பணத்துக்காக மாளவிக்காவை நித்தியானந்தாவுக்கு விட்டுகொடுத்தார் கணவர் !

Photobucketகாசு கொடுத்து மாளவிகாவை நடிக்க கூட்டி வந்த நித்யானந்தா !     கிட்டத்தட்ட  80  நாட்கள், வாயையையும் கையையும்  வைத்து சும்மா இருந்த நித்தியானந்தா  அல்லது இருக்க வைக்கப்பட்ட  ‘ரஞ்சிதா’ புகழ் நித்யானந்தா,இன்றே  தனது சொற்பொழிவை ‘FREEDOM’  என்ற தலைப்பில் ஆரம்பித்துள்ளார்.

இந்த சொற்பொழிவை காண பக்தர்கள் என்ற போர்வையில் ஆயிரம் பேரை கூட்டிவர அரசியல் கட்சிகள் தோற்கும் அளவிற்கு ‘காசு’ கொடுத்து உள்ளனர்.    பொது ஜனம் மட்டும் வந்தால் போதுமா ? ஒரு கவர்ச்சி வேண்டாமா ? மாளவிகாவின்  கணவரையே  நேரில் பேசி அவரிடமே ஒரு பெரிய சன்மானத்தை கொடுத்து , மாளவிகா கூட்டத்திற்கு மட்டும் (?) வந்தால் போதும் என்று சொல்லி  அழைத்து வந்து அவரை பக்தை போல் நடிக்க வைத்துள்ளனர்.

இதை பார்த்த சிலர் , மாளவிகாவும் நடிகை என்பதால், ரஞ்சிதாவை விசாரிக்கும் முன்பு இவரையும் விசாரித்தால்  ‘சில’ உண்மைகள் தெரியும்  என்று ஒரு திரியை பற்ற வைத்துவிட்டார்கள்.       காசு வாங்கிகொண்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என்று நினைத்திருந்த மாளவிகா , இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்று நிதியானந்தாவையே அணுகி கேட்டு வருகிறாராம்.       அப்பாடா ! எப்படியும் மாளவிகாவும் இனி நிதியானந்தாவை விட்டு வெளியில் வரமுடியாது என்று , நிதியானந்தாவிற்கு ‘சேவை’ செய்யும்  பக்தி இடைத்தரகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

PhotobucketPhotobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 5 Comments »

நித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு!

நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English

இந் நிலையில் இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ராம்நகர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பெண்கள் சிறையில் நித்யானந்தா அடைப்பு:
அவரை மே 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதின்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமநகர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நித்யானந்தா அங்கு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் பெண் கைதிகள் இல்லாததால் அவரை அங்கு அடைத்தனர்.

நான் ஆண் அல்ல..:

முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்த நித்யானந்தா, நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் எப்படி யாரையும் கற்பழிக்க முடியும் என்று கேட்டு கூறி அதிர்ச்சி தந்தார்.
இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால், அவரது பாஸ்போர்ட்டில் அவர் ஆண் கூறியுள்ளதையும், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளதாலும் ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டுவிட்டனர்.
இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆசிரமத்தில் சந்தனக் கட்டைகளை வைத்திருந்ததாக தாக்கலான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் தந்துள்ளது.
இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.டியில் இருப்பது நித்யானந்தா தான்-ஆய்வுக்கூடம்:
இதற்கிடையே நித்யானந்தாவிடம் விசாரணை நடத்தி வரும் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் பிடுதி ஆசிரமத்தில் இருந்து 36 வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்திருந்தனர்.
அதில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், விசாரணையின்போது, ரஞ்சிதா மற்றும் இந்த சிடிக்களில் இருப்பது நான் இல்லை நித்யானந்தா கூறினார்.
இதையடுத்து இந்த சி.டிக்கள் ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 4 நாட்களாக அங்கு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை இன்று பெங்களூர் போலீசார் கைக்கு வந்து சேர்ந்தது.
அதில், 35 வீடியோ காட்சிகளிலும் இருப்பது நித்யானந்தா தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சியில் தோன்றுவதும் நித்யானந்தா என்று ஆய்வகம் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

நான் ஆம்பிளையே இல்லை : சாமியார் நித்யானந்தா கதறல்[i’m not a man, Nityananda told CID sleuths]

‘நான் ஆண் மகனே இல்லை. யாரோ செய்த சதியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்’ என்று போலீஸ் விசாரணையில் சாமியார் நித்யானந்தா கதறி அழுதார் You might also like நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியான பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. அன்னிய செலாவணி மோசடி, தங்கம் கடத்தல் போன்ற புதிய குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால், அவருக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. 5 பெண்களுடன் தொடர்பு: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதாவுடன் மட்டுமின்றி மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்துள்ளன. சாமியாரிடம் விசாரணை நடத்தும் சி.ஐ.டி. குழுவுக்கு தலைமை வகிக்கும் எஸ்.பி. யோகப்பாவும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘‘பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, நித்யானந்தா 5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி.க்களை கைப்பற்றினோம். அவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதித்தோம். அது உண்மையான சி.டி.க்கள்தான் என உறுதியாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்கள் யார் என்று தெரிய வேண்டும்’’ என்று அவர் கூறினார். ஆண் மகன் இல்லை: நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை துருவித் துருவி விசாரணை நடத்தினர். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என்று வழக்கமான பாணியில் நேற்றும் அவர் கூறியதால் பொறுமை இழந்த போலீசார், விசாரணை முறையை சிறிது மாற்றி உள்ளனர். அதை சமாளிக்க முடியாத சாமியார், ‘நான் ஆம்பிளையே இல்லை… பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும்? போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்’ என்று குரல் தழுதழுத்தப்படி கூறியுள்ளார். அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், பெங்களூரில் உள்ள 4 மருத்துவமனைகளிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ராம் நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இப்போது போலீஸ் காவலில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பாக வனத்துறை தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார். ரஞ்சிதா வரவில்லை : நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் நடிகை ரஞ்சிதா, சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று மாலை வரை அவர் வரவில்லை. ரஞ்சிதா மற்றும் அவருடைய தந்தையின் செல்போன் எண்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி. போலீசார் அவற்றில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தன

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசார் திணறல்..!

நித்யானந்தா சாமியார், பெண் சீடர்களுடன் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது. இதற்கிடையில் தற்போது போலீஸ் காவலில் உள்ள நித்யானந்தா சோர்வாக இருப்பதால், அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட பல பெண்களுடன் தொடர்புபடுத்தி செக்ஸ் புகார் கூறப்பட்ட நித்யானந்தா சாமியார், இமாசல பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து வந்தார். பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்து பெங்களூர் அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, விசாரணைக்காக வருகிற 26-ந்தேதி வரை போலீசார் தங்கள் காவலில் எடுத்துள்ளனர். நேற்று பெங்களூரில் உள்ள சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்தில் நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை தொடங்கினார்கள்.

நேற்று காலை நித்யானந்தா பற்றி புகார் கொடுக்க 2 இளம்பெண்கள் சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. நித்யானந்தாவிற்கு போலீஸ் காவல் முடிந்த பின், வருகிற 26-ந் தேதிக்கு பிறகு புகார் கொடுக்க வரும்படி அந்த பெண்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

பிடதி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகள் பற்றியும், ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்டுள்ள முக்கிய ஆவணங்கள், சி.டி.க்கள், இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் நித்யானந்தாவிடம் சி.ஐ.டி போலீசார் நேற்று காலையில் விசாரணை நடத்துவதற்கு ஆயத்தமாகி இருந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமநகரில் இருந்து நித்யானந்தாவை பெங்களூருக்கு அழைத்து வந்ததால், நேற்று காலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் சோர்வாக இருந்ததால் காலை 11 மணி வரை நித்யானந்தா தூங்கி கொண்டு இருந்தார். இதனால் நித்யானந்தாவிடம் நேற்று சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடியாமல் திண்டாடினார்கள்.

அத்துடன் தன் மீது உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா சென்று விட்டார். இந்த காரணத்தினாலும் நேற்று நித்யானந்தாவிடம் விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். நித்யானந்தாவை இன்று (சனிக்கிழமை) அல்லது நாளை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில், ஆசிரமத்தில் உறுப்பினர்களாக சேரும் ஆண், பெண் சீடர்களிடம், நித்யானந்தா ரகசியமாக `செக்ஸ்` ஒப்பந்தம் போட்டு இருந்ததும் தற்போது அம்பலமாகி உள்ளது. ஆசிரமத்தில் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் நடத்திய சோதனையில் இதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.

10 பக்கங்கள் கொண்ட அந்த ஒப்பந்தத்தில், கடைசி இரண்டு பத்திகளில், ஆராய்ச்சிக்கு தேவைப்படும்போது `செக்ஸ்` உறவு வைத்துக்கொள்ள நேரிடலாம். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது. மேலும் அந்த ஒப்பந்தம் குறித்து எந்த சூழ்நிலையிலும் வெளியே சொல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தத்தில், “ஆண்-பெண் பரவச நிலை, நிர்வாண நிலை மற்றும் ஆன்மீகம், மகிழ்ச்சி, சுதந்திரத்தை அதிகரிக்கும் வகையில் `செக்ஸ்` உறவில் ஈடுபடுவது உள்ளிட்ட பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திர கலைகளை கற்பது மற்றும் நேரடி பயிற்சியும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இத்தகைய நடவடிக்கைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சவால்விடும் வகையில் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து நிபந்தனையற்ற ஒப்புதல் வழங்குவதாக அர்த்தம்“ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒப்பந்தத்தில் பெரும்பாலும் பெண்கள்தான் அதிக அளவில் கையெழுத்திட்டு உள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பெண்கள் சிலரும் கையெழுத்திட்டு உள்ளனர். அவர்களில் சிலர், ஒப்பந்தம் பற்றி வெளியே சொல்ல மாட்டோம் என்று உறுதி அளித்து உள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதால்தான், ரஞ்சிதா உள்ளிட்ட பல பெண்கள் நித்யானந்தாவின் லீலைகள் பற்றி வெளியே சொல்ல தயங்கியதாக கூறப்படுகிறது.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதைப்போல், மேலும் 5 பெண்களுடன் நித்யானந்தா `செக்ஸ்` தொடர்பு வைத்திருப்பதை விளக்கும் 35 `கிளிப்பிங்ஸ்`களைக் கொண்ட வீடியோ சி.டி.க்களும் ஆசிரம சோதனையின்போது சிக்கி உள்ளன.

அந்த 5 பெண்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்களிடம் வாக்குமூலம் பெறவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

இமாசலபிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நித்யானந்தா 4 சீடர்களுடன் கைது செய்யப்பட்டார். நித்யானந்தாவும், ஷீலம் ரெட்டியும் அந்த வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்வது கிடையாது. மற்ற 3 பேர்தான் அருகில் உள்ள மார்க்கெட்டுகளுக்கும், பிற இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

நித்யானந்தா தங்கி இருந்த வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 7 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 3 வீடியோ கேமரா, 3 லேப்- டாப் கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டன. போலீசார் இன்று நித்யானந்தாவை பெங்களூர் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது இளம்பெண் ஒருவர் பெங்களூர் கோர்ட்டில் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நித்யானந்தாவுக்கு முதலில் ஆண்மை பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் பெங்களூர் ஆஸ்பத்திரிரியில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறும். அதன்பிறகு மற்ற புகார்கள் மீதான விசாரணை தொடங்கும்.

சாமியாருக்கு பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும், அமெரிக்காவிலும் கோடிக் கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முடக்கவும் வங்கி கணக்குகளை சீல் வைக்கவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான உறவு), 295ஏ (மத உணர்வை புண்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்), 120 (கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வர முடியாத பிரிவுகள் ஆகும்.

எனவே நித்யானந்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபின் உடனே சிறையில் அடைக்கப்படுவார் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்படுவார்

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »