என்னை தங்கச்சியாக நினைத்ததால் கவர்ச்சிக்கு மாறினேன் – நீத்து

Photobucketதிரைத் துறையினர் அனைவரும் என்னை சகோதரியாகவே நினைத்து வந்தனர். இதனால் தான் நான் கவர்ச்சிக்கு மாறி அந்த இமேஜை மாற்றியுள்ளேன் என்கிறார் பாலிவுட் நடிகை நீத்து சந்திரா. அக்ஷய் குமார் நடித்த கரம் மசாலா படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் நீத்து சந்திரா. தமிழில் யாவரும் நலம் படத்தில் நடித்துள்ளார். விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலும் நடித்துள்ளார். படு கவர்ச்சிகரமாக மாடல் கிரிஷ்தா குப்தாவுடன் ஒரு ஆடவர் இதழுக்காக அவர் கொடுத்த ஏடாகூடமான போஸ் சர்ச்சைகளைக் கிளப்பியது. அவரது கவர்ச்சிப் புயல் பாலிவுட்டில் பலமாகவே வீசி வருகிறது – கூடவே சர்ச்சைகளும். ஆனால் தனது கவர்ச்சிப் பாதைக்கு வினோதமான காரணம் சொல்கிறார் நீத்து. இதுகுறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் எல்லோருமே என்னை ஒரு சகோதரி போலவே பார்த்து வந்தனர். இது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பினேன். கிறிஸ்தாவுடனான போட்டோ ஷூட்டிங்குக்கு முன்பு வரை என்னை யாருமே கவனிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகுதான் எல்லோரும் என்னைப் பார்க்க ஆரம்பித்தனர். எப்போதுமே எனது மனதுக்குப் பிடித்ததை மட்டுமே நான் செய்வேன். ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியோடு இருப்பேன். கடந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் என்பதற்காக வருத்தப்பட்டதே கிடையாது. உங்களுக்கு அழகான உடல் இருந்தால் அதை நீங்கள் அழகாக காட்டித்தான் ஆக வேண்டும் என்றார் நீத்து. தனது முதல் படத்திலேயே கவர்ச்சிகரமான நீச்சல் உடையில் வந்து கதி கலக்கியவர் நீத்து என்பது நினைவிருக்கலாம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மீண்டும் சுயம்வரம் நடத்த ஆசை!-ராக்கி சாவந்த்

Photobucket“முதல் சுயம்வரத்தில் சிக்கிய மாப்பிள்ளை சரியான சுயநலப் பேர்வழி… எனவே மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்தி நல்ல மாப்பிள்ளையைத் தேர்வு செய்ய விரும்புகிறேன்” என்று இந்தி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை சுயம்வரம் நடத்தி தேர்ந்தெடுக்கப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார். உடனே அவரை மணக்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவர்களில் மூவரைத் தேர்வு செய்த ராக்கி, இவர்கள் மூவரையுமே பிடித்திருக்கிறது என குண்டு போட, அதிர்ந்தனர் கலாச்சார காவலர்கள். ஒருவழியாக அரைகுறை மனசோடு, எலேஷ் என்பவரை தேர்வு செய்தார். நிச்சயதார்த்தம் நடந்தது. எலேஷைப் பார்க்க கனடாவுக்குக் கூட சென்றார் ராக்கி. போய் வந்தபிறகு எலேஷை உதறித் தள்ளிவிட்டார் ராக்கி.
என்ன காரணம்?
எலேஷ் முதலில் தன்னை ஒரு பணக்காரர் என்று கூறினார். ஆனால் உண்மையில் அவர் ஒரு பெரும் கடன்காரர். இரவு விடுதிகளுக்குப்போய் பணத்தைத் தொலைக்கும் ஆசாமி. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் இவ்வளவும் எனக்குத் தெரிந்தது. வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதை வேறு பெருமையாக என்னிடம் கூறினார் எலேஷ். இன்னொரு பக்கம் அவரது குடும்பத்தினர் என்னை வேண்டா வெறுப்பாகவே பார்த்தனர். அவர்கள் யார் என்னை வெறுக்க… எனவே நானே வெறுத்து ஒதுக்கி விட்டேன் அவர்கள் அனைவரையும். என் கண்ணசைவுக்கு எத்தனையோ இளைஞர்கள் காத்திருக்க இந்த ஓட்டாண்டிக்காக நான் இத்தனை அவமானப்பட வேண்டுமா என்ற நினைப்பே எனக்கு தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்த ஆசையாக உள்ளது. முன்பு நான் சுயம்வரம் நடத்திய போது என்னை யாரும் உண்மையாக திருமணம் செய்ய விரும்பவில்லை. எல்லோரும் எனது பணம், பரிசுக்கு தான் ஆசைப்படுகிறார்கள். அப்படியில்லாமல் என்னை நேசிக்கும் இளைஞர் எனக்கு வேண்டும். இந்த முறை எனது பெற்றோர் உறவினர் துணையுடன் புதிய மாப்பிள்ளையைத் தேர்வு செய்வேன் என்றார். ஆக, பப்ளிசிட்டிக்கு ராக்கி ரெடி… காசு பார்க்க மீண்டும் தயாராகின்றன சேனல்கள்!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . Leave a Comment »

ஆபாச பட நடிகராக விரும்பினேன் : ஷாருக

Photobucket“நக்கலடிப்பதிலும், தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்வதிலும் ஷாருக் கானை மிஞ்ச வேறு யாரும் கிடையாது.

நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக வர விரும்பினீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆபாசப் பட நடிகராக வர விரும்பினேன் என்று கூறி அதிர வைத்தார் ஷாருக்.

டெல்லியில் குரு அரிந்தம் செளத்ரியின் டிஸ்கவர் தி டயமன்ட் இன் யூ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஷாருக் கலந்து கொண்டார்.

அப்போது அவர் படு ஜாலியாக பேசினார். நான் இப்படி சூப்பர் ஸ்டாராக வர வேண்டும் என்றெல்லாம் முன்பு நினைக்கவில்லை. ஆபாசப் பட நடிகராக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். இதற்காக ரொம்ப ஆர்வமாகவெல்லாம் இருந்தேன்.

ஆபாசப் படங்களில் ‘பக்கா’வாக நடிக்க வேண்டும். ‘நல்ல’ பெயரெடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையாக இருந்தேன். ஆனால் டிராக் மாறி இப்படியாகி விட்டேன் என்று அவர் கூறியபோது அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

உங்களுக்கு யார் ஆதர்ச ஹீரோ என்று கேட்கப்பட்டபோது, எனக்கு எப்போதுமே சில்வர்ஸடர் ஸ்டாலன்தான் ஆதர்ச ஹீரோ. அவரும் கூட ஒரு ஆபாசப் பட நடிகர்தான் ஆரம்பத்தில். பிறகுதான் ஹாலிவுட் சூப்பர்ஸ்டாரானார் என்று கூறி அரங்கத்தை மேலும் அதிர வைத்தார் ஷாருக்.

ஷாருக்குக்கு ரொம்பத்தான் குசும்பு…!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »