அசல்.. 3 நாளில் ரூ 18 கோடியைத் தாண்டியது வசூல்!

Photobucketஅஜீத் நடித்த அசல் படம் 3 நாள்களில் ரூ 18 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. அஜீத் நடித்து கடந்த 6-ம் தேதி வெளியான திரைப்படம் அசல். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபு தயாரித்திருந்தார். இந்தப் படம் உலகமெங்கும் 550 பிரிண்டுகள் வரை வெளியானது. ஏகன் படத்தின் தோல்விக்குப் பிறகு வந்த படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தமிழகத்தில் 350 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு சென்னையில் ஒருவாரம் வரை (வரும் வியாழக்கிழமை வரை) முன்பதிவு முடிந்துள்ளது. வெளிநாடுகளில் சரியான முறையில் விநியோகிக்கப்படா விட்டாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 41 நாடுகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளதாம். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், முதல் வார வசூலிலேயே தயாரிப்பாளர் போட்ட ‘அசலை’ எடுத்து விடுவார்கள் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இதுவரை ரூ 18 கோடியை இந்தப்படம் வசூலித்து விட்டதாகவும் அசல் பட விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இது அசல் கணக்கா அல்லது கந்தசாமிக்கு கலைப்புலி தாணு கொடுத்த மாதிரியான கணக்கா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இதுகுறித்து தயாரிப்பாளர் பிரபுவிடம் கேட்டோம்: எவ்வளவு வசூல் என்ற விவரமெல்லாம் பிறகு சொல்கிறேன். இது விநியோகஸ்தர்கள் தரப்பில் சொன்னதாக கூறுகிறார்கள். உறுதிப்படுத்திக் கொண்டு விவரங்கள் தருகிறேன்.

மற்றபடி படம் பிரமாதமாகப் போகிறது. தம்பி அஜீத் நல்ல பண்பாளர். அவர் நல்ல மனதுக்கு ஏற்றபடி படமும் நன்றாகப் போகிறது. தமிழகமெங்கும் ரசிகர்கள் தந்த உற்சாகமும் ஆதரவும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது” என்றார்.

இந்த ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களிலேயே வெளியிட்ட 3 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ள ஒரே படம் அசல் என்கிறது திரையுலக வட்டாரம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: