அம்மணமாக்கப்பட்டுள்ள தி.மு.க!

ஒரு ஈழத் தமிழனாக கூறுகிறேன் எம் மக்களிற்கு எம்மவர்களை கொன்றொழித்த, கொலை செய்வதை தொழிலாக செய்யும் மஹிந்த ராஜபக்ஸ மீது இல்லாத வெறுப்புணர்வு, வன்மம் கருணாநிதி மீது உண்டு…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சவப்பெட்டி மீது இன்னொரு ஆணி அடித்தாகி விட்டது..

தேர்தல் முடிவுகளால் உள்ளாடைகளுடன் நின்றிருந்த தி.மு.க கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்படுள்ளது.

இந்த தேர்தலில் 3 ஆவது இடத்தைப் பிடித்த தி.மு.க தொடர்ந்து அதே நிரந்தர இடம் தானா என கருணாநிதியே சிந்திக்க வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன..

பழம்பெருமை வாய்ந்த திராவிடக் கட்சி என (தங்களை தாங்களே) கூறிக்கொள்ளும் திமுகவின் எதிர் காலமே சூனியமாக காணப்படுகிறது.

நெருப்பாறுகளைக் கடந்து திமுக முடிசூடும், கனிமொழி கைதால் திமுகவிற்கு பாதிப்பில்லை என வீரமணி போன்ற கைப்பிள்ளைகள் காமடி பண்ணினாலும், இந்த அதிர்ச்சிகளை கடந்து மீண்டு வர குறைந்தது 2 ஆண்டுகள் ஆவது தேவை என்பது எனது அனுமானம்.

சரியாக சொல்வது என்றால் தாங்கள் விதைத்த வினைகளை அறுவடை செய்யும் காலப்பகுதியில் கருணாநிதி அண்ட் கோ இருக்கின்றனர்.. திராவிட முன்னேற்றக்கழகம் என்று இருந்த திமுகவை (திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி) கம்பெனியாக மாற்றியதுக்கான பலாபலன்களை தீவிரமாக அறுவடை செய்து கொண்டு இருக்கிறார் தமிழின காவலர் (???) கருணாநிதி.

மானே மயிலே, உயிரே மயிரே, ஐயகோ, நெஞ்சு பொறுக்கலையே போன்ற பராசக்தி பாணி வசனங்கள் தனது தொண்டனிடத்தில் கூட வொர்க் அவுட் ஆகாததைப் பார்த்து சித்தம் கலங்கி இருப்பார் கருணா.

தேர்தல் முடிவுகளால் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்ட கருணா அண்ட் கோ நீதிமன்றத்தால் மீண்டும் ஒருமுறை ஊழல் வாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

ஒரு குடும்பத்தால் ஒரு ஜனநாயக நாட்டுக்கு 1 .76 இலட்சம் கோடி இழப்பை ஏற்படுத்த முடியும் என்றும் (ஏறத்தாள 5 இலட்சம் கோடி ரூபாய் இலங்கைப் பணம்), இழப்பை ஏற்படுத்தியோர் படை பரிவாரங்கள் புடை சூழ அதிகாரத்துடன் உலா வர முடியும் என்றும் காட்டியது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் ஆட்சிக்காலம்..

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என பாட்டிமார் கதை சொல்ல ஆரம்பித்தாலே அது ஸ்பெக்ட்ரம் ராஜாவா என பேரப்பிள்ளைகள் கேட்கும் அளவுக்கு திமுகவின் மானம் சந்தி சிரித்தது உலகறியும்…

ஸ்பெக்ட்ரம் என்பதை வெறும் பத்தோடு பதினோராவது ஊழலாகப் பார்ப்பதைத் தவிர்த்து இது ஒரு நாட்டின் ஜனநாயகத்தை ஆட்டம் போட வைத்த காரணியாக பார்க்க வேண்டும்.

1. 76 இலட்சம் கோடி என்பது இந்தியா போன்ற ஏழைகளின் தேசத்திற்கு மிக பெரிய பணம்.

இப்பணம் இலங்கை போன்ற சிறிய தேசத்தின் ஒரு வருட உள்நாட்டு வருமானம், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தின் ஒருவருட மொத்தத்தேசிய உற்பத்தி வருமானம்.

இந்தப் பணத்தினை வைத்து சகல வசதிகளும் உடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டலாம்..

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகள் கட்டலாம்..

இலட்சக் கணக்கான மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கலாம்..

எவ்வளவு பெரிய பகல் கொள்ளை இது..

ஆனால் திருடியவர்கள் ஜாலியாக முரசொலியில் கவிதையும் உடன் பிறப்புகளுக்கு கடிதமும் எழுதிக்கொண்டு இருக்கலாம் என்றால் ஒரு சராசரி தேசப்பற்றுள்ள குடிமகனுக்கு ஜனநாயகத்தின் அதன் அஸ்திவாரம் மேலே அவநம்பிக்கை வராதா?

வெறும் ஐந்துஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசாங்க உழியர்களுக்கே சுமார் ஐந்து/ ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்ககூடிய அதிகாரம் படைத்த இந்திய நீதித்துறை இந்த கொடிய கொலைக்கு குறைந்தது ஆயுள் தண்டனை கொடுக்க கூடாதா..?

ஊர் கூடி கிடாய் வெட்டியவனை விட்டு விட்டு இரத்த வறை சாப்பிட்டவனை பிடித்தது போல, கருணாநிதி அண்ட் கோவால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட மாபெரும் ஊழலுக்கு பலிக்கடா ஆக்கப்பட்டார் ராஜா.

நான் இங்கு ராஜாவை குற்றம் அற்றவர் எனக் கூற முற்படவில்லை…

ஆனால் அவ்வளவு பெரிய தொகையை தனி ஒருவரால் அபேஸ் பண்ணி இருக்க முடியாது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்…

ஆனால் கனிமொழி கைது என்னை பொறுத்தவரை காலம் தாழ்த்திய ஓன்று…

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட பின்பும் ஒரு அமைச்சர் இரண்டு ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளார் என்பது எந்த ஜனநாயக தேசத்தில் சாத்தியம்? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட போது கை கொட்டி வாய் பொத்தி கவிதை எழுதிக் கொண்டிருந்த கருணாநிதி, சிபிஐ யின் குற்ற பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்ட போது முதன் முறையாக வெகுண்டு எழுந்தார்…

ஈழ தமிழர்களிற்காக ஒன்று கூடாத திமுக பொதுச்சபையைக் ஒன்று கூட்டினார்…

அங்கே கனிமொழி குற்றம் அற்றவர் என தீர்மானம் நிறைவேற்றினார். (திருடியவர்களே ஒன்று கூடி கூட்டம் போட்டு திருட்டு நடக்கவில்லை என சாதிப்பது உலகில் முதன் முறை என நினைக்கிறேன்).

ஆனால் இதே கருணாநிதி ஈழம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது மன்மோகன் சிங்கிற்கு கடிதம், சோனியாவிற்கு காதல் கடிதம், மனிதச் சங்கிலிப் போராட்டம் என காமடி பண்ணிக் கொண்டிருந்தார்…

காமடியின் உச்சமாக அவர் நிகழ்த்திய காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான உண்ணாவிரதம் வடிவேலுவின் வின்னர் பட காமடிகளை மிஞ்சியது வரலாறு.

ஆனால் இவருடைய காமடிகளால், கபட நாடகங்களால் நாதியற்றுப் போய் செத்து போன ஈழ தமிழர்கள் எத்தனை பேர்?

ஒரு ஈழத் தமிழனாக கூறுகிறேன் எம் மக்களிற்கு எம்மவர்களை கொன்றொழித்த, கொலை செய்வதை தொழிலாக செய்யும் மஹிந்த ராஜபக்ஸ மீது இல்லாத வெறுப்புணர்வு, வன்மம் கருணாநிதி மீது உண்டு…

துரோகியை விட எதிரி எவளவோ மேல்..

மதுரையில் கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சரும் ஆன
அழகிரியும் அவருடைய அடியாட்களும் நடாத்திய அராஜகங்கள் மறக்க கூடியதா?

அண்ணன் ஆனா… (மதுரையில் அழகிரியை “அ” என்று பயம் கலந்த மரியாதையாக அழைப்பார்கள்) அவருடைய அடியாட்கள் ஆன சு……… பு……. வகையறாக்கள் மதுரையில் நடாத்திய அராஜகங்கள் வில்லத்தனங்கள் கில்லி பிரகாஸ்ராஜ் தனமானவை…

அடுத்தடுத்த குத்துகளால் சித்தம் கலங்கி இருக்கும் தமிழின காவலருக்கு அவரின் எதிர் காலம் தொடர்பாக நான் தர விரும்பும் சில டிப்ஸ் :-

1] அரசியலை துறந்து முழு நேர சினிமா பணியாளராகி விடலாம்…

2] திமுகவை தேதிமுகவுடன் இணைத்து விட்டு தனது தலைவன் விஜயகாந் என உடன்பிறப்புக்களுக்கு அறிவித்து விடலாம்…

3] கடிதம் எழுதுவது எப்படி என அறிவாலயத்தில் ரியூசன் கொடுக்கலாம்…

4] கனிமொழி எனக்கு பிறக்கவில்லை என அறிவித்து விடலாம்…

5] தொழில் முறை ஊழல் செய்வது எப்படி என நூல் எழுதலாம்…

6] ஈழ தமிழருக்கு ஈழம் பெற்றுக் கொடுப்பது எப்படி எனும் நசைச்சுவை விவாத மேடைகள் நடத்தலாம்…

7] எவ்வளவு அடிச்சாலும் தாங்குவது எப்படி என (Personality development course) எடுக்கலாம்..

இனி கருணாநிதி அண்ட் கோவை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது..

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 4 Comments »

4 பதில்கள் to “அம்மணமாக்கப்பட்டுள்ள தி.மு.க!”

  1. Gayathrinaga Says:

    ya.. Good one.. They should be punished…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: