யாழ்ப்பாண சாதிக் கொடுமைக்கு கனடாவில் ஐந்து வருட கடூழிய சிறை!

இவ்வளவு நாகரீகம் மற்றும் தொழினுட்பம் வளர்ச்சியடைந்த காலத்திலும் ஏன் வெளிநாடு சென்றும் கூட சில முட்டாள் யாழ்ப்பானதார்களுக்கு சாதி வெறி மாறவில்லை.
யாழ்ப்பாணத்து சாதிக் கொடுமையால் மகளின் காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளது.

இளைய மகள், இளைய மகளின் காதலன், மூத்த மகளின் கணவன் ஆகியோரை 2007 ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி கௌரவக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றஞ்சாட்டி ஒன்ராரியோவில் உள்ள உயர்நிலை நீதிமன்றம் ஒன்றில்  Scarborough நகரவாசியான செல்வநாயகம் செல்லத்துரை ( வயது-47) என்பவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

இம்மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டை செல்வநாயகம் ஒப்புக் கொண்டார்.  இதனால் இவருக்கு எதிரான படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றுக் கொண்டு மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டில் திருத்தம் கொண்டு வந்தது.

இக்குற்றச்சாட்டுக்கு அதிக பட்சத் தண்டனை 14 வருட கடூழிய சிறை.  நேற்று இவ்வழக்கு தீர்ப்புக்காக நீதிபதி  John McMahon முன்னிலையில் வந்தது.  சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஆஜரான அரசுத் தரப்பு சட்டவாதி  குற்றவாளிக்கு ஆறு வருட  கடூழிய சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.

எதிரி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இவ்வழக்குக்காக அவரது கட்சிக்காரருக்கு ஐந்து வருட தண்டனைதான் வழங்க வேண்டும் என்று கோரினார்.  ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.

இவ்வழக்குக்காக ஏற்கனவே செல்வநாயகம் 11 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.  எனவே அவர் இன்னமும் 49 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளி மிகப் பாரிய குற்றச் செயலை இழைத்திருக்கின்றார் என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.  வழக்கின் தீர்ப்பு தமிழ் உரை பெயர்ப்பாளர் மூலம் குற்றவாளிக்கு நீதிமன்றில் உரை பெயர்த்துக் கூறப்பட்டது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தவறான நடத்தை காரணமாக யாழ் மாணவியின் இடைநிறுத்தம்!!ஓர் அலசல் அறிக்கை….

நேற்றைய தினம் பல புலம்பெயர் ஊடகங்களிலும் வெளியான ஒரு செய்தி.“தவறான நடத்தை காரணமாக சுண்டிக்குளி மாணவி பாடசாலையிலிருந்து இடைநிறுத்தம்“.இந்த செய்தியின் பின்னால் எமது இனத்தின் மனோநிலை எவ்வளவு பின்தங்கிய மற்றும் கேவலமானது என்று புரியும்.

அந்த புகைப்படங்களில் அப்படி என்ன தான் இருக்கிறது.அந்த மாணவி தனது காதலனை முத்தமிடுகிறாள்.இது வேறு யாரும் செய்யாத தவறா? இல்லை அந்த மாணவியை இடைநிறுத்தம் செய்த அதிபர் தான் செய்திருக்கமாட்டாரா?பிறகேன் இவ்வளவு பெரிதாக்கப்பட்டது இந்த செய்தி? புகைப்படம் வெளியாகி பாடசாலை பெயருக்கு களங்கம் ஏற்ப்பட்டுவிட்டதாம்.

அப்படி என்றால் அந்த புகைப்படத்தை வெளியிட்ட நபர்களை தேடி கைது செய்யவேண்டும்.ஆனால் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாத இந்த யாழ் சமூகம் ஒரு பெண்ணை இப்படி அநியாயமாக தண்டிக்கிறது.அந்த பெண் என்ன நித்யானந்தா போன்று காவி உடை போர்த்திவிட்டா இப்படி செய்தார்.அந்த வயதில் அனைவருக்கும் வரும் காதல் தான் இவருக்கும் வந்திருக்கிறது.ஏதோ துரதிர்ச்டவசமாக படம் இணையத்தில் வெளியானத்ர்க்காக இப்படியா இந்த சமூகம் தன் கோரமுகத்தை காட்டுவது? அப்படிஎன்றால் காதலிப்பதே தவறு என்று கூறவருகிரார்களா இந்த பாடசாலை நிர்வாகமும் ஊடகங்களும்.

காதலிக்கும் போது தன் துணையை முத்தமிடாதவர்கள் எத்தனை பேர் நீங்களே உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.புலம்பெயர்ந்தவர்களே உங்களுக்கு நன்றாக தெரியும் உங்கள் பெண்பிள்ளைகள் எவ்வாறான உடைகளுடன் நைட் கிளப் கலீல் அதிகாலைவரை கண்டவனுடனும் குடித்துவிட்டு ஆட்டம்போடுகிரார்கள் என்று.இந்த மாணவி ஒரு மாணவனை காதலித்து அவனுக்கு முத்தம் கொடுத்தால் வலிக்கிறதா உங்களுக்கு?அங்கெ உங்கள் பெண்கள் பல காதலர்களுடன் ஆட்டம் போடுவதற்கு இட வசதி பூங்கா விடுதிகள் தனி அறைகள் என்று எவ்வளவோ வசதயுண்டு.ஆனால் யாழ்ப்பாணத்தில் காதலர்கள் தனியாக பேசிக்கொள்ள நாகரிகமான இடம் ஏதுமுண்டா?அப்படி ஏதும் இருக்கத்தான் விட்டுவிடுவீர்களா?உங்களைபோருத்தவரையில் வெளியில் தெரியாமல் எத்தனை பேரோடும் சுற்றலாம் அதெல்லாம் கலாசாரம்.ஒருவனை காதலிப்பது வெளியில் தெரிந்தால் அது கலாச்சார சீரழிவா?

உங்கள் பிள்ளைகள் அங்கு செய்தால் இதை விட கேவலமான செயல்களை எல்லாம் பார்த்துக்கொண்டு மௌனிகளாக இருக்கும் நீங்கள் யாழ்ப்பாணத்தில் ஏதும் நடந்தால் மட்டும் கலாச்சார காவலர்களாக கொதிப்பது ஏனோ? அந்த பாடசாலை அதிபர் தான் அறிவுகெட்டு இடைநிறுத்தம் செய்தால் வெளியிலிருக்கும் சில புத்தி(கெட்ட)ஜீவிகள் அந்த மாணவனையும் இடைநிறுத்த வலியுருத்துகிரார்கலாம்.எந்த உலகத்தில் இருக்கிறார்கள் இவர்கள் !! நினைத்தாலே வேதனையாகவும் சிரிப்பாகவும் உள்ளது.

அன்புள்ள யாழ் மாணவ மாணவியர்களே எம்மைபோன்ர ஒரு சகோதரிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்து நாம் தான் குரல் கொடுக்க வேண்டும்.சுண்டிக்குளி மாணவிகளே அந்த மாணவி திரும்பவும் இணைத்துக்கொள்ளப்படும் வரை நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்.
எமது கருத்திலுள்ள நியாயத்தன்மையை புரிந்துகொள்ளும் ஊடக நண்பர்களே இந்த அறிக்கையை மீள்பிரசுரம் செய்து அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க உதவுங்கள்.

உண்மையுடன்,

யாழ் மாணவர்கள் குழுமம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 9 Comments »

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…!!!

ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.

பாதிக்கப்பட்டவர்
இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.

Photobucketஇதை அவர் என்ன நோக்கத்திற்காக செய்தாரென்பது அவருக்குத் தான் வெளிச்சம் ஆனால் இதனால் பத்திற்கு மேற்பட்ட வறியவர்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இதற்கு அசின் பதில் கூற முடியாது தான் அப்படியானால் யார் பதில் கூறுவது. அப்படியானால் செய்த மருத்தவரின் கழுத்தைப் பிடிப்போமா..? (அவர் ஒப்பம் அருகே காட்டப்பட்டள்ளது)

அந்தப் பெரியவரை அணுகிய போது அவர் பல விடயங்களைச் சொன்னார். எனக்கும் அந்த ஒலிப் பதிவை இணைக்கத்தான் விருப்பம் ஆனால் அதை கேட்க முடியாது. அவற்றில் சிலதை கத்தரித்து எழுதுகிறேன் எங்களுக்கு அசின் பார்க்க வரும் போது தான் தெரியும் அவர் தான் இதை செய்வீக்கிறார் என்று. முதலில் அரசாங்கம் செய்வதாகத்தான் நான் நினைத்தேன்.Photobucket

2) இது இந்திய அரசாங்கத்தின் சதி 87 ல் ஒப்பரெசன் லிபரேசன் என்று வந்து எங்களைக் கொன்றார்கள். ராஜீவ் செத்தும் திருந்தல இப்ப இப்படி வாறாங்கள்…
இப்படி பல தமிழில் சொன்னார். அவருடன் சம்பவம் சம்பந்தமாக மேலும் கேட்டபோத  “எனக்கு ஒப்பேசன் நடந்து அடுத்த நாள் பலரை விடுவித்தார்கள். எனக்கு முழுதாகப் பார்வை வரவில்லை. எனக்கு மட்டுமல்ல பலருக்கு இதே நிலைதான். என் மகன் தான் எனக்கு துணைக்கு நின்றார் சிலருக்கு யாருமே இல்லை. மருத்துவரைக் கேட்டபோது இது மருந்தின் விளைவு தான் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றார் மறு நாள் ஓரளவு சரி வந்தது ஆனால் பார்க்க முடியாது இருந்தது. இப்போது ஒன்றுமே தெரியவில்லை இப்படி பத்துப்பேருக்கு மேல் இருக்கிறொம். இறுதியாக கிளினிக்கில் டொக்ரர் சொன்னார் லென்ஸ் மாற்றி வைத்துவிட்டார்கள் மாற்ற வேண்டும் 4500 ருபாய் கட்டுங்கள் கட்டினால் ஒப்ரெசனுக்கான டேட் (திகதி) தாறன் என்கிறார். அவரிடம் தனிப்பட செய்தால் 25000 ரூபா தேவைப்படும் கட்டினால் மறு நாளே செய்து கொள்ளலாம்” இப்படிச் சொன்னார் அனால் அவரிடம் 4500 ரூபாய் கூட இப்போது இல்லை போல் தான் தெரிகிறது.
இதற்கு முடிவென்ன..?
யார் பதில் சொல்லப் போகிறீர்கள்…?
தமிழராகிய எங்களால் இதற்கு என்ன செய்ய முடியும்…?
தயவு செய்து சிந்தியுங்கள். இவர் ஏற்கனவே வன்னிப் போரில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். இவரிடமும் பணம் இல்லை. இராமருக்கு உதவிய அணில் போலாவது ஏதாவது செய்யுங்கள். இந்தத் தகவலை உலகிற்கு சேருங்கள் முடிந்தால் சம்பந்தப்பட்டவருக்குச் சேருங்கள். இது எம் உறவுக்கு ஏற்பட்டுள்ள அவலம் என்பதை மறக்க வேண்டாம்.
இதற்கு சகல பதிவர்களும், வாசகர்களும், இணையத்தள உரிமையாளர்களும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

Note :- இதற்கு பிறகும் காவல்காரன் உட்பட எந்த அசின்  படத்தைஆவது பார்க்க திரைஅரங்கு செல்விர்களானால் நீங்கள் மனிதாபிமானமுடைய மனிதர்களே அல்ல

நன்றி ,

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 3 Comments »

தமிழர்களைப் பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை: அசின் – வீடியோ இணைப்பு

Photobucket

தன்னை தமிழ் திரையுலகினர் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், தான் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவது இல்லை என்றும் அசின் தெரிவித்துள்ளார். தான் அரசியல்வாதி இல்லை, ஒரு நடிக்கை என்று தன்னைக் கூறிக்கொண்டு, இலங்கை சென்ற அசின் தற்போது, மகிந்தவின் மனைவியுடன் பிசினாக ஒட்டி, பல இடங்களுக்குச் சென்று, ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு ஆதவு தேடிக்கொடுத்துக்கொண்டுள்ளார். யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகைக்கு ஒன்றுக்கு அவர்கொடுத்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டையும், தமிழ் திரையுலகத்தினரையும், தமிழ் ரசிகர்களையும் தூக்கி எறிந்து துடசமாக மதித்து இவர் பேட்டியைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் நடிப்புத்துறை ஜாம்பவான்கள் அமிதாப் பட்சன், ரஜனி போன்ற நடிகர்களே திரைப்பட விழாவைப் புறக்கணிக்க அசின் இவ்வாறு நடந்துகொள்வது, தமிழ் நாட்டில் எவ்வாற தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேணும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது

எதிர்வரும் சிறீலங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுவே எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற கட்டுரை உண்மைக்குப் புறம்பானது.

<!–

செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்
15.03.2010

கடந்த 14.03.2010 அன்று சில தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும். மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது. அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது.

மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒன்று இருந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.

திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்கு தமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன். வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.

புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.

கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.
இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல.

கடந்த 12.03.2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13.03.2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.

எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்


விளம்பரங்கள்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

மஹிந்த ராஜபக்ஷக்கு ஒரு சந்தர்ப் பத்தை கொடுப்பதில் என்ன தவறு? அதனால் நாம் எதை இழக்கப்போகிறோம்-டக்ளஸ்

Photobucketஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவருக்கு இன்னொரு சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கான முழுப்பொறுப்பையும் ஈ.பி.டி.பி. ஏற்றுக்கொள்ளும். அதனை நான் உறுதிபடக் கூறுகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, நேற்று யாழ்.ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள தனது கட்சியின் அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷக்கு வாக்களிக்க வேண்டும் என எமது மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனால் கிடைக்கும் பெறுபேறுகளுக்கான முழுப்பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொள்ளுவோம்.

இனிவரும் காலங்களில் இணக்க அரசியல் மூலம்தான் நாம் எமது உரிமைகளைப் பெறவேண்டும். கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியிலும், ஆயுதப் பலம் மூலமும் நடத்தப்பட்ட போராட்டம் எமக்கு எதனையும் பெற்றுத்தரவில்லை. மாறாக எம்மிடம் உள்ள அனைத்தையும் நாம் இழந்து இப்போது எமது மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இணக்க அரசியல் என்பது அடிமைத்தன அரசியல் அல்ல.ஜனாதிபதி சந்திரிகா தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்த போது பல்வேறு தடைகள் இருந்தன. ஆனால் இப்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்தத் தடைகள் இல்லை. அதற்காக அவருக்கு நாம் இன்னொரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதனை விட்டு புதிய ஜனாதிபதியாக ஒருவரைத் தெரிவு செய்வதன் மூலம் அவரிடம் தீர்வு எதனையும் நாம் எதிர்பார்க்க இயலாது.

மஹிந்த ராஜபக்ஷக்கு ஒரு சந்தர்ப் பத்தை கொடுப்பதில் என்ன தவறு? அதனால் நாம் எதை இழக்கப்போகிறோம். சரத் பொன்சேகா எமது பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் யார் பொறுப்பு? மஹிந்த ராஜபக்ஷ தீர்க்காவிட்டால் அதற்கு நாம் பொறுப்பு

சூரிச் மாநாட்டின் பின்னணியில் பிரிட்டன்

சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் இடம் பெற்ற மாநாடு பிரித்தானியத் தமிழ் அமைப்பு ஒன்றினாலேயே நடத்தப்பட்டது. அதன் பின்னணியில் பிரித்தானிய அரசு இருந்ததெனக் கூறப்பட்டது.

தற்போது ஆட்சியில் உள்ள இலங்கை அரசை கவிழ்விப்பதற்கான திட்டம் தான் இந்த மாநாடு. அந்த மாநாட்டில் சரியான நிகழ்ச்சி நிரல் இல்லை. எமது பிரச்சினைகளைப் பற்றி பேசு வதற்கு வெளிநாட்டவர் நிகழ்ச்சி நிரல் போட முடியாது.

கடந்த காலங்களில் நடை பெற்ற சமாதானப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தமைக்கு வெளிநாடுகள் நிகழ்ச்சி நிரல் தயாரித்தமையே காரணம். அந்த சூரிச் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை முன் வைத்தனர். எல்லோரும் சேர்ந்து ஒரு கருத்தை முன்வைக்க முடியவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து ஆரம்பித்துப் படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற கருத்தையே நான் முன்வைத்தேன்.

நாம் எடுத்த உடனே புரியாணி கேட்கமுடியாது. முதலில் எமது வயிற்றுப் பசிக்கு கஞ்சி வேண்டும். அதனைக் குடித்துக் களைப்பாறிய பின்னர் சோற்றைக் கேட்கலாம். அதன் பின்னர் புரியாணி கேட்கலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அரசுடன் பேரம் பேசியுள்ளார். நான் இலங்கைக்குத் திரும்பிவரக் கூடிய நிலையை ஏற்படுத்தினால் அரசுக்கு ஆதரவு வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஐக்கியம் இல்லாமையால் அனைவரும் ஒன்றிணைந்து பேரம் பேச முடியாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் நாம் ஐக்கியப்பட்டு நின்றும் என்ன நடந்தது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஐக்கியப்பட்டார்கள். ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் ஐக்கியப்பட்டார்கள். எதைச் சாதிக்க முடிந்தது?

ஆயுதப் போராட்டம் எமது மக்கள் அனைத்தையும் இழந்து கையேந்தும் நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . Leave a Comment »