யாழ்.கொக்குவிலில் மைத்துனருடனான கள்ளத்தொடர்பு அம்பலம்; மனைவி தற்கொலை!

மைத்துனருடனான கள்ளத்தொடர்பு கணவனுக்கு தெரியவந்ததும் கடிதம் எழுதி வைத்துவிட்டு யாழ்ப்பாணம் – கொக்குவில் நந்தாவிலைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான தனபாலன் சுசி வயது 33 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். இச்சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த பல நாட்களாக தனது கணவரின் சகோதருடன் இவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக அறிய முடிகின்றது. பின்னர் அவ்விடயம் கணவனுக்கு தெரிய வந்ததும் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துவிட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.அரியநாயகம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மரண விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கொக்குவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

யாழ்ப்பாண சாதிக் கொடுமைக்கு கனடாவில் ஐந்து வருட கடூழிய சிறை!

இவ்வளவு நாகரீகம் மற்றும் தொழினுட்பம் வளர்ச்சியடைந்த காலத்திலும் ஏன் வெளிநாடு சென்றும் கூட சில முட்டாள் யாழ்ப்பானதார்களுக்கு சாதி வெறி மாறவில்லை.
யாழ்ப்பாணத்து சாதிக் கொடுமையால் மகளின் காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளது.

இளைய மகள், இளைய மகளின் காதலன், மூத்த மகளின் கணவன் ஆகியோரை 2007 ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி கௌரவக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றஞ்சாட்டி ஒன்ராரியோவில் உள்ள உயர்நிலை நீதிமன்றம் ஒன்றில்  Scarborough நகரவாசியான செல்வநாயகம் செல்லத்துரை ( வயது-47) என்பவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

இம்மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டை செல்வநாயகம் ஒப்புக் கொண்டார்.  இதனால் இவருக்கு எதிரான படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றுக் கொண்டு மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டில் திருத்தம் கொண்டு வந்தது.

இக்குற்றச்சாட்டுக்கு அதிக பட்சத் தண்டனை 14 வருட கடூழிய சிறை.  நேற்று இவ்வழக்கு தீர்ப்புக்காக நீதிபதி  John McMahon முன்னிலையில் வந்தது.  சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஆஜரான அரசுத் தரப்பு சட்டவாதி  குற்றவாளிக்கு ஆறு வருட  கடூழிய சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.

எதிரி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இவ்வழக்குக்காக அவரது கட்சிக்காரருக்கு ஐந்து வருட தண்டனைதான் வழங்க வேண்டும் என்று கோரினார்.  ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.

இவ்வழக்குக்காக ஏற்கனவே செல்வநாயகம் 11 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.  எனவே அவர் இன்னமும் 49 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளி மிகப் பாரிய குற்றச் செயலை இழைத்திருக்கின்றார் என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.  வழக்கின் தீர்ப்பு தமிழ் உரை பெயர்ப்பாளர் மூலம் குற்றவாளிக்கு நீதிமன்றில் உரை பெயர்த்துக் கூறப்பட்டது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

நகரம் – விமர்சனம்

திருந்தி வாழ நினைச்சாலும் வருந்தி அழைக்குது வம்பு. அதை எப்படி சமாளித்தார் முன்னாள் ரவுடி என்பதுதான் நகரம் படத்தின் நாட்!

சிறைக்குள்ளிருந்து சுந்தர்சியை வெளியே கொண்டு வருகிறார் இன்ஸ்பெக்டரான நண்பன் போஸ் வெங்கட். இனிமேல் கத்தி துப்பாக்கிக்கெல்லாம் வாழ்க்கையில் இடமில்லை என்று நினைக்கும் சுந்தர்சி ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்தால், அந்த தொழிலை வெங்கட்டே அமைத்துக் கொடுக்கிறார்.
துறைமுகத்திலிருந்து சரக்குகளை வெளியே கொண்டு வருகிற ஏஜென்சியில் வேலை. ஆனால் சரக்கோடு சரக்காக பவுடரையும் கொண்டு வர வைக்கிறார் வெங்கட். தப்பு பண்ணிட்டோமே என்று நினைக்கும் போதே அடுத்தடுத்த தப்புகளை அரங்கேற்றுகிறார் இன்ஸ். அதுவும் நண்பன் சுந்தர்சியின் உதவியுடனேயே! கயிறு போகிற சந்துல புகுந்தாலும், உயிரே போகிற மாதிரி துரத்துகிறது பிரச்சனை. சுந்தர்சி தப்பித்தாரா? வெங்கட்டுக்கு அவர் கொடுத்த தண்டனை என்ன? இதுதான் படம். இடையில் சுந்தர்சிக்கும் அனுயாவுக்குமான காதல், போட்டிக்கு வரும் வடிவேலு என்று வணிக சினிமாவின் வாசனை திரவியங்களோடு கமகமக்கிறது பல காட்சிகள்!

இன்னொரு ஹீரோ என்று சொன்னால் சுந்தர்சி கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதால் சொல்லியே விடுவோம். இப்படத்தில் வடிவேலுவும் ஒரு ஹீரோ! அனுயாவை கரெக்ட் பண்ணுகிறேன் என்று ஆன்ட்டனாவில் கை வைத்து, அப்படியே அவர் வீட்டு நாயையே நாசம் பண்ணுகிற காட்சிகளை நினைத்தால் ஒரு வாரத்திற்கு விடாமல் சிரிக்கலாம். குடத்தை வைத்து தண்ணியடிக்கிற காட்சியில் தனது பேஸ்மென்ட் துணியை பறிகொடுத்துவிட்டு தவிக்கிற காட்சியும் அதே ரகம்தான். கதையோடு ஒட்டி வந்த மனுசன், திடீரென்று டிராக் காமெடிக்கு போனாலும், சிரிப்புக்கு 100 சதவீத கியாரண்டி தருகிறார்.

கொஞ்சம் உடம்பை குறைப்பது சுந்தர்சிக்கும், அப்படியே எதிர்கால தமிழ்சினிமாவுக்கும் நல்லது. தன்னை சுற்றி பின்னப்படுகிற வலையை கண்ணாலேயே அளந்து தப்பிக்கிற காட்சிகள் பொருளெடுக்கிற ஆட்களுக்கே கிளாஸ் எடுக்கிற அளவுக்கு தில்! அனுயாவை காப்பாற்ற இவர் செய்யும் வடிவேலுவின் பெண் கெட்டப் யுக்தி செமத்தியான கைதட்டல்களுக்குரியது!

முதலில் முசுடு, அப்புறம் அசடு என்பதுபோல அனுயாவும் பின்னி எடுத்திருக்கிறார். இந்தா பார்த்துக்கோ என்ற அவரது ‘தாராள’ கொள்கைக்கு தலை வணங்கி சிலையாகிறான் ரசிகன்.

பல வருடங்களுக்கு பின் தனது வில்ல(ங்க) முகத்தை காட்டியிருக்கிறார் ஜி.சீனிவாசன். மீசை நரைத்தாலும் மிடுக்கு நரைக்கவில்லை! போஸ் வெங்கட்டுக்கும் இது ஸ்பெஷலான படம். தொடர்ந்து இது போன்ற கேரக்டர்களில் நடித்தால் வருஷம் முழுக்க பிசியாக இருக்கலாம். (ஹ்ம்ம்ம் அவரை டைரக்டர் ஆசையல்லவா துரத்திக் கொண்டிருக்கிறது?)

செல்லதுரையின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளிலும் மழைக்காட்சிகளும் நெருப்பையும் குளிரையும் கக்கியிருக்கிறது. பிரவின் கே.எல்.ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங் கவனத்தை ஈர்க்கிறது. தமனின் இசையில் சில பாடல்கள் அருமை!

கலவர நகரம்- கலெக்ஷனும் அதிரும்!

-Onelanka விமர்சன குழு –

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு கணவன் வீட்டு முன் மனைவி உண்ணாவிரதம்!

குலசேகரம்  குமரி மாவட்டம் திருவட்டார் அடுத்துள்ள ஆற்றூரைச் சேர்ந்த முத்துக்குட்டி மகள் விஜயராணி(29). லேப் டெக்னீஷியன் படித்துள்ளார். இவருக்கும் குலசேகரத்தை அடுத்த இட்டகவேலி பண்டாரவிளையைச் சேர்ந்த பத்மராஜ் என்பவருக்கும் கடந்த பிப்.3ம் தேதி திருமணம் நடந்தது. தம்பதியினர் பத்மராஜின் அண்ணன் சுவாமிதாஸ், மனைவி செல்வியுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். அப்போது செல்வி, விஜயராணியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்விக்கும், பத்மராஜூக்கும் தகாத உறவு இருந்ததை அறிந்து விஜயராணி கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த பத்மராஜ், செல்வியுடன் சேர்ந்து மனைவியை தாக்கியுள்ளார். இதனால் விஜயராணி 6 மாதங்களுக்கு முன் தாயார் வீட்டுக்கு சென்றார்.  இந்நிலையில் நேற்று கணவன் வீட்டுக்கு உறவினர்களுடன் வந்த விஜயராணி பூட்டிக்கிடந்த வீட்டின் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.  திருவட்டார் போலீசார் விஜயராணியிடம் விசாரணை நடத்தினர். பூட்டிய வீட்டை திறந்து விஜயராணியை வீட்டிற்குள் அனுப்பினர். அவர் வீட்டுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 1 Comment »

ஆணுறை பயன்படுத்த சொல்கிறார் போப் 16ம் பெனடிக்ட்!!

ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ள போப் 16ம் பெனடிக்ட், விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆணுறைகளின் பயன்பாட்டுக்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன். இது ஐ.நா, ஐரோப்பிய நாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரக் குழுக்களின் கண்டனத்தை சம்பாதித்தது.

குறிப்பாக ஆணுறைகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள போப்பாண்டவருக்கு எதிரான விமர்சனங்களும் வலுத்தபடி உள்ளன. ஆணுறைகள் குறித்து போப்பாண்டவர் முன்பு ஒருமுறை கூறுகையில், ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸையும், எச்ஐவி பரவலையும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மாறாக ஆணுறைகளால் நிலைமை மோசமாகத்தான் செய்யும் என்றார்.

இந்த நிலையில், திடீரென தற்போது ஆணுறைகளுக்கு ஆதரவான கருத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் போப்பாண்டவர். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

செயற்கைக் கருத்தரித்தல் முறை என்பதால் ஆணுறைகளுக்கு எதிரான நிலையை வாட்டிகன் மேற்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் பல தார முறை அமலில் இருப்பதாலும், பாதுகாப்பற்ற உடலுறவு அங்கு படு சாதாரணம் என்பதாலும் அங்குதான் உலகிலேயே அதிக அளவில் எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது.

ஆனால் ஆப்பிரிக்காவில் ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸைத் தடுத்து விட முடியாது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து கடந்த ஆண்டு அவர் கூறுகையில், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் அதிகம் இருக்கிறது என்பதற்காக ஆணுறைகளைக் கொடுத்து அதைத் தடுத்து விட முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆணுறைகளைக் கொடுப்பதால் பிரச்சினை தீரும் என்று கூற முடியாது. மாறாக மோசமாகலாம் என்று கூறியிருந்தார் போப்பாண்டவர்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »