எந்திரன் மெகா ஹிட்… முதல் அறிக்கை!

இந்திய திரையுலகம் இதுவரை காணாத வெற்றியை எந்திரன் பெற்றுள்ளது. துபாயில் இன்று காலை வெளியான எந்திரன் முதல் காட்சி (7.30 மணிக்கு) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் “ரஜினி ரோபோ கெட்டப்பில் அசத்தியுள்ளார், இனி இந்தியாவில் எந்திரன் படம் போல் வருமா என்பது சந்தேகம்தான்” என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

“சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை… எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்… குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்”… இதுதான் எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் FIR. (முதல் தகவல் அறிக்கை).

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர். படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் கூறினார்.

அவர் கூறியதாவது :

“சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி – ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள். எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை. ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி – ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது. படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்…என்றார் அவர்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ.3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார். ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மலேசியாவில் ஆரம்பமாகியது எந்திரன் முன்பதிவு..

Photobucketமலேசியாவில் எந்திரன் படத்தின் முதல் காட்சியான Premier Show இற்கான முன்பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் திகதி இரவு  9.00 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவுள்ளது.இதற்க்கான மேலதிக தகவல்களை மலேசிய வாசகர்கள் மலேசிய நண்பன் பத்திரிகையில் அறிந்துகொள்ளமுடியும்.

இதுவரையில் இந்த Premier show பற்றிய தகவல் மற்றும் முன்பதிவு மட்டுமே
ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் மற்றைய காட்சிகள் மற்றும் திரையரங்கங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எந்திரன் முதல் காட்சிக்கான டிக்கட்டுகள் மலேசியா வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.ஒரு டிக்கட்டின் விலை RM60, RM70 .இந்த விலை கொடுத்து அதிக மக்கள் முதல் காட்சி பார்பார்களா என்பது சந்தேகமே!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

விஜயுடன் ஒருநாள் உல்லாசத்தில் மாணவிகள் !!

Photobucket

புதுச்சேரி மாநிலத்தில் SS Music சார்பில் “எனிதிங் பார் விஜய்” என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக நாளை புதுச்சேரியில் ( செப்டம்பர் 25 ) மாணவிகளைச் சந்தித்து உரையாடவுள்ளார் நடிகர் விஜய்.

வேறு துறைகளில் தனித்தன்மை பெற்றவர்களாக இருப்பின், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நடிகர் விஜய் கையால் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

அதுமட்டுமல்லாமல்  விஜயுடன் படப்பிடிப்பில் ஒரு நாள் முழுவதும் (படப்பிடிப்பில் மாத்திரம் தானா?)கலந்து கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால்  மாணவிகள் உற்சாகத்துடன் இந்த (உல்லாச!!) நிகழ்ச்சியில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.Photobucket

Anything For Vijay என்ற தலைப்பை பார்த்ததுமே உங்களுக்கு புரிந்திருக்குமே.விஜய்க்காக என்னவேண்டுமென்றாலும் செய்வார்களாம்!!இத்தகவலை விஜய் மன்ற மாநிலத்  தலைவர் தெரிவித்து உள்ளார்.

ரசிகைகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. நடிகர் விஜய் புதுச்சேரி வருவதையொட்டி அவருக்கு தடபுடலான வரவேற்பை அளிக்க ஆயத்தமாகிவருகின்றனர் புதுச்சேரி விஜய் ரசிகைகள்.

இதை அறிந்த புதுவை மாணவிகளின் பெற்றோர் அதிர்சியடைந்துள்ளார்கள்.25 ம் தேதி அன்று மாணவிகளை வீட்டை விட்டு வெளியில் போகவேண்டாம் என்று பெற்றோர் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளதாக தெரியவருகிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகைகளை விட ரசிகர்கள் அதிகம் வருகை தந்து நடிகர் விஜயை வெறுப்பேற்ற போகிறார்கள் என்று சிலர் பேசிக்கொள்வதை புதுவை மாநில டீக்கடைகளில் காணக்கூடியதாக உள்ளது

இந்நிகழ்ச்சி 25 ம் தேதி காலை 9 மணியளவில் புஸ்சி வீதியிலுள்ள ரோஸ்மா திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது. மேலும் விபரம் அறிய No: 55, புஸ்சி வீதியில் உள்ள புதுவை மாநில விஜய் தலைமை மன்றத்தை தொடர்பு கொள்ளட்டுமாம்.( Strictly for Ladies only)Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

T.ராஜேந்தரின் நகைச்சுவையான கேளுங்கள் சொல்லப்படும் பகுதி-3 (வீடியோ)

கேளுங்கள் சொல்லப்படும் நிகழ்ச்சியிலிருந்து முக்கிய பகுதிகள் இணைக்கப்பட்டு TR கொடுமை என்ற தலைப்பில் Onelanka.tk தளத்தில் தொடராக வெளிவருகிறது இது பகுதி-3  காணத்தவறாதீர்கள் இந்த கொடுமையை.

Daily News இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

காமன்வெல்த் போட்டியை நடத்த ரூ. 46 கோடி லஞ்சம் கொடுத்த இந்தியா ; அதிர்ச்சி தகவல்

Photobucketடில்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, 72 நாடுகளுக்கு சுமார் ரூ. 46 கோடி இந்தியா லஞ்சமாக கொடுத்த, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் போட்டி நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மைதானங்கள் மற்றும் விளையாட்டு கிராமம் முழுமையாக தயா ராகாததால், பெரும் பிரச்னை எழுந்துள் ளது.

இந்தச் சூழலில் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, இந்தியா லஞ்சம் கொடுத்த விபரத்தை ஆஸ்திரேலிய பத்திரிகை “தி டெய்லி டெலிகிராப்’ அம்பலப்படுத்தியுள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி: காமன்வெல்த் விளையாட்டை 2010ல் நடத்துவதற்கான நாட்டை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு கடந்த 2003ல் ஜமைக்காவில் நடந்தது. அப்போது இந்தியா(டில்லி) மற்றும் கனடா(ஹாமில்டன்) இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மற்ற நாடுகளின் ஆதரவை பெற, அவற்றுக்கு தலா ரூ. 32 லட்சம், லஞ்சமாக கொடுக்க கனடா முன் வந்தது.

ஆனால், இந்தியா சார்பில் 72 உறுப்பு நாடுகளுக்கு பயிற்சி திட்ட உதவி என்ற பெயரில், இரண்டு மடங்காக தலா ரூ. 64 லட்சம் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ. 46 கோடி செலவு செய்தது. இத்தொகையை பெற்ற சிறிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் இந்தியா, கனடாவை 46-22 என்ற கணக்கில் வீழ்த்தி, போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற்றது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

ஒரு ரஜினி ரசிகனின் பகிரங்க மடல்.

தயவு செய்து ஊடக நண்பர்கள் இதை பிரசுரித்து உதவவும்.

Photobucket

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே… சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, ‘தலைவா’ என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! ‘போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்’ என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!
இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், ‘உள்ளே வராதே’ என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்… கட்-அவுட் வேண்டும்… டிக்கெட் காசு வேண்டும்… நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்… உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே… தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்…… உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, ‘இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு’ என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன… மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது… நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை ‘குசேலன்’ படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, ‘என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.’ என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது ‘என்னாச்சு?’ என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி ‘எங்க பவர் புரியுதா?’ என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!
‘பாபா’ படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க… பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை… ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! ‘பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்’ என்றும் ‘நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்’ என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்… ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு ‘எந்திர’ இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 2 Comments »

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…!!!

ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.

பாதிக்கப்பட்டவர்
இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.

Photobucketஇதை அவர் என்ன நோக்கத்திற்காக செய்தாரென்பது அவருக்குத் தான் வெளிச்சம் ஆனால் இதனால் பத்திற்கு மேற்பட்ட வறியவர்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இதற்கு அசின் பதில் கூற முடியாது தான் அப்படியானால் யார் பதில் கூறுவது. அப்படியானால் செய்த மருத்தவரின் கழுத்தைப் பிடிப்போமா..? (அவர் ஒப்பம் அருகே காட்டப்பட்டள்ளது)

அந்தப் பெரியவரை அணுகிய போது அவர் பல விடயங்களைச் சொன்னார். எனக்கும் அந்த ஒலிப் பதிவை இணைக்கத்தான் விருப்பம் ஆனால் அதை கேட்க முடியாது. அவற்றில் சிலதை கத்தரித்து எழுதுகிறேன் எங்களுக்கு அசின் பார்க்க வரும் போது தான் தெரியும் அவர் தான் இதை செய்வீக்கிறார் என்று. முதலில் அரசாங்கம் செய்வதாகத்தான் நான் நினைத்தேன்.Photobucket

2) இது இந்திய அரசாங்கத்தின் சதி 87 ல் ஒப்பரெசன் லிபரேசன் என்று வந்து எங்களைக் கொன்றார்கள். ராஜீவ் செத்தும் திருந்தல இப்ப இப்படி வாறாங்கள்…
இப்படி பல தமிழில் சொன்னார். அவருடன் சம்பவம் சம்பந்தமாக மேலும் கேட்டபோத  “எனக்கு ஒப்பேசன் நடந்து அடுத்த நாள் பலரை விடுவித்தார்கள். எனக்கு முழுதாகப் பார்வை வரவில்லை. எனக்கு மட்டுமல்ல பலருக்கு இதே நிலைதான். என் மகன் தான் எனக்கு துணைக்கு நின்றார் சிலருக்கு யாருமே இல்லை. மருத்துவரைக் கேட்டபோது இது மருந்தின் விளைவு தான் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றார் மறு நாள் ஓரளவு சரி வந்தது ஆனால் பார்க்க முடியாது இருந்தது. இப்போது ஒன்றுமே தெரியவில்லை இப்படி பத்துப்பேருக்கு மேல் இருக்கிறொம். இறுதியாக கிளினிக்கில் டொக்ரர் சொன்னார் லென்ஸ் மாற்றி வைத்துவிட்டார்கள் மாற்ற வேண்டும் 4500 ருபாய் கட்டுங்கள் கட்டினால் ஒப்ரெசனுக்கான டேட் (திகதி) தாறன் என்கிறார். அவரிடம் தனிப்பட செய்தால் 25000 ரூபா தேவைப்படும் கட்டினால் மறு நாளே செய்து கொள்ளலாம்” இப்படிச் சொன்னார் அனால் அவரிடம் 4500 ரூபாய் கூட இப்போது இல்லை போல் தான் தெரிகிறது.
இதற்கு முடிவென்ன..?
யார் பதில் சொல்லப் போகிறீர்கள்…?
தமிழராகிய எங்களால் இதற்கு என்ன செய்ய முடியும்…?
தயவு செய்து சிந்தியுங்கள். இவர் ஏற்கனவே வன்னிப் போரில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். இவரிடமும் பணம் இல்லை. இராமருக்கு உதவிய அணில் போலாவது ஏதாவது செய்யுங்கள். இந்தத் தகவலை உலகிற்கு சேருங்கள் முடிந்தால் சம்பந்தப்பட்டவருக்குச் சேருங்கள். இது எம் உறவுக்கு ஏற்பட்டுள்ள அவலம் என்பதை மறக்க வேண்டாம்.
இதற்கு சகல பதிவர்களும், வாசகர்களும், இணையத்தள உரிமையாளர்களும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

Note :- இதற்கு பிறகும் காவல்காரன் உட்பட எந்த அசின்  படத்தைஆவது பார்க்க திரைஅரங்கு செல்விர்களானால் நீங்கள் மனிதாபிமானமுடைய மனிதர்களே அல்ல

நன்றி ,

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 3 Comments »