நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசார் திணறல்..!

நித்யானந்தா சாமியார், பெண் சீடர்களுடன் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது. இதற்கிடையில் தற்போது போலீஸ் காவலில் உள்ள நித்யானந்தா சோர்வாக இருப்பதால், அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட பல பெண்களுடன் தொடர்புபடுத்தி செக்ஸ் புகார் கூறப்பட்ட நித்யானந்தா சாமியார், இமாசல பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து வந்தார். பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்து பெங்களூர் அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, விசாரணைக்காக வருகிற 26-ந்தேதி வரை போலீசார் தங்கள் காவலில் எடுத்துள்ளனர். நேற்று பெங்களூரில் உள்ள சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்தில் நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை தொடங்கினார்கள்.

நேற்று காலை நித்யானந்தா பற்றி புகார் கொடுக்க 2 இளம்பெண்கள் சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. நித்யானந்தாவிற்கு போலீஸ் காவல் முடிந்த பின், வருகிற 26-ந் தேதிக்கு பிறகு புகார் கொடுக்க வரும்படி அந்த பெண்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

பிடதி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகள் பற்றியும், ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்டுள்ள முக்கிய ஆவணங்கள், சி.டி.க்கள், இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் நித்யானந்தாவிடம் சி.ஐ.டி போலீசார் நேற்று காலையில் விசாரணை நடத்துவதற்கு ஆயத்தமாகி இருந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமநகரில் இருந்து நித்யானந்தாவை பெங்களூருக்கு அழைத்து வந்ததால், நேற்று காலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் சோர்வாக இருந்ததால் காலை 11 மணி வரை நித்யானந்தா தூங்கி கொண்டு இருந்தார். இதனால் நித்யானந்தாவிடம் நேற்று சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடியாமல் திண்டாடினார்கள்.

அத்துடன் தன் மீது உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா சென்று விட்டார். இந்த காரணத்தினாலும் நேற்று நித்யானந்தாவிடம் விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். நித்யானந்தாவை இன்று (சனிக்கிழமை) அல்லது நாளை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில், ஆசிரமத்தில் உறுப்பினர்களாக சேரும் ஆண், பெண் சீடர்களிடம், நித்யானந்தா ரகசியமாக `செக்ஸ்` ஒப்பந்தம் போட்டு இருந்ததும் தற்போது அம்பலமாகி உள்ளது. ஆசிரமத்தில் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் நடத்திய சோதனையில் இதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.

10 பக்கங்கள் கொண்ட அந்த ஒப்பந்தத்தில், கடைசி இரண்டு பத்திகளில், ஆராய்ச்சிக்கு தேவைப்படும்போது `செக்ஸ்` உறவு வைத்துக்கொள்ள நேரிடலாம். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது. மேலும் அந்த ஒப்பந்தம் குறித்து எந்த சூழ்நிலையிலும் வெளியே சொல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தத்தில், “ஆண்-பெண் பரவச நிலை, நிர்வாண நிலை மற்றும் ஆன்மீகம், மகிழ்ச்சி, சுதந்திரத்தை அதிகரிக்கும் வகையில் `செக்ஸ்` உறவில் ஈடுபடுவது உள்ளிட்ட பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திர கலைகளை கற்பது மற்றும் நேரடி பயிற்சியும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இத்தகைய நடவடிக்கைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சவால்விடும் வகையில் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து நிபந்தனையற்ற ஒப்புதல் வழங்குவதாக அர்த்தம்“ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒப்பந்தத்தில் பெரும்பாலும் பெண்கள்தான் அதிக அளவில் கையெழுத்திட்டு உள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பெண்கள் சிலரும் கையெழுத்திட்டு உள்ளனர். அவர்களில் சிலர், ஒப்பந்தம் பற்றி வெளியே சொல்ல மாட்டோம் என்று உறுதி அளித்து உள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதால்தான், ரஞ்சிதா உள்ளிட்ட பல பெண்கள் நித்யானந்தாவின் லீலைகள் பற்றி வெளியே சொல்ல தயங்கியதாக கூறப்படுகிறது.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதைப்போல், மேலும் 5 பெண்களுடன் நித்யானந்தா `செக்ஸ்` தொடர்பு வைத்திருப்பதை விளக்கும் 35 `கிளிப்பிங்ஸ்`களைக் கொண்ட வீடியோ சி.டி.க்களும் ஆசிரம சோதனையின்போது சிக்கி உள்ளன.

அந்த 5 பெண்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்களிடம் வாக்குமூலம் பெறவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: