எந்திரனை வெளிநாடுகளில் ஓடவைக்க போலிக்கண்ணீர் விட்ட ரஜனி!

Photobucket“சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கண்கலங்கினார்”.என்ற செய்தியை நேற்று ஊடகங்களில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்,பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பேசிய பேச்சை கேட்டு சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டாராம்.இது எவ்வளவு பெரிய கண்துடைப்பு வேலை என்று சிறுபிள்ளை கூட அறியும்.இவருக்கு கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு அந்த பேச்சில் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை.அப்படி இருக்க எப்படி இவருக்கு மட்டும் அழுகை வந்தது!

*என்ன ரஜனிக்கு அன்று தான் ஈழம் என்றால் என்ன என்று தெர்யுமா?

*ரஜனி ஈழப்பிரச்சனை பற்றி இது வரை ஒரு வரி கூட அறிந்திருக்கவில்லையா?

*இல்லை ரஜனி தொலைக்காட்சி,இணையம்,வானொலி,பத்திரிகை என்று எந்த ஊடகமும் பார்க்காத மனிதர்களுடன் கருத்துக்களை கூட பரிமாரிக்கொளாத ஒருவரா?

*இறுதியாக கொடூர போர் முடிந்து  ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட இந்த நிலையில் தான் ரஜனிக்கு கண்ணீர் வருகிறதா?ஏன் இவ்வளவு நாளும் அவரது ரோபோவுடன் சேர்ந்து வேறு கிரகத்திற்கு போயிருந்தாரா?

அவரது எந்திரனை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது ஈழதமிழர்களும் தான் இந்த வேலையில் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் படத்தை பார்க்க செய்ய இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கிறார்.இவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் இருந்த மரியாதையை கூட தானாக குறைத்துக்கொண்டுள்ளார்.அதைவேறு இந்த தமிழ்நாட்டு ஊதுகுழல் பத்திரிகைகள் ஓவர் பில்டப்புடன் பிரசுரிக்கிறார்கள்.ஈழத்தமிழர்கள் அரசியல்வாதிகள்,நடிகர்கள்,கட்சிகளின் பின்னால் பல்லக்கு தூக்கும் கேனை தமிழர்களல்ல என்பதை ரஜனி தெரிந்துகொள்ளவேண்டும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . Leave a Comment »

மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்? : ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரம்

சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் இன்றைய பதிப்பின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

ஈழநாடு பத்திரிகையின் இன்றைய இதழின் வெளிவந்துள்ள கட்டுரையின் முழுவடிவம்:

ஈழத் தமிழர்களின் இத்தனை கால அவலங்களுக்கும் மூல காரணமாக விழங்கும் இந்திய ஆதிக்க சக்தி, தற்போது ஈழத் தமிழர்களை மையப்படுத்திப் புதியதோர் துரோகத்தை அரங்கேற்ற முற்படுகின்றது. கடந்த வாரத்தில் இந்திய உளவு நிறுவனமான றோவினால் தமிழக ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்ட செய்தி ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

கடந்த வார இறுதியில் ‘இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்’ என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும், அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில் என்று அந்த இந்தியப் பலிபீடத்திற்கு விடுதலைப் புலிகளை வலிந்து பதிவு செய்துள்ளார்கள்.

இந்தியா தமக்கு உதவும் என்ற நம்பிக்கையை ஈழத் தமிழர்கள் இழந்து வெகு காலமாகிவிட்டது. இறுதி யுத்த காலத்திலும் இந்தியா சிங்கள தேசத்துடன் இணைந்து நடாத்திய யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் இந்தியா கவனத்தில் கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி இலங்கைத் தீவில் தன் கரங்களை வலுப்படுத்தவே இந்தியா முனைந்தது.

அதற்காக இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் பலி கொள்ளப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும், ஈழத் தமிழர்களின் பலம் அழிக்கப்பட்டதற்கும் இந்தியாவே பிரதான பாத்திரம் வகித்தது என்பதை அந்தப் பேரவலத்தை எதிர்கொண்ட ஈழத் தமிழாகள் என்றும் இந்தியாவை மன்னிக்கமாட்டார்கள்.

அந்த ஜுனியர் விகடன் இதழில் இந்தியாவின் தற்போதைய இந்த சிந்தனை மாற்றத்திற்கான காரணங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த எந்தக் காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.

‘போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன.

இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும். போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும். இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும். இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நான்கு சுயநல நோக்கங்களை  இலங்கை அரசு உதாசீனம் செய்ததன் காரணமாகவே இந்தியா மீண்டும் ஈழத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அச்சுறுத்தல் மூலம் சிங்கள தேசத்தை அடிபணிய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவின் நான்கு கோரிக்கைகளுக்காகவும் ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திக் களம் இறங்க வேண்டும் என்ற சிந்தனையை தமிழீழ விடுதலைக்கான போராகச் சித்தரிப்பதற்கு இந்தியா முற்படுகின்றது. தனது விருப்பங்களையும் மீறி சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது.

‘இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடாத்தினோம்’ என்று யுத்தம் முடிந்த பின்னர்  இலங்கை தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஈழத் தமிழினத்தின் இன அழிப்பிற்கு பின்பலமாக நின்ற இந்தியா இதற்கும் அதிகமான நன்றிக்கடனை எதிர்பார்க்க முடியாது என்பதே சிங்களத்தின் நிலைப்பாடாக உள்ளது.

போர் முடியும்வரை இந்தியாவின் அத்தனை கோரிக்கைகளுக்கும் தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்கும், விருப்பங்களுக்கும் அதிக மதிப்புக் கொடுத்து வருகின்றது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் முதல் முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷ, மற்ற மூன்று கோரிக்கைகளையும்கூட மறுத்து விட்டார்.

இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப்படுத்தத் தொடங்கியிருப்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றது இந்தியா.

அத்துடன், இந்திய நலன்களை மீறி அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா.

அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது.

இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான ‘றோ’ மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.

இந்தியாவின் வட திசையில் இருக்கும் சீனா, இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும், கிழக்கில் அமைந்துள்ள பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டதன் மூலம் இந்தியா தெற்கிலும் செல்வாக்கிழந்த நிலையில் உள்ளது.

ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை போனதன் மூலம் ஈழத் தமிழர்களின் பலமாக விழங்கிய விடுதலைப் புலிகள் சிங்கள தேசத்தால் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்தியச் சதியினால் விடுதலைக் கனவுகளோடு உயிர் கொடுத்த தமிழினம் முள்ளிவாய்க்காலில் உயிர் பறிக்கப்பட்டு விட்டார்கள்.

தமிழீழ ஆன்மா இந்தியச் சதியால் மீண்டும் சிங்கள தேசத்திடம் அடிமைப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது இந்திய நட்புக் கரம் தறிக்கப்பட்டுவிட்டதனால், தெற்கிலும் சீனா பலமாகக் கால் பதிக்கின்றது. கச்சத்தீவில் தனது இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது.

தற்போது சிங்கள தேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலும் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கப் போகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த ராஜபக்ஷேவும், சரத் பொன்சேகாவும் களம் இறங்கிய நிலையில், இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்பட வாய்ப்பில்லை.

இந்த இருவரில் யாரையும் ஆதரிக்கும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை. வருகின்ற பேயிலும் பார்க்கப் பழகிய பேயை வைத்துக் காய் நகர்த்தும் நிலையை எடுத்துள்ள இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்குப் பயன்படுத்த முனைகின்றது.

தமிழீழ மக்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத முயற்சியாகவே இதனை நோக்கலாம். யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு 78 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க மறுத்ததைக் கவனத்தில் கொண்டால், இந்தியக் கனவுகள் ஈடேறும் சாத்தியம் கிடையாது.

ஈழத் தமிழர்களின் எஞ்சியிருக்கும் ஒரே சக்தியான புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்களை விரைவு படுத்துவதன் மூலம், சீனாவின் மேலாதிக்க விரிவாக்கத்தை விரும்பாத மேற்குலகின் ஆதரவு தவிர்க்க முடியாததாகிவிடும்.

இந்தியா விடும் றீலை நம்பி ஈழத் தமிழர்கள் மீண்டும் பலிபீடத்தை நோக்கிச் செல்லாமல், மனிதாபிமானம் கொஞ்சமாவது மீந்திருக்கும் மேற்குலகின் கரங்களைப் பற்றி நடப்பதே ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே யதார்த்தம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

சிரிப்புக்குள்ளாகியுள்ள செம்(மறி) மொழி மாநாடும் சிக்கலில் மாட்டியுள்ள சிவத்தம்பியும்:

Photobucketஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) ” மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

தமிழால் தன்னை வளர்ததுக் கொண்டவர் என்ற தனித்துவமான முத்திரையை மேலும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவுசெய்துகொள்ள அவர் மேற்கொண்டுள்ள மற்றுமோர் முயற்சி இதுவாகும்.

தமிழை நூலாகக், கலையாக, கவியாக, மேடைப் பேச்சாக, அரசியலாக விற்று தன்னை வளர்ததுக்கொண்ட (செல்வம் நிறைவாகச் சம்பாதித்த – திருமிகு) முத்துவேலு கருணாநிதி அவர்கள் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட வயது முதிர்நதவர் என்பதைச் சுருக்கமாகத் தமிழ் வளர்தத பெரியார் என்ற சொல்லும்போது தவறாக உலகத் தமிழினம் தமிழைக் கருணாநிதி வளர்ததார் என்ற தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என அன்னை தமிழின் பெயரால் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது முதல்வர் பதவிக் காலத்தை வளர்ததுக்கொள்ள தமிழை மட்டுமல்ல தமிழர்களின் தன்மானத்தையும் விற்று தனித்துவத் தலைவராகி விட்டார். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுபோல் மத்திய அரசிடம் மடிப்பிச்சையேந்தி பதவி வேட்டையாடியதும், அதை உலகத் தமிழினத்தின் கண்களிலிருந்து மறைக்க தற்பொழுது உலகத்தமிழ் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை நடத்துவதும் கண்டு உலகத் தமிழினம் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது.

அதுமட்டுமல்ல தன்னை வளர்கக தழிழை மேலும் விற்பது போன்று 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவரகள் இலங்கையின் சிங்கள கடற்படையினரால் கச்சதீவுக் கடலில் வைத்து நாய்களைவிடக் கேவலமாக நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுச் சாகடிக்கப்பட்தோடு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டது.

அதற்காக இலங்கை அரசை எதிர்தது ஒருசொல்தானும் கேட்காது, அழிக்கப்பட்ட அந்த அப்பாவி மீனவர்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஈடாக கேட்டிருப்பது, தன்னை வளர்ககும் தனியான திட்டத்திற்கு அவர் இலங்கை அரசைக் கேட்டிருப்பது, தள்ளாத வயதில் உள்ள ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தமிபி அவர்களை அரசு பலாத்காரமாக அவரது செம்(மறி) மொழி மாநாட்டிற்கு அனுப்பிவைக்கச் செய்வதுதான்.

தனது நாட்டில் பிறந்தவர்களாயிருந்தும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால், கோடிக்கணக்கான சொத்துக்கள் அறுநூறுக்கு மேற்பட்ட உறவுகளின் உயிர்கள், பல்லாயிரக்கணக்கான உறவுகள் அடிபாட்டிற்குள்ளான அவலங்கள் அனைத்தையும் இலங்கை அரசை ஏன் என்று ஒரு வார்ததை தானும் கேட்காதவரான தமிழால் வளர்நத தலைவரும், அவரது தயவால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்தக்கொண்ட மத்திய அரசும் அவுஸ்திரேலியாவில் ஓருசில சீககிய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதும் போர்ககொடி தூக்குகிறார்கள்.

இப்படியே தமிழையும் தமிழ் இனத்தையும் விற்றும், இனஅழிவிற்கு வழிகாட்டியாய், உறுதுணையாய் இருப்பதன் மூலமும் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட பெரியாரின் சேவைகளை எழுதிக்கொண்டு போனால் ஏடுதாங்காத அளவிற்குக் கோடிட்டுக் காட்ட முடியும். ஆனால் அதற்கு நேரம் போதாது என்பதல் ஒருசிலவற்றை ஒப்புவித்திருக்கின்றோம்.

பாவம் உறவுகளின் பேரழிவிற்கு உள்ளாகி மனம் சொந்து நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் அறிஞர்களை, இலங்கை பாசிச அரசின் கெடுபிடிகளுடன் தமிழால் தான் வளரும் தாகத்திற்குப் பலியாக்கப் போகிறாரோ (செல்வம் நிறைவாகச் சம்பாதிதத – திருமிகு) திருமிகு முத்துவேலு கருணாநிதி அவர்கள் உலகத் தமிழினத்தை உற்று நோக்கிப் பார்ததுக் கொண்டிருக்கும் உண்மைத்துவம் இதுவாகும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »