ரஜினி-அஜீத் நெருக்கம்! -விஜய் வட்டாரங்களில் நறநற….

விஜய்யின் 51 வது படம் ‘பாடிகாட்’ படத்தின் ரீமேக் என்பது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் என்று சொல்லப்பட்டாலும், சேட்டன்களின் கூற்று வேறு மாதிரி இருக்கிறது. “இது எங்க ஊர்ல பிளாப் படமாச்சே” என்கிறார்கள் அவர்கள். ஆனால் தமிழில் எடுக்கும்போது சிற்சில மாற்றங்களை செய்து இங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்றார்போல எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் சித்திக்.

ஏற்கனவே விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தை வெற்றிப்படமாக்கிய அனுபவமும் இருக்கிறது இவருக்கு. இப்பவே இரண்டு பாடல்களுக்கான கம்போசிங் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஏனிந்த அவசரம்?

சமீபகாலமாக ரஜினிக்கும், அஜீத்துக்கும் இருந்து வருகிற நட்பு சினிமாவில் பலரது கண்களையும் உறுத்தி வருகிறது. அதிலும், தனது மகள் சௌந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு ரஜினி அழைத்த இரண்டே நடிகர்களில் அஜீத் இருந்தார். ஆனால் விஜய் இல்லை. இந்த புறக்கணிப்பு சற்று தடுமாற வைத்திருக்கிறதாம் விஜய் தரப்பை.

ஏன் நமது 51வது படத்தை எந்திரனோடு வெளியிடக்கூடாது என்று யோசிக்க வைத்திருக்கிறதாம். அதற்கான வேகம்தான் இந்த இரண்டு பாடல்கள். பொதுவாகவே சித்திக் வேக வேகமாக படத்தை எடுத்து முடிக்கிற வழக்கம் உடையவர் என்பதால் இந்த ஸ்பீட் தீபாவளியை நோக்கிதான் என்கிறார்கள். எந்திரனையும் அந்த நேரத்தில் கொண்டு வரலாம் என்றுதான் பம்பரமாக உழைத்துக் கொண்டிக்கிறார் ஷங்கர்.

ஆனால் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. ஒருவேளை விஜய்யின் படமே முழுக்க தயாரானாலும், ரஜினி-ஷங்கர்-ஐஸ்வர்யா-சன் பிக்சர்ஸ் என்ற மலைகளை எதிர்க்கிற தைரியம் அந்த நேரத்தில் பம்மிக் கொள்ளும் என்று சொல்பவர்களும் உண்டு.

பார்க்கலாம்…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »