தமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்! கதறும் பெண் காவலர்கள்

பொலிஸ் நிலையங்களில் மேலதிகாரிகளாலும் சக ஆண் பொலிஸ்காரர்களினாலும் இழைக்கப்படும் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் துணிச்சலுடன் நீதிமன்றம் வரை வந்துவிட்டார் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் நகரப் பகுதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் பொலிஸான வள்ளி…

தமிழக காவல் துறையில் பெண்கள் எவ்வளவு கீழ்மைப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை பெண் காவலர் வள்ளி சொல்லும் அதிர்ச்சியான விடயங்கள் அப்படியே உங்களுக்காக,

முன்னாடி எல்லாம் பொலிஸ் ஆடையை அணிந்ததும் எவ்வளவு பெருமையாக இருந்தது.. ஆனால் இப்போ ஏன்டா இந்த வேலைக்கு வந்தேன் என்று தினமும் மனதுக்குள் அழுகிறேன்…

அதிகாரிகளின் காம லீலைகளுக்கு நான் உடன்படாததால் வேலை நேரத்தைக் கூட்டியே முறித்து எடுத்து விடுவார்கள்..

போன முறை எனக்கு பீரியட்ஸ் ரைம்.. இருந்தும் ஆறு மணி நேரம் தொடர்ந்து என்னை நிற்க வைத்தார்கள்.. எவ்வளவு நரக வேதனை தெரியுமா..

அது போதாதென்று மறுநாள் காலை 2 நிமிடங்கள் லேட்டாக வந்ததற்கு மைதானத்தில் பத்து ரவுண்டு ஓட விட்டு தண்டனை கொடுத்தாங்க..

என்னோடு வேலை செய்யும் அக்கா ஒருவரின் கணவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்த அக்கா மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை ஒட்டிக் கொண்டு இருந்த நேரம் ஒரு நாள் அவங்களுக்கு காய்ச்சல் அதால லீவு கேட்டாங்க..

அப்பொழுது உடம்பு சூடா இருக்குதான்னு நான் செக் பன்னுகிறேன் என்று சொன்ன இன்ஸ்பெக்டர்.. அவங்க மேல கண்ட இடத்தில கையை வைத்து துணை இல்லாமல் இருந்தா உடம்பு சூடாத் தான் இருக்கும்..

நீ மட்டும் சரின்னு சொல்லு சூட்டைத் தணிச்சிரலாம் என்று ரொம்ப கொச்சையாகப் பேசினார். அந்த அக்கா லீவே வேண்டாம் என்று தப்பி ஓடி வந்து விட்டாங்க..

ஒரு ஊருக்கு புதுசாக இன்ஸ்பெக்டர் வருகிறார் என்றால் அவரோடு இரவு 2 பெண் பொலிஸ் ஆவது தங்க வேண்டும். ஒருவர் உடல் தேவைக்கு மற்றையவர் உணவுத் தேவைக்கு அதாவது சமைத்துப் பரிமாற…

வரும் இன்ஸ்பெக்டர் 50 வயதுகளைக் கடந்தாலும் அவர்கள் அழைப்பது 25, 30 வயதுக்கு உட்பட்ட வாளிப்பான பெண் காவலர்களைத் தான்…

இந்த உபசரிப்புக்கள் தமிழ்நாட்டின் பல பொலிஸ் நிலையங்களிலும் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படித்தான் ஒருநாள் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஒழுங்கு படுத்தும் பணிக்காக 4 பெண் பொலிஸ் காவலர்களை அழைத்துக் கொண்டு போனார் ஒரு இன்ஸ்பெக்டர்.

அங்கே திடீரென 2 பெண் பொலிஸ் காவலர்களையும் இன்ஸ்பெக்டரையும் காணவில்லை.. திருவிழா முடிந்ததும் மற்ற காவலர்களுடன் அவரது வீட்டுக்குப் போய் பார்த்த போது ஒரு பெண் காவலர் சமையல் செய்து கொண்டிருந்தார்.

லேசாகத் திறந்திருந்த இன்னொரு அறையில் இன்னொரு பெண் காவலர்களிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டிருந்தார் காம வெறி பிடித்த அந்த இன்ஸ்பெக்டர்.

இப்படியாக தமிழ்நாடு பொலிஸின் காம லீலைகள் உச்சத்தைத் தொடுகின்றன..

தமிழக பெண் காவலர்கள் மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தம் காவல் நிலையத்துக்கு வரும் பெண்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்…

இது மட்டுமல்ல லஞ்சம் ஊழலும் இங்கு தலை விரித்தாடுகிறது..

பொலிஸ் பதிவுக்கு செல்லும் இலங்கைத் தமிழர்களின் பணத்தைக் கறந்து அவர்களை ஓட்டாண்டியாக தெருவில் அலைய விடுகிறது இந்தக் கேவலம் கெட்ட காவல் துறை..

பெண்களை இப்படி கேவலமாக போகப்பொருளாக நினைத்து வல்லுறவு புரியும் காமப் பிசாசுகளை சம்பவம் நடந்த இடத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட வேண்டும்..

அவ்வளவு இறுக்கமாக சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்..

இப்போது இவ்வளவு தகவல்களையும் வெளியில் கொண்டு வந்த வள்ளியின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது ..

இன்னமும் கூட அவரால் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்படவில்லை.. தண்டிக்கப்படவில்லை.. குறைந்தது பொலிஸ் சேவையிலிருந்தாவது இடை நிறுத்தப்படவில்லை..

இப்படி இருக்கிறது தமிழகத்தின் நீதி நிர்வாகம்.. தமிழகத்தின் முதல்வர் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதியே உத்தியோகபூர்வமாக 3 பெண்களை வைத்திருக்கும் போது. பொலிஸின் காம வெறியாட்டத்தை எப்படிச் சமாளிப்பது…

தமிழீழத்திலும் ஒரு காவல் துறை இருந்தது..

உறுதியாகச் சொல்வேன் உலகிலேயே அவர்களுக்கு நிகர் எவருமில்லை..

அவர்களைக் கண்டால் காலில் விழுந்து கும்பிடலாம்..

அப்படி இருக்கும் அவர்களின் மனிதநேயப் பண்புகளும் செயற்பாடுகளும்..

அவர்களிடம் லஞ்சமோ ஊழலோ இப்படியான காம வெறியாட்டமோ கிடையாது.. ஒரு பெண் நள்ளிரவிலும் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் வீதிகளில் வலம் வர முடிந்தது..

தமிழீழ காவல் துறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மிகவும் கௌரவமாக மதிக்கப்பட்டார்கள்..

அப்படியான தமிழீழ காவல் துறையைப் பார்த்தாவது திருந்த வேணும் இந்த தரம் கெட்ட தமிழக காவல் துறை…

தமிழக காவல் துறையின் தரம் கெட்ட காமப் பிசாசு அதிகாரிகள் களை எடுக்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றால் ஒழிய ஒரு நாளும் முடிவுக்கு வரப் போவதில்லை இவர்களின் காம வெறியாட்டம்..

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: