பெண்சீடரின் தந்தையால் நித்தியானந்தாவுக்கு மீண்டும் சோதனை! வேதனையில் நித்தியானந்தா !

Photobucketசொத்துக்காக மகள்களை, என்தம்பி மூளை சலவை செய்துள்ளார் என, நித்யாணந்தா பெண்சீடர்கள் தந்தை நிரூபர்களிடம் கூறினார்.   ஆரல்வாய்மொழி அடுத்த தோவாளையை சேர்ந்தவர் சிவபாலன்.

இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கு கிருஷ்ணேஷ்வரி என்ற நித்திய பிரிதானந்தா (29), சித்திரேஸ்வரி என்ற நித்திய பிரம்மானந்தா (28) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் நித்தியாணந்தா ஆசிரமத்தில் நித்தியாணந்தாவின் சீடராக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ஆசிரமத்தில் ஏற்பட்ட பிரச்சிணைகள் காரணமாக இவர்கள் ஆசிரமத்தை விட்டு வந்தனர்.

ஆனால் எங்களை ஆசிரமத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும். தந்தையுடன் செல்லமாட்டோம். என சமீபத்தில் சென்னை கமிஷ்ணரிடம் இவர்கள் புகார் கூறியிருந்தனர். இதுகுறித்து தோவாளையில் உள்ள சகோதரிகளின் தந்தை சிவபாலன் நிருபர்களிடம் கூறியதாவது, எனக்கு கிருஷ்ணேஷ்வரி, சித்திரேஷ்வரி என்ற இரண்டு மகள்கள் உண்டு. எனது தம்பி கண்ணன்.

இவர் அரசு ஊழியராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நித்தியாணந்தாவின் சீடராக உள்ளார். இதனால் அவரது பெயரை விஷ்வரூபாணந்தா என மாற்றம் செய்துள்ளார். எனது மகள்களையும் வெளிநாட்டில் ஆசிரமம் வைத்து தருகிறேன் என அழைத்து சென்று ஆசிரமத்தில் விட்டு விட்டார். கண்ணன் என்னிடம் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

அதை திருப்பி கேட்டபோது திருப்பி தராமல் மேலும் 10 லட்சம் தரவேண்டும் என மிரட்டுகிறார். எனது மகள்களை மூளை சலைவை செய்து மறுபடியும் ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார் என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும் எனது மகள்களை மூளை சலவை செய்ததாலே அவர்கள் பொய் புகார் கூறியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகள் எனது குழந்தைகளை பார்க்க முடியாமல் செய்துள்ளனர். எனது சொத்து, பணம் எல்லாவற்றையும் அபகரிக்கவே இதுபோல கண்ணன் செய்து வருகிறார். எனக்கு தரவேண்டிய பணத்தை சட்டப்படி வக்கீல் மூலம் கோர்ட்டில் சந்தித்து பெருவேன் என்றார் வேதனையுடன்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: