முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் !

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மிஷ்கினின் யுத்தம் செய் சிறுத்தையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யின் காவலன் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் வெளியான விஜய் படங்களில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிரண்டு இடங்களைப் பெறாமல் பின்தங்கிப்போன ஒரே படம் காவலன் என்பது கவலைதரும் விஷயம்.

5. ஆடுகளம்
வெற்றிமாறனின் ஆடுகளம் சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 18.93 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 3.01 கோடிகள்.

4. காவலன்
நான்காவது இடத்தில் காவலன். இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 2.83 கோடிகள். ஆடுகளத்தைவிட குறைவு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 22.5 லட்சங்கள்.

3. தூங்காநகரம்
சென்ற வாரம் வெளியான தூங்காநகரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் மூன்று தின வசூல் 28.64 லட்சங்கள்.

2. சிறுத்தை
சிவா இயக்கியிருக்கும் சிறுத்தைக்கு இரண்டாவது இடம். இதன் சென்ற வார இறுதி வசூல் 32.44 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 3.73 கோடிகள். பொங்கலுக்கு வெளியான படங்களில் இந்தப் படமே சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் அதிக கலெ‌க்சனை‌ப் பெற்றுள்ளது.

1. யுத்தம் செய்
மிஷ்கினின் இந்தப் படம் முதல் வாரத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளியான முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 34.07 லட்சங்கள்.

Source : Webdunia

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 Comments »

வெளிவராத உண்மை – கிருத்திகா கர்ப்பம்!!

Photobucketஉதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி கர்ப்பமாகவுள்ளார் என்ற விடயத்தை இதுவரை எந்த இணையமோ பத்திரிகையோ கண்டறியாத நிலையில்.இந்த தகவலை கண்டறிந்து முதன் முதலில் வாசகர்களுக்கு தருவதன் மூலம் தனது சாதனை பயணத்தை தொடர்கிறது Onelanka.tk .

அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு  பாதிப்பு ஏற்ப்படாமல் கீல்ஸ் உள்ள பாதணி அணியாமல் சாதாரண பாதணி ஒன்றுடன் அவர் நிகழ்வுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

kiruthika

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 Comments »

Box office இல் பின்தங்கிய காவலன்….

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வார இறுதியில் ஆடுகளத்தை இரண்டாமிடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது, கார்த்தியின் சிறுத்தை. வெளியானது முதல் மூன்றாவது இடத்திலேயே உள்ளது விஜய்யின் காவலன்.

காவலன் சென்ற வார இறுதியில் 47.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த சென்னை வசூல், 1.51 கோடி.

இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆடுகளம் சென்ற வார இறுதியில் 49.07 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான ஆடுகளத்தின் சென்னை வசூல், 1.70 கோடி.

சிறுத்தை சென்ற வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 62.51 லட்சங்கள். காவலன், ஆடுகளம் இரண்டையும்விட மிக மிக அதிகம். இதுவரையான சிறுத்தையின் சென்னை வசூல், 1.98 கோடி.

சென்ற வார இறுதி வசூலில் மட்டுமில்லாது மொத்த வசூலிலும் விஜய்யின் படம் பின்தங்கியே உள்ளது. பாக்ஸ் ஆஃபிஸின் நான்காவது இடத்தை இளைஞனும், ஐந்தாவது இடத்தை மன்மதன் அம்பும் பிடித்துள்ளன.

Source :  webdunia.com

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

விஜயின் காவலன் பற்றி மனம் திறந்த கமல்…(video)

விஜய் பற்றி கமல் ரொம்ப அருமையாக சொல்லி இருக்கார் …!!

 

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

விஜயை கேவலமாக கிண்டல் செய்த TR (Video)

விஜய்  கலைஞர் குடும்பத்துக்கும் சன் பிக்சர்சுக்கும் ஊதுகுழலாக பல மேடைகளிலும் அவர்களை பாராட்டி பேசிவிட்டு இப்பொழுது அவர்களால் தன படத்துக்கு தடை என்றதும் அவர்களை தாக்கி பேசுவதாக விஜயை பற்றி கேவலமாக கிண்டல் செய்துள்ளார் TR. இறுதியில் காவலன் வெளியிட முடியாமல் திண்டாடிய வேளையில் தனது குறள் மற்றும் சிலம்பு திரையரங்குகளில் காவலன் படத்தை வெளியிட்டு உதவியதால் தான் இந்த படத்தை வெளியிட முடிந்ததாகவும் T.ராஜேந்தர் தனது நேர்காணலிலே குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 9 Comments »

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் – முதலிடத்தில் ஆடுகளம்..

NOTE:-

Cinesnacks.com என்ற விஜயின் அடிவருடி தளமொன்று காவலன் முதலிடம் என்று வழங்கி வரும் நிலவரத்தை நம்பி வாசகர்கள் குழம்ப வேண்டாம்……..இது தமிழ் வெப்துனியா என்ற நம்பிக்கையான தளத்திலிருந்து கிடைத்த தகவல்…

Click Here For Evidence

5. மன்மதன் அம்பு

கமலின் இந்தப் படம் சுமாரான வசூலையே பெற்றிருக்கிறது. மூன்று வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 4.57 கோடிகள். சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 5.5 லட்சங்கள் மட்டுமே.

4. இளைஞன்

நொடிக்கொரு விளம்பரம் செய்தாலும் பார்வையாளர்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு இப்படம் சாட்சி. கருணாநிதியின் கதை வசனத்தில் தயாரான இந்தப் படம் வெளியான முதலிரண்டு தினங்களில் 9.12 லட்சங்களை மட்டுமே வசூல் செய்து 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

3. காவலன்

தடைகளை கடந்து வெளியாகியிருக்கும் காவலனுக்கு விஜய்யின் முந்தையப் படங்களைவிட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. முதலிரண்டு தினங்களில் காவலன் சென்னையில் சம்பாதித்தது 51.15 லட்சங்கள்.

2. சிறுத்தை

இந்த கமர்ஷியல் புளிப்பு மிட்டாய்க்கு எல்லா சென்டர்களிலும் ஆரவார வரவேற்பு. இந்தப் பொங்கலின் கலெ‌க்சன் மாஸ்டராக இதுவே இருக்கும் என்கிறார்கள். முதல் மூன்று தினங்களில் இப்படம் வசூலித்தது 68.72 லட்சங்கள்.

1. ஆடுகளம்

இயக்குனரைப் பார்த்து ரசிகர்கள் திரையரங்குக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்கு ஆடுகளத்தின் ஓபனிங் கலெ‌க்சனே சாட்சி. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இப்படம் முதல் மூன்று தினங்களில் 69.97 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 4 Comments »

அசின் நடிப்பில் வெளிவரும் காவலன் படத்தை புறக்கணிப்போம் தமிழர்களே!

அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே! வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம்.

முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின். பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார்.

எல்லாவற்றையும் விட கொடுமையான விடயம் எதுவெனில் ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரை பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூறியதாக அசின் பேட்டிகளில் கூறினார்.

இதில் இருந்து சிங்களம் செய்ய நினைக்கும் பரப்புரை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

ஆம். தமிழினத்தை அனைத்து விதமான போதைக்குள்ளும் வைத்திருக்க விரும்பும் சிங்களம் தன் முதற் பார்வையே நடிகைமேல்தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் எனவும் அதை விடுதலைப்புலிகள் தடுத்ததாகவும் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள்.

இது ஒரு நடிகைக்கு எதிரான பிரச்சாரம் அல்ல பேரினவதாத்தின் தந்திரத்திற்கு எதிரான பிரச்சாரம்.

சற்று யோசித்துப் பாருங்கள் பல பல கோடிகள் திட்டங்களோடும் உதவிகளோடும் சென்ற இந்திய குழுவோடு கூட ஜ திருமாவளவன், கனிமொழி, பாலு போன்றோர் சென்ற போது ஜனாதிபதியோ அல்லது பிரதமரே ஏன் முதலமைச்சர்கூட அவர்களோடு செல்லவில்லை.

ஆனால் இந்திய அளவில் கூட புகழ் பெறாத ஒரு நடிகையோடு அவர் சென்ற இடம் முளுவதும் அந்த நாட்டின் முதற் பெண் அதாவது ஜனாதிபதியின் மனைவி உடன் சென்று வந்த்தன் மர்மம் என்ன?.

அசினோடு சென்ற சல்மான் கானுக்கோ அல்லது உண்மையில் உதவிகள் செய்த விவேக் ஒபராய்க்கோ கூட இந்த கௌரவங்கள் வழங்கப்படவில்லை.

அதோடு அசினால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் என கூறப்படுவோர்க்கு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக கண் பார்வை பறிக்கப்பட்டுள்ளது சிகிச்சை எனும் பெயரால். சிறு வலி என்றாலும் கால்களை அகற்றியும் கைகளை அகற்றியும் தமிழர்களை முடவர்களாக்கியுள்ளது சிங்கள அரசு.

இவைகள் அனைத்தும் சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கையே தவிர வேறில்லை. அதற்கு துணைபோகும் அனைவரையும் புறக்கணிப்போம்.

இப்படப் புறக்கணிப்பு ஒரு பாடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். ஏற்கனவே பல கடிதங்ளை தமிழ் நாட்டின் பல திரைப்பட சங்கங்களுக்கு அனுப்பியிருந்தோம் அசின் மன்னிப்பு கோருவார் என அவர்களால் சொல்லப்பட்டாலும் இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை. மாறாக மேலும் திமிராகவே காணப்பட்டார் அசின். உதவி செய்யவே சென்றேன் என்றவர் இயக்குனர் படப்பிடிப்பு இலங்கையில் வைத்த்தற்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன் என்றார்.

படப்பிடிப்புக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதியின் மனைவியே உதவி செய்வரா? ஆச்சரியமான நாடுதான் இலங்கை. இலங்கை அரசின் ஊதுகுழல்கள் அனைவரையும் துடைத்தெறிவோம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »