யார் இந்த ரஜினிகாந்த்! ஏன் இந்த கேடு!!:

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள். யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும். அவர் ஒரு சிறந்த நடிக்கிறார், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.

அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள். இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.

எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள் கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

ரஜினியின் உண்மையான முகத்திரையை கிழித்த TR

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 56 Comments »

56 பதில்கள் to “யார் இந்த ரஜினிகாந்த்! ஏன் இந்த கேடு!!:”

 1. மதுரை சரவணன் Says:

  சொல்வது நிஜம் தான்.. இருந்தாலும் அந்த மாயை அவருக்காக பிரார்த்தனை செய்ய சொல்வது தான் உண்மை..

 2. buruhani Says:

  miga nalla karuththu .

  • onelanka Says:

   MR.Bassam நீங்க யார் எதற்கு இந்த ரஜினிக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று எமக்கு தெரியும்…….ரஜினி படங்களை ரசிப்பதோடு நிறுத்துங்கள்……தனிப்பட்ட முறையில் அவருக்கும் கருணாநிதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை……..

   • savareesan Says:

    உனக்கும் முசோலினிக்கும் கூட ஒரு வித்தியாசமும் இல்லை. உங்களை போல உள்ள மற்றவர்களுக்கும் ஒன்று கூற விரும்புகிறேன், அது ஏன் ரஜினிகாந்த் பற்றி மற்றும் எழுதுகிறீர்கள், உங்கள் தளத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தானே. சரி அப்படி என்னதான் அந்த ரஜினிகாந்த் தவறு செய்தார் என்று கூற முடியுமா, அவர் கண்டக்டராய் இருந்த அப்ப அவருக்கு காசு குடுத்தியா, அல்லது உன் மனைவியின் தாலியை அடமானம் வச்சு போடா ரஜினி போய் நீ சினிமாவில் நடி என்று பணம் குடுத்தியா. இல்ல அவர் சினிமாவில் நடிக்கும்போது அவருக்கு நடிப்பு சான்ஸ் கேட்டு பல டைரெக்டர் வீட்டு படி ஏறி அவருக்கு ஒரு சான்ஸ் வங்கி கொடுத்தியா.. அதுவும் இல்லை, பின் ஏன் இந்த பொறாமை உங்களுக்கு, இன்னொன்று ஏன்! உங்க கண்ணுக்கு முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, அவ்வளுவு ஏன் நம்ம கருணாநிதி குடும்பத்தில் உள்ள ஒருவராவது பத்தி எழுத மாட்டிகளே! ஏன் தெரியுமா அவர்கள் எல்லாம் உங்களுக்கு அடியில பெருசா வச்சுருவாங்க,…. அதாங்க “ஆப்பு” இல்லையா ஆனால் இந்த ரஜினிகாந்த் மட்டும் நீங்க, அரசியில் வாதிங்க, உங்களை போல இருக்கும் சில ஆசாமிகள் எல்லாருக்கும் இவர் தன் பிரதானம் இல்லையா.. இவரை பற்றி என்ன சொன்னாலும் இவரும் கேட்க மாட்டார், மற்றவர்களும் கேட்கமாட்டார்கள் அதனால்தானே!

    போங்கள்.. போய் மற்ற வேலை இருந்தால் பாருங்கள்… இல்லையேல் ஒரு உருபிடியான விஷயத்தை பற்றி எழுதுங்கள் பார்போம்.

    இதில் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்.

    அன்புடன்
    க.சவரீசன்.

 3. Sing Says:

  If somebody prays for Rajini whats pissing you? You are just not able bear his popularity and fan following!
  And one more thing, if you want to be popular you just have to praise Rajini or criticize him. Either way a ticket to 5 mins of fame is guaranteed if one is associated with Rajini!

 4. Gobi Says:

  நல்ல கருத்து…. மாறாத மக்கள் இறுக்கும் வரை தேறாது நம் நாடு.

 5. Gayathrinaga Says:

  உங்களுடைய கோபம் நியாயமானதே.. நாட்டில் கவலைப்படக்கூடிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன..அவர் இருந்தால் என்ன? போனால் என்ன ?அவர் உங்கள் குடும்பத்திற்காக என்ன செய்தார் என்ற உங்கள் கோபம் புரிகிறது.. முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் அவர் அரசியலில் ஊழல் செய்து கோடி கோடியாக சம்பாரிக்கவில்லை.. தன்னிடம் இருக்கும் மிகச் சிறந்த நடிப்பால்,சொந்த உழைப்பால் தான் சம்பாரித்து மக்களை தன்பால் ஈர்த்துள்ளார்.. அதை மற்றவர்களுக்கு கொடுப்பதும் கொடுக்காததும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்..ரஜினிக்கு ரசிகனாக இருப்பதால் எங்களுக்கு ஈழத்தமிழர் மீது அக்கறை இல்லை, குப்பன், சுப்பன் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அக்கறை இல்லை என்று சொல்வதற்கு முன் படங்களில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட தலைவருக்கே நாங்கள் இவ்வளவு பிரார்த்திக்கும் போது எங்கள் வீட்டு குப்பன் சுப்பன் மீது அதை விட எங்களுக்கு அதிகமாகவே அக்கறை உள்ளது.. அதையே தான் தலைவர் இன்றளவும் வலியுறுத்துவார்..
  ஆனால் அதையெல்லாம் விடுத்து விட்டு ரஜினி என்னும் மனிதருக்கு இவ்வளவு மக்களும் ஒன்று கூடி பிரார்த்திக்கிறார்கள் என்றால் அதற்கு அவரிடம் இருக்கும் ஒரு வகையான காந்த சக்திதான்.. இது ஒரு இனம்புரியாத கவர்ச்சி…அதுதான் படித்த படிக்காத அனைத்து மக்களையும் அவர் பக்கம் இழுக்கிறது.. இந்த வசிய சக்தியை அவர் 1996லியே பயன்படுத்தியிருந்தால் அவரும் எம்.ஜி.ஆர்.போல அசைக்க முடியாத முதல்வர் ஆகியிருந்திருப்பார்.. ஆனால் சில முடிவுகளில் அவர் தடுமாறியிருந்ததாலும் இன்று வரை மக்களின் சக்தியை தன்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் தனக்குத் தெரிந்த நடிப்பை மக்களுக்கு அளித்து சந்தோசப்படுத்தி வருகிறார்..எத்தனையோ ஊழல் சாக்கடையில் புரண்ட இந்த சில கேடு கேட்ட அரசியல்வாதிகளுக்கு கொடி பிடிப்பவர்களை விட அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல மனிதருக்கு பிரார்த்திப்பது தவறேதும் இல்லையே.. நீங்கள் இவ்வாறு பதிவு எழுதி நேரத்தை செலவு செய்வதை விட எத்தனையோ ஏழைகள் நாட்டில் உள்ளார்களே அவர்களுக்கு எதாவது செய்திருக்கலாமே… யார் இந்த ரஜினிகாந்த்? எதற்கு இந்த விளம்பரம் உங்களுக்கு? அவரவரால் முடிந்ததை தான் செய்ய முடியும்… அதை விடுத்து விட்டு சும்மா குற்றம் சொல்லக்கூடாது….

 6. Gayathrinaga Says:

  TR தான் தமிழகத்திலேயே மிகவும் நல்லவர்… முகத்தையே முகமூடியாய் அணிந்து வாழ்பவர் அவர்… அவர் என்ன ரஜினியின் முகத்திரையை கிழிப்பது.. சொல்பருக்கு கொஞ்சமாவது தகுதி வேண்டாமா மரியாதைக்குரிய பதிவாளர் அவர்களே… இதில் வேறு அவர் வீரத் தமிழனாம்… எப்படி நா கூசாமல் சொல்கிறார்கள் என்று தான் தெரியவில்லை

  • RajiniRaja Says:

   அப்படிப் போடுங்க காயத்ரிநாகா! இனிமே தலைவரப் பத்தி எழுதுன கொலை தான் நடக்கும்.
   யாரு கிட்ட?

   • onelanka Says:

    தலைவன் என்று சொல்லுற அளவுக்கு என்ன தாகுதி இருக்கு அவனுக்கு…….டூப் போட்டு அடிக்கிறவன் எல்லாம் தலைவன் ஆகிடமுடயுமா….

   • savareesan Says:

    நாயே! நாயே! நாதாரி நாயே! உனக்கு ஏன் இந்த பொறாமை. அவரை தலைவர் என்று சொல்லும் அருகதை கூட உனக்கு இல்லை தெரியுமா …….!?

 7. SHIVA Says:

  Gayathrinaga, well said.. “யார் இந்த ரஜினிகாந்த்? எதற்கு இந்த விளம்பரம் உங்களுக்கு?”

 8. SHIVA Says:

  Gayathrinaga, well said. “நீங்கள் இவ்வாறு பதிவு எழுதி நேரத்தை செலவு செய்வதை விட எத்தனையோ ஏழைகள் நாட்டில் உள்ளார்களே அவர்களுக்கு எதாவது செய்திருக்கலாமே… யார் இந்த ரஜினிகாந்த்? எதற்கு இந்த விளம்பரம் உங்களுக்கு?”

 9. RajiniRaja Says:

  ne yellam uruppada matta thalaivaraip pathi thappa sonnaina…….

 10. jonathan Says:

  good one but who the fuck is TR he is also a useless person take that video off

 11. Veera Says:

  what the fuck is your problem!!! u can write whatever you think a##$@#$.. It is not Rajini, people will feel bad for anybody if they like him!!. nobody is going to die if he dies. but they just feel bad… media is focussing on him coz it makes the news to be sold. Who the fuck is TR anyway.. i dont even want to read ur full blog as soon as i saw TR in it. try to think b4 u post something.. why do u corner him.. if you feel bad abt Srilankan tamil why not u go and fight wit the lankan army instead of asking him to do somethin…..

 12. Gayathrinaga Says:

  Fist you have to give the respect to everyone even your enemy also…You have rights to criticize others activities and you can express your thoughts with the public… But you have no rights to rail others if readers also done the same thing….Because You are a penman.. Dont hurt others and dont use impolite words…Keep it in your mind when you are posting something in your blog.. This is my small advise for you.. Dont mistake me..

 13. Rag Says:

  Finally about TR…

  TR don’t have any rights to talk or criticise Superstar because he named his son as Little Superstar to bring him to limelight, TR wants rajni’s fame to be routed to his son, but he will not accept rajni as a Superstar… enna Koduma Sir idhu.. anyway all TRs talk becomes ultimate comedy for people.

  We all Pity on you TR., even your son dislike you because of your actions, TR. your Comments are Useless and the people hosting your Interviews are doing so, just only to make fun of you, this will stop only if you stop talking Rubbish., One Challenge, lets see how long it will take for you to succeed… “Can you compose music for any one of your Son’s film which was produced / directed by an third party”… No way.. nobody even your son won’t accepts it. then why are you wasting your energy in giving the same Dappanguthu tunes.

  I can give you one good suggestion, you can become a mimicry artist if you take, only if you take good training from Dhamu, Chinni Jayanth etc… thats your range…macheeee.

 14. raja Says:

  Rajini discharged.. oodip poyidu naaye…

 15. Prabhu Says:

  I strongly condemn including reference to Mr. Modi. Why dont you talk about Godhra why do you talk only the incidents happening after that. People will provoke some innocent people and when you strike back as self defence then innocent becomes acussed? Why should Indians always be a spineless slave who doesn’t have guts to oppose brutality against them!?

 16. R.vignesh Says:

  yaar intha TR Ivarellam rajiniyapathi pesa thaguthiye kidayathu veetla ulla kuppaya clean panna thuppilaai ivaru yaaru rajiniya thappa pesarathukku.tamil naattai pathi kavalaipadarare ivaru mothalla tamil nadukku enna seinchirukkaru.
  dmk katchila iruntharu antha kutchikkavathu unmaiya uzhaithara illai . mgr sir photova kaalaal mithittha intha pannadayellam tamilnadapathi pesa thaguthi kidayathu . ( film . uravai katha kili ) . dmk katchila irunthu vilagiya piragu mgr sir patthi uyarva pesa aarambhitharu ( film . veerasamy ) . thannudaya suyanalathukkaga thalaivargala payanpaduthararu . padayapa padam release appa veerappa pesi mookka udachikittaru . ivarkalellam rajiniya pathi thappa pesumbothu . atha kettukittu porumaya irukkare . athada vera enna thaguthi venum avarukku naanga rasigana irukka .

  R.vignesh
  .

 17. Sundar Says:

  very good article . written truth , this was in my mind for long time

  Rajini is a unworthy guy to be given this much of publicity

 18. ramlakshman Says:

  Tee yaru nee yaru? Rajini avarkalai thappa pesa unakku enna thimir irukkum. nee eppadipattavannu ellorukkum theriyum. muthalil unnai saripaduthikittu vaa. appuram matravarkali pesalam.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: