அம்பலமானது பிரிட்டன் ஆசிரியையின் காமக் களியாட்டம்! 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் பழக அவருக்குத் தடை

15 வயதுச் சிறுவன் ஒருவனை பாலியல் தேவைக்காக பயன்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை எடுத்து வந்த ஆன் போலி பேச் என்கிற 47 வயது பிரித்தானிய பெண்ணுக்கு அந்நாட்டின் லெஸ்டர் நகர நீதிமன்றம் எட்டு மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அத்துடன் அவர் 18 வயதுக்கு குறைந்த எந்த ஆண்களுடன் பழகவே கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தப் பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இவர் ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு சட்டப்படி திருமணம் செய்யாமலேயே மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளனர். இவர் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாடசாலைச் சிறுவர்களை பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவருடைய நடத்தை குறித்து ஏற்கனவே முன்பு ஒரு முறை இவர் கல்வி கற்பிக்கும் பாடசாலையின் நிர்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவரை திறந்த மேனியாக புகைப்படம் எடுப்பதற்கு வயது குறைந்த மாணவர்களை அனுமதித்தார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட அவர் 15 வயதுச் சிறுவன் ஒருவனை பாலியல் தேவைக்காகத் திருமணம் செய்து படுக்கையை பகிர்ந்து கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.சிறுவனுடைய பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் வித்தத்தில் சொல்லாலும் செயலாலும் நடந்து கொண்டார்.அவர் அச்சிறுவனுக்கு விளையாட்டு உபகரணங்கள்,மதுபானம், கையடக்கத் தொலைபேசிகள் ஆகியன உட்பட ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.இருவருக்கும் இடையிலான சந்திப்பு தொடர்ந்தது. சிறுவனுக்கு 16 வயது ஆனவுடன் உறவு கொள்வதற்குத் திட்டம் இட்டிருந்தார். சிறுவனுக்கு முன்னால் நிர்வாணமாகக் காட்சியளித்திருக்கிறார்.

ஆனால் அச்சிறுவன் நாளடைவில் இவரிடம் இருந்து விலக ஆரம்பித்திருக்கிறான். அதனால் இவர் ஆத்திரம் அடைந்து இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அவனின் பெற்றோருக்கு தெரியப்படுத்துவார் என்று மிரட்டி இருந்தார். இந்த விடயங்கள் நீதிமன்றம் வரை கசிந்து விட்டன. ஆரம்பத்தில் இச்சிறுவன் பொய்களை அவிழ்த்து விடுகிறான் என்று கூறிய அவர் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இவர் வயது குறைந்த ஆண்களுக்கு பேராபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவர் என்றும் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறி உள்ள்து.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: