Twitter இல் Onelanka.tk

Photobucketநமது Onelanka.tk இணையத்தளம் Twitter இல் இணைந்துள்ளது.எமது வாசகர்கள் அனைவரும் எமது Twitter பின்தொடர்வதன் மூலம் புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளமுடயும் என்பதை அறியத்தருகிறோம்.

http://twitter.com/onelankatk

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

தமிழில் தொடர் தோல்வியால் தெலுங்குக்கு ஓடும் விஜய் !

Photobucketவிஜய், ஆர்யா, ஜீவா ஆகிய மூவரும்தான் ‘த்ரி இடியட்ஸ்’ படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. தமிழில் விஜய் நடிக்கும் கேரக்டரில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கப் போவதாக ஒரு செய்தி ஏற்கனவே வெளியானதல்லவா? அதில் பெரிய்ய்ய்ய்ய திருத்தம் என்கிறது கோடம்பாக்கத்து குருவி.

விஜய் நடிக்கும் படங்கள் பல தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியிருந்தாலும் நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்ததில்லை. பிற மொழி அழைப்புகளை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதும் இல்லை. இந்த நிலையில் விஜய்யை நேரடியாக தெலுங்கில் அறிமுகப்படுத்தினால் என்ன என்று நினைத்தாராம் எஸ்.ஏ.சி. அதுவும் ஷங்கரை விட்டால் இந்த அறிமுகத்தை நிகழ்த்த போகிற பெரிய மோதிரக்கை எதுவும் இல்லை என்று முடிவு செய்ததால் தெலுங்கிலும் விஜய்யையே நடிக்க வைக்க முயற்சி எடுக்கிறாராம்.

டோலிவுட்டை பொருத்தவரை மகேஷ்பாபுவின் இடத்தை விஜய்யால் ஈடு செய்ய முடியாது என்பதால் அதற்கும் ஒரு விலை கொடுக்க முன் வந்திருக்கிறதாம் விஜய் தரப்பு. என்ன அது? த்ரி இடியட்ஸ் படத்தை தயாரிக்கும் ஜெமினி நிறுவனத்திற்கு மேலும் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் தருவாராம் விஜய். இந்த தனி கால்ஷீட்டுக்கு சம்பளம் வேண்டாம் என்பதுதான் அந்த மிகப்பெரிய சலுகை!Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

எந்திரனை வெளிநாடுகளில் ஓடவைக்க போலிக்கண்ணீர் விட்ட ரஜனி!

Photobucket“சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கண்கலங்கினார்”.என்ற செய்தியை நேற்று ஊடகங்களில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்,பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பேசிய பேச்சை கேட்டு சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டாராம்.இது எவ்வளவு பெரிய கண்துடைப்பு வேலை என்று சிறுபிள்ளை கூட அறியும்.இவருக்கு கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு அந்த பேச்சில் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை.அப்படி இருக்க எப்படி இவருக்கு மட்டும் அழுகை வந்தது!

*என்ன ரஜனிக்கு அன்று தான் ஈழம் என்றால் என்ன என்று தெர்யுமா?

*ரஜனி ஈழப்பிரச்சனை பற்றி இது வரை ஒரு வரி கூட அறிந்திருக்கவில்லையா?

*இல்லை ரஜனி தொலைக்காட்சி,இணையம்,வானொலி,பத்திரிகை என்று எந்த ஊடகமும் பார்க்காத மனிதர்களுடன் கருத்துக்களை கூட பரிமாரிக்கொளாத ஒருவரா?

*இறுதியாக கொடூர போர் முடிந்து  ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட இந்த நிலையில் தான் ரஜனிக்கு கண்ணீர் வருகிறதா?ஏன் இவ்வளவு நாளும் அவரது ரோபோவுடன் சேர்ந்து வேறு கிரகத்திற்கு போயிருந்தாரா?

அவரது எந்திரனை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது ஈழதமிழர்களும் தான் இந்த வேலையில் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் படத்தை பார்க்க செய்ய இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கிறார்.இவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் இருந்த மரியாதையை கூட தானாக குறைத்துக்கொண்டுள்ளார்.அதைவேறு இந்த தமிழ்நாட்டு ஊதுகுழல் பத்திரிகைகள் ஓவர் பில்டப்புடன் பிரசுரிக்கிறார்கள்.ஈழத்தமிழர்கள் அரசியல்வாதிகள்,நடிகர்கள்,கட்சிகளின் பின்னால் பல்லக்கு தூக்கும் கேனை தமிழர்களல்ல என்பதை ரஜனி தெரிந்துகொள்ளவேண்டும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . Leave a Comment »

வம்சம் – விமர்சனம்

Photobucket
சாண்டில்யன் கதையை ராஜேஷ்குமார் புரூஃப் பார்த்த மாதிரி கலவையான பிரசன்டேஷன். படத்தில் வரும் வம்சங்களின் பெயர்களை மனப்பாடமாக சொல்லிவிட்டால் ஒரு மெடலே தரலாம். அந்தளவுக்கு அகழ்வாராய்ச்சி நடத்தியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். உதாரணத்திற்கு ஹீரோவுடைய வம்சத்தின் பெயர், ‘எப்பாடு பட்டாவது பிற்பாடு கொடாதவர்!’ (அட ஊரின் பெயர்களில் கூட குளம்படி சத்தம்யா…) ஊருக்குள் குடியிருந்தால் மற்றவர்களை போல மகனும் சண்டை சச்சரவுகளில் இறங்கிவிடுவானோ என்று ஊருக்கு ஒதுக்குபுறத்தில் வாழ்கிறார் ஹீரோ அருள்நிதியின் அம்மா.

அப்படியிருந்தும் வலிய வந்து சேர்கிறது சண்டை. முடிந்தவரை புஜத்தை சிலுப்பாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறார் அருள்நிதி. அப்படியும் பொறுக்கமுடியாத ஒரு கட்டத்தில் முஷ்டியை உயர்த்த, ரணகளமாகிறது ஊர். ஒருவரையொருவர் போட்டுத்தள்ளுவது என்று கத்தாழை தூக்க, (கத்தியை விட கூர்மையா இருக்குப்பா இந்த தாவராயுதம்!) யார் செத்தார்கள், யார் வாழ்ந்தார்கள் என்பது சொல்லியா தெரிய வேண்டும்?

ஒரு இனத்தின் பெருமையை சொல்ல கொடையும், வீரமும் மட்டுமே இங்கு பிரதானமாக இருக்கிறது. ஒழுக்கம் ஐந்தாவது ஆறாவது பட்சம்தான். (உங்கப்பாவுக்கு சாராயம்னா உசிரு என்று அம்மாவே பிளாஷ்பேக்கில் பெருமையடித்துக் கொள்கிறார்) இப்படி எடுத்துக் கொண்ட பின்னணியை அட்சர சுத்தமாக சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். காதல் காட்சிகளில் தனது பாணியை விட்டுக் கொடுக்காமல் ரசனை பூசியிருப்பது அழகோ அழகு. ஆசையாக வளர்த்த பசுவை அண்டை கிராமத்திற்கு விற்க, அதுவோ பிறந்த இடம் தேடி அவ்வப்போது திரும்ப ஓடி வருகிறது. ஒப்படைக்கப் போகிற நேரத்தில் மாட்டுக்கு சொந்தக்காரி சுனைனா மீது காதலே வந்துவிடுகிறது அருள்நிதிக்கு. அப்புறம் என்ன? இவரே பசுமாட்டை களவாடி திரும்ப திரும்ப ஒப்படைக்கப் போகிறார். ‘உங்க லவ்வுக்கு நானா மாட்டினேன்’ என்று பசுவே சீறுகிற அளவுக்கு செம ஜாலி பண்ணுகிறார்கள்.

அது போகட்டும், செல்போன் சிக்னல் கிடைக்க அந்த கிராமம் மொத்தமும் மரத்தின் உச்சியில் ஏறி ஹலோ சொல்வதெல்லாம் செல்போன் டவரே சுளுக்கிக் கொள்கிற அளவுக்கு சிரிப்போற்சவம்! அறிமுக நாயகன் அருள்நிதிக்கு பட்டுக்கம்பள வரவேற்பே தரலாம். ஆறடி உயரம், அள்ளிக் கொள்ளும் சிரிப்பு என்று முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடுகிறார். மலரு… மலரு… என்று சுனைனாவை பூனைக்குட்டியாக சுற்றி வருவதும், அதே மலரிடம் ‘நாம சேர்ந்தா அவரு என்னை கொன்னுடுவாரு’ என்று விலகல் விண்ணப்பம் போடுவதும் ரசனை. கோடம்பாக்க விடாப்பிடி காதல் நாயகர்களே, கொஞ்சம் விலகுங்கள். அருள்நிதி வந்துட்டாரு! சுனைனாவின் கேரக்டரை ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். நட்ட நடுரோட்டில் ஊர் பெரிய மனுஷனை சாணியை கரைத்து முகத்தில் ஊற்றியதோடல்லாமல் விளக்குமாற்றாலும் அடி கொடுப்பது திடுக் திருப்பம். அடுத்த காட்சியிலேயே இது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட புலி என்பது தெரியாமல் வருங்கால மாமியார், அடக்கமான பொண்ணு என்ற பாராட்டுவதும், அதை ஒன்றுமே தெரியாதது போல சுனைனா ஏற்றுக் கொள்வதும் அவ்வளவு திகில் நேரத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது.

எதிரிகளுக்கு பயந்து ஓடப் பிடிக்காமல் சரக்கென்று இடுப்பிலிருந்து சைக்கிள் செயினை உருவுகிறாரே, அந்த ‘மலர்’ முகத்தில் சுளீர் வெப்பம்! தன்னை வேண்டாம் என்று விலகிப்போகிற அருள்நிதிக்கே ‘உன்னை போட்டுத்தள்ளிடுவேன்’ என்று போன் மிரட்டல் விடும் சுனைனாவின் வீரத்திற்கு ரசிகர்களின் திருச்சபையே அடிமை! ‘கவருமென்ட்டு ஆபிசருக்கு ஒரு கொடலு கறி போடு’ என்று சதாய்ப்பாக உதார் விடுகிற கஞ்சா கருப்பு காட்சிக்கு காட்சி அதிர வைத்திருக்கிறார். நண்பன் அருள்நிதிக்கு சுனைனா கிடைக்கிற அதே நேரத்தில், இவருக்கும் ஒரு கருப்பாயி கிடைப்பதும், கூடவே ஒரு த்ரிஷா கிடைப்பதும் செம சுவாரஸ்யம். நரைத்த முறுக்கு மீசையில் நஞ்சை தடவிய மாதிரி ஜெயப்பிரகாஷின் கேரக்டரில் அத்தனை கொடூரம். (இவரது வம்சத்தின் பெயர் நஞ்சுண்ட மாவோசியாம்) ஒரு மில்லி மீட்டர் சிரிப்பில் ஒரு நூறு பி.எஸ்.வீரப்பாக்களை திரையில் உலவ விடுகிறார் மனுஷன். கத்தியோ, கம்பையோ தூக்காமல் இவர் செய்யும் வில்லத்தனத்திற்கு ஏழெட்டு ஆயுள், நாலைந்து தூக்குகள் கூட கம்மிதான். இனிமேல் வில்லன்களுக்கு அண்டை மாநிலத்தில் வலை வீசுகிறவர்கள் ஜெயப்பிரகாஷின் விலாசத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் அலைச்சல் மிச்சம்!

கிஷோரின் பிளாஷ்பேக்குக்கு அவ்வளவு நீளம் தேவை இல்லையோ? ம்க்கும், அது மட்டுமா நீளம். அவ்வளவு பட்டாசு சத்தத்திலும் கொட்டாவி விட வைக்கும் அந்த தொடர் திருவிழாவும்தான்! திருவிழா நேரத்தில் பிணம் விழுந்தால் அதற்கு ஒரு மாலை கூட விழாது என்பது போன்ற இறுதி மரியாதை செய்திகள் புதுசு என்பதால் பொருத்தருளலாம். இப்படியொரு படத்திற்கு எப்படி இருந்திருக்க வேண்டும் இசை? ஹ்ம்ம்ம்ம்… மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு பிரமிப்பு. இந்த கதைக்காக ஏராளமான செய்திகளை திரட்டியிருக்கிறார் பாண்டிராஜ். அவை எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

தலையணைக்குள் மெத்தையை திணித்தால் என்னாகும்? அதுதான் நடந்திருக்கிறது வம்சத்திலும்!

Rating – 3/5

-Onelanka விமர்சன குழு –

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

தமிழ்நாட்டு வாய் வீரர்கள் என்ன செய்யமுடியும் என்ற இறுமாப்பில் சென்னையில் அசின்

இடத்துக்கேற்ற நிறம் மாறும் கலையில் அசினுக்கு பிஎச்டி பட்டமே தரலாம். நேற்று வரை சென்னைக்கு வரவே அச்சமாக உள்ளதென்றும், கொழும்பிலேயே இருக்க ஆசையாக உள்ளதென்றும் இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசி வந்தவர், இப்போது இருப்பது சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்!

அசினுக்கு ரிஸ்க்கெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி போல… பல பிரச்சினைக்கு நடுவில் இப்பொது அசின் இருப்பது சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில். தற்போது இங்குதான் காவல் காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விஜய்யுடன் காவல் காதல் படப்பிடிப்பிலிருக்கும் நடிகை அசினை சில நிருபர்கள் அணுகி பிரச்சினைக்குள்ளான இலங்கைப் பயணம் மற்றும் நடிகர் சங்கத்தின் கண்டனம் குறித்துக் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியது :

“நான் ஒரு நடிகை. நடிக்கக் கூப்பிட்டால் போய்த்தான் ஆக வேண்டும். அதைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்னைக்கு வர பயமாக உள்ளதென்று நான் கூறியதாக நினைவில்லை. என் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட சிலர்தான் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள்.

ஏற்கனவே இந்தி படப்பிடிப்புக்காக மும்பை போனதும் நான் அங்கேயே தங்கிவிட முடிவெடுத்து விட்டதாக வதந்திகள் கிளப்பினர். தொழில் விஷயமாகத்தான் அங்கு போனேன்.  மலையாளத்தில் இருந்து தமிழ் படங்களுக்கு வந்ததும் சென்னையில் தங்கினேன்.

அதுபோல் இந்திப் படங்களில் நடிப்பதால் மும்பைக்கு போனேன். தமிழ் படங்களில் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல. சித்திக் இயக்கும் தமிழ் படத்தில் தற்போது நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.  விஜய் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இப்போது மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளேன்.

விஜய் பழக இனிமையானவர். நிறைய A ஜோக் சொல்லுவார். படப்பிடிப்பில் நட்பு ரீதியான பழகிக்கொள்கிறோம். அவரது குடும்பத்தையும் எனக்கு நன்றாக தெரியும்.

சல்மான்கான் ஜோடியாக ரெடி இந்திபடத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் ஜாலியாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம்” என்றார் பிசின்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

அதிர்ச்சி தகவல்- மேவின் சில்வா பதவியில் இருந்து நீக்கம்

Photobucket” சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கௌரவ அமைச்சர் மேவின் சில்வாவை பிரதி அமைச்சர் பதவியில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீக்கியுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மேவின் சில்வாவின் கட்சி உறுப்புரிமையை நீக்கியுள்ளது.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்திலேயே இந்த முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி அதிகாரி மீது அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது. அனைவராலும் கண்டிக்கப்பட்ட சம்பவமாக இருந்தது.

இதனையடுத்தே கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.பாணா காத்தாடி – விமர்சனம்

Photobucketபள்ளம் மேடு, பச்சை சிவப்பு எதையும் பார்க்காமல் காத்தாடி பிடிக்க ஓடும் சிறுசுகளை பார்த்து எரிச்சலடையும் சென்னை வாசிகளுக்கு பாணா காத்தாடி, அடி ஆத்தாடிதான்! விட்டால் ஒலிம்பிக்சில் பட்டம் விடுகிற போட்டியையும் சேர்க்க சொல்வார்களோ என்று அஞ்சுகிற அளவுக்கு காத்தாடியின் முக்கியத்துவம் கழுத்தில் ‘மாஞ்சா’ போடுகிறது.

முதல் காட்சியே இப்படிதான் துவங்குகிறது. அறுந்து விழும் பட்டத்தை பிடிக்க ஆளாளுக்கு ஓடுகிறார்கள். வடசென்னை இளைஞன் அதர்வாவும் அப்படி ஓட, எதிரே வரும் ஃபேஷன் டெக்னாலஜி மாணவி சமந்தா மீது விழுகிறார். விழுந்தது கூட தெரியாமல் ஓடுகிறார். அப்போது சமந்தாவின் பென் டிரைவ், அதர்வாவுடன் போய்விட ஆறு மாசத்து படிப்பும் அதற்குள் இருப்பதால் காச் மூச் ஆகிறார் சமந்தா! அப்புறம் என்ன? அவரை தேடிப்பிடித்து பென் டிரைவுக்காக சண்டை போட, அதர்வா இல்லையென்று மறுக்க, பின்பு எப்படியோ கிடைக்கும் பென்-டிரைவ் காதலை விதைக்கிறது சமந்தாவின் மனசுக்குள். அந்த காதலுக்கும் வில்லனாக வருகிறது ஒரு சம்பவம். அதர்வா மீது தவறில்லை என்று உணரும் சமந்தா விரட்டி விரட்டி அவருடன் சேரும் நேரத்தில்தான் அப்படி ஒரு முடிவு. (‘கொன்னு£ட்டிங்க’ என்று பாராட்டு கிடைக்கும்னு நினைச்சிருப்பாரு போலிருக்கு டைரக்டர்)

‘நிரந்தர’ கல்லு£ரி மாணவர் முரளியின் வாரிசுதான் அதர்வா. சில காட்சிகளில் அப்பாவையே கலாய்க்கும் அவரது குசும்புக்கு செம கலாட்டவாகிறது தியேட்டர். என் பேரு இதயம் ராஜா என்று முரளியே வந்து முன்னோட்டம் கொடுப்பது இன்னும் ஜோர்… சரி பையன் எப்படி? சினிமா மேட்ரிமோனியலில் பனிரெண்டு பொருத்தமும் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறது அதர்வாவிடம். சோகக் காட்சிகளில் கூட அநாயசமாக நடித்து தள்ளுகிறார் தம்பி! எப்போதும் சண்டை போடும் அம்மா, என் புள்ளை அப்படி பண்ணியிருக்க மாட்டான் என்று நம்பிக்கை காட்டும்போது கரகரவென்று கண்ணீர் வடிக்கிறாரே, அடி மனசில் ஒரு அச்சச்சோ எழுகிறது.

குலதெய்வமே வந்திரு… என்று ரசிகர்கள் உடுக்கையடிக்க வசதியாக ஒரு அழகான இறக்குமதி சமந்தா. ஸ்லம்முக்கே போய் தனது பென் டிரைவுக்காக சண்டை போடும் காட்சிகள் ரசனை. அதர்வா கொடுக்கிற அந்த பரிசை பார்த்து அதிர்ச்சியடைவதும், அவனை எனக்கு தெரியாது என்று போலீசிடம் போட்டுக் கொடுப்பதும் கதையின் அபாய வளைவு. அதற்கு பொருத்தமாக ஆயிரம் உணர்ச்சிகளால் நிறைந்திருக்கிறது சமந்தாவின் கண்கள். (கொஞ்சம் ஜாஸ்தி கொடுத்தாவது தமிழ்நாட்டு எல்லைய தாண்டாம பார்த்துக்கோங்க சாருங்களா)

படத்தை உசரத்தில் பறக்க விடுகிறார் கருணாசும்! எங்கப்பாவும் என்னை படிக்க வச்சிருந்தா அப்துல்கலாம் மாதிரி நானும் சைட்டிஷ் ஆயிருப்பேன் என்று கவலைப்பட்டே கலங்கடிக்கிற மனுஷன், அப்பாவின் பாக்கெட்டை லு£ட் அடிக்க போடுகிற திட்டம் இருக்கிறதே, சலம்புகிறது தியேட்டர் மொத்தமும். ஏதோ காண்டம் வாங்கி தொலைக்கிறார் என்று நினைத்தால் படத்திற்கே அதுதான்யா டேர்னிங் பாயின்ட்!

ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை தகுதிகள் இருந்தும் ஏன் ஒதுங்குகிறார் பிரசன்னா என்ற ஏக்கத்தை தருகிறது ஒவ்வொரு பிரேமும். தொழில் முறை ரவுடி கேரக்டரில் தன்னை அசால்ட்டாக பொருத்திக் கொள்கிறார். அதர்வாவை கொல்ல முடியாமல் அவர் தவிக்கிற தவிப்பை ஒரு மின்னலை போல கண்களில் காட்டுவதும் சூப்பர். (வட்டத்தை விட்டு வெளியே வாங்க பிரதர்)

விட்டால் ஓவர் ஆக்டிங் என்று அலத்துக் கொள்ள வைத்திருக்கும். ஆனால் ஒரு கோடு போட்ட மாதிரி தாண்டாமல் தாண்டவம் ஆடுகிறார் மவுனிகா. (ஹ¨ம், எவ்ளோ நாளாச்சுங்க) ஆமா, இன்ஸ்பெக்டர் சேரன் ராஜ் நல்லவரா, கெட்டவரா? திருநெல்வேலி சிங்கமாக சிலுப்பிகிட்டு நிற்பதும் ரசனைதான்! யுவனின் இசையும், ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

அந்த குஜராத் சீன்தான் ஏன்னு கடைசி வரைக்கும் புரிபடலே வாத்யாரே… குஜராத்ல பிறந்த காந்தி பட்டம் வாங்க ஃபாரின் போனார். இவய்ங்க பட்டம் விடுறதுக்காக குஜராத்துக்கு போறாங்கப்பா என்று டைமிங்காக போட்டு தாக்கினார் ரசிகர் ஒருவர். (ஏதோ இந்தளவுக்கவாது பயன்பட்டுச்சே…)

பட்டம் அழகு. நு£லின் அளவுதான் மீட்டருக்கும் மேல, கிலோ மீட்டருக்கும் கீழே!

Rating – 2.5/5

Onelanka விமர்சன குழு