யாழ்ப்பாண சாதிக் கொடுமைக்கு கனடாவில் ஐந்து வருட கடூழிய சிறை!

இவ்வளவு நாகரீகம் மற்றும் தொழினுட்பம் வளர்ச்சியடைந்த காலத்திலும் ஏன் வெளிநாடு சென்றும் கூட சில முட்டாள் யாழ்ப்பானதார்களுக்கு சாதி வெறி மாறவில்லை.
யாழ்ப்பாணத்து சாதிக் கொடுமையால் மகளின் காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளது.

இளைய மகள், இளைய மகளின் காதலன், மூத்த மகளின் கணவன் ஆகியோரை 2007 ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி கௌரவக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றஞ்சாட்டி ஒன்ராரியோவில் உள்ள உயர்நிலை நீதிமன்றம் ஒன்றில்  Scarborough நகரவாசியான செல்வநாயகம் செல்லத்துரை ( வயது-47) என்பவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

இம்மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டை செல்வநாயகம் ஒப்புக் கொண்டார்.  இதனால் இவருக்கு எதிரான படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றுக் கொண்டு மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டில் திருத்தம் கொண்டு வந்தது.

இக்குற்றச்சாட்டுக்கு அதிக பட்சத் தண்டனை 14 வருட கடூழிய சிறை.  நேற்று இவ்வழக்கு தீர்ப்புக்காக நீதிபதி  John McMahon முன்னிலையில் வந்தது.  சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஆஜரான அரசுத் தரப்பு சட்டவாதி  குற்றவாளிக்கு ஆறு வருட  கடூழிய சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.

எதிரி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இவ்வழக்குக்காக அவரது கட்சிக்காரருக்கு ஐந்து வருட தண்டனைதான் வழங்க வேண்டும் என்று கோரினார்.  ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.

இவ்வழக்குக்காக ஏற்கனவே செல்வநாயகம் 11 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.  எனவே அவர் இன்னமும் 49 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளி மிகப் பாரிய குற்றச் செயலை இழைத்திருக்கின்றார் என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.  வழக்கின் தீர்ப்பு தமிழ் உரை பெயர்ப்பாளர் மூலம் குற்றவாளிக்கு நீதிமன்றில் உரை பெயர்த்துக் கூறப்பட்டது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தமிழ் உணர்வாளர் சீமான் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்

கனடியப் பொலிசார் நேற்றைய தினம் சீமான் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இருப்பினும் நேற்று இரவு (கனடிய நேரப்படி) அவர் பொலிசாரால் நாடு கடத்தப்பட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் எப்போது இந்தியா சென்றடைவார் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

சீமான் அவர்கள் இன்று நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை நாடு கடத்துவதன் மூலம் நடைபெறவுள்ள மாவீரர் தினத்திற்கும் கனடிய அரசு அச்சுறுத்தல் விடுப்பதாகவே அமைந்துள்ளது. இலங்கை இந்திய கூட்டுச் சதியாக இவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போரில் இறந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் மேற்குலகம், ஒரு விடுதலைப் போரில் இறந்தவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முயல்வது மிகவும் வேதனைக்குரியது.

அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி நடைபெறும் மாவீரர் தினத்தில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைக்க கனடிய அரசு தடை விதித்திருப்பதானது பெரும் அதிர்ச்சியான விடயம், மட்டுமல்லாது இது அவர்களின் தனிப்பட்ட விருப்பில் எடுத்த முடிவாக இருக்காது என்பதிலும் ஐயமில்லை.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »