இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.
25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது,
நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில்,
உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.
ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.
மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.
விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு கை எழுத்துபோடுவதால் இவருக்கு என்ன குறைந்துவிடப்போகிறது? ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று சொல்லுவதில் இவருக்கு என்ன ஆட்சேபனை? இவர் உண்மையான தமிழனுக்கு தான் பிறந்தாரா? ஒரு கை எழுத்தை கூட தாங்கள் தனியாக அமைப்பு வைத்திருக்கிறோம் அதில் போடுவோம் என்று கூறி அதையும் அரசியல் ஆக்கும் விஜயும் அவரது அப்பாவும் கருணாநிதியி மிஞ்சி விட்டனர் துரோகத்தில்.
உலகம் முழுக்க திரண்டு ஓரணியாக கையெழுத்து இடும் இந்த நேரத்தில் அதில் கூட தமிழனை பிரித்தாளும் நோக்கத்தோடு முடியாது என்று சொன்ன இவர் இலங்கை அரசிடம் இருந்து எவ்வளவு கோடி வாங்கினார்.இவர் எல்லாம் அரசியலுக்கு வந்து தமிழனுக்கு என்ன செய்து விட போகிறார்? தமிழனுக்காக ஒரு கை எழுத்து கூட போடா முடியாத கருப்பு ஓநாய்!… அண்மையில் தமிழுணர்வு சார்ந்த கூட்டத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டு பின்னர் ஒரு கோடி உடனே செட்டில் செய்தால் தான் வருவேன் என்று இவர் அந்த நிகழ்ச்சியை இறுதியில் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது..
இனத்தை மொழியை மறந்து பணமும் பதவியும் தான் வாழ்க்கை என்று வாழும் இவர் போன்ற ஈனத் தமிழர்களை தலையில் வைத்து கொண்ட்டாடும் ரசிகர்களே உங்களுக்கு மானம் இருக்கிறதா.இன்றோடு தூக்கி எரிய வேண்டாமா இந்த துரோகியை உங்கள் நெஞ்சங்களில் இருந்து. எமக்கு தேவை இன மானமா இல்லை ஒரு சினிமா கூத்தாடியா?
நாளைக்கே செய்தியாளர் சந்திப்பு கூட்டி தி.மு.க சதி என்று சொன்னாலும் சொல்லுவார் சந்திரசேகர் இதை எல்லாம் கேட்க நாம் என்ன ஏமாளிகளா?
முடிவெடு தமிழா இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.
SATHYARAJ
SELVAMANI-ROJA FAMILY
MANIVANNAN
vijay