பெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி

கடைக்கு வந்த இளம்பெண்னின் முகத்தில் மயக்க ஸ்பிரே தெளித்து ஆபாச புகைப்படம் எடுத்த கடைக்காரரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூர் மூடளப்பாளயா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோகன் என்ற 35வயதுடைய ஆசாமி தனது கடைக்கு பொருள் வாங்க வந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து உட்கார செய்துள்ளார். பி.கொம் படிக்கும் அந்த 21வயது இளம்பெண் அசந்த நேரத்தில் மயக்கஸ்பிரே அடித்துள்ளார். பெண் மயங்கியவுடன் ஆடைகளை களைந்து ஆபாசப் படங்கள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சற்றுநேரத்தில் நினைவு திரும்பியதும் நிலைமையை உணர்ந்து அதிர்ந்த இளம்பெண்ணிடம் 1லட்சம் ரூபா கொடு இல்லையேல் ஆபாசப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மிரண்டு போய் வீட்டிற்கு வந்த பெண் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து பெண்ணி;ன் உறவினர்கள் அப்பகுதி பொதுமக்கள் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கடைக்காரரை வீதியில் இழுத்துப் போட்டு தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் சந்திரா லேஅவுட் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

காலியில் ஆபாச படத்தை காட்டி 5வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு கொள்ள 13வயது மாணவன் முயற்சி!

வீடியோ புகைப்படம் மூலம் ஆபாச படங்களை பிடித்த 13வயது பாடசாலை மாணவனொருவன் அதனை 5வயது மாணவிக்கு காண்பித்த பின்னர் சிறுமிமீது பாலாத்காரமாக பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சித்த போது சிறுமி போட்ட கூச்சலில் மாணவனை பொலிஸார் கைது செய்து காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் மாணவனின் பெற்றோர்களை நீதிமன்றத்திற்கு வரவரழைத்த நீதவான் கீதானி விஜேசிங்க மாணவனை கடுமையாக எச்சரித்ததோடு பெற்றோர்களையும் எச்சரித்து இச்சிறுவனை தவறாது ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதோடு ஆபாசபடங்களையும் பறிமுதல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய தாத்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்

கற்பழிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனையை அனுபவித்து வந்த 70 வயது தாத்தாவை, ஆன்மீகத்திலும், இறைவனிடத்திலும் மட்டும் கவனம் செலுத்துங்கள், இனிமேல் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுரை கூறி விடுதலை செய்துள்ளது. அந்த தாத்தாவின் பெயர் கைகொண்டன். இவர் தனகு 64 வயதாக இருந்தபோது, 60 வயதுப் பெண்ணை கற்பழித்து விட்டார். மிகவும் மூர்க்கத்தனமாக அவர் நடந்து கொண்டதன் விளைவாக அந்தப் பாட்டியின் வலது கை உடைந்து போய் விட்டது. கைது செய்யப்பட்ட தாத்தாவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களாக சிறைத் தண்டனை வசித்து வந்தார் கைகொண்டன். இந்த நிலையில் தனக்கு வயதாகி விட்டதைக் காரணம் கூறி கருணை செய்து விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாத்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அவருடைய சிறைத் தண்டனையை 6 ஆண்டாகக் குறைத்து தாத்தாவை விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த தாத்தாவைப் பார்த்து, இதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் செய்யக் கூடாது. நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். இந்த வயதில் பூஜை செய்வதிலும், சாமியைக் கும்பிடுவதிலும் மட்டுமே ஈடுபட வேண்டும். வாழ்க்கையின் மிச்சமுள்ள நாட்களை அமைதியான முறையில் கழிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர் நீதிபதிகள்.
நீதிபதிகளின் அறிவுரையைக் கேட்டதும் அங்கு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

வவுனியா வதைமுகாம்களில் பாலியல் உறவிலும் ஈடுபடலாம்! கிரேக்க தத்துவமும் பேசலாம்!

Photobucketவவுனியா வதைமுகாம்களில் இளம் தமிழ் பெண்களுக்கு எதிராக ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க நியாயம் கற்பித்துள்ளார்.

சிறீலங்கா படைகளால் வவுனியா வதைமுகாம்களில் பாலியல் கொடூரங்களுக்கு தமிழ் பெண்கள் உட்படுத்தப்பட்டமை தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைக்கும் பொழுதே இவ்வாறு ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

“வவுனியா முகாம்களில் பல பாலியல் உறவுகள் இடம்பெற்றன. அங்கு எதுவும் நடக்கவில்லை என்று என்னால் கூறமுடியாது. ஏனென்றால் நான் அங்கு இருக்கவில்லை. தனித்தனியாக பாலியல் முறைகேடுகள் அங்கு நிகழ்ந்திருக்கலாம். இவற்றை எமக்குத் தெரியப்படுத்தினால் இவை தொடர்பான விசாரணைகளை நாம் முன்னெடுப்போம்.

வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம். என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது.” என்றார் சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »