ஜெயலலிதாவின் பொருளாதார தடை தீர்மானத்திற்கு இலங்கை பதில் – மாநில அரசை நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை

இந்திய மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தொடர்புகள் நிலவுவதால் மாநில அரசாங்கங்கள் குறித்துக் கவலைப்படப் போவதில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முகமாக இன்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரத்  தொடர்புகள் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது. அந்த நட்புறவை பேணிக்கொண்டு இரு நாடுகளும் தத்தம் வழியில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.

இருநாடுகளுக்கும் தொடர்புபட்ட பிரச்சினைகளின் போதும் இரண்டு நாடுகளினதும் கௌரவம் பாதிப்புறாத வகையில் பரஸ்பர மரியாதையுடனேயே அரசாங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் நாங்கள் இந்தியாவின் மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே எமது இராஜதந்திரத் தொடர்புகளை பேணிக் கொண்டிருக்கின்றோம். மாநில அரசாங்கங்களுடன் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகள் எமக்கில்லை.

அதன் காரணமாக ஏதாவது ஒரு கட்டத்தில் மாநில அரசாங்கமொன்றின் பிரதானிகளுடன் தொடர்புகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டலின் பிரகாரமே அது மேற்கொள்ளப்படும் என்றும்  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட வலய கல்வி அதிகாரி கைது !

இடமாற்றம் பெற்று தருவதாயின் தனது விரும்பத்திற்கு இணங்கவேண்டும் என தெரிவித்து ஆசிரியை ஒருவருடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட வடமேற்கு மாகாணசபையின் கல்வி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. தமக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குருநாகல பகுதியில் உள்ள விடுதி ஒன்றை சோதனையிட்ட சிறீலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த கல்வி அதிகாரியிடமும், அவருடன் இருந்த ஆசிரியையிடமும் விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

தனது இடமாற்றம் தொடர்பில் கல்வித்திணைக்களத்திற்கு சென்றபோதே தான் குறிப்பிட்ட அதிகாரியை சந்தித்ததாக ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். எனினும் இடமாற்றம் கேட்டுச் செல்லும் பல ஆசிரியைகளிடம் குறிப்பிட்ட கல்வி அதிகாரி இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

அவுஸ்திரேலியாவிற்கே நன்கொடை வழங்கிய இலங்கை!!

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்ற மக்களுக்கு வெள்ள நிவாரண நன்கொடை ஒன்றை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இலங்கையின் மிகப் பிரபலமான ஏற்றுமதிப் பொருளான தேயிலையை ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக இலங்கையில் விளைந்த தேயிலையை அந்நாட்டுக்கு நிவாரண நன்கொடையாக வழங்குவதாக இலங்கையின் வெளியுறவுச் செயலர் ரொமேஷ் ஜெயசிங்க கூறியுள்ளார்.

2004 சுனாமியின்போதும், தற்போது இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற பணிகளிலும் அவுஸ்திரேலியா இலங்கைக்கு உதவியுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.

கொழும்பின் அரசாங்கமும் டில்மா என்ற இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனமும் கூட்டாக இந்த நிவாரண நன்கொடையை அவுஸ்திரேலியாவுக்கு வழங்குகின்றனர்.

இரண்டரை லட்சம் கோப்பைகளுக்கு தேனீர் போடுவதற்குத் தேவையான தேயிலையை இலங்கை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள டில்மா நிறுவன தேயிலை சேமிப்புக் கிடங்குகளில் இருந்து குவின்ஸ்லாந்து மாகாணத்துக்கு இத்தேயிலை நேரடியாக அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொதிகளில் இந்தத் தேயிலையையும் சேர்த்து வழங்கபபடும் என கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் தற்காலிக உயர் ஸ்தானிகரான சோபியா மெக்கிண்டயர் கூறினார்.

இலங்கையின் இந்த நற்செய்கையை மிகவும் மெச்சுவதாக அவர் தெரிவித்தார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

வெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா

Photobucketபல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இன்று காலை களனி- கிரிபத்கொடையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து தலைக்குää வயிற்றுக்கு, உடம்புக்கு என மருந்து கொடுப்பதைப் போலவே எனக்கும் கொடுக்கத் தெரியும். அதே போலி வெறிநாய்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து என்னவென்பது குறித்து எனக்கு மட்டுமே தெரியும். தேவையானவர்கள் களனிக்கு வாருங்கள். போதாதற்கு களனி கங்கையும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக களனி பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த பிரதியமைச்சர், அதற்கான ஆதரவை வழங்க தான் என்றும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

ராஜபக்ச மோசமானவர் இல்லை! மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே முள்வேலி முகாம் அமைக்கப்பட்டது!:

Photobucketதமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர் இலங்கைத் தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இவ்வாறு  இலங்கையின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் கண்டி தொகுதி பாராளுமன்ற எம்.பி.யான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர்,

நான் இலங்கையின், ஐக்கிய தேசிய கட்சியில் 50 வருடம் இருந்திருக்கிறேன். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் இணைந்தேன்.

இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 1 வருடத்திற்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பகுதிகள் சரிசெய்யப்பட்டு தமிழர்கள் அந்த பகுதியில் குடியமர்த்தப்படுவார்கள்.Photobucket

இதற்காக இந்திய அரசு பெருமளவில் உதவி செய்து வருகிறது. குறிப்பாக தமிழர்களை மீள்குடியமர்த்துவதில் தமிழக அரசு பெரும் உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து எந்த மந்திரியாக இருந்தாலும், எம்.பி.யாக இருந்தாலும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமையை பார்வையிட வரலாம். அவர்களை தகுந்த பாதுகாப்புடன் நான் இலவசமாக அழைத்துச் செல்கிறேன்.

தமிழகத்தில் உள்ள மக்கள் முள்வேலி முகாம் என்றால் கொடுமையான இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், முகாம் இருக்கும் இடத்தில் காட்டு விலங்குகளினால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த முள்வேலி.

இலங்கையை சேர்ந்த அனேகமான சிங்களவர்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு தமிழ்நாட்டிற்கு குறிப்பாக சென்னைக்கு தான் வருகிறார்கள். அவர்கள் தமிழர்களை உறவினர்களாக தான் நினைக்கிறார்கள்.

தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர் இலங்கை தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார் என்று கூறினார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 Comments »

இலங்கை ஜனாதிபதியின் விளையாட்டுக்கள்!!

Photobucket

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

சமுர்த்தி உத்தியோகத்தரை மாடு போல் மரத்தில் கட்டிவைத்த அமைச்சர் மேர்வின் சில்வா……சொன்னதை செய்து காட்டினார் .- படம் இணைப்பு.

Photobucket
Photobucket

பிரதி அமைச்சர் மேவின் சில்வா, அரச பணியாளரான சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரம் ஒன்றில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான களனி பிரதேச சபை மைதானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டம், ஒன்று தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக அமைச்சர் ஐந்து அதிகாரிகளை அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் அதில் நான்கு அதிகாரிகளே வந்திருந்தனர். ஒருவர் வருகை தரவில்லை.

இதனையடுத்து அவரை அழைத்த அமைச்சர் மேவின் சில்வா, அவரை மரம் ஒன்றில் கட்டி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவை கேட்டபோது, குறித்த அதிகாரி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலுக்கு வராமை காரணமாக மக்கள் கோபமடைந்திருந்தனர்.

இந்தநிலையில் தம்மால் அழைக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரை பொதுமக்கள் தாக்கி காயப்படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தினாலேயே அவரின் பாதுகாப்பு கருதி அவரை மரம் ஒன்றில் கட்டிவைத்ததாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »