தவறான நடத்தை காரணமாக யாழ் மாணவியின் இடைநிறுத்தம்!!ஓர் அலசல் அறிக்கை….

நேற்றைய தினம் பல புலம்பெயர் ஊடகங்களிலும் வெளியான ஒரு செய்தி.“தவறான நடத்தை காரணமாக சுண்டிக்குளி மாணவி பாடசாலையிலிருந்து இடைநிறுத்தம்“.இந்த செய்தியின் பின்னால் எமது இனத்தின் மனோநிலை எவ்வளவு பின்தங்கிய மற்றும் கேவலமானது என்று புரியும்.

அந்த புகைப்படங்களில் அப்படி என்ன தான் இருக்கிறது.அந்த மாணவி தனது காதலனை முத்தமிடுகிறாள்.இது வேறு யாரும் செய்யாத தவறா? இல்லை அந்த மாணவியை இடைநிறுத்தம் செய்த அதிபர் தான் செய்திருக்கமாட்டாரா?பிறகேன் இவ்வளவு பெரிதாக்கப்பட்டது இந்த செய்தி? புகைப்படம் வெளியாகி பாடசாலை பெயருக்கு களங்கம் ஏற்ப்பட்டுவிட்டதாம்.

அப்படி என்றால் அந்த புகைப்படத்தை வெளியிட்ட நபர்களை தேடி கைது செய்யவேண்டும்.ஆனால் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாத இந்த யாழ் சமூகம் ஒரு பெண்ணை இப்படி அநியாயமாக தண்டிக்கிறது.அந்த பெண் என்ன நித்யானந்தா போன்று காவி உடை போர்த்திவிட்டா இப்படி செய்தார்.அந்த வயதில் அனைவருக்கும் வரும் காதல் தான் இவருக்கும் வந்திருக்கிறது.ஏதோ துரதிர்ச்டவசமாக படம் இணையத்தில் வெளியானத்ர்க்காக இப்படியா இந்த சமூகம் தன் கோரமுகத்தை காட்டுவது? அப்படிஎன்றால் காதலிப்பதே தவறு என்று கூறவருகிரார்களா இந்த பாடசாலை நிர்வாகமும் ஊடகங்களும்.

காதலிக்கும் போது தன் துணையை முத்தமிடாதவர்கள் எத்தனை பேர் நீங்களே உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.புலம்பெயர்ந்தவர்களே உங்களுக்கு நன்றாக தெரியும் உங்கள் பெண்பிள்ளைகள் எவ்வாறான உடைகளுடன் நைட் கிளப் கலீல் அதிகாலைவரை கண்டவனுடனும் குடித்துவிட்டு ஆட்டம்போடுகிரார்கள் என்று.இந்த மாணவி ஒரு மாணவனை காதலித்து அவனுக்கு முத்தம் கொடுத்தால் வலிக்கிறதா உங்களுக்கு?அங்கெ உங்கள் பெண்கள் பல காதலர்களுடன் ஆட்டம் போடுவதற்கு இட வசதி பூங்கா விடுதிகள் தனி அறைகள் என்று எவ்வளவோ வசதயுண்டு.ஆனால் யாழ்ப்பாணத்தில் காதலர்கள் தனியாக பேசிக்கொள்ள நாகரிகமான இடம் ஏதுமுண்டா?அப்படி ஏதும் இருக்கத்தான் விட்டுவிடுவீர்களா?உங்களைபோருத்தவரையில் வெளியில் தெரியாமல் எத்தனை பேரோடும் சுற்றலாம் அதெல்லாம் கலாசாரம்.ஒருவனை காதலிப்பது வெளியில் தெரிந்தால் அது கலாச்சார சீரழிவா?

உங்கள் பிள்ளைகள் அங்கு செய்தால் இதை விட கேவலமான செயல்களை எல்லாம் பார்த்துக்கொண்டு மௌனிகளாக இருக்கும் நீங்கள் யாழ்ப்பாணத்தில் ஏதும் நடந்தால் மட்டும் கலாச்சார காவலர்களாக கொதிப்பது ஏனோ? அந்த பாடசாலை அதிபர் தான் அறிவுகெட்டு இடைநிறுத்தம் செய்தால் வெளியிலிருக்கும் சில புத்தி(கெட்ட)ஜீவிகள் அந்த மாணவனையும் இடைநிறுத்த வலியுருத்துகிரார்கலாம்.எந்த உலகத்தில் இருக்கிறார்கள் இவர்கள் !! நினைத்தாலே வேதனையாகவும் சிரிப்பாகவும் உள்ளது.

அன்புள்ள யாழ் மாணவ மாணவியர்களே எம்மைபோன்ர ஒரு சகோதரிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்து நாம் தான் குரல் கொடுக்க வேண்டும்.சுண்டிக்குளி மாணவிகளே அந்த மாணவி திரும்பவும் இணைத்துக்கொள்ளப்படும் வரை நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்.
எமது கருத்திலுள்ள நியாயத்தன்மையை புரிந்துகொள்ளும் ஊடக நண்பர்களே இந்த அறிக்கையை மீள்பிரசுரம் செய்து அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க உதவுங்கள்.

உண்மையுடன்,

யாழ் மாணவர்கள் குழுமம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 9 Comments »

9 பதில்கள் to “தவறான நடத்தை காரணமாக யாழ் மாணவியின் இடைநிறுத்தம்!!ஓர் அலசல் அறிக்கை….”

 1. Kanna Says:

  முத்தமிடுவது தவறில்லை. செய்யப்பட வேண்டிய ஒன்றுதான். தழில் சமூகம் ஏன்தான் இப்படி இருக்கோ தெரியவில்லை. அந்த மாணவியை பாடசாலையில் மீள சேர்த்துக் கொள்ள வேண்டும். படங்களில் காதல், முத்தம், பாலியல் காட்சிகளை இரசிக்கும் நாம், பிள்ளைகளையும் பார்க்க அனுமதிக்கிறோம். ஆனால் அவர்களை செய்ய அனுமதிப்பதில்லை. ஏன்? சூப்பி போத்தலை கையில் கொடுத்துவிட்டு அதை சூப்பாதே என குழந்தையிடம் சொன்னால் நடக்கிற காரியமா அது? (சிலர் இந்த உதாரணத்தையும் வெகுவாக ரசித்திருக்கலாம்).

  நிற்க, எவ்வளாவு சுக எழுதப் பட்ட இந்த பதிவின் அடியில் ஒரு இணைப்பு, அசின் நடிப்பில் வெளிவரும் காவலன் படத்தை புறக்கணிப்போம் தமிழர்களே!….. இது எந்த வித்தத்தில் நியாயம்? தொழில் நிமித்தம் இலங்கை சென்ற அசினை ஏன் புறக்கணிக்க வேண்டும்? எவருமே இலங்கை செல்லக் கூடாதென பதிவர் நினைக்கிறாரா? சும்மா அறிக்கை விடுபவர்களையும் ஆர்ப்பாட்டம் செய்பவர்களையும் விட, அசின் செய்த உதவி மிகப் பெரியது. உதவி சிறிதென்றாலும் தேவையான நேரத்தில் செய்யப்பட வேண்டும்.

  பதிவரே, கொதிக்கும் இரத்தம் விதம் விதமாக கொதிக்கக் கூடாது. புலம்பெயர் தமிழர் பற்றிய உங்கள் கொதிப்பு நியாயமானது. ஏற்கக்கூடியது. ஆனால் அசின் பற்றிய உங்கள் கொதிப்பு ஏற்க்கப்பட முடியாதது.

 2. Kanna Says:

  மன்னிக்கவும். முன்னைய கருத்தில் சிறிய எழுத்துப் பிழை.

  “எவ்வளாவு சுக” என்பது “இவ்வளவு சூடாக” என வரவேண்டும்.

 3. onelanka Says:

  அசின் பற்றிய உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அவரது பிரசாரத்திட்காக 10 இற்கும் மேற்ப்பட்டோர் பார்வையிளந்திருக்கிரார்கள் அதை ஏற்க்கனவே எமது தளத்தில் மருத்துவரின் உறுத்திப்படுத்தல் மற்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தோம் படித்துப்பாருங்கள்.

 4. jeenath france Says:

  அனைவருக்கும் வணக்கம், இந்த மாணவி செய்தது தப்பு என்றால் உலகத்தில் இருக்கின்ற எல்லாருமே செய்வது தப்பு,
  தனக்கு என்று வந்தால் தான் தலை வலி தெரியும் என்று சொல்லுவது உண்மைதான்,,இந்த மாணவி செய்தது தப்பு என்று சொன்னவர்களுக்கு அவர்களது காதலனுடனோ அல்லது காதலயுடனோ சந்தித்து கதைத்து கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில்,அவர் முத்தம் கேட்டால்,இது கலாசார சீர்கேடு நாங்கள் இப்படி எல்லாம் செய்ய கூடாது எண்டு யாராவது சொல்ல்வார்களா?
  எனவே என் இனிய சகோதரர்களுக்கு நன் சொல்லுவது என்ன வென்றால் இந்த செய்தியை இத்துடன் மறந்து விடுங்கள், எண்கள் எல்லோர் வாழ்க்கையிலும் இது நடக்கின்ற ஒரு விஷயம், இதை வெளிநாடுகளில் இருக்கும் ஒரு வெள்ளை காரனுக்கு சொன்னால் சிரிப்பான், இதெல்லாம் அவரவர் சுதந்திரங்கள், அதை கலாசார சீர்கேடு என்ற பெயரில் முடக்கிவிட்டு,பெரிய சிக்கலில் நமது இளைஞர்களை ஆலக்கிவிடாதீர்கள்,

  கடைசியாக இந்த மாணவி செய்தது எந்த தப்பும் இல்லை,,

 5. onelanka Says:

  சரியா சொன்னீங்க பாஸ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: