மன்மதன் அம்பு!

மிச்சமில்லாமல் துடைக்கப்பட்ட கிச்சனிலும் பெருங்காய வாசனை இருக்குமல்லவா? கிரேஸி மோகன் இல்லாத ‘கிச்சன்’ இது. ஆனால் தொட்ட குறையாக தொடர்கிறது வாசனை மட்டும்! அதுவும் கடைசி சில நிமிடங்கள், டிபிக்கல் கிரேஸி படம்!

ஒரு நடிகையின் விடுமுறை நாட்களில் அவரை வேவு பார்க்க நுழையும் மேஜர் கமல், மெல்ல மெல்ல அந்த நடிகையின் மனசுக்குள் ‘மைனராக’ நுழைவதுதான் கதை! வேவு பார்க்க அனுப்பும் மாதவன்தான் நடிகை த்ரிஷாவின் காதலன். கொஞ்சம் காதல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை என்று சகலவிதமான சென்ட்டிமென்ட்டுக்குள்ளும் சிக்கிக் கொண்டு அரைபட்டிருக்கிறது இந்த பழகிப் போன மாவு.

பிரபல நடிகை த்ரிஷாவை அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஒன்றின் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே பெண் பார்க்க வருகிறார்கள் மாதவனின் அப்பாவும் அம்மாவும். அங்கே நடப்பது எல்லாமே ஆர்த்தோடக்ஸ் பேமிலிக்கு அந்நியமாக தெரிய, “பார்த்துக்கோடா…” என்று செல்லமாக மகனை எச்சரித்துவிட்டு செல்கிறார் அம்மா உஷா உதுப். (மேம், நடிப்பு ரொம்ப சிறப்) மனசுக்குள் இருக்கிற சந்தேக சாத்தான் விழித்துக் கொள்கிறது மாதவனுக்கு. த்ரிஷாவின் கேரவேனுக்குள் ஏறிப்போய் உள்ளேயிருக்கும் கனெக்டிங் கதவை திறந்து செக் பண்ணுகிற அளவுக்கு ஆட்டம் போடுகிறது அது. “செக்ஸ் வச்சுக்கணும்னா அத்தனை பேர் சுத்தியிருக்கும்போதா வச்சுப்பாங்க? வெளிநாட்டுக்கு போயிட மாட்டாங்களா” என்கிற த்ரிஷாவின் வசனம் கிசுகிசு எழுத்தாளர்களுக்கு பலம் சேர்க்கலாம். சண்டை வலுக்கிறது இருவருக்கும். மன அமைதிக்காக வெளிநாடு கிளம்புகிறார் த்ரிஷா. அப்புறம் அங்கு நடப்பதுதான் சுவாரஸ்யம்.

நரையோடிய தாடி, அதையும் மீறி இழையோடும் இளமை என்று ரசிக்க வைக்கிறார் கமல். கேன்சரால் அவதிப்படும் நண்பன் ரமேஷ் அரவிந்தின் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற கவலை, தனது மனைவியை விபத்துக்கு பறி கொடுத்துவிட்ட வேதனை, திடீரென்று கிராஸ் பண்ணும் காதல் என்று முப்பரிமாண மோதலில் சிக்கிக் கொள்கிற வேஷம் கமலுக்கு. செட்டியார் பிள்ளைக்கு வட்டிக்கணக்கு சொல்லியா தர வேண்டும்? பின்னி எடுக்கிறார் மனிதர். ஆனால் ஒரு வசனகர்த்தாவாக எள்ளி நகையாடுகிற அவரது பேனா, ஏற்கனவே நொந்து போயிருக்கும் ஈழத் தமிழனை பதம் பார்த்திருக்க வேண்டாம். இன்னொரு காட்சியில் மாதவன் வாயால் சொல்லப்படுகிறது இந்த வசனம். மெல்ல தமிழ் இனி சாகும்… (படம் நெடுகிலும் பேசப்படும் ஆங்கில வசனங்கள் அதை உறுதிபடுத்துகிறது கலைஞானி அவர்களே…) இதுவாவது பரவாயில்லை. கமலே சொல்கிறார், தமிழ் தெரு பொறுக்கும் என்று!

நல்லவேளை, இதே கமலின் எழுத்தை ரசிக்கவும் ஏராளமான சாய்ஸ் இருக்கிறது ம.அ வில். ‘வீரத்தோட மறுபக்கம் மன்னிப்பு. வீரத்தோட உச்சக்கட்டம் அகிம்சை’.

த்ரிஷாவின் அழகில் சில மில்லி கிராம்கள் சேதாரம் ஆகியிருக்கிறது. ஆனால் அதுவே அவரது கோபத்தை இயற்கையாக வெளிப்படுத்துவதால், ‘இருந்துட்டு போகட்டுமே…’ சொந்த குரலில் பேசியிருக்கிறார். தொடருங்கள் தாயி!

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, சமீபத்தில்தான் டைவர்ஸ். கை நிறைய ஜீவனாம்சம் என்று சங்கீதாவின் கேரக்டரும் அவர் பேசும் வசனங்களும் குறைவில்லாத சுவாரஸ்யத்தை மூட்டுகிறது. கமலை பார்த்து ‘செம கட்டை’ என்று வர்ணிப்பதும், இறுதியில் மாதவனை வளைத்துக் கொள்வதுமாக ஒரே சங்கேத ஆலாபனைதான் சங்கீதாவிடம். இவரது குழந்தைகளில் அந்த பொடியன் ஆஷிஸ் செம துறுதுறுப்பு. ‘து£ங்குற குழந்தைக்கு கட்டைவிரல் ஆடும்…’ சங்கீதாவை ஏமாற்ற பொடியன் கட்டைவிரல் ஆட்டுகிற காட்சியில் சொல்லி வைத்தாற் போல தியேட்டரில் அத்தனை பேரும் சிரிக்கிறார்கள்.

தமிழ்சினிமாவில் குடிகாரர்களின் வேடத்தை யார் ஏற்றாலும் அதனுடைய ‘ஃபுல்’ வரைக்கும் போவார்கள். மாதவன் அதையும் தாண்டி போயிருக்கிறார். டாய்லெட்டுக்குள் விழுந்த செல்போனை வைத்துக் கொண்டு அவர் பேசுகிற காட்சிக்கெல்லாம் குடிகாரர்களே சிரித்து போதை தெளிவார்கள்.

“இந்தாங்கோ. பஜ்ஜி ஷாப்டுங்கோ…” என்ற இத்துனு£ண்டு வசனத்தை பேசுவதற்காக நு£று நாள் ஓடிய படத்தின் நாயகி ஓவியா! பெரிய வீட்டு கல்யாணமல்லவா? பல் குத்த தங்க ஊசி. ஹ்ம்…

சாலை விபத்திற்கு பின் கவலையோடு வானத்தை அண்ணாந்து பார்க்கும் த்ரிஷா, அங்கு பறவை கூட்டங்களை பார்ப்பதை ஒரு காட்சியாகவும், பின்னொரு சந்தர்பத்தில் அதே பறவை கூட்டம் கமல் கண்களுக்கு தென்படுவதுமாக, வெறும் காட்சியிலேயே விஷயம் சொல்லியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். இவர் ஸ்டைலுக்கு இது புதுசல்லவா?

மனசு முழுக்க மயக்கத்தை நிரப்பியிருக்கிறது மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு. அந்த கப்பல்… சந்தேகமேயில்லை. அற்புதமான விஷ§வல் ட்ரிட்! மிக நேர்த்தியான எடிட்டிங் (என்று சொல்லதான் ஆசை) ஆனால் படம் மூன்று மணித்துளிகளை தாண்டுகிறதே ஐயா…? நீலவானம் பாடலிலும், சாம பேத தான தண்டத்திலும், தேவிஸ்ரீபிரசாத் ஈர்க்கிறார்.

மொத்தமாக பார்க்கும் போது மன்மதன் அம்பு சொதப்பல்.

நல்ல நகைச்சுவை படமாக வரவேண்டியது சரியான திரைக்கதை இன்றி குறி தவறியுள்ளது.

இறுதியாக ஈழ தமிழர்களை தொடர்ந்து தனது படங்களில் கொச்சிப்படுத்தி வரும் கமல் கண்டனத்துக்குரியவர்.அதிலும் ஒரு படி மேலே போய் ஒரு நடிகையின் செருப்புக்கு ஒப்பிடுவது மட்டுமின்றி,செருப்படியும் கொடுக்கிறார்.

இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில் மன்மதன் அம்பு வசூலுக்கு செருப்படி விழும் என்பதில் எந்த ஐயமுமில்லை .

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: