சட்டப்படி குற்றம்!! மொக்கை படம்…..(விமர்சனம்)

Kullanari Koottam

அரத பழசான தனது லாயர் கோட்டுக்கு மீண்டும் ஒரு முறை சோப்பு போட்டிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்படியே பிஸ்டலையும் து£க்கிக் கொண்டு கிளம்பியிருக்கிறார். அதைக் கொண்டு கான்டா மிருகங்களுக்கு குறி வைத்திருக்கிறார் என்று நினைத்தால், கரப்பான் பூச்சிகளை சுட்டுத் தள்ளியிருக்கிறார்!

து£க்கு தண்டனை கைதியான விக்ராந்த்தை ஜெயில் சுவற்றை மோதி உடைத்துக் ஜீப்பில் காப்பாற்றிக் கொண்டு போகிறார் காட்டில் புரட்சிப்படை நடத்தி வரும் சத்யராஜ். (ஜீப்பின் முன் பக்கம் நெளிய வேண்டாம். அட்லீஸ்ட் ஹெட் லைட்டுகளுக்காவது சேதம் வருமல்லவா, அது கூட இல்லை. இப்ப புரிஞ்சுருக்குமே இந்த படத்திற்கும் லாஜிக்குக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று) அங்கே இவரைப் போலவே ஏராளமான இளைஞர்கள், இளைஞிகள். எல்லாருமே சமுகத்தின் ஏதாவதொரு பெருச்சாளியால் கடிபட்டவர்கள். சீனுக்கு சீன் பெரிய சுருட்டை பற்ற வைத்துக் கொண்டு அவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறார் சத்யராஜ்.

நாட்டுக்குள்ளிருந்து நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களை காட்டுக்குள் கடத்திக் கொண்டு போகும் புரட்சிப்படை கும்பலும் தலைவர் சத்யராஜும், ஏன் தவறுக்கு துணை போறீங்க என்று அவர்களை கேட்பதுடன், நாங்க கேக்கறது தப்புன்னா எங்களை சுட்டு தள்ளிட்டு நீங்க தப்பிச்சு போகலாம் என்று துப்பாக்கியை அவர்கள் வசமே ஒப்படைக்கிறார்கள். அப்புறம் என்ன? நாட்டுக்கு திரும்பி வரும் ‘நல்லவர்கள்’ நீதி தவறாமல் முடிவெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளிடமிருந்து கருப்பு பணம் கைப்பற்றப்படுகிறது. ரவுடிகள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். இறுதியில் எல்லாம் சுபமஸ்து! கருப்பு பணம் மக்களுக்கே திரும்பி வருகிறது, அதுவும் அவரவர் வீடு தேடி!

கொடுத்த வேலையை கெடுக்காமல் செய்திருக்கிறார் சத்யராஜ். அதற்காக ‘பத்து பேர் பலியானான், நு£று பேர் புலியானான்’ என்ற கம்பீர வார்த்தைகளை சம்பந்தமில்லாமல் இந்த படத்தில் வைத்து… (என்னவோ போங்க சார்) இவருடன் விக்ராந்த், ஹரிஸ் கல்யாண், வசந்த், தாமிரபரணி பானு, சுரேஷ், லிவிங்ஸ்டன், ராதாரவி போன்ற பெரும் நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறது. விரிவாக பேசுவதற்கு அவசியமில்லை. சீமானின் வசனங்களில் மட்டும் அப்படியே அப்பட்டமான ஸ்பெக்ட்ரம் வாசனை. அதுவும் அந்த முன்னாள் மினிஸ்டரை நேரடியாகவே தாக்கி துவம்சமாக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி.

காட்டுக்குள்ளிருக்கும் புரட்சி போராளிகள், நாட்டுக்குள் வந்து அதிகாரிகள் நேர்மையாக பணிசெய்ய துணை நிற்கும் காட்சிகள் மட்டும் புதுசு. அதற்காக ஒருமுறை வஞ்சகமில்லாமல் பாராட்டலாம் இயக்குனரை. திட்டுகிற வரைக்கும் திட்டி தீர்த்துவிட்டு பெரியவர் நல்லவர்தான். அவரு பேரை ஏன்யா கெடுக்கிறீங்க என்பது மாதிரி ‘ஜர்க்’ அடித்திருப்பதுதான் பல்டி நம்பர் ஒன்!

விஜய் ஆன்ட்டனி இந்த படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லியிருந்தார் எஸ்.ஏ.சி. சொல்லவே வேண்டாம். புரிகிறது. அவரையும் மீறி ரசிக்க வைத்திருக்கிறது ராத்திரி நேரத்து பூஜையில் ரிமிக்ஸ். அவருக்கு திருக்குறளை பிடிக்கும். ஏன்னா அதிலே அதிகாரம் இருக்கே. வசன உபயம் வி.பிரபாகர். பொறி பறக்குது பாஸ்…

இஷ்டப்படி படம் எடுப்பது மட்டும் என்னவாம் சார்?

Daily News இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: