தெய்வதிருமகள் – விமர்சனம்

நிச்சயமாக பார்க்கவேண்டிய படம் ….இது வெறும் கலைப்படமோ அவார்ட் படமோ அல்ல. முதல் 30 நிமிட மெதுவான திரைக்கதை தவிர மீதி விறுவிறுப்பு உள்ள படம் தான்.

விக்கிரமின் வேறுபட்ட பரிமாணங்களுக்கு தீனியாக உருவாக்கப்பட்ட திரைப்படம் இந்த தெய்வதிருமகள். ஒரு தந்தை மகளின் பாசத்தை இரு குழந்தைகளுக்கிடையான வெள்ளோந்தியான அன்பாக படைத்து திரைக்காவியமாக தந்திருக்கிறார் விஜய். படம் ஆரம்பிக்கையிலேயே ஒரு அமைதி.. அனாவசிய ஆர்ப்பாட்டங்கள் இருக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே ட்ரெயிலர்களில் திரைப்பட வர்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தார்கள் தாரிப்பாளர்கள். கதாநாயகனின் இயல்பான அறிமுகம் கூடவே தவழ்ந்த எழுத்தோட்டம். அனைத்திலும் ஒரு நிசப்தம். ஆனால் டாக்டர் விக்ரம் என்று பெயர் வரும்போது தியேட்டர் மூலைகளில் டாக்டர் விஜய் என்ற நாமமும் ஆர்ப்பரிக்கத்தான் செய்தது.

மனநிலை குன்றியவராக வரும் விக்ரம், நிலா.. நிலா.. என்று தொலைத்துவிட்ட மகளைத்தேடி சென்னையில் நுழைகிறார். இங்கு விக்ரமுக்கு உதவி செய்ய வக்கீலாக இருக்கும் அனுஷ்கா மற்றும் சந்தானம் புதிய பாத்திரங்களாக. இப்படி முற்கதை இடையிடையே சந்தானத்தின் கலாட்டாவுடன் நகர எத்தனிக்க, கதை மகளை தொலைத்த கதை தேடி முன்னோக்கி நகர்கிறது. அழகான ஊட்டி. மலைகளின் இளவரசியை இளவரசியாகவே காட்டியிருக்கிறது இன்றுதான் இந்த தமிழ் சினிமா. இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்கத்வறிய அழகான காட்சிகளோடு ஆரம்பிக்கிறது கிருஷ்ணா என்கிற விக்ரம் நிலாவை பெற்றகதை. ஒரு சாக்லேட் தொலைக்காட்சியில் வேலை புரியும் மனநிலை குன்றிய கிருஷ்ணா ஒரு மகளை பெற்றெடுக்கிறார். அதே நேரம் மனைவியையும் பறிகொடுக்கிறார். இங்கு ஆரம்பிக்கிறது தந்தை மகளுக்கிடையான பாசங்களின் பிணைப்பு. பாதி நேரம் கண்கள் ஈரம், பாதி நேரம் இதழோர புன்னகை, இடையிடையே சோரும் கண்கள் என ரசிகர்களின் உணர்வுகள் திரையரங்கை ஆக்கிரமிக்கிறது.

அழகாக நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் திருப்பங்கள் நுழைகிறது. அப்போதுதான் அமலா பால் இன் அறிமுகம். கிருஷ்ணாவின் மகள் நிலா கற்கும் பள்ளியின் மேலாளராக வருகிறார். சேலையில் வந்து என் மனசையும் சேர்த்து உடுத்திட்டு போயிட்டா அமலாபால். நிலாவும் சுவேதா என்கிற அமலாபாலும் வருகிற காட்சிகள் ரசிக்கத்தக்கவை. நிலாவுடன் அதிகம் பிரியம் கொள்ளும் அமலாபாலுக்கு ஒரு நிலையில் நிலா தன் அக்காவின் மகள் என தெரிய வரவே தொழிலதிபரான தன தந்தையின் உதவியோடு நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரித்து செல்கிறார். இப்போது கதை சூடு பிடிக்க தொடங்குகிறது. இதற்கு பின்னர் தன மகளை விக்ரம் மீட்கிறாரா, இதற்கு எப்படி எப்படியெல்லாம் அனுஷ்கா உதவுகிறார் என்றே கதை நகர்கிறது.. அதை திரையில் பார்த்துக்கொண்டால் உங்கள் உணர்வுகளை நீங்களும் ரசித்துக்கொள்வீர்கள்.

1. தமிழ் சினிமாவின் மூத்தோருக்கு சொந்தமான கதைஎன்றாலும் காட்சிகள் அமைத்திருக்கும் விதம், மன வளர்ச்சி குன்றிய தந்தை எப்படி தன பிள்ளையுடன் பாசமாய் இருக்கமுடியும் என்பதை குறையின்றி காட்டியிருக்கும் விதம், எம்.எஸ்.பாஸ்கரை கதைக்குள் நுழைத்து பயன்படுத்திய தன்மை, கதாநாயகன் கதா நாயகி என்பதற்கு அப்பால் கதைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் எல்லாமே இயக்குனர் விஜயை பாராட்டத்தூண்டுகிறது.

2. கதையின் போக்கின் இடையிடையே சமூக சிந்தனையை தூண்டும் காட்சிகள் அமைக்கப்பட்டதிற்கும் குழந்தையின் பேச்சில் வரும் அழகான வசனங்களுக்கும் இயக்குனருக்கு மீண்டும் ஒரு சபாஸ்.

3.படத்தில் மிகப்பெரிய பலம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. வித்தியாசமான தளங்களை தெரிவு செய்து வித்தியாசமான கோணத்தில் அழகு படுத்தி காட்டியுள்ளார். இவர் கமேராவில் அவ்வப்போது அனுஸ்காவைவிடவும் அவ தோழி அழகாக தெரிகிறார். நிலாவாக வரும் அந்த ஐந்து வயது செல்லத்தை கமேராவில் உணர்வுபட காட்டியிருக்கும் விதம் மனசை விட்டு நிலாவின் பிம்பத்தை அகல மறுக்கிறது.

4. பின்னணி இசை படத்தோடு ஒட்டிப்போகிறது. அவ்வளவு சிறப்பாக சொல்லவேண்டிய இடம் என்று எதுவும் தென்படவில்லை. பாடல்கள் ஓடியோவில் கேட்டதைவிட காட்சிகளோடு பார்க்கும் போது ரசிக்ககூடியதாக உள்ளது. எஸ்.பி.பியின் குரலில் வரும் ‘ஜகததோம்’ பாடல் கணீர் மற்றும் உயிரோட்டம்.

5. எல்லாத்துக்கும் மேலாக பாராட்டவேண்டியது விக்ரம் இப்படத்தை தெரிவு செய்து மனநிலை குன்றியவராகவே ஒவ்வொரு கோணத்திலும் நடித்திருக்கும் விதம்.

6.இந்த நிமிடம் வரை மனத்தில குவியமுள்ள காட்ச்சிப்பேளையாக நிற்பது அந்த ஐந்துவயது நிலா. என்ன ஒரு அழகான நடிப்பு இந்த வயதில். என்ன ஒரு முக பாவம். படத்தில் அதிகம் நடித்திருப்பது என்னை பொறுத்தவரை அந்த அழகு தேவதைதான். படத்திற்கு தெய்வ திருமகன் என்பதை விட தெய்வதிருமகள் என்பதே சாலப்பொருத்தம். அத்தோடு மனதில் நிற்கும் பாத்திரங்கள் வக்கீலாக வரும் நாசர், நாசரின் உதவி வக்கீலாக வந்து அனுஷ்காவின் தோழியை காதலிக்கும் நபர், எம் எஸ் பாஸ்கர்.

எனக்கு அதிகம் பிடித்தது படத்தில் வரும் எல்லோரும் பாசத்துக்கு தலைவணங்குவது. படம் முடிகையில் எந்த பாத்திரமும் மனதில் வெறுப்பை ஏற்படுத்தவில்லை என்பது கூடுதல் சந்தோசம்.

மொத்தத்தில் என்னை இந்த திரைப்படம் இரண்டரை மணி நேரம் ஒரே சீட்டில் உட்கார வைத்தது. உடனடியாக திரைவிமர்சனம் எழுதவும் வைத்தது. குறைகள் என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை..

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 8 Comments »

8 பதில்கள் to “தெய்வதிருமகள் – விமர்சனம்”

 1. PKV Says:

  நல்ல படத்தை விரும்பும் அனைவரும் பார்த்தே தீரவேண்டிய அருமையான படம்.
  ஆஸ்கார் விருதுக்கு தாராளமாக விக்ரம் நடிப்பையும் சாராவின்
  நடிப்பையும் பரிந்துரை செய்யலாம்.
  படத்தை பாருங்கள் கண்களில் கண்ணீரும் நெஞ்சில் ஈரமும்
  நிச்சயம்.

 2. கய் ரிச்சி Says:

  சாக்லேட் தொலைக்காட்சியை தொழிற்சாலை என திருத்திக்கொள்ளவும் ..

 3. Rajan Says:

  நன்றி. அருமையான விமர்சனம். இதுவே என்னை படம் பார்க்க தூண்டுகிறது. அந்த அழகு தேவதை படமும் இட்டிருந்திருக்கலாம்

 4. viki Says:

  http://www.imdb.com/title/tt0277027/
  **************************************************
  இந்த படத்தின் உல்டாதான் தெய்வ திருமகள்!!இன்க்லீசு ஒரிஜினல் நல்லா இருக்கும்!!

 5. sankar Says:

  super…………….padam………………….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: