சாருநிவேதிதா காமலீலைகள் அம்பலம்!! (video)

சாருநிவேதிதா தெரியாதவர்கள் ஒரு சிலரே .இவர் எழுத்தாளராக மட்டுமில்லாமல் செக்ஸ் சாமியார் நித்யானந்தாவின் சீடராகவும் மக்களிடயே அறியப்பட்டவர்.குறிப்பிட்ட இந்த செய்தியினை நாம் பிரசுரிப்பதற்கு காரணம் சில பெண்கள் இவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்றும் வயது முதிர்ந்தவர் என்றும் மரியாதையாக பழக முற்பட்டு தமது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காகவே.

இன்று ஆன்லைன் சாட்டிங்கில் நட்பு மலர்வதை விட ஆபாசமே விளைகிறது.  இதில் பெரும்பாலான பெண்கள் வீழ்ந்தும் இருக்கின்றனர். இதில் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா ஒரு பெண்ணுடன் ஆபாச வார்த்தைகளால்  உரையாடிய சாட்டிங் ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.இணைப்புக்கள் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.இவர் மிகவும் கொச்சையாக நடந்துகொண்டது தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவரது வில்லங்க எழுத்துக்கு வாசகர் என்று சொல்லி கொள்ளுபவர்கள் இனியாவது திருந்துவார்களா?இவரை தமது அபிமான எழுத்தாளராக நினைத்து அவருடன் உரையாடிய/ உரையாடும் பெண்களின் நிலை என்ன என்பதை கீழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தெளிவாக உற்று நோக்கினால் இது போன்று பல பெண்களுடன் இவர் உல்லாசமாக இருந்ததை உணரமுடிகிறது.இந்த உரையாடலில் அவரே கூறுகிறார் 23 வயதான பெங்களூர் பெண்ணொருத்தி அவர்மூலமாக குழந்தை கூட பெற்றுக்கொள்ள விரும்பினாளாம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

நித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு!

நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English

இந் நிலையில் இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ராம்நகர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பெண்கள் சிறையில் நித்யானந்தா அடைப்பு:
அவரை மே 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதின்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமநகர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நித்யானந்தா அங்கு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் பெண் கைதிகள் இல்லாததால் அவரை அங்கு அடைத்தனர்.

நான் ஆண் அல்ல..:

முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்த நித்யானந்தா, நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் எப்படி யாரையும் கற்பழிக்க முடியும் என்று கேட்டு கூறி அதிர்ச்சி தந்தார்.
இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால், அவரது பாஸ்போர்ட்டில் அவர் ஆண் கூறியுள்ளதையும், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளதாலும் ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டுவிட்டனர்.
இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆசிரமத்தில் சந்தனக் கட்டைகளை வைத்திருந்ததாக தாக்கலான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் தந்துள்ளது.
இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.டியில் இருப்பது நித்யானந்தா தான்-ஆய்வுக்கூடம்:
இதற்கிடையே நித்யானந்தாவிடம் விசாரணை நடத்தி வரும் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் பிடுதி ஆசிரமத்தில் இருந்து 36 வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்திருந்தனர்.
அதில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், விசாரணையின்போது, ரஞ்சிதா மற்றும் இந்த சிடிக்களில் இருப்பது நான் இல்லை நித்யானந்தா கூறினார்.
இதையடுத்து இந்த சி.டிக்கள் ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 4 நாட்களாக அங்கு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை இன்று பெங்களூர் போலீசார் கைக்கு வந்து சேர்ந்தது.
அதில், 35 வீடியோ காட்சிகளிலும் இருப்பது நித்யானந்தா தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சியில் தோன்றுவதும் நித்யானந்தா என்று ஆய்வகம் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

நான் ஆம்பிளையே இல்லை : சாமியார் நித்யானந்தா கதறல்[i’m not a man, Nityananda told CID sleuths]

‘நான் ஆண் மகனே இல்லை. யாரோ செய்த சதியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்’ என்று போலீஸ் விசாரணையில் சாமியார் நித்யானந்தா கதறி அழுதார் You might also like நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியான பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. அன்னிய செலாவணி மோசடி, தங்கம் கடத்தல் போன்ற புதிய குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால், அவருக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. 5 பெண்களுடன் தொடர்பு: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதாவுடன் மட்டுமின்றி மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்துள்ளன. சாமியாரிடம் விசாரணை நடத்தும் சி.ஐ.டி. குழுவுக்கு தலைமை வகிக்கும் எஸ்.பி. யோகப்பாவும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘‘பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, நித்யானந்தா 5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி.க்களை கைப்பற்றினோம். அவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதித்தோம். அது உண்மையான சி.டி.க்கள்தான் என உறுதியாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்கள் யார் என்று தெரிய வேண்டும்’’ என்று அவர் கூறினார். ஆண் மகன் இல்லை: நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை துருவித் துருவி விசாரணை நடத்தினர். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என்று வழக்கமான பாணியில் நேற்றும் அவர் கூறியதால் பொறுமை இழந்த போலீசார், விசாரணை முறையை சிறிது மாற்றி உள்ளனர். அதை சமாளிக்க முடியாத சாமியார், ‘நான் ஆம்பிளையே இல்லை… பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும்? போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்’ என்று குரல் தழுதழுத்தப்படி கூறியுள்ளார். அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், பெங்களூரில் உள்ள 4 மருத்துவமனைகளிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ராம் நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இப்போது போலீஸ் காவலில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பாக வனத்துறை தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார். ரஞ்சிதா வரவில்லை : நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் நடிகை ரஞ்சிதா, சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று மாலை வரை அவர் வரவில்லை. ரஞ்சிதா மற்றும் அவருடைய தந்தையின் செல்போன் எண்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி. போலீசார் அவற்றில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தன

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

இமா‌ச்சல ‌பிரதேச‌த்த‌ி‌ல் ‌நி‌த்‌யான‌ந்த‌ர் கைது.

இ‌மா‌ச்சல பிரதேச‌‌ம் ஆ‌ர்‌க்‌கி எ‌ன்ற ‌இட‌த்‌தி‌ல் பது‌ங்‌‌கி இரு‌ந்த நி‌த்யான‌ந்தரை பெ‌ங்களூரு காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌‌ய்து‌ள்ளன‌ர். பிடதியில் நித்யானந்த‌ தியான பீடம் என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்த‌ர் நடிகையுடன் தனது ஆஸ்ரம அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ‌வீடியோ காட்சிகள் கடந்த மார்ச் 3ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. இதை அடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் த‌மிழக‌ம், க‌ர்நாடகா‌வி‌ல் வழக்குப் பதிவு செய்ய‌‌ப்ப‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து ‌நி‌த்யான‌ந்த‌ர் தலைமறைவானா‌ர். அவரை ‌பிடி‌க்க க‌ர்நாடக காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர முய‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டு வ‌ந்தன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌மா‌ச்சல பிரதேச‌ மா‌நில‌ம் ஆ‌ர்‌க்‌கி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் பது‌ங்‌கி இரு‌ந்த ‌நி‌த்யான‌ந்தரை பெ‌ங்களூரு காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று ‌பி‌ற்பக‌லி‌ல் கைது செ‌‌ய்து‌ள்ளன‌ர். பெ‌ங்களூரு கொ‌ண்டு வர‌ப்படு‌ம் ‌நி‌த்‌யான‌ந்த‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்‌தி ‌சிறை‌யி‌ல் அடை‌‌க்க‌ப்படு‌கிறா‌ர். அவரை ‌‌விசாரணை காவ‌லி‌ல் எடு‌த்து ‌விசா‌ரி‌க்கவு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் முடிவு செ‌ய்து‌ள்ளதாக தெ‌ரி‌கிறது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

நித்யானந்தா வழக்குகளை சிஐடி போலீஸ் விசாரிக்கும் – கர்நாடகா அறிவிப்பு

நித்யானந்தனின் செக்ஸ் வீடியோ மற்றும் இதர மோசடிகள் குறித்து கர்நாடக சிஐடி போலீஸ் விசாரிக்கும் என்று கர்நாடகா அறிவித்துள்ளது.

நித்யானந்தன் – ரஞ்சிதா செக்ஸ் வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக நித்யானந்தன் மீது 6 பிரிவுகளில் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நித்யானந்தா வழக்கு பற்றி கர்நாடக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. இன்பாண்ட் கூறியதாவது:

நித்யானந்தா மீதான வழக்கு ஆவணங்கள் தமிழக போலீசார் மூலமாக எங்களுக்கு கிடைத்துள்ளன. அவற்றை ராமநகரம் மாவட்டத்தில் உள்ள பிடதி போலீஸ் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள்.

ஆவணங்கள் தமிழில் உள்ளதால் அவற்றை கன்னடத்துக்கு மொழி மாற்றம் செய்து மறுபடியும் வழக்குகளை இங்கு பதிவு செய்யவேண்டும். இந்த வழக்குகளை பதிவு செய்த பின்பு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள். வழக்குகளில் பல சிக்கல்கள் உள்ளதாலும் இதில் தமிழகமும் சம்பந்தப்பட்டு உள்ளதாலும் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது…, என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »