்கு ஆறு கசையடியும் தரப்பட்டதாகக் கூறிய அமைச்சர், இந்த தண்டனையால் அவர்களை காயப்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. இதைப்பார்க்கும் மற்ற பெண்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

எய்ட்ஸ் பாதித்த காதலனை கொன்ற ஓரின சேர்க்கையாளர்!

Photobucket>எய்ட்ஸ் பாதித்த காதலனை, தலையணையால் அமுக்கி கொலை செய்த பிபிசி நிகழ்ச்சி தொகுப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். பிபிசி தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்தவர் ராய் கோஸ்லிங் (70). பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓரினச் சேர்க்கையாளர். கடந்த திங்கள் கிழமையன்று பிபிசி நிகழ்ச்சி ஒன்றின் மூலம், தனது ஓரினச் சேர்க்கை காதலனை தானே கருணைக் கொலை செய்ததாக இவர் கூறினார். காதலன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால், கருணை கொலை என்ற பெயரில் மருத்துவமனையிலேயே காதலனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் கூறுகையில், ‘நோய் படுக்கையில் இருந்த காதலனை மருத்துவர்கள் காப்பாற்ற வாய்ப்பே இல்லை என்றனர். சட்டென்று ஒரு தலையணையை எடுத்த நான், காதலின் முகத்தில் வைத்து அழுத்தினேன். சில வினாடிகளில் அவனின் உயிர் பிரிந்துவிட்டது. இது நான் அவனுக்கு செய்த பெரிய உதவி. அவனைப் பிரிந்து நான் துயரம் அடைந்திருக்கிறேன். இதை நான் தாங்கிக் கொள்வேன். ஆனால் நோய் பாதிப்பை அவன் எத்தனை நாள் தாங்குவது’ என்றார். இத்தகவல் வெளியானதை அடுத்து போலீசார் நேற்று கோஸ்லிங்கை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

35க்கு மேல் செக்ஸை விரும்பாத பெண்கள்!

35 வயதைத் தாண்டிய பெண்களில் கணிசமானவர்கள் செக்ஸ் உறவை விட்டு விலகிப் போய் விடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் நான்கில் ஒருவர் செக்ஸ் வாழ்க்கையை விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளனராம். இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்தியவர்களில் ஒருவரான கொலீன் நோலன் கூறுகையில், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 28 சதவீதம் பேர் காதல், காமம் என்பதெல்லாம் பழைய கதை என்று கூறினர். 35 முதல் 64 வயதுக்குட்பட்ட 745 பெண்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. அதில் குழந்தைப் பேறு இல்லாத பெண்களிடம், குழந்தை பெற்ற பெண்களை விட ஆர்கசம் அதிகம் இருப்பதாக தெரிய வந்தது. 41 சதவீதம் பேர் அடிக்கடி தங்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதாக தெரிவித்தனர். ஒரு குழந்தை வைத்துள்ள தாய்மார்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே முழுமையான திருப்தியை செக்ஸ் மூலம் அடைந்ததாக கூறினர். 2 குழந்தைகளுக்குத் தாயான பெண்களில் 14 சதவீதம் பேர் ஓரளவு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாக தெரிவித்தனர். பகுதி நேரமாக வேலை பார்க்கும் பெண்களில் 67 சதவீதம் பேருக்கு அதிக அளவில் ஆர்கசம் வருவதாக தெரிவித்தனர். முழு நேர வேலையில் உள்ள பெண்களில் 57 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். மெனோபாஸ் பயம் பெண்களிடையே அதிக அளவில் உள்ளதாம். 42 சதவீதம் பெண்கள் இதை நினைத்து தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக குறிப்பிட்டனர். நடுத்தர வயது முதல் முதிய வயதையொட்டிய பெண்களுக்கு பல்வேறு வகையான உடல் நலக் கோளாறுகள் காணப்படுகின்றன. இருப்பினும் இதை யாரிடமும் போய்ச் சொல்ல அவர்கள் விரும்புவதில்லை. காரணம், தயக்கம் தான். அதேபோல 35 வயதைத் தாண்டி விட்ட பின்னர் செக்ஸ் வாழ்க்கையில் பெண்களுக்கு ஒருவித அலுப்பு வந்து விடுவதும் தெரிய வந்துள்ளது என்றார் நோலன்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

புலிகளின் தொழில் அதிபர் இந்திரன்-நடிகை ரம்பா நிச்சயதார்த்தம்!

Photobucketவெளிநாட்டு தொழில் அதிபரான யாழ் மானிப்பாயை சேர்ந்த இந்திரன் என்பவர் இந்திய சினிமா நட்சத்திரம் ரம்பா என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். கனடாவில் புலிகளின் தொழில் நிறுவனமான மஜிக்வூட் தொழில் நிறுவனத்தை நடாத்திவரும் இவர். ரம்பா என்ற இந்திய சினிமா நட்சத்திரத்தை திருமணம் செய்து கொள்கின்றார். அண்மையில் சென்னையில் வைத்து திருமணம் செய்துகொண்ட ரம்பாவை ஏப்பிரல் 8ம் திகதி திருப்பதியில் வைத்து இந்திரன் திருமணம் செய்து கொள்கின்றார். தமிழீழம் பெற்று தருவதாக கூறி புலம்பெயர் வாழ் தமிழர்களிடம் சேகரிக்கப்பட்ட பெருமளவு பணம் இவ்வாறு தனிநபர் கைகளில் சிக்குண்டு, இந்திய சினிமா நட்சத்திரங்கள் போன்றவழியில் அநியாயமாக்கப்பட்டு வருகின்றது. வுன்னியில் இடம்பெற்ற கோர யுத்தத்தில் சிக்குண்டு மக்கள் பசியாலும், பட்டிணியாலும் வாடியபோது உதவாத இந்த பணம் இந்திய சினிமா நட்சத்திரம் ரம்பாவுக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்கவும், வைரக்கல் மோதிரம் வாங்கவும் உதவியுள்ளது குறித்து புலம்பெயர் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இவ்வாறான தொழில் அதிபர்கள் போன்று பலர் புலிகளின் பணத்தில் பிரபலம் பெற்றுள்ளனர். புலிகளின் பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் விரைவில் அம்பலத்திற்கு வரும். இது தொடர்பான விசாரணைகளில் அவ் அவ் நாடுகளில் புலனாய்வுதுறையினர் ஈடுபட்டுள்ளதுடன், வருமானம் எவ்வாறு வந்தது குறித்த வருமான வரியையும் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »