தமிழனுக்கு ரஜினி செய்தது என்ன ?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!”

”ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!”
மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.
பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை” என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
”என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா” என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா? காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!
ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் திமுகவே மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால் “தமிழகம் காப்பாற்றப் படவில்லை” என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.
தமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம் என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கமல் – ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.
“உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்…” என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன் திரைப் படத்தை வெளியிட்டார்.
ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள் அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள் திரையில் செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் “அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது” என்றே கருத வேண்டியுள்ளது.
சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் “பாராட்டு விழா” நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது! இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 9 Comments »

விஜய் விலை போன ஒரு இன துரோகி – ரசிகர்களே விழித்துக்கொள்ளுங்கள் !!

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.

25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது,

நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில்,

உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.

மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.

விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு கை எழுத்துபோடுவதால் இவருக்கு என்ன குறைந்துவிடப்போகிறது? ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று சொல்லுவதில் இவருக்கு என்ன ஆட்சேபனை? இவர் உண்மையான தமிழனுக்கு தான் பிறந்தாரா? ஒரு கை எழுத்தை கூட தாங்கள் தனியாக அமைப்பு வைத்திருக்கிறோம் அதில் போடுவோம் என்று கூறி அதையும் அரசியல் ஆக்கும் விஜயும் அவரது அப்பாவும் கருணாநிதியி மிஞ்சி விட்டனர் துரோகத்தில்.

உலகம் முழுக்க திரண்டு ஓரணியாக கையெழுத்து இடும் இந்த நேரத்தில் அதில் கூட தமிழனை பிரித்தாளும் நோக்கத்தோடு முடியாது என்று சொன்ன இவர் இலங்கை அரசிடம் இருந்து எவ்வளவு கோடி வாங்கினார்.இவர் எல்லாம் அரசியலுக்கு வந்து தமிழனுக்கு என்ன செய்து விட போகிறார்? தமிழனுக்காக ஒரு கை எழுத்து கூட போடா முடியாத கருப்பு ஓநாய்!… அண்மையில் தமிழுணர்வு சார்ந்த கூட்டத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டு பின்னர் ஒரு கோடி உடனே செட்டில் செய்தால் தான் வருவேன் என்று இவர் அந்த நிகழ்ச்சியை இறுதியில் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது..

இனத்தை மொழியை மறந்து பணமும் பதவியும் தான் வாழ்க்கை என்று வாழும் இவர் போன்ற ஈனத் தமிழர்களை தலையில் வைத்து கொண்ட்டாடும் ரசிகர்களே உங்களுக்கு மானம் இருக்கிறதா.இன்றோடு தூக்கி எரிய வேண்டாமா இந்த துரோகியை உங்கள் நெஞ்சங்களில் இருந்து. எமக்கு தேவை இன மானமா இல்லை ஒரு சினிமா கூத்தாடியா?

நாளைக்கே செய்தியாளர் சந்திப்பு கூட்டி தி.மு.க சதி என்று சொன்னாலும் சொல்லுவார் சந்திரசேகர் இதை எல்லாம் கேட்க நாம் என்ன ஏமாளிகளா?

முடிவெடு தமிழா இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.


SATHYARAJ

SELVAMANI-ROJA FAMILY

MANIVANNAN


vijay

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 16 Comments »

தெய்வதிருமகள் – விமர்சனம்

நிச்சயமாக பார்க்கவேண்டிய படம் ….இது வெறும் கலைப்படமோ அவார்ட் படமோ அல்ல. முதல் 30 நிமிட மெதுவான திரைக்கதை தவிர மீதி விறுவிறுப்பு உள்ள படம் தான்.

விக்கிரமின் வேறுபட்ட பரிமாணங்களுக்கு தீனியாக உருவாக்கப்பட்ட திரைப்படம் இந்த தெய்வதிருமகள். ஒரு தந்தை மகளின் பாசத்தை இரு குழந்தைகளுக்கிடையான வெள்ளோந்தியான அன்பாக படைத்து திரைக்காவியமாக தந்திருக்கிறார் விஜய். படம் ஆரம்பிக்கையிலேயே ஒரு அமைதி.. அனாவசிய ஆர்ப்பாட்டங்கள் இருக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே ட்ரெயிலர்களில் திரைப்பட வர்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தார்கள் தாரிப்பாளர்கள். கதாநாயகனின் இயல்பான அறிமுகம் கூடவே தவழ்ந்த எழுத்தோட்டம். அனைத்திலும் ஒரு நிசப்தம். ஆனால் டாக்டர் விக்ரம் என்று பெயர் வரும்போது தியேட்டர் மூலைகளில் டாக்டர் விஜய் என்ற நாமமும் ஆர்ப்பரிக்கத்தான் செய்தது.

மனநிலை குன்றியவராக வரும் விக்ரம், நிலா.. நிலா.. என்று தொலைத்துவிட்ட மகளைத்தேடி சென்னையில் நுழைகிறார். இங்கு விக்ரமுக்கு உதவி செய்ய வக்கீலாக இருக்கும் அனுஷ்கா மற்றும் சந்தானம் புதிய பாத்திரங்களாக. இப்படி முற்கதை இடையிடையே சந்தானத்தின் கலாட்டாவுடன் நகர எத்தனிக்க, கதை மகளை தொலைத்த கதை தேடி முன்னோக்கி நகர்கிறது. அழகான ஊட்டி. மலைகளின் இளவரசியை இளவரசியாகவே காட்டியிருக்கிறது இன்றுதான் இந்த தமிழ் சினிமா. இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்கத்வறிய அழகான காட்சிகளோடு ஆரம்பிக்கிறது கிருஷ்ணா என்கிற விக்ரம் நிலாவை பெற்றகதை. ஒரு சாக்லேட் தொலைக்காட்சியில் வேலை புரியும் மனநிலை குன்றிய கிருஷ்ணா ஒரு மகளை பெற்றெடுக்கிறார். அதே நேரம் மனைவியையும் பறிகொடுக்கிறார். இங்கு ஆரம்பிக்கிறது தந்தை மகளுக்கிடையான பாசங்களின் பிணைப்பு. பாதி நேரம் கண்கள் ஈரம், பாதி நேரம் இதழோர புன்னகை, இடையிடையே சோரும் கண்கள் என ரசிகர்களின் உணர்வுகள் திரையரங்கை ஆக்கிரமிக்கிறது.

அழகாக நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் திருப்பங்கள் நுழைகிறது. அப்போதுதான் அமலா பால் இன் அறிமுகம். கிருஷ்ணாவின் மகள் நிலா கற்கும் பள்ளியின் மேலாளராக வருகிறார். சேலையில் வந்து என் மனசையும் சேர்த்து உடுத்திட்டு போயிட்டா அமலாபால். நிலாவும் சுவேதா என்கிற அமலாபாலும் வருகிற காட்சிகள் ரசிக்கத்தக்கவை. நிலாவுடன் அதிகம் பிரியம் கொள்ளும் அமலாபாலுக்கு ஒரு நிலையில் நிலா தன் அக்காவின் மகள் என தெரிய வரவே தொழிலதிபரான தன தந்தையின் உதவியோடு நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரித்து செல்கிறார். இப்போது கதை சூடு பிடிக்க தொடங்குகிறது. இதற்கு பின்னர் தன மகளை விக்ரம் மீட்கிறாரா, இதற்கு எப்படி எப்படியெல்லாம் அனுஷ்கா உதவுகிறார் என்றே கதை நகர்கிறது.. அதை திரையில் பார்த்துக்கொண்டால் உங்கள் உணர்வுகளை நீங்களும் ரசித்துக்கொள்வீர்கள்.

1. தமிழ் சினிமாவின் மூத்தோருக்கு சொந்தமான கதைஎன்றாலும் காட்சிகள் அமைத்திருக்கும் விதம், மன வளர்ச்சி குன்றிய தந்தை எப்படி தன பிள்ளையுடன் பாசமாய் இருக்கமுடியும் என்பதை குறையின்றி காட்டியிருக்கும் விதம், எம்.எஸ்.பாஸ்கரை கதைக்குள் நுழைத்து பயன்படுத்திய தன்மை, கதாநாயகன் கதா நாயகி என்பதற்கு அப்பால் கதைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் எல்லாமே இயக்குனர் விஜயை பாராட்டத்தூண்டுகிறது.

2. கதையின் போக்கின் இடையிடையே சமூக சிந்தனையை தூண்டும் காட்சிகள் அமைக்கப்பட்டதிற்கும் குழந்தையின் பேச்சில் வரும் அழகான வசனங்களுக்கும் இயக்குனருக்கு மீண்டும் ஒரு சபாஸ்.

3.படத்தில் மிகப்பெரிய பலம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. வித்தியாசமான தளங்களை தெரிவு செய்து வித்தியாசமான கோணத்தில் அழகு படுத்தி காட்டியுள்ளார். இவர் கமேராவில் அவ்வப்போது அனுஸ்காவைவிடவும் அவ தோழி அழகாக தெரிகிறார். நிலாவாக வரும் அந்த ஐந்து வயது செல்லத்தை கமேராவில் உணர்வுபட காட்டியிருக்கும் விதம் மனசை விட்டு நிலாவின் பிம்பத்தை அகல மறுக்கிறது.

4. பின்னணி இசை படத்தோடு ஒட்டிப்போகிறது. அவ்வளவு சிறப்பாக சொல்லவேண்டிய இடம் என்று எதுவும் தென்படவில்லை. பாடல்கள் ஓடியோவில் கேட்டதைவிட காட்சிகளோடு பார்க்கும் போது ரசிக்ககூடியதாக உள்ளது. எஸ்.பி.பியின் குரலில் வரும் ‘ஜகததோம்’ பாடல் கணீர் மற்றும் உயிரோட்டம்.

5. எல்லாத்துக்கும் மேலாக பாராட்டவேண்டியது விக்ரம் இப்படத்தை தெரிவு செய்து மனநிலை குன்றியவராகவே ஒவ்வொரு கோணத்திலும் நடித்திருக்கும் விதம்.

6.இந்த நிமிடம் வரை மனத்தில குவியமுள்ள காட்ச்சிப்பேளையாக நிற்பது அந்த ஐந்துவயது நிலா. என்ன ஒரு அழகான நடிப்பு இந்த வயதில். என்ன ஒரு முக பாவம். படத்தில் அதிகம் நடித்திருப்பது என்னை பொறுத்தவரை அந்த அழகு தேவதைதான். படத்திற்கு தெய்வ திருமகன் என்பதை விட தெய்வதிருமகள் என்பதே சாலப்பொருத்தம். அத்தோடு மனதில் நிற்கும் பாத்திரங்கள் வக்கீலாக வரும் நாசர், நாசரின் உதவி வக்கீலாக வந்து அனுஷ்காவின் தோழியை காதலிக்கும் நபர், எம் எஸ் பாஸ்கர்.

எனக்கு அதிகம் பிடித்தது படத்தில் வரும் எல்லோரும் பாசத்துக்கு தலைவணங்குவது. படம் முடிகையில் எந்த பாத்திரமும் மனதில் வெறுப்பை ஏற்படுத்தவில்லை என்பது கூடுதல் சந்தோசம்.

மொத்தத்தில் என்னை இந்த திரைப்படம் இரண்டரை மணி நேரம் ஒரே சீட்டில் உட்கார வைத்தது. உடனடியாக திரைவிமர்சனம் எழுதவும் வைத்தது. குறைகள் என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை..

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 8 Comments »

ரஜினி சிங்கப்பூரில் செய்த உலக சாதனை !!

சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்க லதா அனுமதி – இந்த செய்தியை பற்றி தான் இந்த பதிவு.இப்படி ஒரு செய்தியை போட்ட அவன் எப்படிப்பட்ட முட்டாளா இருப்பான் .அதை பார்த்துவிட்டு தலைவா நீ சீக்கிரம் வா என்று மறுமொழி இட்ட முட்டாள்களை என்ன செய்வது !!

செய்தி – சிவப்பு

விளக்கம் – கருப்பு
அவருக்காக ஆடம்பர விழா, வரவேற்பு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த முறை ரசிகர்களின் விருப்பம் நிறைவேறப்போகிறது

பாராட்டு விழா எடுத்தவர்களுக்கு நடந்த/நடந்துகொண்டிருக்கும் கதி மறந்துவிட்டதா. மகளின் திருமனத்துக்கு உங்களுக்கு தருவதாக கூறிய விருந்து மறந்துவிட்டதா ?

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று, பூரண நலத்துடன் புதுப்பிறவி எடுத்துத் திரும்பும் ரஜினிக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்துக்கு ஒரு நிபந்தனையோடு சம்மதம் தந்துள்ளார் ரஜினியின் மனைவி லதா ரஜினி.

ஆமா ! சிங்கப்பூரில் ஒரு மிகப்பெரிய உலக சாதனையை நிகழ்த்திவிட்டு இந்தியாவுக்கே பெருமை சேர்த்துவிட்டு வருகிறார் இந்த வீரன். கிட்னி மாற்றிவிட்டு வரும் இவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அதற்க்கு லதா நிபந்தனையோடு அனுமதி வேறு! ஒருவேளை தமிழக தேர்தலில் வென்றது ஜெயலலிதாவா அல்லது லதாவா என்று கூட சந்தேகம் வருகிறது இந்த அனுமதியை பார்த்தால்.


இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ சிறு இடையூறும் ஏற்படக்கூடாது என்ற நிபந்தனைதான் அது.

இந்த போக்குவரத்து இடையூறு பூச்சாண்டியை இன்னும் எத்தனை ஆண்டுக்கு காட்டுவார் இந்த ரஜனி? தன் மகள் திருமணத்திற்கும் இதே புரளியை கிளப்பி தானே உங்களை வரவேண்டாம் என்றார் இப்பொழுதும் அதை தான் மறைமுகமாக சொல்லவருகிறார்.இப்படி ஒருவன் உங்களை பொருட்படுத்தாமல் இருக்க அவனை தலையில் தூக்கி வைத்து ஆடும் ரசிகர்களே நீங்கள் தான் இந்த நூற்றாண்டின் முதல் முட்டாள்கள்.
இறுதியல் ரஜினியின் செத்த வீட்டிற்கு கூட இதே போக்குவரத்து பிரச்னை வரும் கவனம்!

திங்கள்கிழமை தன்னைச் சந்தித்த சென்னை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், சைதை மன்ற நிர்வாகி சைதை ஜி ரவி மற்றும் சிதம்பரம் ரமேஷ் ஆகியோர், ரஜினிக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை மற்றும் நேர்த்திக் கடன் குறித்து லதாவிடம் தெரிவித்து, ரஜினிக்கு பிரசாதம் அளித்தனர்.

உங்கள் பிரசாதம் ரஜினி வீட்டு குப்பை தொட்டியிலே அடுத்த வினாடியே விழுந்திருக்கும் போய் பொறுக்குங்கள் .

ரஜினி தொடர்பான ரசிகர்களின் நிகழ்ச்சிக்கு, லதா ரஜினி நேரடியாக அனுமதி தருவது இதுவே முதல்முறை என்பதால், மிகுந்த உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

தென்சூடான் தனி நாடாக பிரிவதற்கு லதா முதல் முறையாக நேரடி அனுமதி தந்துவிட்டார் இவர்கள் மும்முரமாக வேலை செய்கிறார்களாம்.அட போங்கடா லூசுகளே ….

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 7 Comments »