அண்ணியுடன் கள்ளத்தொடர்பு கணவன் வீட்டு முன் மனைவி உண்ணாவிரதம்!

குலசேகரம்  குமரி மாவட்டம் திருவட்டார் அடுத்துள்ள ஆற்றூரைச் சேர்ந்த முத்துக்குட்டி மகள் விஜயராணி(29). லேப் டெக்னீஷியன் படித்துள்ளார். இவருக்கும் குலசேகரத்தை அடுத்த இட்டகவேலி பண்டாரவிளையைச் சேர்ந்த பத்மராஜ் என்பவருக்கும் கடந்த பிப்.3ம் தேதி திருமணம் நடந்தது. தம்பதியினர் பத்மராஜின் அண்ணன் சுவாமிதாஸ், மனைவி செல்வியுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். அப்போது செல்வி, விஜயராணியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்விக்கும், பத்மராஜூக்கும் தகாத உறவு இருந்ததை அறிந்து விஜயராணி கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த பத்மராஜ், செல்வியுடன் சேர்ந்து மனைவியை தாக்கியுள்ளார். இதனால் விஜயராணி 6 மாதங்களுக்கு முன் தாயார் வீட்டுக்கு சென்றார்.  இந்நிலையில் நேற்று கணவன் வீட்டுக்கு உறவினர்களுடன் வந்த விஜயராணி பூட்டிக்கிடந்த வீட்டின் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.  திருவட்டார் போலீசார் விஜயராணியிடம் விசாரணை நடத்தினர். பூட்டிய வீட்டை திறந்து விஜயராணியை வீட்டிற்குள் அனுப்பினர். அவர் வீட்டுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 1 Comment »

சினிமாவில் வருவது போல் மாமனாருடன் கள்ளத்தொடர்பு: மதுவில் விஷம் கலந்து, கணவனை கொன்ற மனைவி கைது!

Photobucketமாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் வெளியான `சிந்து சமவெளி’ சினிமா படத்தில் மாமனாருடன் மருமகள் கள்ளத் தொடர்பு வைத்து இருப்பது போல் காட்டப்பட்டது. அதேபோல், மாமனாருடன் தொடர்பு வைத்திருந்த ஒரு பெண் கணவனை கொலை செய்த இந்த சம்பவம் அது பற்றி கூறப்படுவதாகவது:-

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கீழப்புலிïர் காலனித்தெருவைச்சேர்ந்த வீரமுத்து (வயது58). இவரது மகன் தங்கராசு (வயது30). இவரது மனைவி செல்வி (வயது25). தங்கராசு சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.

தங்கராசுவிற்கும் செல்விக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தங்கராசு அடிக்கடி வேலைக்காக சென்னை சென்று விடுவதால் தங்கராசு மனைவி செல்விக்கும் தங்கராசுவின் தந்தை வீரமுத்துவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மதுவில் விஷம்

இது பற்றி அறிந்த தங்கராசு மனைவி செல்வியை கண்டித்தார். இந்த பிரச்சினை தொடர்பாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தங்கராசு குடித்து விட்டு வந்து தனது தந்தையையும், மனைவிசெல்வியையும் அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வீரமுத்துவும், செல்வியும் தங்கராசுவை கொல்ல திட்டமிட்டனர். தங்கராசுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அதனால் மதுவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து அவரை கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி பூச்சி கொல்லி மருந்து வாங்கி வந்து அதை மதுவில் கலந்தனர். இதை செல்வியின் மகள் ரோஷிணி பார்த்துவிட்டு பூச்சி மருந்து கலந்த மதுவை கொடுக்காதே அப்பா செத்துவிடுவார் என்று கூறி இருக்கிறாள். ஆனால் செல்வி இதை குடித்தால் அப்பா சாகமாட்டார். நன்றாக தூங்குவதற்காகத்தான் இந்த மருந்து கலந்த மதுவைகொடுக்கிறேன் என்று கூறி ரோஷிணியை அடித்து ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டார்.

இருவரும் கைது

வழக்கம் போல் தங்கராசு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அவரிடம் விஷம் கலந்த மதுவை வீரமுத்துவும், செல்வியும் கொடுத்தனர். ஏற்கனவே போதையில் இருந்த தங்கராசு அதை வாங்கி குடித்து விட்டார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தங்கராசு செத்தார்.

தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் தங்கராசுக்கு விஷம் கலந்த மது கொடுத்த விவரம் தெரிய வந்தது. சிறுமி ரோஷிணி நடந்த விவரத்தை போலீசாரிடம் தெரிவித்தாள்.

இதைத் தொடர்ந்து தங்கராசுவின் தந்தை வீரமுத்து, செல்வி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தகாத உறவு-மலேசியாவில் 3 பெண்களுக்கு கசையடி

மலேசியாவில் திருமணமான பின்னர் தகாத உறவு கொண்ட மூன்று பெண்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி கசையடி வழங்கப்பட்டது. மலேசியாவில் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் கசையடி வாங்கிய முதல் சம்பவம் இதுவே. ஏற்கனவே ஹோட்டல் பாரில் பீர் குடித்த குற்றத்துக்காக கசையடி தண்டனை அறிவிக்கப்பட்ட 32 வயது கார்த்திகா என்ற பெண்ணுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தகாத செக்ஸ் உறவு கொண்ட குற்றத்துக்காக மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்களுக்கு கசையடி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கசையடி தண்டனை கடந்த 9ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது. இத்தனை நாள் நிதானித்து நேற்று இதனை அரசு அறிவித்துள்ளது. திருமணமான மூன்று பெண்கள் முறை தவறி மற்ற வேற்று ஆண்களுடன் செக்ஸ் உறவு கொண்டதால் அந்த பெண்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நான்கு ஆண்களுக்கும் இந்த தண்டனையை கோலாலம்பூரில் உள்ள ஷரியா கோர்ட் விதித்து தீர்ப்பளித்ததாக அமைச்சர் கூறினார். தண்டனை பெற்ற பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க அமைச்சர் மறுத்து விட்டார். ஆண்களும், பெண்களும் தனித்தனியாக சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டு கசையடி கொடுக்கப்பட்டதாகவும், அப்போது மருத்துவர் ஒருவர் உடன் இருந்தார் என்றும் அமைச்சர் கூறினார். பெண்களுக்கு நான்கு கசையடியும், ஆண்களுக்கு ஆறு கசையடியும் தரப்பட்டதாகக் கூறிய அமைச்சர், இந்த தண்டனையால் அவர்களை காயப்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. இதைப்பார்க்கும் மற்ற பெண்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »