விஜய் விடப்போகும் போலிக்கண்ணீர் – உலக தமிழர்களே உசார்.

Photobucketமண்டையில அடிபட்டா மடி பக்கம் வீங்குமா? கிட்டதட்ட அதே நிலைதான் காவல் காதல் படத்திற்கு. இதில் அசின் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக எப்.எம்.எஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு வியாபாரம் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிலிருக்கிற தமிழ் அமைப்பு ஒன்று காவல் காதல் படத்தை வெளிநாட்டில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறது. இந்த அமைப்பின் கீழ் சுமார் முப்பது அமைப்புகள் இயங்குகின்றனவாம். உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருக்கிற இந்த அமைப்புகள் படம் வெளிவருகிற போது தங்கள் எதிர்ப்பை காட்ட துணிந்திருக்கிறார்கள். அசின் இலங்கை போனதும், அதுவும் ராஜபக்சேவின் மனைவியுடன் சேர்ந்து போஸ் கொடுத்ததும் கொதிப்படைய வைத்திருக்கிறது அவர்களை.

ஒரு படத்தின் வியாபாரத்தில் குறிப்பிடக் கூடிய கவுரவ தொகை இந்த வெளிநாட்டு வியாபாரத்தில்தான் கிடைக்கிறது. நிலைமை இப்படியிருக்க தனது படத்திற்கு வந்திருக்கிற தடைகளையும், கண்டனங்களையும் கண்டு அதிர்ந்து போயிருக்கிறாராம் விஜய். ஏற்கனவே வெளிநாட்டிலும் சரி, உள் நாட்டிலும் சரி, விஜய்யின் வியாபாரத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டிருப்பது நிஜம். இவருக்கு இருந்த வியாபார மதிப்பை சர்வ சாதாரணமாக கிராஸ் பண்ணிவிட்டார் சூர்யா. இதுவே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது விஜய்யை. இந்த நேரத்தில் அசின் மூலம் வந்த சரிவை எப்படி நிமித்துவது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம்.

ஈழ பிரச்சனை உச்சத்தில் இருந்த போது தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தவர்தான் விஜய். தனது அக்கறையை மறுபடியும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இப்போது. அதற்கான ஏற்பாடுகளும் இன்னொரு பக்கம் சைலன்ட்டாக நடந்து வருகிறதாம்.

எனவே ஈழதமிழர்களுக்கு ஆதரவு என்று கூறி விஜய் நடிக்கப்போகும் நாடகத்தை நம்பி யாரும் காவல் காதல் திரைப்பட புறக்கணிப்பை கைவிட வேண்டாம்.நடிகர் சங்கம் அசினுக்கு அனுமதி கொடுத்தாலும் தமிழர் நாங்கள் பேசாமல் இருக்கமுடியுமா? இம்முறை நீங்கள் காவல் காதல் படத்திற்க்கு கொடுக்கபோகும் அடியுடன் அசின் போன்ற தமிழின எதிர்ப்பு நடிகைகள்,நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.எந்த சங்கத்தின் தீர்மானத்தையும் விட தமிழ் மக்களின் தீர்மானமே பெரியது என்று காட்டும் நேரம் நெருங்குகிறது.ராகுல் காந்தியுடன் பதவிக்காக மண்டியிட்டுவிட்டு போலியாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளும் விஜய் போன்றவர்களுக்கும்.ராஜபக்சே குடும்பத்துடன் உறவாட ஆசைப்படும் அசின் போன்றவர்களுக்கும் தமிழன் அவர்களைபோல் நக்கி பிழைப்பவர்கள் இல்லை என்று உரத்து கூறுங்கள்.புலம்பெயர் தமிழர்களே தயாராகுங்கள் புறக்கணிப்பிற்கு.தமிழ்நாட்டு தமிழர்களை உங்கள் இன உணர்வை இதிலாவது ஒற்றுமையுடன் காட்டுவீர்களா?

இந்த செய்தியை இன உணர்வுள்ள ஒவ்வொரு நண்பர்களும் தமது வலைப்பூக்களிலும் இணையதளங்களிலும் தவறாமல் மீள்பிரசுரம் செய்யுமாறு வேண்டி நிற்கிறோம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி …

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் நடந்த போரினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேசத்திடம் கோரிக்கை வைத்து லண்டனில் 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்ரமணியம் உணவு அருந்தியதாக பிரிட்டிஷ் பத்திரிகைகளான சண் மற்றும் டெய்லி மெயில் ஆகியவை அவதூறு பரப்பியிருந்தன. மக்டொனால்ஸ் பேகரை அவர் உண்ணாவிரதம் இருந்த காலத்தில் உண்டார் என்று ஸ்கொட்லன் யாட் பொலிசார் கூறியதாக அவர்களை மேற்கோள் காட்டி இப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அதிர்வு இணையம் இது தொடர்பாக ஸ்கொட்லன் யாட் போலிசாரை கேட்டபோது அவர்கள் தாம் அவ்வாறு கூறவில்லை என மறுத்திருந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
இலங்கைத் தூதுவர் கம்ஸா வின் முயற்ச்சியில், இப் பழி பரமேஸ்வரன் மீது சுமத்தப்பட்டது என பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும் இலங்கை அரசின் தூண்டுதல் இன்றி இவ்வாறு ஒரு செய்தி வந்திருக்க வாய்ப்பே இல்லை. இதனை துணிவாகவும் வெற்றிகரமாகவிம் முறியடித்துள்ளார் பரமேஸ்வரன். பகிரங்கமாக நீதிமன்ற வளாகத்தில் இவ் இரு பத்திரிகைகளின் உயர் அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளது, தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கவேண்டும். அத்தோடு வழக்குப் போட்டு என்ன ஆகப் போகிறது, அதில் பலனில்லை, போர் குற்ற வழக்குகள் கூடப் பயன் தரப்போவது இல்லை என்று பலராலும் பரவலாகப் பேசப்படுகிறது. அதற்கும் இன்றோடு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விடா முயற்ச்சியும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பரமேஸ்வரன் பற்றி வெளியான செய்திகளால் அவரை சிலர் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கியும், கூட்டங்களில் அவரைப் புறக்கணித்தும், அவரை மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கவிடையம். இருந்தாலும் தனித்து நின்று சொற்ப்ப நண்பர்கள் உதவியுடன் அவர் இன்று வழக்கில் வென்றுள்ளார். Onelanka இணையம் பரமேஸ்வரனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது.

அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரன் தனது செய்தியையும் வெளியிட்டுள்ளதோடு அதிர்வு இணையத்திற்கு சிறப்புப் பேட்டி ஒன்றையும் தந்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

உலகத் தமிழர்களே கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களைப் புறக்கணிப்பீர்!

Photobucketஇன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய தாங்கள் இன்றைய நிலையில் காக்கை வன்னியனைப் போலவும் எட்டப்பனைப் போலவும் நடந்து கொள்கிறாரோ என்கிற ஐயப்பாடு உலகத் தமிழர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் ‘நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு’ என்பதற்கு அமைய கருணாநிதி தனது கையாலாகத்தனத்தை வெளிக்காட்டும் விதமாக செந்தமிழன் சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்களைக் கட்டுப்படுத்த கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்
ரோம் எரியும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல் இலங்கைத் தமிழர்களும் இந்திய மீனவர்களும் ஒருசேர அன்றாடம் அழிக்கப்பட்டுவரும் நிலையில் தன்னைத்தானே உலகத்தமிழினத் தலைவர் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் தாங்கள் செம்மொழி மாநாட்டுக் கேளிக்கையிலும் நித்தம் ஒரு பாராட்டு விழாக் குளியலிலும் மூழ்கி களியாட்டம் போட்டதை உலகத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது. ஒரு இலட்சம் ஈழத்தமிழர் கொல்லப்பட்டதற்கு உங்களால் செம்மொழி மாநாட்டில் ஒரு இரங்கல் தீர்மானம்கூட போட முடியவில்லையா?

உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்தும் 2009, முள்ளிவாய்க்கால் போரில் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இனப்படுகொலைக்கு ஆளானதை யாராலும் தடுக்க முடியவில்லை. சராசரித் தமிழனுக்குச் சர்வதேச அரசியல் சதுரங்க ஆட்டத்தின் விளையாட்டு நுட்பங்கள் எதுவும் புரியவில்லை. யானையைப் பார்த்த குருடர்களின் கற்பனையைப் போல சர்வதேசங்களுக்கும் எங்களின் பிரச்சினை அவரவர்க்கும் ஒருவிதமாகத் தோன்றி, எங்களின் இலட்சியமான தாயகக் கனவு மீண்டும் முறியடிக்கப்பட்டது.

காங்கோ, சூடான், ருவாண்டா, காசா போன்ற பகுதிகளில் நடந்த இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் இந்தியா தனது காலடியில் அப்பாவி ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்கு ஆளானதைக் கண்டிக்க மனமில்லை. தமிழையும், தமிழினத்தையும் காக்க உலகச் செம்மொழி மாநாடு நடத்துவதாகக் கூறிய உங்களால் (தமிழக முதல்வர் கருணாநிதியால்) ஈழத்தமிழரின் இனப்படுகொலையைக் கண்டிக்கத் துணிவு இல்லாவிட்டாலும், இலங்கைத் தீவு ஓரு இனப்படுகொலை; செய்த நாடாக உலகநாடுகள் பலவும் தற்போது அங்கீகரித்துவரும் நிலையிலும், உங்களுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் மனிதாபிமானம் ஏன் இல்லாமல் போனது?. சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அவரது இராணுவமும் செய்த போர்க்குற்றத்தை ஆராய ஐ.நா.மன்றம் நியமித்த மர்சூகி தரூஸ்மன் தலைமையிலான மதியுரைக் குழுபற்றி ஆதரிக்கின்றீர்களா, எதிர்க்கின்றீர்களா? என்பது பற்றி நீங்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. காரணம் கேட்டால், காங்கிரஸ் தயவில் ஆட்சிக்கட்டிலில் உள்ள என்னால், காங்கிரசின் தமிழின விரோதப் போக்கைத் தட்டிக்கேட்க இயலாது என்று போலிச் சமாதானம் கூறுவீர்கள்.

உணர்வுள்ள பிற அரசியல் கட்சிகள் காங்கிரசின் தமிழின விரோதச் செயல்களைத் தட்டிக்கேட்டு அம்பலப்படுத்தினால் கூட அவர்களையும் பிடித்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விடுவது நியாயமா?. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளும் அளவிற்கு அப்படி என்ன தவறாகப் பேசினார்?

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை பற்றி ஆலோசனை வழங்க ஐ.நா.மன்றம் நியமித்த மதியுரைக் குழவைப் பற்றிய மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாட்டை கூறுமாறு கேட்டதற்காகவா? அல்லது பல ஆண்டுகளாகச் சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தினால் நூற்றுக்கணக்கானத் தமிழக மீனவர்கள் மடிந்து கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக்கொண்டு, கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு, வெகுண்டு எழுந்து, இனியும் ஒரு தமிழக மீனவன் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றால், தமிழகத்தில் வாழும் ஒரு சிங்கள மாணவனும் உயிருடன் திரும்ப மாட்டான் என்று எச்சரிக்கைச் செய்ததற்காகவா? எதற்காக துடிதுடித்து, பதைபதைத்து சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தீர்கள்.

இரண்டு இனத்திற்குள் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் பேசியதாக இந்திய நாட்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் போட்டதென்பது, சிங்கள இனம் உங்களுக்கு உறவு அல்லவே! தமிழர்கள் உங்களின் தொப்புள்கொடி உறவல்லவா? மற்றொரு நாட்டில் வாழும் ஒரு இனத்தை, அது நமது இந்திய மீனவர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்து அந்தச் சிங்கள இனத்திற்கு எதிராகப் பேசுவது எந்த வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிரானது? 1990களில் நீங்கள் கூட தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்! என்று ஆவேசமாகப் பேசியது எல்லாம் எங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதே.

சிங்களர்களுக்கு வக்காளத்து வாங்கி, சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளிய நீங்கள், முள்ளிவாய்க்கால் போரில் சிறு குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் என பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பீரங்கிகளாலும் விமானத்தினாலும் சுற்றி வளைத்து சிங்களர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இப்போது சிங்களர்களுக்காகக் கொதித்த உங்களது இரத்தம் ஏன் தமிழர்களுக்காக அன்று கொதிக்கவில்லை? மத்திய அரசின் கொள்கைதான் எங்களது கொள்கை என்று கூறும் நீங்கள், மத்திய அரசான காங்கிரசின் ஒட்டுமொத்த தமிழின விரோதப் போக்கை, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஆதரிக்கலாம். ஆனால் உணர்வுள்ள தமிழர்கள் எப்படி ஆதரிக்க முடியும்? ஈழத்தமிழினத்தையும், தமிழக மீனவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் சிங்கள அரசை ஆதரிக்கும் மத்திய அரசின் அயலுறவுக் கொள்கைதான் தங்களதும், காங்கிரசினதுமான கொள்கையா?

இலங்கைக்கு ஒருபக்கம் ஆயதத் தளவாடங்களையும், உளவு வேலைகளையும் செய்து கொண்டே, போர் நிறுத்தம் கோரிப் போராடிக் கொண்டிருந்த தமிழர்களை ஏய்க்க, நீங்களும் போர் நிறுத்த உண்ணாவிரதம் மேற்கொண்டீர்கள். அப்போது உங்களது ஆதரவால் ஆட்சி செய்து கொண்டிருந்த சோனியாவின் நடுவண் அரசுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால், ஈழத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி ஒரு இனப்படுகொலையை தடுத்து ஒரு இலட்சத்திற்கும் மேலான எமது தமிழ் உறவுகளைக் காப்பாற்றியிருக்கலாம். பண்டாரவன்னியன் கதை எழுதினால் போதுமா? எதிரிகளைத் துணிவுடன் எதிர்க்கும் அவரது வீரத்தில் சிறிதளவேனும் உங்களிடம் காணமுடியவில்லையே ஏன்? முள்ளிவாய்க்கால் போரில் கடைசி இரண்டு தினங்களில் 50,000 தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் என மேலைநாடுகளின் செய்தி நாளேடுகள் ஆதாரபூர்வமாகச் செய்திகளை வெளியிட்டபோது, தங்களது வாரிசுகளின் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி 20,000 தமிழர்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் எனச் செய்தி வெளியிட்டது. ‘தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும், கட்டுமரமாய் மிதந்து தமிழர்களைக் காப்பேன்!’ என்று நீங்கள் எழுதியபடி நடந்து காட்டியிருந்தால் உலகத் தமிழர்கள் எல்லாம் உங்களைப் போற்றி வணங்கி இருப்பார்கள்!

போர் முடீந்த பிறகு விழித்துக்கொண்ட மேற்குலக நாடுகளின் முயற்சியால், ஐ.நா.வின் மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் ஆதரவோடு இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த கடந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்தைக்கூட இந்தியா தனது நட்பு நாடுகளைச் சேர்த்துக் கொண்டு முறியடித்தன. அப்போதுகூட தாங்கள், மத்திய அரசின் தமிழருக்கெதிரான போக்கை கண்டிக்காதது மட்டுமன்றி, ஒருபடி மேலேபோய், தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி சர்வதேச அளவில், இராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியது எந்த வகையில் தமிழினத் தலைவரெனத் தாங்கள் கூறிக்கொள்வது நியாயம்? தன் கைவிரலால் தனது கண்ணைக் குத்திக்கொள்வது போல், தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது துரோகத்தனமாகாதா?

போர் முடிந்த பிறகும், முள்வேலி முகாம்களில் சர்வதேச மனித உரிமைச்சட்டத்திற்குப் புறம்பாக அடைக்கப்பட்ட 3 இலட்சம் அப்பாவி ஈழத்தமிழர்களை, 4 மாதங்களில் அவரவர் வசிப்பிடங்களில், உரிய நிவாரண உதவிகளோடு மீள்குடியமர்த்தம் செய்வோம் என்று ராஜபக்சே இந்தியாவுக்கும், ஐ.நா.வுக்கும் அளித்த வாக்குறுதியைக்கூட இன்றுவரை நிறைவேற்றவில்லை. இன்றுவரை, 80,000 க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி திறந்தவெளி சிறையில் அடிப்படைவசதிகளின்றியும், சிங்களர்களால் அன்றாடம் தங்களது கற்புகளைப் பறிக்கொடுத்தும் அல்லல்பட்டு வருகின்றனர்.

விசாரணை என்ற பெயரில் 20,000 இளைஞர்களும் சிறுவர்களும் சிங்களர்களின் கைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. விசாரணை என்ற பெயரில் பெண் கைதிகளைத் தனியே அழைத்து சென்று கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். வன்னிப் பகுதியில் சுமார் 1,60,000 க்கும் மேற்பட்ட வீடுகள் குண்டுவீச்சுகளால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா.மதிப்பீட்டுக்குழு தெரிவித்துள்ளது. இத்தனை பேரழிவுகளும் எங்களுக்கு வரக் காரணம், நாங்கள் நாதியற்ற தமிழினம் என்பதால், ஒருவகையில் எங்களைக் கொன்றது எங்களின் தாய்மொழி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது?

இத்தகைய பேரழிவுகளை அன்றாடம் ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும்போது, சர்வதேச அளவில் இராஜபக்சேவிற்கு நல்லபெயர் வாங்கித்தருவதற்கான உங்களது அயராத முயற்சியால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வேலிக்கு ஓணான் சாட்சி கூறுவதுபோல், சிங்கள அரசு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உலகத்தினர் காதுகளில் பூ சுற்றிப் பார்த்தனர். பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்வையிட, சர்வதேச பத்திரிகைகளையோ, தொலைக்காட்சிகளையோ, சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென்று நீங்களோ, இந்தியாவோ இதுவரை ஒருவார்த்தை இலங்கையிடம் கேட்டதுண்டா? இலங்கைத் தமிழரின் அரசியலில் ஒரு எதிரானப் பாதையை தாங்களும் மத்திய அரசும் எடுத்ததற்குக் காரணம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனஅழிப்பு ஆகிய படுபாதகச் செயல்களில் நீங்களும் மத்திய அரசும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்காளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். காந்தியடிகளைப் பெற்ற இந்திய தேசம்தான் இன்றைக்கு முசோலினி வழியில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மனிதகுலம் ஒருபோதும் மன்னிக்காது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப்பணிகள் மேற்கொள்ள முன்னர் ரூ.500 கோடி, தற்போது ரூ.1000 கோடி எனக் கொலைவெறியர்களுக்கே கூலி தந்து கொண்டிருக்கிறீர்களே தவிர, அந்த நிவாரணத் தொகை தமிழர்களுக்காகச் செலவிடப்பட்டனவா? என்று சர்வதேசத் தொண்டு நிறுவனங்களையாவது அனுப்பி கண்காணித்தீர்களா? இப்போதுகூட உங்கள் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு அனுப்பப்படும் சிறப்புத் தூதர்குழு முன்னர் போர்நிறுத்தம் செய்யச்சென்ற இந்தியாவின் முயற்சிபோல் தேர்தலுக்காக நடத்தப்படும் ஓரங்க நாடகம்தானே தவிர, தமிழருக்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை.

ஈழத்தமிழருக்குத்தான் இந்தியா துரோகம் செய்கிறது. இந்தியத் தமிழரான தமிழக மீனவர்களை இதுவரை 500க்கும் மேற்பட்டோரைச் சிங்கள கடற்படை சுட்டும், அடித்தும் கொன்று வருகிறதே. அதைக்கூட தட்டிக் கேட்காமல், அதற்கும் வெறும் கடிதங்களை மட்டும் அனுப்பி வந்தால், இதுவா தமிழரைக் காப்பாற்றும் இலட்சணம்? கடைசியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட செல்லப்பனுக்கு ரூ.3 இலட்சம் நிவாரண உதவி வழங்கினீர்கள். அரசு ஊழியர் ஊதிய உயர்வை முன்தேதியிட்டு வழங்கும் உங்கள் அரசு, இதற்குமுன் கொல்லப்பட்ட பிற மீனவர் குடும்பத்திற்கும் முன்தேதியிட்டு ஏன் ரூ.3 இலட்சம் நிவாரண உதவி வழங்கக்கூடாது? இரயில் விபத்தில் இறந்து போன குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய இந்திய அரசு, சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தாருக்கு வேலைவாய்ப்புத் தரவேண்டுமென்று கேட்டால்கூடவா உங்களது ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள்?

பிறமாநிலத்திலுள்ள முதலமைச்சர்கள், தங்கள் மாநிலத்தில் மட்டுமன்றி, உலகில் பிறநாடுகளில் தங்கள் இனத்தவர் பாதிக்கப்பட்டால், கூட்டணி வைத்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்திய அரசைத் துணிவுடன் தட்டிக்கேட்டு உரிய நிவாரணம் தேடும்போது, தாங்கள் மட்டும் வெறும் கடிதம் விடு தூது நடத்திக்கொண்டு, காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பாலாற்று நீர், கச்சத் தீவு போன்ற தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவு கொடுத்துக் கொண்டு தமிழர்களைக் கண்ணீரும், செந்நீரும் சிந்திக்கொண்டிருக்க விடலாமா? எல்லை தாண்டி வந்தாலும் பிறநாட்டு மீனவரை இந்தியா உட்பட எந்தநாடும் சுட்டுக்கொன்ற வரலாறு உலகில் இல்லை. ஆனால் நட்பு நாடாகக் கருதப்படும் இலங்கை மட்டும்தான் தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்கிறது. இதைக்கூடவா நீங்கள் தட்டிக்கேட்கக் கூடாது? தட்டிக்கேட்ட சீமானையாவது தாங்கள் விட்டுவைக்கக் கூடாதா? சீமான் என்றால் உங்களுக்குச் சிம்மசொப்பனமா?

வாக்களித்த மீனவத் தமிழரையும் காப்பாற்ற உங்களால் முடியவில்லை. வாழ்விழந்த ஈழத்தமிழருக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதற்கு ஆதரவாகக் குரலெழுப்பவும் உங்களால் முடியவில்லை. ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உங்களைத் தலைவராக மதித்துப் போற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். தமிழர் வாழ்வு எங்கு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, உங்கள் குடும்பத்தார் எடுக்கும் படங்களைப் பார்த்து உங்கள் பெட்டிகளை நாங்கள் டாலர்களாலும், பவுண்டுகளாலும் நிரப்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற சிந்தனை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர்உள்ளிட்ட புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடம் உருவாகி, உறுதிபெற்று வருகிறது. எங்களுக்காக ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இரத்து செய்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது, ஈழத்தமிழர்களாகிய நாங்கள் மட்டும் தமிழர்களைக் காக்க மனமில்லாத தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தார் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்தையும் தமிழர்கள் யாரும் பார்க்காமல் புறக்கணிக்கும் இயக்கம் நடத்த முடிவு செய்து விட்டோம். இதுகூட ஒருவகையில் அண்ணல் காந்தி காட்டிய இந்திய வழிமுறைதான். அடிமைப்படுத்தியோரை வெளியேற்ற அன்று காந்தி நடத்தியது அந்நியத் துணிகள் எரிப்புப் போராட்டம்! எம்மினத்தைக் கொத்தடிமைகளாக்க விரும்புவோரை எதிர்க்க உலகத்தமிழர்கள் இன்று நடத்தப்போவது ‘கருணாநிதி குடும்பத் திரைப்பட புறக்கணிப்புப் போராட்டம்!’

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நமது ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்ட இந்த இனமானம் காக்கும் அறப்போருக்கு ஒத்துழைப்பு தந்து வெற்றிபெறச் செய்திட வேண்டுகிறோம். அத்துடன், ஐ.நா.மன்றம் மேற்கொள்ளும் இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணைக்கான மதியுரைக் குழுவை மட்டுமே நம்பிக்கொண்டிராமல், ஈழத்தமிழின படுகொலை பற்றிய ஆதார ஆவணங்களைத் தொகுத்து தமிழர்கள் வாழும் அந்தந்ந நாட்டின் நீதிமன்றங்களில் இராஜபக்சே கும்பல் மீதும், அவர்களுக்குத் துணைபோன சக்திகள்மீதும் போர்க்குற்ற விசாரணை வழக்குகள் தொடுக்க முன்வர வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
நார்வே, சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ்,
இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா,
ஆஸ்திரேலியா.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வைக்கும் மெகா ஆப்பாக இருக்கும் அது!

இது ஒரு ஆப்புகளின் கதை. ஒருவர் மாற்றி ஒருவருக்கு வைத்த ஆப்பு இப்போது எங்கே வந்து முடிந்திருக்கிறது என்பதைச் சொல்லும் கதை.

ஐஸ்வர்யாராய்… ஐஸ்வர்யாராய்… என்னும் முன்னாள் உலகப் பேரழகியும், சல்மான்கான்… சல்மான்கான்… என்கிற இந்திப்பட நடிகரும் முன்னொரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்து வந்தனர். பிற்பாடு யாருடைய கண்ணோ காதோ பட்டதோ தெரியாது அந்த உறவு அம்போன்னு ஆக… ஐஸ்வர்யாராய் தனக்கு ஆப்பு வைத்துவிட்டதாக நினைத்த சல்மான்கான் சலம்போ சலம்பென்று சலம்ப அது போலீஸ் ஸ்டேசன் வரை போனது.

இது சினிமா செய்திகளைக் கண்ணும் கருத்துமாக வரிவிடாது வாசிக்கும் சகலருக்கும் தெரிந்த விசயம்.

அப்போது பார்த்து கண்ணியவானாய் உலக அழகியின் கண்முன்னே வந்து நின்ற விவேக் ஓபராய் ‘‘சகல ஆறுதலின் தேவனாக’’ அவதாம் எடுக்க… அதுவும் கொஞ்சகாலம் ஓடியது.

ஐஸ்வர்யாராயின் அன்பைப் பெற அலப்பறை வழிமுறை செல்லுபடியாகாது என்பதை புரிந்துகொண்ட மிஸ்டர். கண்ணியம், சலம்பல் சிங்கத்தின் கதி தனக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று முடிவுகட்டி சமூகசேவை சிங்கமாக அவதாரம் எடுத்து சுனாமிக் கரையோரங்களில் சுற்றி வந்தார்.

ஆனால் அந்த ஆசாமிக்கும் வந்தது ஆப்பு அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சன் வடிவத்தில். அந்த அபிஷேக்பச்சனை கரம் பிடித்ததன் மூலம் ஆப்புகள் முறையே சல்மான்கான் மற்றும் விவேக் ஓபராய் இருவருக்கும் சரிசமமாக அடிக்கப்பட்டது. ஐஸின் ஆப்பால் அல்லோலகல்லோலப்பட்ட இருவரும் மரியாதை நிமித்தமான மறு ஆப்புக்காகக் காத்திருந்த வேளையில்தான்…

இடைவேளை!

ஈழத்தில் சிங்களக்காடையர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்ததும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையின் விளைவாக மயான அமைதி ஏற்படுத்தப்பட்டதும் நடந்து முடிந்தது. ரத்தக்கறைகளை மறைக்க கேளிக்கை விழாக்களை கொண்டாட வேண்டிய நிர்பந்தம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இந்த வேளையில்தான் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை கொழும்பில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டது. ‘‘படுகொலைகளை மறைக்கத்தான் இந்தக்கூத்தும் கும்மாளமும் இதில் எக்காரணம் கொண்டும் கலந்துகொண்டு விடாதீர்கள்’’ என ஒட்டுமொத்த தமிழர்களது வேண்டுகோளையும் ஏற்று தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், அமீர்கான், அபிஷேக்பச்சன் உட்பட பலர் இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது நாம் ஏற்கெனவே அறிந்த செய்தி.

அதுவும் அதன் தூதுவராக இருந்த அமிதாப்பச்சனே தமிழர்களது வேண்டுகோளை ஏற்று புறக்கணித்துவிட்டார் என்கிற செய்தி அவரது மருமகளின் ஆப்புகளால் ஏற்கெனவே அவதிப்பட்டு வந்த சல்மானுக்கும், அந்த ஓபராயுக்கும் ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்த… எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது அவர்களுக்குள்.

‘‘மேய்ச்சா மேய்ப்பேன் இல்லாட்டி பரதேசம் போவேன்’’ என்று ஒற்றைக்காலில் நின்றிருந்த இந்த இரண்டும் ‘‘நீ இலங்கை போகாட்டி என்ன? நாங்க போய்த்தான் தீருவோம். எந்தத் தமிழன் எதிர்க்கிறான் பார்ப்போம்’’ என்று தொடைதட்டிக் கிளம்பின.

அப்போதுதான் அரங்கேற ஆரம்பித்தது ‘அறக்கட்டளை அரசியல்.’ அதுவும் அறமே இல்லாத நாட்டில்.

கொலைபாதகன் ராஜபக்ஷேவின் கமன் நாமல் ராஜபக்ஷே, தான் நடத்தி வரும் ‘அறக்கட்டளை’யின் பெயரால் இலங்கையில் ஒரு விழாவை ஏற்பாடு பண்ண…

இந்தியாவில் ‘அறக்கட்டளை’ ஒன்றை நடத்திவரும் ஆப்பழகன் ஓபராய் அங்கு போய் இறங்க…

ஏற்கெனவே மொரீசியசில் ‘ரெடி’ என்கிற தனது இந்திப்பட சூட்டிங்கை நடத்துவதாக இருந்த முதலாம் ஆப்பழகன் சல்மான்கான் அதனை இலங்கைக்கு மாற்றிக் கொண்டு கொழும்பில் கால்வைக்க…

எங்கியோ போற மாரியாத்தா…
எம்மேல வந்து ஏறாத்தா… என்கிற கதையாக ஏற்கனவே துயரத்தின் விளிம்பில் நிற்கும் தமிழர்கள் மீது வந்து ஏறின இந்த ரெண்டு ஜென்மங்களும்.

கதாநாயகன் போனால் கதாநாயகி போக வேண்டாமா? அப்படிப் போனவர்தான் சேச்சி அசின்.

‘‘என்னாத்தை சொல்வேணுங்கோ… வடுமாங்கா ஊறுதுங்கோ’’ என்று தமிழகத்தில் ‘கலைச்சேவை’ செய்து கொண்டிருந்த அசின் தயிர்சானம் ரெடி பண்ண இந்திக்குத் தாவினார். அப்படியே இந்தி ரெடி சூட்டிங்குக்காக இலங்கைக்கும் தாவினார்.

ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழ்த்திரை உலகினரின் தடை உத்தரவை தூக்கி குப்பைக் கூடையில் வீசிவிட்டு ‘‘ஐபா (திரைப்படவிழா) பிரச்னை முடிந்து விட்டது. இலங்கைக்குள் செல்ல தொழில் துறையினருக்கும், விளையாட்டுத் துறையினருக்கும் தடையில்லை. கலைஞர்களான எங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? இதையும் மீறி தடை விதிக்கப்பட்டால் அது குறித்து நான் கண்டுகொள்ள மாட்டேன்’’ என்று முதலில் திமிர்த்தனமாக சிங்கள அரண்மனையில் இருந்து பேட்டி கொடுத்தார் அசின்.

ஒருவேளை நாளை இந்திப்பட உலகம் தனக்கு அல்வா கொடுத்துவிட்டால் தமிழ்நாட்டுப் பக்கம் தப்பித்தவறிக்கட தலைவைத்தும் படுக்கமுடியாதே என்ன செய்ய?

அட… இருக்கவே இருக்கு ‘அறக்கட்டளை டெக்னிக்’.

ஒன்றரை மாதமாய் ஈழத்தமிழர் அவலம் குறித்து அமைதி காத்த அம்மணி, வாழும் தெரசாவாய் அவதாரம் எடுத்தார்.

‘‘தமிழ் மக்களைக் காப்பாற்ற அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து விட்டேன். ஐந்தே நாட்களில் 300 பேருக்கு ஆபரேஷன் £கிவிட்டது. இன்னும் பலருக்கு பண்ண 5 கோடி ஒதுக்கி இருக்கிறேன்’’ என்று அம்மக்களது கண்களைப் பிடுங்கி இந்தகதிக்கு ஆளாக்கிய ராஜபக்ஷேவின் தர்மபத்தினியை உடன் வைத்துக்கொண்டு அள்ளிவீசினார் அம்மணி அசின்.

ஆக இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேவின் மகனும் ஒரு அறக்கட்டளை.

அமிதாப் மருமகளை லவட்டப் பார்த்த விவேக் ஓபராயும் ஒரு அறக்கட்டளை.

இலங்கைக்கு சூட்டிங் போன அசினும் ஒரு அறக்கட்டளை.

அப்புறம் என்ன ஒரே நான்ஸ்டாப் கொண்டாட்டம்தான்.

உண்மையில் இவர்களது அறக்கட்டளைகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார்?

சர்வதேச தொண்டு நிறுவனங்களைக்கூட இலங்கைக்குக் கால் வைக்க அனுமதிக்காத சிங்கள அரசு இவர்களை மட்டும் உலாவர எப்படி அனுமதிக்கிறது?

சர்வதேச பொது மன்னிப்புச் சபை, ஐரோப்பிய யூனியனது மனித உரிமை அமைப்புகள் என எவரையுமே அனுமதிக்காத சிங்களம் எப்படி ஓபராய்களுக்கும், சல்மான்களுக்கும், அசின்களுக்கும் சிவப்புக் கம்பள ரரவேற்பு அளித்து, கண்ணொளி வழங்கும் திட்டம்… காதொலி வழங்கும் திட்டம் என சகல திட்டங்களுக்கும் அனுமதி வழங்குகிறதே… இதன் பின்னிருக்கும் திட்டம் என்ன? இவைதான் நம் முன்னே உள்ள மிக எளிமையான கேள்விகள்.

போதாக்குறைக்கு மருத்துவமனையில் ராஜபக்ஷே பெண்டாட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேட்டி அளித்த அசின் சேச்சி, ‘‘இலங்கை ஒரு அருமையான நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது ராஜபக்ஷே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள் தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. எனவேதான் இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை’’ என்று முழங்கியதைக் கேட்டதும் நம் காலில் இருப்பதைக் கழட்டி நம்மை நாமே தலை தலையாய் அடித்துக் கொண்டால் கூட தப்பேயில்லை என்று தோன்றியது.

இதற்கிடையே அறக்கட்டளை புகழ் விவேக் ஓபராயுடன் கொங்குச் சீமைச் சிங்கம் சூர்யா சேர்ந்து நடித்த ‘ரத்த சரித்திரம்’ படம் வெளிவருமா வராதா என பெங்களூர் மிரர் பத்திரிகை கேள்வி கேட்டபோது, ‘‘அதெல்லாம் முடிந்துபோன கதை. விவேக் ஓபராய் செய்தது சரிதான்’’ என தன்னை வளர்த்து விட்ட தமிழக மக்களுக்கும் சேர்த்து சூர்யா வைத்தார் ஒரு ஆப்பு.

எது எதன் பின்னாடி அலைஞ்சா என்ன?

எது எதைக் கல்யாணம் கட்டிகிட்டா என்ன?

எது எதை ஆப்படிச்சா என்ன?

இந்தக் கர்மம் எல்லாம் நமக்குத் தேவையா? என நீங்கள் எரிச்சலின் உச்சத்தல் நின்று கேட்பது புரிகிறது.

என்ன செய்ய? கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்தின் தலையில் கை வைக்கிறதே… அதன் பின்னணி என்ன… யார் இயங்குகிறார்கள் என்கிற சதிகளையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் சில கழிசடைகளின் கடந்த காலத்தையும் கவனித்துத்தான் தீர வேண்டியிருக்கிறது.

அதன் விளைவே துர்நாற்றம் வீசும் இந்த ஆப்பு வரலாறு.

யானை இளைத்தால், ‘குடும்பம் நடத்தலாம் வா’ என்று எலி கூப்பிடுமாம். அதைப்போல ஆயிற்று தமிழர்களின் நிலை.

ஆனால் கவலையும் கோபமும் பொங்க தமிழீழ மக்களும் தமிழக மக்களும் இவர்களது ஆட்டத்தை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது சல்மான்கானாய் இருந்தாலும் சரி…

சேச்சி அசினாயிருந்தாலும் சரி…

விவேக் ஓபராயாய் இருந்தாலும் சரி…

அந்த ஐந்துவுக்கு ஒத்தூதும் சூர்யாவாகவே இருந்தாலும் சரி… யாராக இருந்தாலும்.

சரியான நேரம் வரும்போது ஒட்டுமொத்தத் தமிழர்களும் சேர்ந்து வைப்பார்கள் ஒரு ஆப்பு…

ஆனால் அது சாதாரண ஆப்பாக இருக்காது…. உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வைக்கும் மெகா ஆப்பாக இருக்கும் அது!

நன்றி, தமிழக அரசியல் வாரஇதழ்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உயிரிழக்கும்போது நானும் உயிரிழந்து விடுவேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உயிரிழக்கும்போது நானும் உயிரிழந்து விடுவேன். இப்படி சபதம் செய்திருக்கிறார் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா.கண்டியில் மேம்பாலம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு பகிரங்கமாகக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

” சகோதரர் கோட்டாபய மீது தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போதும் தைரியத்தை இழக்காமல் இருந்தவர் ஜனாதிபதி மஹிந்தர்.அவர் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டார். இவ்வாறான ஜனாதிபதிக்கு வலுச் சேர்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கின்றமை மகிழ்ச்சிக்குரியது.
ஜனாதிபதியின் மரணம் சம்பவிக்கும் போது எனது மரணமும் நிகழும் . பான்‐கீ‐மூன் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகிறார் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க சந்தர்ப்பம் ஏற்படும். இலங்கை வரலாறு தொடர்பான மகாவசம்ச கதைகளை பான்‐கீ‐மூனுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க போகிறேன்.
அவை மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் அக்கதைகள் மூலம் மூன் பாடம் கற்றுக் கொள்வார். இலங்கையிடம் மண்டியிடுவார்.”

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

T.ராஜேந்தரின் நகைச்சுவையான கேளுங்கள் சொல்லப்படும் பகுதி-2 (வீடியோ)

கேளுங்கள் சொல்லப்படும் நிகழ்ச்சியிலிருந்து முக்கிய பகுதிகள் இணைக்கப்பட்டு TR கொடுமை என்ற தலைப்பில் Onelanka.tk தளத்தில் தொடராக வெளிவருகிறது இது பகுதி-2  காணத்தவறாதீர்கள் இந்த கொடுமையை.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

ஆனந்தபுரத்து வீடு் -விமர்சனம்

Photobucket“‘நாயா இருந்தா குலைக்கணும். பேயா இருந்தா முறைக்கணும்’ எழுதப்படாத இந்த சினிமா இலக்கணத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ‘பிள்ளை என்றால் பேயும் இறங்கும். மருமகள் என்றால் மறுகணமே சரண்டர்’ என்கிற சாத்வீக பேயை காட்டுகிறார் டைரக்டர் நாகா. உங்களுக்கு நிஜமாகவே ஒரு ஆஹா!

மனைவி, குழந்தையுடன் பதினைந்து வருடங்கள் கழித்து தனது சொந்த கிராமமான ஆனந்தபுரத்துக்கு வருகிறார் நந்தா. பல வருடங்களாக பூட்டிக் கிடக்கிற வீட்டில் அவரது தாய், தந்தையின் ஆவி உலவுகிறது. இதை முதலில் உணர்ந்து கொள்கிற சாயாசிங் அங்கிருந்து கிளம்பலாம் என்று நந்தாவை வற்புறுத்த, கிளம்பவே முடியாதபடி ஒரு லாக்! பிசினஸில் ஏற்பட்ட கடனுக்காக அந்த கிராமத்து வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் நந்தா. இவர் தப்பிக்க முயலும் ஒவ்வொரு நேரமும், வேணும்னா நீங்க போங்க. உங்க ஃபேமிலியை நான் பார்த்துக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கிறார் அந்த பருமனான பைனான்சியர். இவர் பெயர் மேகவர்ணபந்த். பெயரை போலவே அவரது வித்தியாசமான நடிப்புக்கும் சேர்த்து ஒரு ஷொட்டு.

கூடவே இருக்கிற நண்பனே துரோகியாகிற போது வீட்டிலிருக்கிற ஆவிகள் எடுக்கிற முடிவும், நந்தா அண் பேமிலியின் நிம்மதி பெருமூச்சும்தான் படம்.

இது பேய்வீடு என்பதை முதல் ஷாட்டிலேயே ஓப்பன் பண்ணிவிடுகிறார் டைரக்டர். பல காலமாக சுத்தம் செய்யப்படாத வீடு, பிள்ளை வருகிறான் என்றதும் தானாக கூட்டி பெருக்கி சுத்தமாகிக் கொள்வதும், வீட்டுக்குள் நுழைந்த பேமிலிக்கு சுட சுட தானாகவே உணவு சமைத்துக் தருவதுமாக ஒரு ஆவியுலக அற்புதத்தை ஆரவாரமாக ஆரம்பித்து வைக்கிறார் நாகா. ஆனால் ஆவிகளின் அற்புதங்கள் ஜன்னலை திறந்து திறந்து மூடுவதிலேயே பாதி (பிராணன்) போய்விடுகிறது. ஆனாலும், அந்த துரோகிக்கு தருகிற சாட்டையடியும், அந்தரத்தில் ஊஞ்சலை து£க்கி அலற விடுவதும் தனி சுவாரஸ்யம். மனைவியை கை நீட்டுகிற பிள்ளை நந்தாவை தனது கைத்தடியால் போட்டுத்தள்ளுகிற அந்த காட்சியும் கைதட்டல் களேபரம்.

நந்தாவுக்கு இயல்பாகவே சற்று மிரண்ட முகம். பொருத்தமாக இருக்கிறார் பல காட்சிகளில். தனது அப்பா அம்மாதானே என்று கூட நினைக்காமல் வீட்டை விட்டு ஓட முயல்வது பரிதாபம். அதைவிட பரிதாபம், என்னை ஏன் போக விட மாட்டேங்கிறீங்க என்று ஆவிகளிடம் ஆவேசப்படுகிற காட்சி.

முதலில் அஞ்சினாலும், இந்த ஆவிகளால் தனக்கும் தன் பிள்ளைக்கும் ஆபத்தில்லை என்பதை உணர்கிற நிமிடத்திலிருந்தே சாயாசிங் ஹாயா சிங் ஆகிவிடுகிறார்.

லேண்ட் புரோக்கர் ரத்தினமாக கணேஷ்பாபு. ஆவிகள் இருப்பதை அறியாமலே இவரும் இவர் கூட்டி வரும் அண்ணாச்சியும் வீடு பார்க்காமல் பாதியில் பிடிக்கிற ஓட்டம் இருக்கிறதே, வீடு வந்து சேர்கிற வரை நமக்கு தொடர்கிறது சிரிப்பு. நண்பன் நந்தாவை தன் கண்ணெதிரிலேயே சிலர் மிரட்டுவது பொறுக்காமல் ‘வெளியூர்காரன் அடிக்க வர்றதா’ என்று பாய்வதும் சரியான டச்சிங்.

அந்த குழந்தை ஆர்யனின் முகபாவங்கள் தனி போட்டோ கேலரியாகவே மனதில் பதிகிறது. அந்த மலர்ந்த முகத்தில் ஆயிரமாயிரம் அசகாய எக்ஸ்பிரஷன்கள். இந்த பேரனுக்காக தாத்தா பாட்டி ஆவிகளின் பாசப்பிணைப்பும் மிக சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு முக்கிய கேரக்டர் கலைராணி. முதல் காட்சியிலேயே ஆவிகளின் மகிமையை புரிந்து கொள்கிற இவர் அப்புறம் ஏன் பயந்து ஓட வேண்டும்?

ரமேஷ்கிருஷ்ணாவின் இசை பேய் படம் என்ற மிரட்டலை தராமல் தாலாட்டியிருக்கிறது. கதையோடு கை பிடித்து அழைத்துச் செல்கிறது அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு.

Rating – 2.5/5

– onelanka விமர்சனக்குழு –

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »