வெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா

Photobucketபல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இன்று காலை களனி- கிரிபத்கொடையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து தலைக்குää வயிற்றுக்கு, உடம்புக்கு என மருந்து கொடுப்பதைப் போலவே எனக்கும் கொடுக்கத் தெரியும். அதே போலி வெறிநாய்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து என்னவென்பது குறித்து எனக்கு மட்டுமே தெரியும். தேவையானவர்கள் களனிக்கு வாருங்கள். போதாதற்கு களனி கங்கையும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக களனி பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த பிரதியமைச்சர், அதற்கான ஆதரவை வழங்க தான் என்றும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

சமுர்த்தி உத்தியோகத்தரை மாடு போல் மரத்தில் கட்டிவைத்த அமைச்சர் மேர்வின் சில்வா……சொன்னதை செய்து காட்டினார் .- படம் இணைப்பு.

Photobucket
Photobucket

பிரதி அமைச்சர் மேவின் சில்வா, அரச பணியாளரான சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரம் ஒன்றில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான களனி பிரதேச சபை மைதானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டம், ஒன்று தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக அமைச்சர் ஐந்து அதிகாரிகளை அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் அதில் நான்கு அதிகாரிகளே வந்திருந்தனர். ஒருவர் வருகை தரவில்லை.

இதனையடுத்து அவரை அழைத்த அமைச்சர் மேவின் சில்வா, அவரை மரம் ஒன்றில் கட்டி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவை கேட்டபோது, குறித்த அதிகாரி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலுக்கு வராமை காரணமாக மக்கள் கோபமடைந்திருந்தனர்.

இந்தநிலையில் தம்மால் அழைக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரை பொதுமக்கள் தாக்கி காயப்படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தினாலேயே அவரின் பாதுகாப்பு கருதி அவரை மரம் ஒன்றில் கட்டிவைத்ததாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

சரத் பொன்சேகாவை சுட்டுக் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அலவாங்கில் ஏற்றிக் கொல்ல வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுகிறேன்-மேர்வின் சில்வா

தேசத் துரோகியான சரத் பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டுமெனத் தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, சிங்கள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இராஜத் துரோகிகளுக்கு இவ்வாறுதான் தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

மாத்தளை மாவட்ட அபிவிருத்தி ஒன்றிணைப்புக் குழுக்களின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது அங்கு திடீரென வருகை தந்து உரையாற்றுகையிலேயே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு பேசுகையில் மேலும் கூறியதாவது;

பிரபாகரனை எவ்வாறாயினும் கொன்றொழிக்க வேண்டும் என முதலில் கூறியவன் நான். அதேபோல் சரத் பொன்சேகாவின் பிரசாரக் கூட்டம் களனியில் நடைபெற்றபோது கூக்குரல் இட்டவனும் நானே.

தேசத் துரோகியான சரத் பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டும்.

பிரித்தானிய அரசாங்கம் இலங்கை இராணுவம் தொடர்பாக விவாதம் ஒன்று நடத்த வேண்டுமென்று கோரியுள்ளது. இதற்குக் காரணகர்த்தா யார்? சரத் பொன்சேகாதான்.

நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும். எமது நாட்டிலிருப்பது ஐந்து நட்சத்திர ஜனநாயகம்.

சரத் பொன்சேகாவை சுட்டுக் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அலவாங்கில் ஏற்றிக் கொல்ல வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுகிறேன்.

இராஜத் துரோகிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைதான் இது.சிங்கள மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வாறுதான் மரணதண்டனைகள் வழங்கப்பட்டன.

காலை வாரிவிடுவது, சதிநாசம் செய்வது, நாட்டைக் காட்டிக் கொடுப்பது என்பது மிகவும் மோசமான துரோகமாகும். இத்தகையோருக்கும் உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை வெற்றிகரமாக அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.

நமது நாட்டை ஆட்சி செய்த வலகம்பாகு அரசன் உட்பட மகா பராக்கிரமபாகு அரசர்கள் உள்ளிட்ட பல சிங்கள அரசர்கள் இவ்வாறு உரிய தண்டனைகள் விதித்துத்தான் நட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றமையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »