தமிழன் என்ஜாய் பண்ண கூடாதா?

இதுதான் எனது கேள்வி! இப்படி நான் கேட்டதும், ஏதோ, “ மகிழ்ச்சியாக இருக்க 30 வழிகள்” “ சந்தோசமாக பொழுதைக் கழிப்பது எப்படி?” போன்ற புத்தகங்களில் இருந்து, எதையோ சுட்டுக்கொண்டுவந்து இங்கு ஒப்புவிக்கப் போவதாக நீங்கள் நினைத்தால், அது தவறு!

எனது கருத்து என்னவென்றால், தமிழர்களாகிய நாங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாகும்! இது எப்படி என்று விளக்குகிறேன்! மகிழ்ச்சியாக இருப்பது ஒருவகை குற்றம் என்று எம்மையறியாமலேயே எமக்குள் ஒரு கருத்து விதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணருகிறீர்களா?

நாம் சத்தமிட்டு, வயிறு வலிக்க சிரிக்கும் போது, எமது பெற்றோர்கள் சொல்வார்கள் “ அதிகமாக சிரிக்காதே! பின்னர் அழ நேரிடும்” என்று! இப்படி சிறிய வயதில் சொல்லிச் சொல்லியே, நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது கொஞ்சம் பயமும் வந்துவிடுகிறது!

தமிழனின் மகிழ்ச்சி தொலைந்து போனதுக்கு, தமிழனை ஆழ்பவனும் ஒரு காரணம்! இது பற்றி பின்னர் சொல்கிறேன்! அதுமட்டுமல்ல, தமிழன் ஆயிரத்தி எட்டு பிரச்சனைகளை வலிந்து, அழைத்து தனது தலையில் தூக்கிப் போடுவதால்தான் அவனது மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது!

வெள்ளைக்காரனைப் பாருங்கள்! வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்துவிடும் அவனது சொர்க்கலோக வாழ்க்கை ஞாயிறு முன்னிரவு வரை தொடரும்! பின்னர் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை கடும் உழைப்பு! மறுபடியும் வெள்ளிமாலை கூத்து, கும்மாளம், ஜாலி, என்ஜாய்….. அனைத்துமே!

இப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க தமிழனுக்கு உரிமை இல்லையா? அல்லது அப்படி மகிழ்ச்சியாக இருப்பது குற்றமா? வெள்ளைக்காரன் தன்னைச் சுற்றி எந்தவிதமான வட்டங்களும் போடுவதில்லை! ஆனால் ஒவ்வொரு தமிழனையும் சுற்றி எத்தனை வட்டங்கள்!

இப்படியெல்லாம் வட்டங்கள் போட்டு, கட்டுப்பாட்டோடு வாழ்ந்து நாம் என்ன சாதித்து வைத்திருக்கிறோம்? டெலிஃபோனைக் கண்டுபிடித்தோமா? அணுகுண்டைக் கண்டுபிடித்தோமா? எமக்கான சுய கண்டுபிடிப்பு என்ன? இந்த உலகிற்கு நாம், கண்டறிந்து வழங்கியிருப்பது என்ன?

சரி, உலகிற்கு எதனையும் நாம் வழங்க வேண்டாம்! நாமாவது நமது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் இல்லையா? ஒவ்வொரு தமிழனும், தனக்குத் தனக்கென்று வாழாமல், எப்பவுமே அடுத்தவர்களுக்கும் சேர்த்து வாழ்வதால், அடுத்தவர்களுக்கும் சேர்த்து பாரம் சுமப்பதால்தான், யாருமே நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்!

இதற்கு, எமது குழந்தை வளர்ப்பு முறையில் இருந்து கோளாறு தொடங்கிவிடுவதாக, நான் நினைக்கிறேன்! குழந்தைகள் சொந்தக் காலில் நிற்கும்படியாக, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உழைப்பின் அவசியத்தையும் ஊட்டி வளர்க்கிறோமா? இல்லையே!

பாசம் என்ற பேரில் நாம் குழந்தைகளுக்குப் போடும் கட்டுப்பாடுகள்தான் எத்தனை? நான் பலரைப் பார்த்திருக்கிறேன்! அவர்கள் வாழ்வதே இல்லை! கேட்டால் தியாகி மாதிரி கதைப்பர்கள்!

எனது நண்பன் ஒருவனுக்கு 28 வயது! கல்யாணமாகி 3 குழந்தைகள்! அவனது உழைப்பெல்லாம் அவனது குழந்தைகளுக்கே போய்விடுகிறது! வாழ்க்கையில் ஒருநாள் கூட, விமானத்தில் ஏறியதில்லையாம்!, டிஸ்கோ, கிளப்புகளுக்குப் போனதில்லையாம், வெளிநாடுகள் சுற்றிப் பார்த்ததில்லையாம்! தனது மனைவியுடன் வெறும் 2 முறை மட்டுமே, பீச்சுக்குப் போனானம்! சினிமாவுக்கு அதுவும் வெறும் 9 முறை மட்டும் தானாம்!

கல்யாணமாகி எண்ணி சரியாக 10 ம் மாதம் குழந்தை பெறும், மடமையை தமிழன் ஒழிக்க வேண்டும்! ஒரு 5 வருஷம் தள்ளி குழந்தை பெத்தால் என்ன குடியா முழுகிவிடும்? இங்குதான், தமிழனுக்குப் பிரச்சனையே! கல்யாணமாகி 5 வருஷங்கள் குழந்தை பெறாவிட்டால், ஏனைய தமிழனுக்குப் பொறுக்காது! அந்தப் பெண்ணை மலடி என்று திட்டுவார்கள்!

இந்தக் கொடுமை தாங்காமல்தான் பலபேர் பிள்ளை பெத்து தங்களை நிரூபிக்கிறார்கள்! முதலில் இந்தக் கன்றாவியான சமூகத்துக்குப் பயப்படுவதை தமிழன் நிறுத்த வேண்டும்! கல்யாணமாகி ஒரு 5 வருஷம், எல்ல இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து, ஆசைதீர மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அதன் பின்னர் குழந்தை பெறலாம்! தமிழன் துணிய வேண்டும்!

நான் முன்னர் சொன்ன, நண்பன் தோற்றத்தில் 35 வயதுக்காரன் போல இருக்கிறான்! பேச்சில் தன்னம்பிக்கையோ, இளமையோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! இப்படியெல்லாம் வாழ்வைத் தொலைக்கச்சொல்லி அவனுக்கு யார் சொல்லிக்கொடுத்தது?

மனித வாழ்க்கை ஒருமுறைதான்! இம்மை, மறுமை, மேலோகம், கீழோகம், சொர்க்கம் , நரகம் இதெல்லாம் சுத்த பித்தலாட்டம்! முக்கியமாக சொர்க்கம் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்!

நாம் செத்ததுக்குப் பின்னாடி, சொர்க்கத்துக்குப் போகலாம்! அங்கு மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் உள்ளன என்று தமிழனுக்கு மிகவும் மோசமான நஞ்சு குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படுகிறது!

சொர்க்கமாவது, மண்ணாவது! நாம் வாழும் இந்த பூமிதான் சொர்க்கம்! அதில் இப்போது நாம் வாழும் வாழ்க்கைதான் நிஜமானது! செத்த பின்னாடி, எமது உடலை புழுக்கள்தான் தின்னும்! – இந்த உண்மையை தமிழன் நெஞ்சில் பதிக்க வேண்டும்!

நாம் வாழும் ஊரை, நகரத்தை, வீட்டை சொர்க்கமாக வைத்திருந்தாலே போதும்! வாழ்வே சொர்க்கமாகிவிடும்! ஒவ்வொரு தமிழனும், இந்த சொந்தம் பந்தம், பாசம், நேசம், செண்டிமெண்ட் எல்லாத்தையும் தூக்கி வீசிவிட்டு, தனித்தனியாக வாழ பழக வேண்டும்! அப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்!


( இதைப்பற்றி இன்னும் நிறையவே பேச வேண்டியிருக்கிறது! கண்டிப்பாக எழுதுகிறேன்! வருஷத்தில் 365 நாட்களும், நீங்கள் சந்தோசமாக இருக்க முடியும்! நம்புங்கள்!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

சோனாவின் சதி அம்பலம்..- பின்னணி தகவல்கள்

கடந்த சில வாரங்களாகவே கலகலத்துக் கிடக்கிறது கோடம்பாக்கம். தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை, பெப்ஸி அமைப்பில் பிரச்சனை, போதாதற்கு மங்காத்தா கொண்டாட்டத்தில் மது விருந்து நடந்ததாகவும், இதில் நடிகை சோனாவை மானபங்கம் செய்ய முயன்றதாகவும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு.

கூட்டலும், கழித்தலுமாக இந்த பாலியல் விவகாரத்தை மட்டும் கர்ம சிரத்தையாக அலசிக் கொண்டிருக்கிறார்கள் மக்களும். என்னதான் நடந்தது? விசாரித்தால் தலை சுற்றிப் போகிறது நமக்கு.

மங்காத்தா படத்தின் வெற்றியை முழுமையாக கொண்டாடி தீர்த்தார்கள் அப்படத்தில் Premji amaran - Sona - Venkat Prabhuபங்குபெற்ற நடிகர்களான அரவிந்த், பிரேம்ஜி, அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் ஆகியோர். இவர்களுடன் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் சேர்ந்து கொண்டார். மங்காத்தா-வில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத எஸ்.பி.பி.சரணும், நடிகை சோனாவும் வெங்கட், பிரேம்ஜியின் நட்பு வட்டத்திற்குள் இருக்க, அவர்களும் வந்திருந்தார்கள்.

இந்த விருந்து மங்காத்தாவில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்திருந்த வைபவ் வீட்டில் நடந்தது. இந்த நண்பர்களுடன் சோனா சேர்வது புதிதல்ல. இதற்கு முன்பு பலமுறை விருந்து கேளிக்கைகள் என்று இவர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டிருக்கிறார் சோனா. ஆனால் கடந்த ஒரு வருடமாகவே மது அருந்துவதை முற்றிலும் நிறுத்தியிருந்தாராம் அவர். இந்த பார்ட்டிக்கு அவர் வந்ததே வெங்கட்பிரபுவுடன் பேச வேண்டும் என்பதால்தான்.

அதற்கு காரணமும் இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் வாங்கியிருந்தாராம் சோனாவிடம். (தற்போது இன்னொரு வீட்டை மைலாப்பூரில் சாய்பாபா கோவிலுக்கு பின்புறம் கட்டி வருகிறார் அவர்) தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கித் தர வேண்டும் என்பதற்காக சோனா கொடுத்த பணமாம் அது. ஆனால் இந்த பணத்தை வாங்கிய பிறகுதான் அவருக்கு ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்த கோவா படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது.

கோவாவை முடித்துவிட்டு உங்களுக்கு படம் இயக்கி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பினார் வெங்கட். நினைத்த மாதிரியே படமும் முடிந்தது. படம் வெளியாகிற நேரத்தில், வெங்கட்டின் அட்வைஸ்படி கோவா படத்தின் ஒரு ஏரியாவையும் வாங்கி விநியோகம் செய்தார் சோனா. அதில் பலத்த அடி. சரி போகட்டும்… இது நண்பனுக்காக என்று அதையும் பொறுத்துக் கொண்ட சோனா அடுத்த படம் நமக்குதான் என்று காத்திருந்தார்.

ஆனால் மீண்டும் சோதனை. அஜீத்தே வெங்கட்பிரபு படத்தில் நடிக்க விரும்ப, ஒரே Actress Sonaநாளில் உச்ச இயக்குனரானார் வெங்கட்பிரபு. அப்போதும் நண்பனுக்காக தனது படத்தை தள்ளிப் போட்டார் சோனா. நினைத்த மாதிரியே படம் வெளிவந்தது. பெரிய ஹிட். ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் கிடைத்தது மங்காத்தாவுக்கு. கலெக்ஷனும் இதுவரை அஜீத் படம் அறியாதது.

இதையடுத்து மீண்டும் வெங்கட்பிரபுவுடன் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்று விரும்பினாராம் அஜீத். பில்லா-2 க்கு பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டு மீண்டும் வெங்கட்பிரபுவுடன் இணைவது என்று முடிவெடுத்திருந்தார் அஜீத். ஏற்கனவே வெங்கட்பிரபுவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கும் சோனா, இந்த படத்தை நாமே தயாரிக்கலாமே என்று நினைத்தார். அங்குதான் சோதனை ஆரம்பித்தது.

வெங்கட்பிரபுவும் சரணும் நெடுநாளைய நண்பர்கள். தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்து கடும் கடன் நெருக்கடியில் இருக்கும் சரண், வெங்கட்பிரபுவின் தற்போதைய வெற்றியை பயன்படுத்தி அதிலிருந்து மீண்டு விடலாம் என்று ஒரு கணக்கு போட, ஆரம்பித்தது மங்காத்தா ஆட்டம்.

மேற்படி விருந்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. நிதானமாக பேசினாலே நாக்கு திருகும் சில நேரத்தில். இதில் மது வேறு. என்னாகும்? சோனாவின் மனசே கிழிந்து போகிற மாதிரி பேசினார்களாம் அங்கே. ஒரு கவர்ச்சி நடிகைக்கு நான் படம் இயக்கி தருவதா? அவமானம். வேணும்னா வேறு ஒரு பினாமி பெயரில் படம் தயாரிங்க. நான் இயக்கி தருகிறேன் என்று வெங்கட்பிரபு கூறியதாக தெரிகிறது. சரணிடம் அந்த கால்ஷீட்டை மாற்றிவிடுங்க. அதற்கான பணத்தை வட்டியோடு வசூல் பண்ணிக்கலாம் என்று அவரே ஒரு திட்டமும் வகுத்து கொடுத்தாக சொல்கிறார்கள்.

வெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வட்டாரத்தை எங்கெங்கோ சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறாராம் சோனா. இவரது பணத்தில்தான் அவர்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் என்னை கவர்ச்சி நடிகை என்று நினைக்காதவர்கள் இப்போது மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? இதுதான் சோனாவின் மன உளைச்சல் என்கிறது சோனா வட்டாரம்.

அந்த பார்ட்டியில் என்ன நடந்தது? ஏன் சிக்கினார் எஸ்.பி.பி.சரண்? என்பதை S.P.Balasubramaniam - Sonaபற்றியெல்லாம் ஆராய்ச்சிக்கு போகாமல் தற்போது நடப்பது என்ன என்பதை பற்றி மட்டும் விசாரித்தால், அதுவும் பெரிய கேம் ஷோவாக இருக்கிறது.

முதல் நாள் பார்ட்டி முடிந்ததும் எப்படியும் தன்னை சமாதானப்படுத்த வெங்கட், பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வருவார்கள் என்பது தெரிந்து தனது வீட்டுக்கு போகாமல் நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டுக்கு போய் விட்டார் சோனா. செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம்.

இவரை சமாதானப்படுத்த முயன்றவர்கள் அது முடியாமல் போக என்ன செய்வதென்று கை பிசைந்து நிற்கிற நேரத்தில்தான் பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் சரண் மீது புகார் கொடுத்திருந்தார் சோனா. அன்று மாலையே தினசரி நிருபர்களை அழைத்து சுட சுட பேட்டியும் கொடுத்துவிட்டார். சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டவுடன் ஐதராபாத்திலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு ஓடிவந்தார் பாடகர் எஸ்.பி.பி.

காவல் நிலையத்தில், நீங்க சரண் மீது பாலியல் புகார் கொடுக்கிறீங்க. ஆனால் அதுக்கு ஆதாரம் வேணுமே. ஏதாவது புகைப்பட பதிவு இருக்கா, வாய்ஸ் டேப் இருக்கா என்றெல்லாம் கேட்டார்களாம் சோனாவிடம். இது எதுவுமே இல்லாமல் விழித்திருந்த அவரிடம் வசமாக சிக்கினார்கள் சரண் குடும்பத்தினர்.

சோனாவை சந்திச்சு நானே பேசுறேன் என்றாராம் எஸ்.பி.பி. இதை தொடர்ந்து ஓரிடத்திற்கு வரச்சொன்னார் சோனா. ஆனால் முன்பே அங்கு வாய்ஸ் ரெக்கார்டரை மறைத்து வைத்திருந்தாராம். இதையெல்லாம் அறிந்து கொள்ளாத எஸ்.பி.பி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் ஆகிய நால்வரும் சோனாவிடம் நடந்த தவறுகளுக்கு பலவிதத்தில் சமாதானம் பேசினார்களாம். என் மகனையே பிரஸ்சுக்கு முன்னாடி வரச்சொல்லி பொதுமன்னிப்பு கேட்க சொல்றேன். வழக்கை வாபஸ் வாங்கும்மா என்றாராம் எஸ்.பி.பி.

இந்த வாய்ஸ்கள் எல்லாவற்றையுமே ஆதாரமாக பதிவு செய்து கொண்டாராம் சோனா. அதுமட்டுமல்ல, இவர் காவல் நிலையத்திற்கு போகிறார் என்பது தெரிந்ததுமே, வைபவ் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாராம் சோனாவுக்கு. அதில், பார்ட்டி என் வீட்டில் நடந்ததா போலீஸ்ல சொல்லிடாதே, என் அம்மா என்னை கொன்னுடுவார் என்று புலம்பியிருந்தாராம். அதையும் இந்த வழக்கின் சாட்சியாக சேர்த்துக் கொள்கிற முடிவிலிருக்கிறாராம் சோனா.

இதற்கிடையில் இந்த விஷயம் எல்லாவற்றையும் ஐதராபாத்திலிருக்கிற அஜீத்தும் கேள்விப்பட்டு செம அப்செட். வெங்கட்பிரபுவை அழைத்தவர் இந்த பார்ட்டி மங்காத்தா பார்ட்டின்னு இனிமே பேசினா நல்லாயிருக்காது என்று எச்சரிக்க, உடனே தனது ட்விட்டரில் ‘அது மங்காத்தா பார்ட்டி அல்ல’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் வெங்கட். அது மட்டுமல்ல, இது நண்பர்களுக்குள் நடந்த விஷயம். சீக்கிரம் சரியாகிவிடும் என்று ட்விட் பண்ணியிருக்கிறார் அவர்.

ஆனால் அவ்வளவு சீக்கிரம் முடிவதாக இல்லை விவாகாரம். லேசான மாரடைப்பு என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கும் சோனா இப்போது மருத்துவமனையில். ‘இதுபற்றி நிறைய பேசிட்டேன்’ என்ற சோனாவிடம், ‘எஸ்.பி.பி உங்களை பார்த்துட்டு போயிருக்காரே?’ என்றோம்.

‘ஆமாம். நான் அவரை ரொம்பவே மதிக்கிறேன். அன்னைக்கு நான் பட்ட காயத்திற்கு எங்கு போய் மருந்து போடுவது? வழக்கை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் நான் இல்லை என்று மட்டும் போடுங்க’ என்று கூறி முடித்துக் கொண்டார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 4 Comments »

வந்தான் வென்றான் – தமிழேன்டா

கோவின் வெற்றிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜீவாவின் படம். பாஸ் (எ) பாஸ்கரனுக்கு பிறகு வாசன் வீஷுவல்ஸின் அடுத்த படைப்பு என்ற் இரண்டு வெற்றியாளர்கள் ஒன்று சேர்ந்ததால் ரசிகர்களிடையேயும், விநியோகஸ்தர்களிடையேயும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.

சிறு வயதில் தன் சொந்த தம்பியை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு மும்பைக்கு ஓடி போகிறார் நந்தா. மும்பையில் பிரபல தாதாவாக உருவாகி நிற்கும் நந்தாவை பார்க்க ஜீவா முயற்சிக்கிறார். தொடர் முயற்சிக்கு பிறகு அவரை சந்திக்கவும் செய்கிறார். என்ன விஷயம் என்று கேட்டால் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் என்று காதல் கதையை சொல்கிறார். கடைசியில் அந்த காதலி என்னை விட்டு பிரிந்துவிட்டாள். அவளை அடைய வேண்டுமானால் ஒரு பிரச்சனை என்கிறார். அவளுடய அப்பாவை ஒரு தாதா கொன்று விட்டான். அவனை போலீஸில் சரணடைய செய்தால் தன்னை மணப்பதாக சொல்லியிருக்கிறாள் எனவே அந்த கொலையை செய்தவன் நீதான் மரியாதையாய் வந்து சரணடைந்துவிடு என்று கேட்கிறார். பிறகு நடந்தது என்ன என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்க..

கேட்பதற்கு அட நல்லாருக்கே அப்படின்னு தோணும். ஆனால் மொத்த படமாய் பார்க்கும் போது ரொம்பவும் சிரமாமாய் இருக்கிறது. அதற்கு காரணம் திரைக்கதை. படம் முழுக்க ஜீவா தான் நந்தாவின் தம்பி என்று அதிர்ச்சியாய் சொல்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே நமக்கு தெரியும் இவர் தான் நந்தாவின் தம்பி என்று. இப்படி இவர்கள் டிவிஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாமே இப்படித்தான் போகிறது. அதன் பிறகு ஜீவா சொல்லும் காதல் கதை ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், ஜீவாவை கல்யாணம் செய்ய அவர் சொல்லும் விஷயம் டெப்த்தேயில்லை. ஏன் டெப்த்தாக இல்லை என்பதை சொன்னால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற சுவாரஸ்யம் கூட இல்லாமல் போய்விடும் என்பதால் உங்கள் ரிஸ்கில் விட்டுவிடுகிறேன்.

ஜீவா வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். பாடுகிறார். ஆடுகிறார் சண்டை போடுகிறார். மற்றபடி ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை. சின்ன வயது நந்தாவின் கேரக்டருக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் இம்பாக்ட் கதை பூராவும் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் பட் வேஸ்ட் ஆப் பில்டப். அவ்வப் போது காரில் வந்து துப்பாக்கியால் சுடுவதும், முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு பார்ப்பதை தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. டாப்ஸி மிகவும் வத்திப் போயிருக்கிறார். ஆடுகளத்தில் மனதை கொள்ளைக் கொண்டவரா இவர். ம்ஹும் கன்னமெல்லாம் ஒட்டி சிரிக்கும் போது கொஞ்சம் லேசாய் நடு முதுகில் ஜில்லிடுகிறது. படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஸேஷன் சந்தானம் தான் ஆனால் அவரும் ஏதோ ஒட்ட வைத்த காமெடியாய் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே.

தமனின் இசையில் அஞ்சனா, அஞ்சனா பாடலும், காஞ்சன மாலா பாடலும் கேட்கும் படியாய் இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்போதும் அஃதே. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பாடகர்கள் குரலை டெக்னோ வாக்கி கீச்சிட வைக்கப் போகிறார்?. பல சமயம் எரிச்சலாக இருக்கிறது. பி.ஜி. முத்தையாவின் கேமரா பளிச். பாடல் காட்சிகளிலும், கேரளா நீர்வீழ்ச்சி பின்னணியில் வரும் அந்த காட்டேஜ் செட்.. அருமை.

எழுதி இயக்கியவர் ரா. கண்ணன். கதையின் கடைசி ட்விஸ்டை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார். ஆனால் அந்த ட்விஸ்ட் நமக்குள் எடுபடவேண்டுமானால் அவர் சொல்லும் கதை அள்ளிக் கொண்டு போகும் காதல் கதையாய் இருக்க வேண்டாமா? இரண்டு சீனுக்கு ஒரு முறை கொட்டாவி விட வைக்கும் திரைக்கதை இம்சை படுத்துகிறது. படத்தில் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர். பல இடங்களில் அட போட வைக்கிறார். சில இடங்களில் விக்ரமன் பட பாணியில் ஜீவா பேசிக் கொண்டேயிருப்பது மிகையாக இருந்தாலும், வசனங்களால் நிறைவாகிறது.

வந்தான் வென்றான் – வந்தான்.. சென்றான்.

தமிழேன்டா !!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

பதிவு திருட்டை தடுக்க புதிய பூட்டு

தமது எழுத்தை பிறர் மறுபிரசுரம் செய்ய விரும்பாதவர்கள், முக்கிய ஆவணங்கள் பகிர நினைப்பவர்கள், காப்புரிமை வேண்டுபவர்கள், பேணிபாதுக்க வேண்டிய பதிவுகளைத் தருபவர்கள், கூகிள்,RSS வழியில பதிவை(அல்லது பதிவின் ஒரு பகுதியை)த் தர விரும்பாதவர்கள்  போன்றோருக்கு இந்தப் பூட்டு பயன்படும்.<br>
இந்தப் பூட்டைப் போட்டு எந்தப் பதிவை இட்டாலும் காப்பி செய்யமுடியாது என்று சமசீர் பாட புத்தகத்தில் கூறவில்லை அதனால் காப்பி செய்வது கஷ்டம் என்று கொள்க

பூட்டின் குணாதிசயங்கள்

கூகிளும் பதிவைத் திருடமுடியாத

ரீடரோ,மின்னஞ்சலோ, RSS ஓடை வழியாக படிக்கவே முடியாது(தளத்தில் மட்டும்தான் படிக்கமுடியும்)

சராசரி வாசகருக்குப் பதிவு பூட்டப்பட்டிருப்பது தெரியாது;

பிரபல பிரவுசர்களில் எல்லாம் காப்பி செய்யமுடியாது

வாசகர்கள் முறைப்படி உங்கள் தளத்திற்கு வந்து படித்தால் தான் பதிவை படிக்க முடியும். இது ஒரு தளத்தை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டதில்லை, ஒரு பதிவையோ, பத்தியையோ மட்டுமே பாதுகாக்கும். அதனால் தளத்தில் உள்ள மற்ற பக்கங்கள் வழக்கம் போலவே இருக்கும். ஒரு பக்கத்திற்கு ஒரு பூட்டு மட்டுமே செயல்படும் [ஒரு உறையில் இரண்டு கத்தியா?]    இவ்வளவு குறை/நிறைகள்  மீறி ஒரு பதிவை அல்லது பதிவின் ஒரு பகுதியை பாதுகாக்க வேண்டினால் இந்த பூட்டு உங்களுக்குத் தான்.

பூட்டுப் பட்டறை

மேலே குறிப்பிட்டுள்ள தளத்திற்குச் சென்று உங்கள் பதிவுப் பத்தியை முதல் பெட்டியில் இட்டு பட்டனை அழுத்தினால் பதிவு பூட்டப்பட்டு அடுத்தப் பெட்டியில் வந்துவிடும். அதனை அப்படியே காப்பி செய்து உங்கள் பிளாக்கில் போட்டு publish செய்யலாம். இந்த முறை எல்லா வலைப் பூக்கள் மற்றும் இணைய தளங்களுக்கும் பொருந்தும்.  வண்ணங்கள், bold எழுத்துடன் வேண்டுமென்றால் அதன் HTML வடிவில் encrypt செய்யவேண்டும்.  பிளாக்கர்கள் என்றால்,உங்கள் பதிவை கம்போசில் வடிவமைத்து edit html பக்கத்தில் உள்ள கோடுகளை எடுத்துப் பூட்டுப் பட்டறையில் போடவும்

ஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்கவும். .

பூட்டு வாங்கலையோ பூட்டு…
மதுரை பூட்டு சார்,
மாடர்ன் பூட்டுசார்,
வாங்கிட்டு வண்டிய ஓட்டு சார்,
பூட்டு வாங்கலையோ பூட்டு….
துட்டு வேண்டாம் சார்
ஓட்டு வேணாம் சார்
கருத்த வந்து கொட்டுசார்  
பூட்டு வாங்கலையோ பூட்டு….

பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி

  1. அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.
  2. ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.
  3. பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.
  4. மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.
  5. பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம்.

மேற்கண்ட வழிகள் அனைத்தும் இந்த பூட்டில் முடியாது. மேற்கொண்டு ஏதாவது வழியில் பதிவு திருடப்பட்டால் பூட்டு செய்தவனை மன்னித்துவிடுங்கள்

இந்த பூட்டுக்கு சாவியில்லை அதனால் நீங்கள் பதிவை பூட்டிவிட்டால்[encrypt] திரும்ப நீங்களே காப்பி செய்யமுடியாது என்பதையும் கருத்தில் கொள்க

என்ன தான் பூட்டு போட்டாலும் திருட்டை தடுக்க முடியாது .

Daily News இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சாய் பாபாவின் முகத்திரையை கிழித்த TR (video)

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »