பாஸ் என்கிற பாஸ்கரன்-விமர்சனம்

Photobucket

நண்பேன்டா….

இந்த ஒற்றைச்சொல்லில் உயிர் கொண்டிருக்கிறது படம். கிழிய கிழிய அடி. பிழிய பிழிய அழு என்கிற சினிமா சென்ட்டிமென்ட்டை வீசி கடாசிவிட்டு ‘வாங்க மக்களே’ என்று தோளில் கை போட்டுக் கொள்கிறார் டைரக்டர் ராஜேஷ். அந்த இரண்டே முக்கால் மணி நேரமும் தியேட்டரே அதிரடி சிரிப்பால் பேயாட்டம் போடுகிறது.

வெட்டியாக சுற்றுவதையே வேலையாக பார்க்கும் ஆர்யாவுக்கு காதல் மட்டும் கரெக்டாக வந்து விடுகிறது. பல வருடங்களாக பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கும், லெக்சரர் நயன்தாராவுக்கும் ‘பிட்’ அடிக்கிற விஷயத்தில் பிரச்சனை வந்து அதுவே காதலாகி விடுகிறது. குடிகாரன் பாக்கெட்டில் குவார்ட்டர் விழுந்த மாதிரி, அவரே புது அண்ணியின் தங்கச்சியாக வந்து அமைய ஆர்யா காட்டில் அடை மழை. உருப்படியா வேலை பார்க்காதவனுக்கு என் பொண்ணை தர முடியாது என்று நயன்தாராவின் அப்பா மறுக்க, அதற்கு ஆர்யாவின் குடும்பமும் சப்போர்ட். ஐயோ பாவம். வீட்டை விட்டே வெளியேறுகிறார் ஆர்யா.

பெட்டி படுக்கையுடன் அவர் போய் சேர்கிற இடம், அதே ஊரில் அமைந்துள்ள சந்தானத்தின் சிகையலங்காரக் கடை. கத்தி நடமாடுகிற இடத்தில் கூடவே ஒரு சுத்தியும் சேர்ந்து கொண்டால் என்னாகும்? ரகளையாகிறது ஏரியா. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பிசினஸ் செய்யலாம் என்று பிளான் போட்டு டுட்டோரியல் சென்ட்டர் ஆரம்பிப்பதும், அதற்கு அந்த ஊர் தாதா ராஜேந்திரன் பண உதவி செய்வதும், பரிகாரமாக பத்தாங் கிளாஸ் பாஸ் பண்ணவே முடியாத அவரது மகனை இவர்கள் பாஸ் பண்ண வைக்க போராடுவதுமாக திணற திணற சிரிக்க வைக்கிறார்கள். கடைசி பத்து நிமிஷம் ஜீவாவும் கெஸ்ட் ரோல் அடையாளத்தோடு உள்ளே குதிக்கிறாரா… பிரளயமே நடக்கிறது தியேட்டரில்.

சந்தானம் பேசுகிற ஒவ்வொரு டயலாக்குக்கும் குறைந்தபட்ச அஹ்ஹஹ்ஹா நிச்சயம். ‘வருஷம் முழுக்க பேசணும். அதுவும் ஃப்ரீயா பேசணும்’ என்று செல்போன் கடையில் ஆர்யா விரும்ப, ‘அதுக்கு நீ நேராதான் போய் பேசணும்’ என்கிற சந்தானத்தின் பதில் சர்வ நாஸ்தி. குடித்துவிட்டு சித்ரா லட்சுமணனின் பாராட்டு விழாவில் புகுந்து கலாய்க்கிற காட்சி பயங்கரம்ப்பா. ‘ஒரே ஒரு சுத்துற நாற்காலிய வச்சுருக்கிற உனக்கே இப்படின்னா, நாலு சுத்துற நாற்காலியை போட்டு கத்தியை வைக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்’ என்று அவர் குடிபோதையில் குமுறுவது அல்டிமேட் டச்! ‘அலைபாயுதே மாதவன்னு நினைச்சா அரண்மனைக்கிளி ராஜ்கிரணா இருக்கியே…. கமல்ஹாசன் மாதிரி புரியாமலே பேசுறியே…’ என்று சினிமா ஏரியாக்களிலும் ‘கத்தி’ வைத்திருக்கிறார் சந்தானம். (பார்த்துங்ணா…)

மூக்கு நுனியில் கோபமும், நாக்குக்கு அடியில் நக்கலுமாக ஆர்யாவுக்கு இது புது கேம். மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். கப் அண்டு சாசர் மாதிரி ஆர்யா-சந்தானம் காம்பினேஷன் செம ஜோர். டுடோரியல் சென்ட்டரில் டீச்சர் பணிக்கு ஷகிலாவை அழைத்து வரும் சந்தானத்திடம், சூழ்நிலை தெரியாமல் ‘இவங்கள ஏண்டா இங்க அழைச்சிட்டு வந்தே?’ என்று ஆர்யா ஹஸ்கி வாய்சில் கேட்கிற போது புரிஞ்சு சிரிக்குதுய்யா பொதுஜனம். எந்த வேலையை சொன்னாலும் அதில் ஒரு ரிஸ்க் வைக்கும் ஆர்யா கடைசியில் நயன்தாராவை கை பிடிக்கிற வரை வைக்கிற ஸ்டெப் எல்லாமே ஆனந்த கூத்து.

Photobucketநயன்தாராவை பார்க்கிற போதெல்லாம் எப்பிடி இருந்த பொண்ணு இப்பிடியாருச்சே என்று கவலை கவலையா வருது. ‘போதும் நீங்க டுட்டோரியல் நடத்துற லட்சணம். நீ சொன்ன மாதிரியே நான் வாங்குற பதினைஞ்சாயிரம் சம்பளத்துல உன்னையும் வச்சு காப்பாத்துறேன்’ என்று ஆர்யாவின் கண்ணோடு கண் நோக்கி நயன் அடிக்கிற டயலாக்குக்கு சொர்க்கத்தையே எழுதி வைக்கலாம்.

அண்ணனாக நடித்திருக்கும் சுப்புவுக்கு அசத்தல் வேலை. மாட்டு டாக்டர்! கல்யாண வயசை மிஸ் பண்ணிவிட்டு விஜயலட்சுமியிடம் வழியும் காட்சிகள் பேரிளமை ஆல்பம்! முதலிரவு தள்ளிப் போக, ஒரு பார்வையிலேயே எரிச்சலை காட்டுவதும் அற்புதம்.

கொடூர வில்லனாகவே அறியப்பட்ட நான் கடவுள் ராஜேந்திரன், இதிலும் அப்படி ஆகிவிடுவாரோ என்று பதற வைத்து சுபம் போடுகிறார் டைரக்டர். (அப்பாடி…!) பாஸ் பண்ணவே மாட்டான் என்று நினைத்திருந்த மகன் பாஸ் ஆகிவிட்டான் என்று தெரிந்ததும், பின்னால் நிற்கும் ஒரு மாணவர் கூட்டத்தையே பார்த்து ‘நீங்களும் பாஸ்தாண்டா ஓடுங்க’ என்கிறாரே, சூப்பர்.

இந்த படத்திலேயே ஒரு அற்புதமான சென்ட்டிமென்ட் கலவை அந்த கூலிங்கிளாஸ் டீச்சர்தான். பார்வையில்லாத அவர், யாருமே இல்லாத வகுப்பறையில் கிளாஸ் எடுக்க அதிர்கிற மக்கு மாணவன் மனம் திருந்துவதும், மற்ற மாணவர்களை மிரட்டி அழைத்து வருவதும் ரியலி குட்!

யுவனின் இசையும் ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவும் வழக்கம் போலவே கிரேட்.
டுட்டோரியலை வைத்து ஒரு ‘ஹிட்’டோரியல்!

Onelanka Review Team

Rating – 4.5/5

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: