என்ன கொடுமை இது ஞாநி? – தாமரை

Photobucketநடுநிலையோடு கருத்துக் கூறுவது என்ற பெயரில் நரித்தனத்தோடு கட்டுரை எழுதுவது ‘ஞாநி’களுக்கு அழகல்ல என்று கவிஞர் தாமரை சாடியுள்ளார்.

குமுதல் நாளிதழில் வெளியான ஞாநியின் கட்டுரைக்கு பதிலளித்து கவிஞர் தாமரை எழுதியுள்ள கடிதத்தை இங்கு அப்படியே தருகிறோம் :

9/6/2010 குமுதம் ஓ… பக்கங்களில் சீரழிவு 2 என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்சிசி அடைந்தேன்.

சர்வதேச இந்தியத் திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய்க் கொழும்பில் நடத்துவதன் ‘அரசியல்’ ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாம்றறியது இனப் படுகொலையின் கறையை மறைந்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை!

கொழும்பு விழா வெறம் கலை விழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக் களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெருவணிகர்கள் – முதலாளிகள் (FICCI) ஆதாய வேட்டை விழா, பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும் வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாதா?

‘சிலருடைய மிரட்டல் அரசியல்’ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக் களத்தில் கூத்து, கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்’ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என்போன்றோர்க்கு அரசியல் ஏதுமில்லை. மனித உரிமை, மக்கள் பிரச்சனை, தமிழர் நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும்! நாங்கள் எப்போது யாரை மிரிட்டினோம் என்று விளக்கட்டும்! அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா?

ஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலே காரணம் என்பதை மறைத்துப் பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார் ஞாநி. என்ன கொடுமை இது? தாக்குகிறவனையும் தாக்கப்படுபவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற ‘மகா அறிவாளி’களின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா?
Photobucket
ஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப் பேரழிப்பை நடத்தியவர் ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் இன அழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்த பிறகுதான் முள்ளிவாய்க்கால் முழுப் பேரழிவு நிகழ்ந்தது என்பதை ஞாநியின் மனாசட்சி அறியாமலிருக்காது.

‘கொடூரங்கள் முடிந்து ஓராய்ணட கழித்து’ என்கிறார் ஞாநி, ஓராண்டு என்ன, நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டிலேற்றித் தண்டிக்கும் வரை, தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்புப்படியான அரசியல் தீர்வு கிட்டும் வரை… பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப் படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள் மக்களும் ஆதரவு தரவேண்டுவாம்.

இதே ஐ·பா விழாவைக் கராச்சியிலோ, இஸ்லாமாபாத்திலோ இந்தி நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்!

சிங்களர்கள் கண் தானம் செய்வதைப் பாராட்டுகிறார் ஞாநி. வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டுக் காலில் மிதித்த சிங்கக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்!

ஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்துகொண்ட ஜெனிலியாவுக்கு’ இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் ‘அன்பான’ அழைப்பை நிராகரித்த நமிதாவுக்கு இந்த வாரத்திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம்.

எந்தப் பக்கமும் சாயாமல் ‘நடுநிலை’யோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலி நீதிபதி’களுக்குரிய ‘நரி நாட்டாமை’ ஞாநிகளுகே அழகில்லை!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 1 Comment »

ஒரு பதில் to “என்ன கொடுமை இது ஞாநி? – தாமரை”

  1. rasarasachozhan Says:

    அங்க இங்கனு கொஞ்சம் பேருக்காவது கொஞ்சம் இன மானம் இருகே…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: