13 வயது சிறுமியை திருமணம் செய்த நைஜீரிய செனட்டருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Photobucket

நைஜீரியாவில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட செனட்டர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த செனட்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நைஜீரிய பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 49 வயதான அஹமட் சானி யர்மியா என்ற செனட்டரே இவ்வாறு 13 வயது சிறுமி ஒருவரை அண்மையில் தலைநகர் அபுஜாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியையே குறித்த செனட்டர் கரம் பற்றியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண் செனட்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த திருமணம் தொடர்பில் நைஜீரிய மனித உரிமை அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இந்த திருமண வைபவம் குறித்து குறித்த செனட்டர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

குறித்த எகிப்திய சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக அஹமட் சானி யர்மியா என்ற செனட்டர் சிறுமியின் குடும்பத்தாருக்கு வரதட்சணை வழங்கியுள்ளதாக பெண் செனட்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2003ம் ஆண்டு சிறுவர் உரிமைகளை மீறும் வகையில் சானி செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டில் குறித்த அதே செனட்டர் 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்திருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

மீண்டும் சுயம்வரம் நடத்த ஆசை!-ராக்கி சாவந்த்

Photobucket“முதல் சுயம்வரத்தில் சிக்கிய மாப்பிள்ளை சரியான சுயநலப் பேர்வழி… எனவே மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்தி நல்ல மாப்பிள்ளையைத் தேர்வு செய்ய விரும்புகிறேன்” என்று இந்தி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை சுயம்வரம் நடத்தி தேர்ந்தெடுக்கப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார். உடனே அவரை மணக்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவர்களில் மூவரைத் தேர்வு செய்த ராக்கி, இவர்கள் மூவரையுமே பிடித்திருக்கிறது என குண்டு போட, அதிர்ந்தனர் கலாச்சார காவலர்கள். ஒருவழியாக அரைகுறை மனசோடு, எலேஷ் என்பவரை தேர்வு செய்தார். நிச்சயதார்த்தம் நடந்தது. எலேஷைப் பார்க்க கனடாவுக்குக் கூட சென்றார் ராக்கி. போய் வந்தபிறகு எலேஷை உதறித் தள்ளிவிட்டார் ராக்கி.
என்ன காரணம்?
எலேஷ் முதலில் தன்னை ஒரு பணக்காரர் என்று கூறினார். ஆனால் உண்மையில் அவர் ஒரு பெரும் கடன்காரர். இரவு விடுதிகளுக்குப்போய் பணத்தைத் தொலைக்கும் ஆசாமி. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் இவ்வளவும் எனக்குத் தெரிந்தது. வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதை வேறு பெருமையாக என்னிடம் கூறினார் எலேஷ். இன்னொரு பக்கம் அவரது குடும்பத்தினர் என்னை வேண்டா வெறுப்பாகவே பார்த்தனர். அவர்கள் யார் என்னை வெறுக்க… எனவே நானே வெறுத்து ஒதுக்கி விட்டேன் அவர்கள் அனைவரையும். என் கண்ணசைவுக்கு எத்தனையோ இளைஞர்கள் காத்திருக்க இந்த ஓட்டாண்டிக்காக நான் இத்தனை அவமானப்பட வேண்டுமா என்ற நினைப்பே எனக்கு தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்த ஆசையாக உள்ளது. முன்பு நான் சுயம்வரம் நடத்திய போது என்னை யாரும் உண்மையாக திருமணம் செய்ய விரும்பவில்லை. எல்லோரும் எனது பணம், பரிசுக்கு தான் ஆசைப்படுகிறார்கள். அப்படியில்லாமல் என்னை நேசிக்கும் இளைஞர் எனக்கு வேண்டும். இந்த முறை எனது பெற்றோர் உறவினர் துணையுடன் புதிய மாப்பிள்ளையைத் தேர்வு செய்வேன் என்றார். ஆக, பப்ளிசிட்டிக்கு ராக்கி ரெடி… காசு பார்க்க மீண்டும் தயாராகின்றன சேனல்கள்!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . Leave a Comment »