அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…!!!

ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.

பாதிக்கப்பட்டவர்
இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.

Photobucketஇதை அவர் என்ன நோக்கத்திற்காக செய்தாரென்பது அவருக்குத் தான் வெளிச்சம் ஆனால் இதனால் பத்திற்கு மேற்பட்ட வறியவர்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இதற்கு அசின் பதில் கூற முடியாது தான் அப்படியானால் யார் பதில் கூறுவது. அப்படியானால் செய்த மருத்தவரின் கழுத்தைப் பிடிப்போமா..? (அவர் ஒப்பம் அருகே காட்டப்பட்டள்ளது)

அந்தப் பெரியவரை அணுகிய போது அவர் பல விடயங்களைச் சொன்னார். எனக்கும் அந்த ஒலிப் பதிவை இணைக்கத்தான் விருப்பம் ஆனால் அதை கேட்க முடியாது. அவற்றில் சிலதை கத்தரித்து எழுதுகிறேன் எங்களுக்கு அசின் பார்க்க வரும் போது தான் தெரியும் அவர் தான் இதை செய்வீக்கிறார் என்று. முதலில் அரசாங்கம் செய்வதாகத்தான் நான் நினைத்தேன்.Photobucket

2) இது இந்திய அரசாங்கத்தின் சதி 87 ல் ஒப்பரெசன் லிபரேசன் என்று வந்து எங்களைக் கொன்றார்கள். ராஜீவ் செத்தும் திருந்தல இப்ப இப்படி வாறாங்கள்…
இப்படி பல தமிழில் சொன்னார். அவருடன் சம்பவம் சம்பந்தமாக மேலும் கேட்டபோத  “எனக்கு ஒப்பேசன் நடந்து அடுத்த நாள் பலரை விடுவித்தார்கள். எனக்கு முழுதாகப் பார்வை வரவில்லை. எனக்கு மட்டுமல்ல பலருக்கு இதே நிலைதான். என் மகன் தான் எனக்கு துணைக்கு நின்றார் சிலருக்கு யாருமே இல்லை. மருத்துவரைக் கேட்டபோது இது மருந்தின் விளைவு தான் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றார் மறு நாள் ஓரளவு சரி வந்தது ஆனால் பார்க்க முடியாது இருந்தது. இப்போது ஒன்றுமே தெரியவில்லை இப்படி பத்துப்பேருக்கு மேல் இருக்கிறொம். இறுதியாக கிளினிக்கில் டொக்ரர் சொன்னார் லென்ஸ் மாற்றி வைத்துவிட்டார்கள் மாற்ற வேண்டும் 4500 ருபாய் கட்டுங்கள் கட்டினால் ஒப்ரெசனுக்கான டேட் (திகதி) தாறன் என்கிறார். அவரிடம் தனிப்பட செய்தால் 25000 ரூபா தேவைப்படும் கட்டினால் மறு நாளே செய்து கொள்ளலாம்” இப்படிச் சொன்னார் அனால் அவரிடம் 4500 ரூபாய் கூட இப்போது இல்லை போல் தான் தெரிகிறது.
இதற்கு முடிவென்ன..?
யார் பதில் சொல்லப் போகிறீர்கள்…?
தமிழராகிய எங்களால் இதற்கு என்ன செய்ய முடியும்…?
தயவு செய்து சிந்தியுங்கள். இவர் ஏற்கனவே வன்னிப் போரில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். இவரிடமும் பணம் இல்லை. இராமருக்கு உதவிய அணில் போலாவது ஏதாவது செய்யுங்கள். இந்தத் தகவலை உலகிற்கு சேருங்கள் முடிந்தால் சம்பந்தப்பட்டவருக்குச் சேருங்கள். இது எம் உறவுக்கு ஏற்பட்டுள்ள அவலம் என்பதை மறக்க வேண்டாம்.
இதற்கு சகல பதிவர்களும், வாசகர்களும், இணையத்தள உரிமையாளர்களும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

Note :- இதற்கு பிறகும் காவல்காரன் உட்பட எந்த அசின்  படத்தைஆவது பார்க்க திரைஅரங்கு செல்விர்களானால் நீங்கள் மனிதாபிமானமுடைய மனிதர்களே அல்ல

நன்றி ,

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 3 Comments »

3 பதில்கள் to “அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…!!!”

 1. Kanna Says:

  “இதற்கு பிறகும் காவல்காரன் உட்பட எந்த அசின் படத்தைஆவது பார்க்க திரைஅரங்கு செல்விர்களானால் நீங்கள் மனிதாபிமானமுடைய மனிதர்களே அல்ல”
  ——————–>>
  இவ்வளவு முட்டாள் தனமான பதிவராக நீங்கள் இருப்பீர்கள் என நான் எண்ணவில்லை. அசின், மருத்துவ செலவிற்கான நிதியை மட்டுமே வழங்கினார். ஆபரேஷன் செய்தது மருத்துவர். மருத்துவரும் அவரது குழுவும் பிழை செய்தால் அதற்கு அசின் என்ன செய்ய முடியும்?

  துணிவிருந்தால் அந்த டாக்டரையும் அவரது குழுவினரையும் வீட்டிற்கு அனுப்புங்கள்.

  இப்போதும் சொல்கிறேன் அசின் செய்தது உதவி. சரியான நேரத்தில் செய்யப்பட்ட உதவி.

  ஒரு உதாரணம்: உங்களுக்கு உங்களுடைய அம்மாவோ அல்லது மனைவியோ சமைத்துக் கொடுக்கிறார். நீங்கள் அதை வாயிற்குப் பதிலாக மூக்கினுள் ஓட்டிக் கொண்டால் அது சமைத்தவர் தப்பா?

  அது போலத்தான் இதுவும். உதவி செய்த அசினில் தப்பில்லை. டாக்டரில் தான் தப்பு. அசினின் படங்களை புறக்கணிக்கச் சொல்வது உங்களையே நீங்கள் முட்டாள் என பிரகடனப்படுத்துவதற்கு ஒப்பானது.

 2. onelanka Says:

  நான் நினைக்கிறேன் நீங்கள் விஜய் என்ற முட்டாள் நடிகரின் ரசிகர் என்று…

 3. Kanna Says:

  அசினுடைய விளம்பரதாரியல்ல நான். உண்மையான, சிந்திக்கத்தெரிந்த ஒரு தமிழன்.
  முட்டாளுடன் கதைத்து என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. நன்றி வணக்கம்.

  சிந்திக்கத் தெரிந்த மக்களுக்கு மட்டும்:
  இந்தச் செய்தியின் பின்னால் உள்ள நிஜத்தை சிந்தியுங்கள். அது போதும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: