நகரம் – விமர்சனம்

திருந்தி வாழ நினைச்சாலும் வருந்தி அழைக்குது வம்பு. அதை எப்படி சமாளித்தார் முன்னாள் ரவுடி என்பதுதான் நகரம் படத்தின் நாட்!

சிறைக்குள்ளிருந்து சுந்தர்சியை வெளியே கொண்டு வருகிறார் இன்ஸ்பெக்டரான நண்பன் போஸ் வெங்கட். இனிமேல் கத்தி துப்பாக்கிக்கெல்லாம் வாழ்க்கையில் இடமில்லை என்று நினைக்கும் சுந்தர்சி ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்தால், அந்த தொழிலை வெங்கட்டே அமைத்துக் கொடுக்கிறார்.
துறைமுகத்திலிருந்து சரக்குகளை வெளியே கொண்டு வருகிற ஏஜென்சியில் வேலை. ஆனால் சரக்கோடு சரக்காக பவுடரையும் கொண்டு வர வைக்கிறார் வெங்கட். தப்பு பண்ணிட்டோமே என்று நினைக்கும் போதே அடுத்தடுத்த தப்புகளை அரங்கேற்றுகிறார் இன்ஸ். அதுவும் நண்பன் சுந்தர்சியின் உதவியுடனேயே! கயிறு போகிற சந்துல புகுந்தாலும், உயிரே போகிற மாதிரி துரத்துகிறது பிரச்சனை. சுந்தர்சி தப்பித்தாரா? வெங்கட்டுக்கு அவர் கொடுத்த தண்டனை என்ன? இதுதான் படம். இடையில் சுந்தர்சிக்கும் அனுயாவுக்குமான காதல், போட்டிக்கு வரும் வடிவேலு என்று வணிக சினிமாவின் வாசனை திரவியங்களோடு கமகமக்கிறது பல காட்சிகள்!

இன்னொரு ஹீரோ என்று சொன்னால் சுந்தர்சி கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதால் சொல்லியே விடுவோம். இப்படத்தில் வடிவேலுவும் ஒரு ஹீரோ! அனுயாவை கரெக்ட் பண்ணுகிறேன் என்று ஆன்ட்டனாவில் கை வைத்து, அப்படியே அவர் வீட்டு நாயையே நாசம் பண்ணுகிற காட்சிகளை நினைத்தால் ஒரு வாரத்திற்கு விடாமல் சிரிக்கலாம். குடத்தை வைத்து தண்ணியடிக்கிற காட்சியில் தனது பேஸ்மென்ட் துணியை பறிகொடுத்துவிட்டு தவிக்கிற காட்சியும் அதே ரகம்தான். கதையோடு ஒட்டி வந்த மனுசன், திடீரென்று டிராக் காமெடிக்கு போனாலும், சிரிப்புக்கு 100 சதவீத கியாரண்டி தருகிறார்.

கொஞ்சம் உடம்பை குறைப்பது சுந்தர்சிக்கும், அப்படியே எதிர்கால தமிழ்சினிமாவுக்கும் நல்லது. தன்னை சுற்றி பின்னப்படுகிற வலையை கண்ணாலேயே அளந்து தப்பிக்கிற காட்சிகள் பொருளெடுக்கிற ஆட்களுக்கே கிளாஸ் எடுக்கிற அளவுக்கு தில்! அனுயாவை காப்பாற்ற இவர் செய்யும் வடிவேலுவின் பெண் கெட்டப் யுக்தி செமத்தியான கைதட்டல்களுக்குரியது!

முதலில் முசுடு, அப்புறம் அசடு என்பதுபோல அனுயாவும் பின்னி எடுத்திருக்கிறார். இந்தா பார்த்துக்கோ என்ற அவரது ‘தாராள’ கொள்கைக்கு தலை வணங்கி சிலையாகிறான் ரசிகன்.

பல வருடங்களுக்கு பின் தனது வில்ல(ங்க) முகத்தை காட்டியிருக்கிறார் ஜி.சீனிவாசன். மீசை நரைத்தாலும் மிடுக்கு நரைக்கவில்லை! போஸ் வெங்கட்டுக்கும் இது ஸ்பெஷலான படம். தொடர்ந்து இது போன்ற கேரக்டர்களில் நடித்தால் வருஷம் முழுக்க பிசியாக இருக்கலாம். (ஹ்ம்ம்ம் அவரை டைரக்டர் ஆசையல்லவா துரத்திக் கொண்டிருக்கிறது?)

செல்லதுரையின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளிலும் மழைக்காட்சிகளும் நெருப்பையும் குளிரையும் கக்கியிருக்கிறது. பிரவின் கே.எல்.ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங் கவனத்தை ஈர்க்கிறது. தமனின் இசையில் சில பாடல்கள் அருமை!

கலவர நகரம்- கலெக்ஷனும் அதிரும்!

-Onelanka விமர்சன குழு –

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: