காந்தி என்னும் கோழை….!! இவனையெல்லாம் மகாத்மா என்றது யார் ?

“நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்- மாவோ”

அஹிம்சையை முழுதாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால், அதற்காக எல்லா பிரச்சினைகளுக்கும் காலை நக்கியே தீர்வு காணலாம் என்பதை ஒருகாலும் ஏற்க முடியாது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தினார் என்பதுதான் அவர் மீதான என் வெறுப்பின் தொடக்கப் புள்ளி. அம்பேத்கர், பகத் சிங், நேதாஜி போன்றோருடனான காந்தியின் மோதல்களை படித்ததால், முற்றிலும் வெறுக்கிறேன்!

காந்தியை வசைபாடுவதற்கு முன், அஹிம்சையை பற்றிய அவரின் வரையறையை தெரிந்து கொள்ள வேண்டும். அவரை பொறுத்தவரையில், “அஹிம்சை என்பது ஆங்கிலேயனை துன்புறுத்தாமல் அமைதியான வழியில் போராடி சுதந்திரம் அடைவது”. (ஆனால், இந்திய மக்கள் எவ்வளவு வேண்டுமானலும் துன்பப்படலாம்)

அஹிம்சை ஏன் (நாட்டுக்கு) உதவாது?

அஹிம்சை எந்த நாட்டிற்கு உதவி இருக்கிறது? இந்தியாவிற்கா? உண்மையான அஹிம்சையால் வென்றெடுத்த சுதந்திரமென்றால், இது காந்தி பிறந்த மண் என்று பீற்றிக் கொள்ளும் அவரது தொண்டர்கள் ஏன் நாட்டில் முப்படையை நிர்மாணித்த போது எதிர்க்கவில்லை? விடுதலைக்கே உதவிய உங்களது அஹிம்சை, பாதுகாப்புக்கு உதவாதா,என்ன? “தரைப்படை, கப்பற்படை, விமானப்படை” என்பதிற்கு பதிலாக, “காலில் விழும் படை, உண்ணாவிரதப் படை, அந்நியனே வெளியேறு என்று கோஷமிடும் படை” என்று எல்லைபகுதியில் நிறுவ வேண்டியதுதானே? இப்பொழுது மட்டும் உயிரை துன்புறுத்துதல் எப்படி அய்யா சரியாகும்! இப்பொழுது ஊடுருவும் அந்நியர்களை, தீவிரவாதிகளை எதிர்க்க ஆயுதம் தேவையென்றால், அன்றைக்கு இருந்த நிலைமைக்கும் ஆயுதம் தேவைதானே?

வன்முறையில் இறங்காமல் அதே நேரம் ஒத்துழைக்காமல் போராட வேண்டும் என்று அவர் வழியில் செல்பவர்கள் யாரேனும் உண்மையிலேயே இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு பெண்ணொருத்தியை மானபங்கபடுத்த ஒரு கும்பல் வந்தால், ஒத்துழைக்கமாட்டேன் என்று ஓரமாக அமர்ந்து சத்தியாகிரகம் செய்வீரா , இல்லை எதிர்த்து சண்டை இடுவீர்களா? (சத்தியாகிரகம் செய்வேன் என்பவர்கள் தயவு செய்து வாசிப்பதை நிறுத்திவிடலாம். நான் நிற்பது எதிர்த்துருவம்.)

ஒரு பெண்ணின் நன்மைக்கே வன்முறை தீர்வென்றால், விடுதலைக்கு புரட்சி வேண்டாமா? அன்று புரட்சி இருந்தது.. போர்க்குணமும் இருந்தது…ஏனென்றால், இது காந்தி பிறந்த மண் மட்டுமன்று, நேதாஜி பிறந்த மண்ணும் கூட! இதை பிரிட்டிஷ்காரன் அறியாமலில்லை. போராட்டங்களை பிளவுப் படுத்த, ஆயுதப் போராட்டங்களில் பெரிதும் ஈடுபடாத மேல்தட்டு மக்களைச் சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அதுதான் “இந்திய தேசிய காங்கிரஸ்”. இதன் மூலம் மக்கள் அமைப்பொன்று இருக்கிறது, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தங்கள் போடப்படும், மெள்ள மெள்ள சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கினான்.(ஆம் அப்படி நடந்தே என்று வாதிட நினைத்தால், நேதாஜியையும், இரண்டாம் உலகப் போரையும் படித்து விட்டு வந்து வாதிடலாம்.)

காந்தி என்ற தலைவன்!?

தலைவருக்கான தகுதியோ, மன உறுதியோ இல்லை என்று தெரிந்து, தாமாகவே பொறுப்புகளில் இருந்து விலகி நேதாஜிக்கு வழி விட்டிருக்க வேண்டும்! அது சுதந்திரப் போராட்டத்தை துரிதப் படுத்தியிருக்கும். அதை விடுத்து, புரட்சி வெடிப்பது போன்ற காலங்களில் எல்லாம் ஒத்துழையாமை, வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கங்களை தொடங்குவதும், பின்பு உப்பு சப்பிலாத காரணங்களைக் காட்டி அப்போராட்டங்களை கலைப்பதும் வாடிக்கையாக கொண்டிருந்தார். நாட்டின் விடுதலையை தாமதப்படுத்தினார்.

Jallianwala Bagh massacre

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் 379 பேர் இறந்தனர், ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். ஜெனரல் டயர் என்ற வெறிநாய் நிகர் இழிபிறவியோ, துப்பாக்கி ரவைகள் தீராவிட்டால் இன்னும் சுட்டிருப்பேன் என்று கொக்கரித்தது. ஆனால் அதற்கு கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதமோ போராட்டமோ எதுவும் நடத்தாமல், அதே பஞ்சாபில் மக்களின் கலகத்தால் விளைந்த சில வெள்ளையனின் சாவுக்கும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததற்கும் கண்டனம் தெரிவித்தார்! (இதே காங்கிரஸ் கருங்காலிகளின் அடுத்த தலைமுறைகள்தான் போபால் விபத்துக்குக் காரணமான ஆண்டர்சனை காப்பற்றியது… சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இவர்கள் அடிமைகள் தான்!)

இரண்டாம் உலக போரில் நேதாஜி எதிரணியை ஆதரிக்க, காந்தியோ பிரிட்டிஷை ஆதரித்தார். அது மட்டுமின்றி பிரிட்டிஷார் அழிவார்களோ என்று நினைத்தாலே தாங்க முடியவில்லை என்று கண்ணீர் வேறு வடித்திருக்கிறார்! அவர்களின் அழிவிலிருந்து எங்களுக்கு சுதந்திரம் *தேவையில்லை*, இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார் இந்த மகான்!. பிரிட்டிஷை காப்பாற்ற இந்தியன் சாகலாம், அஹிம்சையை விடுத்து உலக போரில் ஈடுபட்ட பிரிட்டிஷை நீங்கள் ஆதரிக்கலாம், ஆனால் தாய் நாட்டின் விடுதலைக்கு வன்முறை கூடாதா! வன்முறைக்கும் புரட்சிக்கும் வித்தியாசம் தெரியாதவன் எப்படி தலைவனாக இருக்கமுடியும்?

காந்தி என்ற மனிதன்

செய்த குற்றத்தை ஒப்பு கொள்பவனெல்லாம் நல்ல மனிதன் அல்ல, அதை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்பவனே மனிதன். சத்திய சோதனையில் பல உண்மைகளை சொல்லியவர்,சிறந்த மனிதர், மகாத்மா, என்றெல்லாம் இருக்கும் கற்பிதங்களையும் தாண்டி, அவரின் கோழைத்தனத்தை நிறுவ போதுமான ஆதாரங்கள் , வரலாறெங்கும் விரவிக் கிடக்கிறது.

ஏழை பங்காளனாய் இருப்பதால் சட்டையே அணியாத அவர், செருப்பு மட்டும் போட்டது ஏன், மூன்றாம் வகுப்பில் பயணிக்காமல் முதல் வகுப்பிலேயே பயணித்தது ஏன்? எத்தனை ஏழைகள் முதல் வகுப்பில் செல்கிறார்கள் ?

சாதியை ஒழிக்கும் பொறுப்புள்ள தலைவன், ‘அரிஜன்’ என்று பட்டமிட்டு அழைத்து சரியா? தாழ்த்தப்பட்டோருக்கான அம்பேத்கரின் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்தது ஏன்? அரிஜன மக்கள் பக்குவமற்றவர்கள் என விளித்தது ஏன்? கோவில் உள்நுழைவு போராட்டத்திற்கு ஆதரவு தர மறுத்ததும் ஏனோ?

இதனால் தான் அம்பேத்கர் அவரை “நம்பதகாதவர், நேர்மையற்ற வழிகளை மேற்கொள்கிறார்” என்று தோலுரித்தார். (Because of Gandhi’s actions, Ambedkar described him as “devious and untrustworthy”)

1987இல், ஆப்ரிக்கா சென்று அஹிம்சை முறையில் போராடிய மாமனிதர், அங்கிருந்த வெள்ளை குடியேறிகள் அவரை தாக்க முற்பட்ட போது *தப்பி ஓடி ஒளிந்து, அவர்கள் மீது வழக்கு போடவும் பயந்த* அவர், அங்கேயே, அவர்களிடமே அஹிம்சையில் போரடியிருக்கலாமே? வீரத்தின் உச்சம் அஹிம்சை என்று உரைப்பவர்கள், இதை வீரம் என ஒப்புக் கொள்வார்களா?

என்னை பொறுத்தவரையில் “அஹிம்சை” என்பதைவிட “காந்தியம்” ஆபத்தானது, மோசமானது. என் நாட்டின் சுதத்திரத்தை தாமதப்படுத்தியது மட்டுமில்லாமல், வீரத்தால் விளைய வேண்டிய விடுதலையை பேடித்தனத்தால் விளைவிக்க முயற்சித்தது. அது புரட்சிகளின் முட்டுக்கட்டை. கோழைகளின் கூடாரம்.

காந்தி பற்றிய மேலும் உண்மைகளை அறிய இங்கே அழுத்தவும்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 12 Comments »

கள்ளத்தொடர்புக்கு தடை போட்ட கணவன் கழுத்தை இறுக்கி கொலை! மனைவி – கள்ளக்காதலன் கைது

கடப்பா அருகே கள்ளத்தொடர்புக்கு இடைïறாக இருந்த கணவனை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு தட்சண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே புருஷகட்டே பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரபீக் (வயது 42). இவரது மனைவி ருபியா (37).

இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அப்துல் ரபீக், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உப்பினங்கடி அருகே கடப்பா பகுதியில் சொந்தமாக வீடு கட்டினார்.

அந்த வீட்டை கொலம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முகமது ஷெரீப் (47) கட்டி வந்தார். அப்போது அப்துல் ரபீக் மனைவி ருபியாவுக்கும், முகமது ஷெரீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. முகமது ஷெரீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

அப்துல் ரபீக் வீட்டில் இல்லாதபோது இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.. கொலை செய்ய திட்டம் இதுபற்றி அறிந்த அப்துல் ரபீக், தனது மனைவி ருபியாவை கண்டித்துள்ளார்.

ஆனாலும் கள்ளக்காதலன் முகமது ஷெரீப்பை மறக்க முடியாமல் ருபியா தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து, கள்ளக்காதலுக்கு இடைïறாக இருக்கும் அப்துல் ரபீக்கை கொலை செய்ய 10 நாட்களுக்கு முன்பு திட்டம் தீட்டி உள்ளனர்.

அப்போது முகமது ஷெரீப், ருபியாவிடம் இரவில் அப்துல் ரபீக் தூங்க வரும் போது பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடு. அவர் தூங்கியதும் நான் வருகிறேன்.

இருவரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விடலாம் என்று கூறி உள்ளார். கழுத்தை இறுக்கி கொலை அதன்படி நேற்று முன்தினம் இரவு அப்துல் ரபீக் வீட்டுக்கு வந்துள்ளார்.

அவர் தூங்க செல்வதற்கு முன்பு ருபியா, பாலில் தூக்க மாத்திரையை கலந்து கணவர் அப்துல் ரபீக் வசம் கொடுத்து உள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் அப்துல் ரபீக் தூங்கி விட்டார்.

அந்தநேரத்தில் திட்டமிட்டபடி முகமது ஷெரீப் அங்கு வந்துள்ளார். பின்னர் ருபியாவும், கள்ளக் காதலன் முகமது ஷெரீப்பும் சேர்ந்து கேபிள் வயரால் அப்துல் ரபீக் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

மனைவி-கள்ளக்காதலன் கைது இதுகுறித்து கடப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து ருபியா, அவளது கள்ளக் காதலன் முகமது ஷெரீப் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

காமன்வெல்த் போட்டியை நடத்த ரூ. 46 கோடி லஞ்சம் கொடுத்த இந்தியா ; அதிர்ச்சி தகவல்

Photobucketடில்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, 72 நாடுகளுக்கு சுமார் ரூ. 46 கோடி இந்தியா லஞ்சமாக கொடுத்த, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் போட்டி நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மைதானங்கள் மற்றும் விளையாட்டு கிராமம் முழுமையாக தயா ராகாததால், பெரும் பிரச்னை எழுந்துள் ளது.

இந்தச் சூழலில் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, இந்தியா லஞ்சம் கொடுத்த விபரத்தை ஆஸ்திரேலிய பத்திரிகை “தி டெய்லி டெலிகிராப்’ அம்பலப்படுத்தியுள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி: காமன்வெல்த் விளையாட்டை 2010ல் நடத்துவதற்கான நாட்டை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு கடந்த 2003ல் ஜமைக்காவில் நடந்தது. அப்போது இந்தியா(டில்லி) மற்றும் கனடா(ஹாமில்டன்) இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மற்ற நாடுகளின் ஆதரவை பெற, அவற்றுக்கு தலா ரூ. 32 லட்சம், லஞ்சமாக கொடுக்க கனடா முன் வந்தது.

ஆனால், இந்தியா சார்பில் 72 உறுப்பு நாடுகளுக்கு பயிற்சி திட்ட உதவி என்ற பெயரில், இரண்டு மடங்காக தலா ரூ. 64 லட்சம் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ. 46 கோடி செலவு செய்தது. இத்தொகையை பெற்ற சிறிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் இந்தியா, கனடாவை 46-22 என்ற கணக்கில் வீழ்த்தி, போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற்றது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

அனாமதேய தொலைபேசி அழைப்பினால் 27பேர் பலி – புலிகளுக்கு தொடர்பா !! – அதிர்ச்சி தகவல்.

Photobucket

இந்தியா மற்றும் இலங்கையில் அனாமதேய அழைப்பினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கைத்தொலைபேசி திரையிலே சிவப்பு நிறத்தில் வரும் சில எண்களை கொண்ட அழைப்புக்களுக்கு பதிலளிக்கும் போது அதிலிருந்து வரும் அதீத மீடிறன் (frequency) காரணமாக மூளை பாதிக்கப்பட்டு இறப்பதாகவும் இது வரை 27 பேர் இறந்திருப்பதாகவும் DD1 தொலைக்காட்சி செய்தி உறுதிப்படுத்தியதாக இலங்கையின் பல பாகங்களிலும் பரவலாக பேசப்படுகிறது.

7888308001

9316048121

9876266211

9888854137

9876715587          ஆகிய இலக்கங்களில் இருந்து தான் அந்த அழைப்புக்கள் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் இது வெறும் வதந்தியா உண்மையா என்பது பற்றி onelanka செய்தியாளர்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை.விடுதலைப்புலிகளின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியடையும் இந்த வேளையில் இந்திய,இலங்கை அரசுகளை பழிவாங்க புலிகள் ஆரம்பித்துள்ள புதிய தாக்குதல் (cyber attack) இதுவாக இருக்கலாம் என்று வேறு சிலர் பேசிகொள்கிரார்கள்.உண்மை வெளிவரும் வரை மக்கள் விழிப்பாக இருக்கவும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய onelanka.tk வலைப்பக்கத்தை பார்க்கவும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 5 Comments »

இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்கள் அதிகம்: ஐநா அறிக்கை

இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி மில்லியன் செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அபாரமான வளர்ச்சியை கண்டது.

கடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.

சர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐநா கூறி வருகிறது.

இதற்காக பல்வேறு வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் சுற்றுப்புற சுகாதாரத்துக்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை ஐநா வழங்கி வருகிறது.

உலகளவில் 110 கோடி மக்கள் முறையாக சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என ஐநா மதிப்பிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பூமியின் எல்லா மக்களுக்கும் சுகாதாரமான கழிவறைகள் கிடைக்க வேண்டும் என்பதே ஐநாவின் குறிக்கோள்.

ஆனால், இந்தியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், சுற்றுப்புற சுகாதாரத்தில் பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று ஐநா பல்கலைக்கழக இயக்குனர் ஸாபர் அடீல் தெரிவிக்கிறார்.

உலகின் பாதி மக்கள் தொகையினர் முழுமையான சுகாதார கழிவறைகளை பயன்படுத்துவதற்காக 2015ம் ஆண்டுக்குள 358 பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்க ஐநா முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »