ஒரு நடிகரை காப்பியடிப்பது வேறு. கிண்டலடிப்பது வேறு. ஆனால் டி.ராஜேந்தரை யார் காப்பியடித்தாலும் அது கிண்டலடிப்பதாகவே தோன்றும். அப்படி கிண்டலடிப்பவர்களை நேரில் பார்த்தால் ‘யோவ்… என்னைய பத்தி என்ன வேணும்னாலும் சொல்லு. அதுக்கெல்லாம் அஞ்சுறவன் நான் இல்ல. அதுதான் என்னோட தில்லு. முடிஞ்சா எதிர்த்து நில்லு’ என்று தனது பேவரைட் வார்த்தைகளால் சாறு பிழிந்து சக்கையாக்கிவிடுவார்.
எவ்வித எக்ஸ்பிரஷனும் முகத்தில் காட்ட திறமையில்லாத ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை வந்திருக்கிறது திரையுலகத்தில். இதை எப்படி அவர் பொறுத்துக் கொள்ளப் போகிறாரோ, அந்த ஆஞ்சநேயருக்கே வெளிச்சம்!
பிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜித்தன் ரமேஷ். இதில்தான் டி.ராஜேந்தரை இமிடெட் செய்து நடிக்கிறாராம். அவரிடம் அனுமதி வாங்கிட்டுதான் இப்படி நடிக்கிறேன் என்று ரமேஷ் சொன்னாலும், டி.ராஜேந்தரின் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
மொந்தம் பழத்த முழுங்கிட்டு தண்ணி குடிக்காம தவிச்சா எப்படியிருக்குமோ, அப்படிதான் தமிழ் வசனத்தை உச்சரிப்பார் ரமேஷ். இவர் போய் எங்க தலைவரை கிண்டல் பண்ணுறதா? படம் வரட்டும். பார்த்துக்குறோம் என்கிறார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்