மைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்!

திருமண வயதை எட்டாத மைனர் பெண்ணான லட்சுமி பிரணதிக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும் நாளை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி. ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி நடிகர் இவர். ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொழிலதிபர் நார்னே சீனிவாசராவ் மகள் லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நடத்த ஏற்கனவே முடிவானது.

ஆனால் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்பவில்லை என எதிர்ப்புகள் கிளம்பின. மேஜராகாத பெண்ணுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்று ஹைதராபாத் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்த சந்திரபாபு நாயுடு, மணப்பெண் தந்தை சீனிவாசராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வற்புறுத்தப்பட்டது.

இதையடுத்து திருமண வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. வருகிற மே மாதம் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்புகிறது. அப்போது திருமணத்தை வைத்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர். அதுவரை திருமணம் நடக்காது என கோர்ட்டிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் முன் கூட்டி திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.

நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். மே இறுதியில் அல்லது ஜூனில் திருமணம் நடத்தத் திட்டமிடுள்ளனராம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

கல்யாணத்திற்கு முன் செக்ஸ் -கிராமங்கள் முன்னிலை!

Photobucketகல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் நகர்ப்புறங்களை விட கிராமத்தினர்தான் முன்னணியில் உள்ளனராம். சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகம் என்ற அமைப்பு இதுதொடர்பாக நடத்திய சர்வேயில் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த சர்வே முடிவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும், நோபல் பரிசு வென்ற அமார்த்ய சென்னும் டெல்லியில் வெளியிட்டனர். ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 58,000 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2006ல் தொடங்கி 2008 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம். ஆய்வின் சில முக்கிய அம்சங்கள்…
கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆண்களில் 17 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். அதேசமயம், நகரங்களில் இது 10 சதவீதமாக உள்ளதாம்.
நகர்ப்புற பெண்களில் 2 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு கொள்கிறார்களாம். அதுவே கிராமப்புறங்களில் 4 சதவீதமாக உள்ளதாம்.
கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நகர்ப்புற ஆண் பெண்களும் சரி, கிராமப்புறத்தினரும் சரி பாதுகாப்பற்ற முறைகளிலேயே அதில் ஈடுபடுகின்றனர். பலருடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் அதிகமாகவே உள்ளதாம்.
19 வயதுக்குட்பட்டோரில் (நகரம்- கிராமம்) 8 சதவீதம் பேர் செய்துதான் பார்ப்போமே என்பதற்காக செக்ஸில் ஈடுபடுகின்றனராம்.
அதேபோல மனைவியை அடிப்பதில் தவறே இல்லை என்ற கருத்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களிடம் நிலவுகிறதாம். கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளனராம்.
தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர மனைவியை அடிப்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்று கூறினராம். ஆந்திராவில் இது மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் மனைவியை அடிப்பது எங்களது உரிமை என்று கூறியுள்ளனராம்.
இந்த ஆய்வில், இளம் பெண்களிடையே, கருத்தரிப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பலருக்கு எய்ட்ஸ், எச்ஐவி தடுப்பு முறைகள் குறித்து தெரியவே இல்லையாம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

பெண்களுடன் உல்லாசம்.. -சிக்கலில் 87வயது ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி

Photobucketஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது போன்ற டிவி வீடியோ படத்தால் அங்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஏபிஎன் ஆந்திரஜோதி என்ற தனியார் தொலைக்காட்சி சானல் இந்த செய்தியை வீடியோவுடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இந்த வீடியோ செய்திக்கு உடனடியாக தடை விதித்து விட்டது. ஆந்திர மாநில ஆளுநராக இருப்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி எனப்படும் நாராயண் தத் திவாரி. இவர் உ.பி. முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராகவும் இருந்தவர். இவர் பெண் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்ற இளைஞர் திவாரி மீது வழக்கு தொடர்ந்தார். அதில், எனது தந்தை என்.டி.திவாரி. அவருக்கும், எனது தாய்க்கும் இடையில் ஏற்பட்ட உறவில்தான் நான் பிறந்தேன். எனவே என்னை திவாரியின் மகனாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார். இதுதொடர்பாக விளக்கம் அளித்த திவாரி, உஜ்வாலா சர்மா தவறானவர். அவருடைய தூண்டுதலின்பேரில்தான் ரோஹித் சர்மா என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியிருந்தார். இருப்பினும் இந்த வழக்கு கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தப்பித்தார் திவாரி. இந்த நிலையில், ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திவாரி. ஏற்கனவே தெலுங்கானா காரணமாக கொதிப்பில் இருக்கும் ஆந்திராவில் திவாரி பிரச்சினை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா பிரச்சினையால் முடங்கிப் போய்க் கிடந்த தெலுங்கு தேசம் கட்சி, திவாரிப் பிரச்சினையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளது. நேற்று காலை இந்த வீடியோ செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராஜ்பவன் நோக்கி பெண்கள் அமைப்பினர், தெலுங்கு தேசம் கட்சியினர் படையெடுத்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பெண்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். திவாரி குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த ராஜ்பவன் உடனடியாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அதில் ஆந்திர ஜோதி டிவியில் காட்டப்படுவது திரிக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான காட்சிகள். ஆளுநரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து படு வேகமாக செயல்பட்ட ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த செய்தியை ஒளிபரப்பவும், வீடியோவைக் காட்டவும் ஆந்திர ஜோதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆந்திர ஜோதி வீடியோ படத்தைக் காட்டுவதை நிறுத்தியது.

அந்தக் காட்சி…

ராஜ்பவன் மாளிகையின் படுக்கை அறையில் இந்தக் காட்சி விரிகிறது. இரவு நேரத்தில் இது படமாக்கப்பட்டுள்ளது. என்.டி.திவாரி படுக்கை அறையில் உட்கார்ந்துள்ளார். அவருக்கு அருகில் 3 பெண்கள் உள்ளனர்.

அவர்களில் ஒரு பெண்ணுக்கு 18 வயது என்று கூறப்படுகிறது. திவாரியின் வயது 87 ஆகும். இன்னொரு பெண் கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.

அம்பலப்படுத்திய ராதிகா…

திவாரியின் இந்த செக்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆவார்.

ராஜ் பவன் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் திவாரிக்காக தான் இந்தப் பெண்களை அனுப்பி வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திவாரிக்கு பெண் மோகம் அதிகம். அவருக்காக நான் பல பெண்களை அனுப்பி வைத்துள்ளேன். அனைவரும் ராஜ்பவன் வேலைக்காக என்று கூறி சேர்க்கப்படுவர். ஆனால் அவர்களை திவாரிதான் தனது இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.

எந்த நேரத்தில் அவர் பெண் வேண்டும் என்று கேட்பார் எனக் கணிக்கவே முடியாது. திடீரென நள்ளிரவில் கேட்பார், சில சமயம் மதிய உணவை முடித்ததும் கேட்பார்.

எனக்கு கடப்பாவில் சில கல்குவாரிகளை நடத்த விருப்பம் இருந்தது. இதற்காக லைசென்ஸ் வாங்கித் தருவதாக திவாரி உறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. இதையடுத்தே இந்த வீடியோ படத்தை அம்பலப்படுத்தி ஆந்திரஜோதிக்குக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் ராதிகா.

டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – நாயுடு

திவாரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரஜோதி டிவியில் காட்டிய காட்சிகள் மிகவும் அசிங்கமானவை, ராஜ்பவனுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் திவாரி. ஆந்திராவுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்து விட்டார்.

அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதேபோல திவாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. அதுவரை போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவை கூறியுள்ளன.

திவாரிக்கு எதிராக சித்தூர், நெல்லூர், கம்மம், அடிலாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தடை குறித்து ஆந்திர ஜோதி கருத்து..

இதற்கிடையே, வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆந்திரஜோதி டிவி எடிட்டர் ராதாகிருஷ்ணா கூறுகையில், உண்மையில் ஆந்திராவுக்கும், ராஜ்பவனுக்கும் களங்கத்தையும், அவதூறையும் ஏற்படுத்தியவர் திவாரிதான். நாங்கள் அல்ல. இதுபோன்ற செயலில் ஈடுபட்ட திவாரிதான் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

கதவை மூடிய சபீதா ரெட்டி…

இந்த சம்பவம் குறித்து ஆந்திர அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றபோது வேகமாக தனது காரின் கதவை மூடியபடி கிளம்பிச் சென்று விட்டார் ரெட்டி.

ஆராய்ந்த பிறகே கருத்து- காங்.

திவாரி விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் என்ன நடந்தது, அந்த வீடியோவின் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குப் போய் விட்டது. எனவே இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அப்படியே தெரிவித்தாலும் கூட ஆராய்ந்த பிறகுதான் தெரிவிக்க முடியும் என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 1 Comment »