விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கிட ரஜினிக்கு கோரிக்கை

திரைத்துறை பிரச்சனை காரணமாக‌ தினமலர் ஆசிரியர் திரு.லெனின் கைது செய்யப்பட்டார். இதனால் வெகுண்ட சென்னை பத்திரிகை மன்றம் தங்கள் பிரதிநிதிகளை உடனே கூட்டி எதிர்ப்புக் குரல்களை வெளிப்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திலே நடிகர் நடிகையின் கீழ்த்தரமான ஆபாச பேச்சுக்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டன. இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய வின்டிவியின் நிர்வாக இயக்குனர் திரு.திருவே தேவநாதன் சினிமா துறையினரை ஒரு பிடிபிடித்தார். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்தின் பேச்சினை மேற்கோள் காட்டி சில செய்திகளை முன்வைத்தார்.

என்ன பேசினார் ரஜினிகாந்த்?

தினமலருக்கு எதிராக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் சினிமா நடிகைகள் யாரும் உல்லாசத்திற்காக விபச்சாரம் செய்வதில்லை என்றும் வயிற்றுப்பிழைப்பிற்காக மட்டுமே விபச்சாரம் செய்கின்றனர் என்றும் ஒப்புக்கொண்டார். எனவே இனிமேல் யாராவது விபசாரம் செய்து மாட்டிக்கொண்டால் அவர்களின் போட்டோக்களை பத்திரிகைகளில் போடாதீர்கள். அவர்கள் தங்கள் வழக்குகளை சட்டப்பூர்வமாக சந்தித்துக் கொள்வார்கள் என மிக அருமையாகத் தெளிவாக பேசி முடித்தார்.

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சினை மேற்கோள் காட்டிப் பேசிய தேவநாதன் ரஜினி சொல்வதைப் போல திரைத்துறையினர் வயிற்றுப்பிழைப்பிற்காக விபச்சாரம் செய்கிறார்கள் என்றால் ரஜினி நேரடியாக தமிழக முதல்வர் தலைவர் கலைஞரிடம் சென்று தனக்கிருக்கும் செல்வாக்கினைப் பயன்படுத்தி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க செய்துவிடட்டும். அதற்குப் பிறகு யார் விபச்சாரம் செய்தாலும் எந்த பத்திரிகையும்,தொலைக்காட்சியும் விபசாரம் செய்பவர்களைப் பற்றி கண்டுகொள்ளாது எனத் தெரிவித்தார்.

கொலை கொள்ளை சட்டப்பூர்வமாக‌வேண்டும்:

விபசாரம் எவ்வாறு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படுகின்றதோ அதேபோல கொலை மற்றும் கொள்ளையும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படவேண்டும். காரணம் கூலிக்காக கொலை செய்யும் கூலிப்படையினர் தங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காகச் செய்கிறார்களேயன்றி உல்லாசத்திற்காகச் செய்வதில்லை. அதேபோலத் தான் கொள்ளையடிப்பவர்களும் தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் எனவே அதையும் சட்டப்பூர்வமாக்கி விட்டால் அவர்களும் பயமில்லாமல் தங்கள் தொழிலை செய்வார்கள் என தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

விஜயகுமார் மற்றும் நமீதாவால் அழிந்த தொழிலதிபர்கள்:

அடுத்ததாகப் பேசிய நக்கீரன் ஆசிரியர் திரு.கோபால் நடிகர் விஜயகுமார் குடும்பத்தாலும் நடிகை நமீதாவாலும் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகிய பெரிய பெரிய தொழிலதிபர்களின் பட்டியல் தன்னிடம் ஆதாரப்பூரவமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய இந்தியத் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் திரு.S.M பாக்கர், அனைத்துப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஒட்டுமொத்தமாக சினிமாவைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் பேசி முடித்தார். அதன்பிறகு அனைவரும் உழைப்பாளர் சிலை அருகில் சென்று ஆர்பாட்டம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாநகர கமிஷனர் திரு.ராஜேந்திரனிடம் மனு கொடுத்து ஆபாசமாகப் பேசிய நடிகர்களை கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

கலைஞரை சந்தித்த சகீலா, மும்தாஜ்:

இதெல்லாம் ஒருபக்கம் நடந்து முடிந்தாலும் பத்திரிகை ஆசிரியரை கைதுசெய்ய காட்டிய வேகம் நடிக நடிகர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் துளிகூட ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே தினமலர் ஆசிரியர் கைது செய்யப் பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிக நடிகையர் தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்தி விட்டார்கள் என்ற கண்டனக் கூட்டத்திலும் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும் சென்ற நடிகைகளில் மிகவும் குறிப்பிடத் தக்கவர்க்ள் நடிகை மும்தாஜூம், நடிகை சகிலாவும்.

பாழடைந்த கொட்டகைகளில் பகலிரவு காட்சியாக படுக்கையறை பாலபாடம் படைத்த சமூகசேவகி சகிலா அவர்கள் தங்களை எவனோ ஒருவன் விபச்சாரி என்று சொல்லிவிட்டான் என்றும், அதேபோல பல திரைப்படங்களில் சமூக அக்கறை மற்றும் சமூக சிந்தனை கொண்ட புதுமைப்பெண்ணாக நடித்த நடிகை மும்தாஜ் அவர்கள் பெண்ணினத்தை இழிவுபடுத்தியவனை கைது செய்த‌தற்கு நன்றியும் சொல்லி வந்திருப்பது மிகமிக வரவேற்கத்தக்கது.

கற்பில் சிறந்தவர்கள் யார்?

திரைத்துறையினர் அவசரப்பட்டு விட்டார்கள். கொஞ்சம் பொறுமையாக‌ நடிகை பாபிலோனா,சர்மிளி அதுமட்டுமின்றி மளையாள உலகில் இருந்தும் மரியா,ரேஷ்மா,சிந்து ஆகியோரையும் வரவழைத்து கண்டனக் கூட்டம் நடத்தியிருந்தால் மேலும் கூட்டம் விறுவிறுப்பாகி இருக்கும். அதுமட்டுமின்றி நிகழ்சியின் நிறைவாக சாலமன் பாப்பையா தலைமையில் “கற்பில் மிகச் சிறந்தவர்கள் தமிழ் நடிகைகளா? மளையாள‌ நடிகைகளா? என பட்டிமன்றமும் வைத்திருக்கலாம்.

ரெயின்கோட்டு போட்டுக் குளிக்கும் பெண்கள்:

கூட்டத்திலே பேசியிருந்த விவேக் பத்திரிகையாளர்கள் வீட்டுப்பெண்களை மிகக் கேவலமாகப்பேசியிருந்தார். உன் அம்மா,அக்கா எல்லோரும் பாத்ரூமில் ரெயின்கோட் போட்டாடா குளிப்பார்கள்?அவர்களும் நிர்வாணமாகத் தானடா குளிப்பார்கள், அதை எடுத்து உன் பத்திரிகையில் போட்டுவியாபாரம் செய்யடா என பேசியிருந்தார்.

இனிமேல் சின்னக் கலைவானர் என்ற பட்டத்திற்கு அருகதையற்ற விவேக்குக்கு நாம் சொல்லிக்கொள்வது, குடும்பப் பெண்கள் ரெயின்கோட்டு போட்டுக் குளிக்கிறார்களா அல்லது போடாமால்குளிக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக தாழ்போட்டுத் தான் குளிக்கிறார்கள்.ஆனால் உங்கள் கற்புக்கரசிகளின் குளியலறைக்கு கதவும் கிடையாது, சுவரும் கிடையாது என்பதைபுரிந்துகொண்டு இனிமேல் பேசுங்கள்.

சில நாட்களுக்கு முன் இதே விபச்சார வழக்கில் மாட்டிய பாபிலோனாவிற்கும். சில வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் மாட்டிய நடிகை வினிதாவிற்கும் புரோக்கராக செயல்பட்டது அவர்களின் உடன்பிறந்த தம்பிகள் என்பது எல்லோரும் அறிந்தது தானே! இனியாவது விவேக் மற்றவர்களின் தாயையும், தமக்கையும், மனைவியையும் இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளட்டும். சினிமா உலகிலே விபசாரத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

அசத்தலான “எந்திரன்” உயர்தர படங்கள்

Photobucket
PhotobucketPhotobucket” alt=”” />
Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />
Photobucket” alt=”” />
Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 5 Comments »