விடுதியில் இருந்து வைத்தியசாலைக்கு இரவில் பணிக்குவரும் பெண் டாக்டர்களை வழிமறித்து முத்தமிட்டு வந்தவர் பிடிபட்டார்

Photobucket

விடுதியில் தங்கியிருந்து வைத்தியசாலைக்கு இரவுநேரங்களில் அவசரக் கடமைக்காக வரும் பெண் வைத்தியர்களை இடையில் வழிமறித்து அவர்களை பலவந்தமாகக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுவந்த  நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தம்புள்ள வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர், துணிச்சல்மிக்க பெண் வைத்தியர் ஒருவரை முத்தமிட முயன்றபோதே மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.

மிகநீண்ட காலமாகவே விடுதியில் தங்கியிருந்து இரவில் வைத்தியசாலைக்கு வரும் பெண் வைத்தியர்களை விடுதிக்கும் வைத்தியசாலைக்குமுள்ள இடைப்பட்ட தூரத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் பலவந்தமாக முத்தமிட்டு வருகின்றார் என்ற கிசுகிசு வைத்தியசாலை வட்டாரத்தில் நிலவிவந்துள்ளது.

இந்தநிலையில் அண்மையில் விடுதியில் தங்கியிருந்த சிரேஷ்ட பெண் வைத்தியர் ஒருவர் அவசர அழைப்பின்பேரில் வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளார். அப்போது குறித்த நபர் இருளில் அவரை வழிமறித்துக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றுள்ளார். எனினும் துணிச்சல்மிக்க அந்த வைத்தியர் புத்திசாதுரியமாக அவரை மடக்கிப்பிடித்துக்கொண்டு கூச்சலிட்டதில் திரண்ட வைத்தியசாலை ஊழியர்களும், ஏனையவர்களும் அந்த நபரைப் பிடித்து தம்புள்ள பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தம்புள்ள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

ரஜினி-அஜீத் நெருக்கம்! -விஜய் வட்டாரங்களில் நறநற….

விஜய்யின் 51 வது படம் ‘பாடிகாட்’ படத்தின் ரீமேக் என்பது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் என்று சொல்லப்பட்டாலும், சேட்டன்களின் கூற்று வேறு மாதிரி இருக்கிறது. “இது எங்க ஊர்ல பிளாப் படமாச்சே” என்கிறார்கள் அவர்கள். ஆனால் தமிழில் எடுக்கும்போது சிற்சில மாற்றங்களை செய்து இங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்றார்போல எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் சித்திக்.

ஏற்கனவே விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தை வெற்றிப்படமாக்கிய அனுபவமும் இருக்கிறது இவருக்கு. இப்பவே இரண்டு பாடல்களுக்கான கம்போசிங் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஏனிந்த அவசரம்?

சமீபகாலமாக ரஜினிக்கும், அஜீத்துக்கும் இருந்து வருகிற நட்பு சினிமாவில் பலரது கண்களையும் உறுத்தி வருகிறது. அதிலும், தனது மகள் சௌந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு ரஜினி அழைத்த இரண்டே நடிகர்களில் அஜீத் இருந்தார். ஆனால் விஜய் இல்லை. இந்த புறக்கணிப்பு சற்று தடுமாற வைத்திருக்கிறதாம் விஜய் தரப்பை.

ஏன் நமது 51வது படத்தை எந்திரனோடு வெளியிடக்கூடாது என்று யோசிக்க வைத்திருக்கிறதாம். அதற்கான வேகம்தான் இந்த இரண்டு பாடல்கள். பொதுவாகவே சித்திக் வேக வேகமாக படத்தை எடுத்து முடிக்கிற வழக்கம் உடையவர் என்பதால் இந்த ஸ்பீட் தீபாவளியை நோக்கிதான் என்கிறார்கள். எந்திரனையும் அந்த நேரத்தில் கொண்டு வரலாம் என்றுதான் பம்பரமாக உழைத்துக் கொண்டிக்கிறார் ஷங்கர்.

ஆனால் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. ஒருவேளை விஜய்யின் படமே முழுக்க தயாரானாலும், ரஜினி-ஷங்கர்-ஐஸ்வர்யா-சன் பிக்சர்ஸ் என்ற மலைகளை எதிர்க்கிற தைரியம் அந்த நேரத்தில் பம்மிக் கொள்ளும் என்று சொல்பவர்களும் உண்டு.

பார்க்கலாம்…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

சினிமாவில் நித்யானந்தர்!!

Photobucketஇன்றைய தேதியில் ஊடகங்களின் மெகா அறுவடை நித்யானந்த‌ரின் காதல் லீலைகள். நாளொரு புகைப்படமும், பொழுதொரு வீடியோவுமாக கல்லாகட்டி வருகின்றன.
தொலைக்காட்சிகளும், பத்தி‌ரி‌க்கைகளும். இந்த அமுதசுரபியை நமது திரைத்துறையினர் மட்டும் விட்டு வைப்பார்களா?

ஷக்தி சிதம்பரம் இயக்கும் குரு சிஷ்யன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. என்றாலும் அவசர அவசரமாக சில காட்சிகளை ஷூட் செய்து படத்தில் இணைத்திருக்கிறார்கள். அந்தக் காட்சிகள் நித்யானந்த‌ரின் காதல் லீலையை காமெடி செய்யும் காட்சிகள் என்பதை சொல்லத் தேவையில்லை.

குரு சிஷ்யனில் சுந்தர் சி., ஸ்ருதி (இந்திரவிழா ஹேமமாலினி) நடித்துள்ளனர். இவர்களின் காதல் காட்சியை நித்யானந்தர் வீடியோவுக்கு எந்தவிதத்திலும் குறையாத வகையில் படமாக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம். அதிலும் ஸ்ருதியின் சிங்கிள் பீஸ் நீச்சல் உடை காட்சிகள் டபுள் ஏ ரகம்.

சுந்தர் சி., சத்யராஜுடன் கிரண் ஆடும் வாங்கோண்ணா ‌‌ரீமிக்ஸ் பாடல் மிக கவர்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கிளுகிளுப்பு போதாது என்று நித்யானந்தர் காட்சியையும் சேர்த்திருக்கிறார்கள்.

உலகமே அழிந்தாலும் உண்டியலில் சில்லறை சேர்ந்தால் ச‌ரிதான்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

நித்யானந்தா வழக்குகளை சிஐடி போலீஸ் விசாரிக்கும் – கர்நாடகா அறிவிப்பு

நித்யானந்தனின் செக்ஸ் வீடியோ மற்றும் இதர மோசடிகள் குறித்து கர்நாடக சிஐடி போலீஸ் விசாரிக்கும் என்று கர்நாடகா அறிவித்துள்ளது.

நித்யானந்தன் – ரஞ்சிதா செக்ஸ் வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக நித்யானந்தன் மீது 6 பிரிவுகளில் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நித்யானந்தா வழக்கு பற்றி கர்நாடக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. இன்பாண்ட் கூறியதாவது:

நித்யானந்தா மீதான வழக்கு ஆவணங்கள் தமிழக போலீசார் மூலமாக எங்களுக்கு கிடைத்துள்ளன. அவற்றை ராமநகரம் மாவட்டத்தில் உள்ள பிடதி போலீஸ் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள்.

ஆவணங்கள் தமிழில் உள்ளதால் அவற்றை கன்னடத்துக்கு மொழி மாற்றம் செய்து மறுபடியும் வழக்குகளை இங்கு பதிவு செய்யவேண்டும். இந்த வழக்குகளை பதிவு செய்த பின்பு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள். வழக்குகளில் பல சிக்கல்கள் உள்ளதாலும் இதில் தமிழகமும் சம்பந்தப்பட்டு உள்ளதாலும் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது…, என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

நித்தியானந்தா சீசன்!!

போலி சாமியார் ஜோக்ஸ் :

1 . “சுவாமி உங்கள பத்தி வீடியோ ரிலீஸ் ஆகிருக்கு”
“ச்சை முதல்ல திருட்டு dvd அ ஒழிக்க முதல்வர்கிட்ட மனு குடுக்கணும்”

2 . ஸ்வாமியோட தற்பெருமையால பாரு போலீஸ் நம்மள வலை வீசி தேடுது ”
“ஏன் என்ன ஆச்சு”
” இந்தியாவிலயே அதிகமா மகளிர் இட ஒதுக்கீடு இருக்கறது நம்ம ஆசிரமத்தில் தான்னு பேட்டி குடுத்திருக்கார் ”

3. “கதவை திற……. னு தத்துவங்களெல்லாம் உதிர்த்துட்டு இப்படி கதவை
மூடி ஒளிஞ்சிட்டிருகிங்கலே ”
” காற்று வரட்டும்னு சொன்னேன் போலீஸ் இல்ல வருது ”

4 . “Finance கம்பெனி ஆரம்பிச்ச நீங்க இப்ப ஆசிரமம் அரம்பிசிருகீங்க ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன சுவாமி
” வித்தியாசம்- Finance கம்பெனில குடுக்கற பணம் donationஉ தெரியாம மக்கள் ஏமாறுவாங்க
ஆசிரமத்துக்கு குடுக்கற பணம் donationஉ தெரிஞ்சும் மக்கள் ஏமாறுவாங்க…..
ஒற்றுமை- ரெண்ட பத்தியும் மக்கள் பின்னாடி பீல் பண்றது
சுவாமி “உங்க அடுத்த டார்கெட்”
“ஸ்கூல், காலேஜ்”

5. நித்தியானந்தா படத்தில் இருப்பது தான் இல்லை கிராபிக்ஸ் என்று சமாளிக்கிறார்…. வேறு எவ்வாறெல்லாம அவர் சமாளிக்ககூடும் என்று பார்ப்போம்… நகைச்சுவைக்காக…..

  • படத்தில் இருப்பது நான் இல்லைங்க என் தம்பி…. சத்தியானந்தா … நாங்க ரெட்டை பிறவிகள்
  • லேபர் லா படி 8 மணி நேரம் தான் வேலை நான் என் சாமியார் duty முடிந்து என்ன செய்தால் உங்களுக்கென்ன.
  • கடந்த ஒரு மதமாக எனக்கு செலெக்டிவ் அம்னீஷியா நான் சாமியார் என்பதையே மறந்துவிட்டேன் “
  • அட நான் ஆளே இலிங்க நான் ஒரு கிராபிக்ஸ் லைட்ல மட்டும் தெரிவேன் ஆப் பண்ணி பாருங்களேன் ….(எஸ்கேப்)

//

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற கட்டுரை உண்மைக்குப் புறம்பானது.

<!–

செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்
15.03.2010

கடந்த 14.03.2010 அன்று சில தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும். மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது. அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது.

மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒன்று இருந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.

திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்கு தமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன். வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.

புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.

கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.
இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல.

கடந்த 12.03.2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13.03.2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.

எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்


விளம்பரங்கள்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் பெரியார்தாசன்!

periyardasan200பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார். இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது” என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார். பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »